BREAKING NEWS
Search

ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி!

ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி!

.Prime Ministerial Candidate Modi meets Actor Rajinikanth at Poes GardenPHOTOBY-K.ANNAMALAI

டெல்லி: தனது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் விரைவில் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு இந்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது. பாஜக தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளீர்கள் என மோடியை அவர் வாழ்த்தியிருந்தார்.

தேர்தலின்போது, ரஜினியை வீட்டுக்கே போய்ச் சந்தித்து, நலம் விசாரித்தவர் மோடி. இப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு,  ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் மோடி.

modi-thank

அதில், “தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கும் அபிலாஷைகளுக்கும் கிடைத்த வெற்றி இது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

என்வழி




One thought on “ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி!

  1. kumaran

    மோடி அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் , அபார வெற்றி பெற்ற தமிழ் முதல்வருக்கு இல்லையே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *