BREAKING NEWS
Search

இளைஞர்களுடன் மதுவிருந்தில் ஆட்டம் போட்ட இளம் பெண்களை கடுமையாகத் தாக்கிய இந்து அமைப்பினர்!

கர்நாடக ஷாக்: இளைஞர்களுடன் மதுவிருந்தில் ஆட்டம் போட்ட இளம் பெண்களை கடுமையாகத் தாக்கிய இந்து அமைப்பினர்!


மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் நடந்த வீக் எண்ட் பார்ட்டியில் கலந்து கொண்டு ஆபாச உடையுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட இளம்பெண்கள் – இளைஞர்களை அடித்து உதைத்தனர் இந்து ஜாக்ரன் வேதிகே என்ற இந்து அமைப்பினர்.

இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல் துறை அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரின் புறநகர் பகுதியான பாடிலுவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நேற்று இரவு மது விருந்து நடந்தது.

அதில் அரை குறை ஆடையணிந்த இளம் பெண்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்து நடப்பது பற்றி தகவல் அறிந்த இந்து ஜகரன் வேதிகே அமைப்பைச் சேர்ந்த 50 பேர் அந்த ரிசார்டுக்குள் புகுந்து அங்கிருந்த இளம் பெண்களையும், வாலிபர்களையும் ஓட, ஓட அடித்து உதைத்தனர். உடன் வந்திருந்த இரு தனியார் தொலைக்காட்சி கேமராமேன்கள் இதை படம்பிடித்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் இதில் 2 பெண்களும், பல வாலிபர்களும் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பெண்களையும், வாலிபர்களையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றினர்.

அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சர் அசோகாவுக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில பெண்கள் நல கமிஷன் தலைவர் மனுலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


ஆனால் தங்கள் அமைப்பினர் செய்தது சரியானதுதான் என்று கூறியுள்ளார் இந்து ஜாக்ரன் வேதிகேயின் தலைவர் ஜெகதீஷ் காரந்த்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு காதலர் தினத்தைக் கொண்டாட முன்பு மங்களூரில் உள்ள பப் ஒன்றில், மதுவிருந்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் மற்றும் ஆண்களை ஸ்ரீராம சேனா ஆட்கள் அதிரடியாகப் புகுந்து தாக்கியது நினைவிருக்கலாம்.

-என்வழி செய்திகள்
21 thoughts on “இளைஞர்களுடன் மதுவிருந்தில் ஆட்டம் போட்ட இளம் பெண்களை கடுமையாகத் தாக்கிய இந்து அமைப்பினர்!

 1. Ganesh

  பாரதத்தின் கலாசார சாப கேடு !
  என்வழி இந்த சம்பவம் பற்றி முறையான கருத்து கட்டுரை வெளியிடலாமே !
  கடந்த 6 ,7 ஆண்டுகளை கலாச்சர புற்று நோய் வெகு வேகமாக பரவி வருகிறது ! இப்போது பாரத கலாச்சாரத்தை பார்த்து பெருமையா இங்குள்ள
  நண்பர்களிடம் பெருமை பட முடியவில்லை !
  ஆனால் அவங்க நம்ம கலாச்சாரத்தின் மீது நல்ல மரியாதையை வச்சிருக்காங்க , ஆனா நம்ம தலையில் நம்மாலே மண்ணை வரி போட்டுக்கிறோம் !
  ( 🙁

 2. குமரன்

  இதைப் போன்ற “பார்ட்டிகள்” மங்களூருக்குப் புதியன அல்ல. எனது தனிப்பட்ட அனுபவத்தில் இவற்றை 1993 ஆம் ஆண்டே பார்த்திருக்கிறேன்.

  மங்களூருக்கு அருகில் உள்ள மணிபாலில் பல வகைப்பட்ட உயர்கல்விக் கூடங்கள் உள்ளன. குறிப்பாக பொது மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், ஹோட்டல் நிர்வாகம் ஆகிய துறைகளில் கல்விக் கூடங்கள் உள்ளன. இவை இப்போது பல்கலைக் கழகங்கள் ஆகப் பரிணமித்துள்ளன.

  இதன் தாக்கமாக உத்தரக் கன்னட (முன்னாளில் ‘கனரா’ என வழங்கப்பட்டது), தென் கன்னட (கனரா) மாவட்டங்களில் பலவிதப் பல்கலைக் கழகங்கள் முளைத்து, வளர்ந்து இப்போது உயர் கல்விச் சாலைகளின் தாயகமாகத் திகழ்கின்றன.

  ஒருவகையில் இப்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று எங்கெங்கும் சுயநிதிப் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் வரக் காரணமான முன்மாதிரி “மணிப்பால்” உயர்கல்விக் கூடங்களே என்றால் மிகை அல்ல. கல்வி ஒரு பணம் கொழிக்கும் தொழில் என்பதை முதலில் “கண்டுபிடித்த” “கல்வித் தந்தைகள்” மிக்க நகரம் !!

  எனது நிறுவனம் 1993 இல் மங்களூரில் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலை நிர்வாகத்துக்கு எடுத்தது. அப்போது தொழில் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. எனவே முந்தைய நிர்வாகம் மணிப்பாலில் “பயிலும்” மாணவத் திலகங்களை கவர, வாரம் தோறும் சனி, ஞாயிறுகளில் அவர்களுக்கு “மானிய விலையில்” அறைகளைக் கொடுத்து வந்தது. ஒரே அறையில் நான்கு பேர்வரை தங்கவும் அனுமதித்தது. எங்கள் வசம் வந்த முதல் வாரமே வருகின்ற “மேட்டுக்” “குடி” மாணவர்களின் தரம் தெரிந்தது. வருந்தத் தக்க விஷயம் என்ன என்றால் மாணவிகளும் வருவார்கள்.

  அவர்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கற்ற விஷயங்கள் “சொல்லித் தெரிவதில்லை” என்ற அளவிலான கலை!

  “சமத்துவ சமுதாயம்” மலரும் நாட்கள் அவை!
  வாராவாரம் சனி ஞாயிறு வருவது வெகு சிறப்பு!

  எங்களால் ஆனது, அவர்களுக்கான மானியம், சிறப்புச் சலுகைகளை உடனடியாக நிறுத்தினோம், அறைகளைக் கொடுப்பதில்லை. வியாபாரம் போகலாம், ஆனால், எங்களால் ஆனது இளைஞர்களின் சீரழிவுக்குத் துணை போகக் கூடாது என்பது மட்டுமே.

  பிற ஹோட்டல்கள் அவர்களை ஆதரித்தன!
  நாளடைவில் “பப்” வந்தது,
  “விருந்தினர் மாளிகைகள்” வந்தன.
  “வாராந்திரக் கல்வி” கற்பதில் மாணவர்கள் மாறவில்லை.
  கல்விக் கூடங்கள் பல்கலைகலாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன.
  மாணவர்கள், இளைஞர்கள் “சுதந்திரம்” வேண்டி “பெண்ணுரிமை இயக்கங்களாகப்” பரிணாம வளர்ச்சி பெறுகின்றனர்.

  “அந்த நாள் முதல் இந்த நாள் வரை” என்ற நவராத்திரி படப்பாடலை ஒட்டி இந்த சிச்சுவேஷனுக்குப் பாடல் புனைய நமது மதிப்பிற்குரிய பாவலனை வேண்டி விருப்பிக் கேட்டுக் கொள்கிறேன்!

  (“பால் தமிழ்ப்பால்” என்ற பாடலை வைத்துக் கூட “மணிப்பால்” பற்றிய பாடல் ஒன்றை பாவலன் அவர்கள் புனையலாம்! “பால்” என்ற சொல்லை ஆண்பால், பெண்பால் என்பதில் வருவது போலும், ‘பாலர்’ என்பதை ‘இளையவர்’ என்ற கருத்திலும் கையாளலாம். ‘மணி’ என்பதை ‘பணம்’ என்ற வகையிலும் கையாளலாம்.)

 3. s venkatesan, nigeria

  அடித்து உதைத்து கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டிய அளவுக்கு பெண்கள் போய் விட்டார்களே.

  அஸ்ஸாம் சம்பவமும் இந்த சம்பவமும் பொது மக்களிடையே பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லாததற்கு யார் காரணம்.

  பஸ்ஸில் சில்மிஷம் செய்தாலோ நடுரோட்டில் போகும் பெண்ணிடம் வம்பு செய்தாலோ போலீஸ் வர வேண்டாம். பொது மக்களே கவனித்து விடுவார்கள்.

 4. மிஸ்டர் பாவலன்

  நண்பர் AK அவர்கள் என்னை ‘பவர் ஸ்டார்’ என்ற பின் பாட்டு எதற்கு? 🙁 🙁

  பிறகு என் கருத்தை பதிவு செய்கிறேன்!! நன்றி!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 5. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  என்கருத்துவின் கருத்துக்கள் எல்லாரும் ஏற்றால்தானே நீங்கள் “powerstar” ஏற்காவிட்டால்? நான் ஏற்கவில்லை. நீங்கள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் மனநிலை!

  என்னைப் பொருத்தமட்டில் இவையெல்லாம் வெறும் விளையாட்டுக்களே. கவுண்டர் சொல் மந்திரம் ‘வலைத்தளத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா!”

  கொஞ்சும் சலங்கை வசனம் போல … பாடு பாவலா பாடு, உன் பாட்டைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிடாதே!

 6. enkaruthu

  பெண்கள் சுதந்திரமாக முன்னேறவேண்டும் என்று சொன்ன பெரியார் கூட
  இன்று இருந்தால் வெங்காயங்களா நான் சொன்ன சுதந்திர முன்னேற்றம் வேறு என்று சொல்லிருப்பார்.இவர்களை அடித்தது தவறு என்றாலும் அதை கண்டிக்க கூடிய அளவுக்கு இவர்கள் ஒன்னும் யோக்கியர்கள் கிடையாது.

  இந்த கலாச்சாரத்தில் வாழ்ந்த மேற்கிந்திய நாடுகள் கூட நம் கலாச்சாரத்துக்கு மாறி கொண்டு வருகிறார்கள்.ஆனால் நமது நாட்டின் பெண்கள் இந்த கலாச்சாரத்தால் நம் வாழ்கை வீணாகும் என்று தெரிந்தே இந்த சாக்கடைக்குள் விழுகிறார்கள்.

 7. மிஸ்டர் பாவலன்

  -== பழைய மெட்டில் புதிய பாடல் ==

  (இது நகைச்சுவைக்காக மட்டும் எழுதப் பட்டது. மாணவர்கள்
  தவறான வழியில் செல்லாமல் நல்ல வழியில் படித்து, சிறந்த
  வாழ்க்கை வைக்க வேண்டும் என்பதே நம் கருத்து.)

  ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
  வந்த நாள் முதல் இந்த நாள் வரை
  வந்த நாள் முதல் இந்த நாள் வரை
  காலேஜ் மாறவில்லை
  சூடா காப்பி டீயும் மெது பக்கோடாவும்
  இட்லி தோசை பொங்கல் வடையும்
  காண்டீனும் மாறவில்லை
  மாணவன் மாறி விட்டான்
  ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

  Year மாறினால் Beer போடுவான்
  Twitter -ம் Facebook -ம் நாடுவான்
  தினம் ஒரு Girlfriend தேடுவான்
  அது தான் Fashion எனப் பாடுவான்

  மாணவன் மாறிவிட்டான் கல்வி மறந்து விட்டான்
  ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

  த்ரிஷாவைக்கண்டான் Fan Club கொண்டான்
  மொபைல் போனில் SMS செய்வான்
  Weekend-ல் அவன் பல பாருக்கு செல்வான்
  எதனைக் கண்டான் கல்வியை மறந்தான்?
  எதனைக் கண்டான் கல்வியை மறந்தான்?

  மாணவன் மாறிவிட்டான் கல்வி மறந்து விட்டான்
  ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

  ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
  வந்த நாள் முதல் இந்த நாள் வரை
  வந்த நாள் முதல் இந்த நாள் வரை
  காலேஜ் மாறவில்லை
  சூடா காப்பி டீயும் மெது பக்கோடாவும்
  இட்லி தோசை பொங்கல் வடையும்
  காண்டீனும் மாறவில்லை
  மாணவன் மாறி விட்டான்
  ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

 8. மிஸ்டர் பாவலன்

  முதலில் நான் பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் அண்ணா பாடிய
  மெட்டில் “மாணவன் என்பவன் தலைவன் ஆகலாம்” என்ற பாடல்
  எழுதினான். அதில் அரசியல் கலந்திருந்ததால் “வேண்டாம்” என
  போஸ்ட் செய்யலை!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 9. s venkatesan, nigeria

  //த்ரிஷாவைக்கண்டான் Fan Club கொண்டான்// – objection யுவர் ஹானர்

 10. மிஸ்டர் பாவலன்

  நண்பர் வெங்கடேசன் அவர்களே:

  மதுரை போன்ற முக்கிய நகரங்களில் “பறக்கும் படை
  த்ரிஷா ரசிகர் மன்றம்” என்ற அமைப்புகளை நீங்கள்
  பார்த்ததில்லையா? 🙂

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 11. mamta

  தனி மனித சுதந்திரத்தில் தலையிட இவர்கள் யார்? நம் கிராமங்களில் நடக்காத கலாசார சீரழிவு வேறு எங்கே நடந்து விட போகிறது. AIDS நோய் அதிகமாக இருப்பது கிராமங்களில் தான். அங்கு கரும்பு காட்டுக்குள் நடப்பது நகரங்களில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடை பெறுகிறது. இந்தியாவில் கலாசாரம் பற்றி பேசுவதே தவறு.

 12. enkaruthu

  //என்கருத்துவின் கருத்துக்கள் எல்லாரும் ஏற்றால்தானே நீங்கள் “powerstar” ஏற்காவிட்டால்? நான் ஏற்கவில்லை. //

  அருமையான கருத்து.ஆனால் பாவலன் அவர்கள் முதலில் எனக்கு பவர் ஸ்டார் பட்டத்தை கொடுத்தபொழுது இதே கருத்தை, அதாவது இங்கு வருபவர்கள் அனைவரும் சொன்னால்தானே என்கருத்து பவர் ஸ்டார் ஆகமுடியும் என்று பாவலனுக்கு சொல்லிருந்தால் அது நேர்மையாக இருந்திருக்கும்.

  குமரன் அவர்களே நீங்கள் யாரென்றே எனக்கு தெரியாது.நான் இந்த தளம் blogspot ஆக இருந்த காலம் முதல் என் நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம் இந்த தளத்தை பார்த்துவருகிறேன் .அன்று முதல் இன்றுவரை நான் இந்த தளத்தின் வாசகன்.அன்றிலிருந்து இன்று வரை என் மனதிற்கு என்ன தோன்றியதோ அதைத்தான் கமெண்டாக போட்டு வருகிறேன்.அதனால்தான் என் பெயரை என்கருத்து என்று வைத்துள்ளேன்.அதனால் நீங்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவசியமும் இல்லை மேலும் நான் குமரன் என்ற ஒருவருக்காக நினைத்து இங்கு எழுதுவதும் இல்லை.ஏனெனில் நீங்கள் ஒன்னும் இந்த ஒட்டுமொத்த மக்களின் representative கிடையாது என் கருத்தை நீங்கள் எற்றுகொள்ளததால் நான் வருத்தம் அடைவதற்கு.

  மேலும் குமரன் அவர்களே நம் கருத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக என்றும் நான் போட்ட என் கமெண்டை நானே புகழ்ந்து இப்படி சூப்பர்,கலகீடீங்க(என்ன வயத்தையா என்று தெரியவில்லை (ஒன்னும் இல்லை இந்த மாதிரி தனக்கு தானே போட்டு கொள்ளும் புகழ்ச்சி கமெண்டுகளை பார்த்து எனக்கு தோன்றுவது) ),சும்மா பின்றீங்க(என்ன கூடையையா) என்று ஒருபோதும் வேறு ஒரு பெயரில் வந்து புகழ்ந்ததில்லை.

 13. குமரன்

  என்கருத்து அவர்களே
  இடம் பொருள் ஏவல் பார்த்து பொருள் கொள்ள வேண்டும். மிஸ்டர் பாவலனிடம் நான் பாடல் கேட்டதற்கு அவர் என்னை பவர் ஸ்டார் என்று நண்பர் AK சொல்லிவிட்டார் அதனால் பாட மாட்டேன் என்றார், அதற்கு நான் அவரது அந்தக் கருத்தை நான் ஏற்க வில்லை, நீங்கள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம் என்றேன்.
  ஆனால் நீங்களோ மிஸ்டர் பாவலன் உங்களை பவர் ஸ்டார் என்று கூறிய போதே அதை ஏற்கவில்லை, என்று நீங்களே கூறி விட்ட பின்னால் நான் ஏற்பதும் ஏற்காததும் என்ற கேள்வி யாரும் எழுப்ப வில்லை, நான் ஏற்பதும் ஏற்காததும் ஒரு பொருட்டும் அல்லவே !! இப்போது நீங்கள் இதை எழுப்பியதால் சொல்கிறேன், நான் மிஸ்டர் பாவலன் சொன்னதையும் ஏற்கவில்லை !!!

 14. மிஸ்டர் பாவலன்

  July 28 அன்று “‘தலைவா.. நீங்கள் கடன்காரர் அல்ல.. இந்த அன்பு சாம்ராஜ்யத்தின் அரசர்!’” என்ற தொடரில் காலை நான் எழுதிய வரிகள்:
  ——— Begin Quote ——–
  //மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதுதான் சிறந்தது என்பதர்க்கேற்ப எங்களின் வாழ்கையை செதுக்கி ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தவர் நீங்கள்./// (AK)

  நண்பர் AK எழுதிய இந்த வரிகள் மிகவும் உண்மையானவை.

  இந்த வலையில் ஒரு Power Star ஆக எழுதி வரும் அவரைப் பாராட்டுகிறேன்.

  ” நான் அவன் இல்லை! ” (தினகருக்காக ஒரு குறிப்பு)
  ===== End Quote ====-

  நான் AK அவர்களைப் பாராட்டி “உண்மையானவை” என எழுதி விட்டு
  powerful ஆக அவர் எழுதி வருவதால் “ஒரு Power Star” எனக் குறிப்பிட்டேன்.
  இதில் “ஒரு” என்ற சொல் மிகவும் முக்கியமானது. நான் கிருஷ்ணன்,
  கணேஷ் ஷங்கர், குமரன் இவர்களை ஏற்கெனவே பல தடவை
  பாராட்டி இருக்கிறேன். அவர்களைப் போல் AK அவர்களும் ஒரு powerful
  writer என்ற பொருளில் தான் Power Star எனக் குறிப்பிட்டேன். தன்னைத்
  தானே “Power Star”, “Youth Star” எனச் சொல்லிக் கொள்ளும் நடிகரை
  AK உடன் நான் ஒப்பிடவில்லை.

  லைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இப்படி
  சீரியசாகப் போகும் என நான் எதிர்பார்க்கவில்லை. குமரன் அவர்களும்
  வேடிக்கையாகவே பதில் கொடுத்தார் எனத் தான் எனக்கு தோன்றுகிறது.

  Moral of the Story: “விளையாட்டு விபரீதம் ஆகலாம்”

  -===மிஸ்டர் பாவலன் ===-

 15. குமரன்

  என்கருத்து / மிஸ்டர் பாவலன் ஆகியோருக்கு

  நான் உங்களுக்குப் பதில் கொடுக்கும்போது சென் தத்துவ அடிப்படையில் என்வழியில் வந்த ஒரு கதையை நினைவில் இருத்தியே தந்தேன். யார் எதைச் சொன்னாலும் அதை நாம் ஏற்கா விட்டால் அது நம்மை அடையாது என்பதே அந்தத் தத்துவம். நானே கூட இதே தளத்தில் யாராவது என்னைக் கடுமையாகத் தாக்கினால் கூட அவற்றை நான் ஏற்காவிட்டால் அவை என்னை வந்து அடையாது என்ற பொருள் பட பதில் கூறி உள்ளேன். ஒரு கதையைப் படிக்கும்போது அதில் இருக்கும் நல்ல கருத்தை நடைமுறையில் கொண்டுவருதல் நமக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்வும் நம்மை நாமே திருத்த, முன்னேற்ற ஒரு வாய்ப்பே என்பதில் எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் உண்டு. நேர்மறைச் சிந்தனை என்று முழங்கி விட்டு வாய்ப்பு வரும்போது, எதிர்மறைச் செயல் செய்வது சிறப்பல்லவே!

  மிஸ்டர் பாவலனிடம் நான் பாடல்கள் கேட்கக் காரணம், அவரிடம் அந்தத் திறமை இருக்கிறது, அதில் வரும் மெல்லிய நையாண்டி ரசிக்கத் தக்கதாக இருக்கிறது, அது நம்மை சீரியஸ் விஷயங்களில் இருந்து நீக்கி சிரிக்க வைக்கிறது என்பது மட்டுமே. மேற்கண்ட பாடல் நன்றாக வந்திருந்தாலும் கூட, இதைவிடவும் இன்னும் சிறப்பாக அவர் எழுதுவார் என்பதில் திடமான நம்பிக்கை உள்ளது. இந்தப் பாடலில் அவர் “ஹோட்டல், பப், விருந்தினர் விடுதி என்றும் மகளிர் பெண்ணுரிமை இயக்கங்கள்” என்றும் பெற்ற பரிணாம வளர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

 16. மிஸ்டர் பாவலன்

  //நான் மிஸ்டர் பாவலன் சொன்னதையும் ஏற்கவில்லை !!!// (குமரன்)

  அறிஞரின் கருத்துக்கு நன்றி.

  தடங்கலுக்கு வருந்துகிறேன்!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 17. மிஸ்டர் பாவலன்

  குமரன் குறிப்பிட்ட மணிபால் பல்கலைக் கழகத்திற்கு பல தடவை
  சென்றிருக்கிறேன் – Guest Speaker ஆக. பல நிகழ்வுகளை அங்கு நான்
  கவனித்திருக்கிறேன். ஆனால் அவற்றை பிறகு எழுதறேன். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 18. மிஸ்டர் பாவலன்

  //மேற்கண்ட பாடல் நன்றாக வந்திருந்தாலும் கூட, இதைவிடவும் இன்னும் சிறப்பாக அவர் எழுதுவார் என்பதில் திடமான நம்பிக்கை உள்ளது// (குமரன்)

  நான் இதுவரை எழுதியவற்றில் மிகவும் weak ஆனது “வந்த நாள்” பாடல்.
  காரணம் நேரக் குறைவு. பத்து நிமிட நேரம் ஒதுக்கி எதையோ அடித்து
  எழுதினேன். வேறொரு சமயம் மற்றொரு தளத்தில் பாடல் எழுதுகிறேன்.

  -== மலரும் நினைவுகள் – ஒரு பழைய பாடல் ===

  மிஸ்டர் பாவலன் says:
  February 21, 2012 at 6:30 pm

  கொடியது கேட்கின் கோச்சடையானே!
  கொடிது கொடிது தமிழ்ப் படம் எடுப்பது கொடிது!
  ஹிட் படம் எடுப்பினும் அதில் கதை பாட்டு
  இசை நடிப்பு சகலமும் காப்பி அடித்தல் கொடிது!
  கொடிது கொடிது தலைவர் படம் பெயர் காப்பி அடித்தல் கொடிது
  அதனினும் கொடிது குருவி தலைவர் ஆக நினைப்பது கொடிது
  மேலும் எஸ். ஏ. சி. ஸ்டீல் பேர்க் ஆக நினைப்பதும் கொடிது
  கொடிது கொடிது அலெக்ஸ் பாண்டியன் பெயரில் படமும் கொடிது
  மாப்பிள்ளை பெயரில் மனீஷா தனுஷ் படமும் கொடிது
  அதனினும் கொடிது ரஜினி விருது குருவிக்குக் கொடுத்தது கொடிது
  காப்பி அடித்தே ஹிட் பாட்டும் பெயரும் பொருளும் பெறுவது கொடிது
  ரீமிக்ஸ் செய்து பாட்டைக் கெடுக்கும் இசை மேதைகளும் கொடிது
  அவ்வை பாட்டை காப்பி அடிக்கும் மிஸ்டர் பாவலனின் பாட்டும் கொடிது
  “உன் வாழ்க்கை உன் கையில்” தத்துவம் மறப்பதும் கொடிது
  சுயமாய் சிந்தித்து பண்புடன் சூப்பர் ஸ்டார் நம் தலைவர் வழி நடப்பின்
  வானவர் நாடு வழி திறந்திடுமே!!!

  (கந்தன் கருணை பாடல் மெட்டில் எழுதியது)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 19. மிஸ்டர் பாவலன்

  // இந்தியாவில் கலாசாரம் பற்றி பேசுவதே தவறு.// (Mamta)

  இந்தியாவில் உள்ள கலாச்சாரம் புராதானமானது.
  திருக்குறள் அரிய நெறிகளைக் காட்டி வருகிறது.
  நீங்கள் டாக்டர் அப்துல் கலாம் நூல்களைப் படியுங்கள்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 20. குமரன்

  ///அங்கு கரும்பு காட்டுக்குள் நடப்பது நகரங்களில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடை பெறுகிறது.///

  மிக மிகச் சரி.

  கிராமத்தில் கரும்புக் காட்டில் நடந்து வெளியே தெரியவந்தால் உடனடியாக அடி உதை, பின்னர் பஞ்சாயத்து, நிலைமையைப் பொறுத்துத் திருமணம் அல்லது தண்டனை, கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல் இன்ன பிற !

  அதேதான் இப்போதும் மங்களூரில் நடந்தது, இன்னும் சொல்லப் போனால் முதல்படி ஆகிய அடி உதை மட்டும்தான் நடந்தது. இதற்கு பெண்ணுரிமை, சுதந்திரம், moral policing என்றெழுதும் பத்திரிகைகள், கிராமங்களுக்குப் போய் கரும்புக்காட்டில் மாட்டி உதை படுவதைப் படம் எடுத்து எழுதத் தயாரா? செய்தால் கிராமத்தில் இருப்பவர்கள் முதுகில் டின் கட்டிவிடுவார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *