BREAKING NEWS
Search

மோடி சர்க்காரின் ‘விருது அரசியல்’!

மோடி சர்க்காரின் ‘விருது அரசியல்’!lingaa3

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பத்மவிபூஷன் விருது தருவது குறித்து என்வழியில் செய்தி வெளியிட்டபோது, உண்மையிலேயே விருதுப் பட்டியலில் அவர் பெயர் இருந்தது.

இதனை டெல்லியில் உள்ள நம் நண்பர் உறுதிப்படுத்திய பிறகுதான் என்வழியிலும், சமூக வலைத் தளங்களிலும் பதிவிட்டோம்.

ஆனால் பிற்பகலுக்குள் இந்த பட்டியல் அதிகாரப்பூர்வமானதல்ல என்ற விளக்கம் வந்தது உள்துறை அமைச்சகத்திடமிருந்து.

நான்கு மணி நேரங்களில் என்ன நடந்தது?

சென்னையில் உள்ள முக்கியமான மூத்த பத்திரிகையாசிரியர் நேற்று நம்மிடம் பேசிய போது அதற்கான விடை கிடைத்தது.

‘பேஸ்புக்கில் நீங்க போட்டிருந்த பதிவைப் பார்த்துவிட்டு, நானும் டெல்லியில் உள்ள சில சோர்ஸ்களை விசாரித்தேன். உண்மைதான் என்றார்கள். ஆனால் திங்கள் வரை அதை அறிவிக்காமல் அமைதி காத்தார்கள். திங்களன்று மாலை வெளியான பட்டியலில் எல்லார் பெயரும் இருந்தது, ரஜினியின் பெயரைத் தவிர. இது ஒரு வகையான அரசியல்..,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஏன் மோடியும் பாஜகவும் இப்படி அவசரப்படுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஆட்சியைப் பிடித்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. பத்தாண்டுகளில் காங்கிரஸ் சம்பாதித்த மொத்த கெட்டப் பெயரையும் இந்த ஒரே ஆண்டில் சம்பாதித்து விடுவார்கள் போலிருக்கிறது. எதற்காக ரஜினியுடன் இவர்கள் மல்லுக் கட்டுகிறார்கள் என்றே புரியவில்லை. அவர் ஏற்கெனவே பாஜகவுக்கு நல்ல நண்பராகத்தானே இருக்கிறார்..!” என்றார்.

சமீப காலமாகவே ரஜினியைச் சுற்றி நிகழும் சில சம்பவங்கள், நகர்வுகளின் பின்னணியின் அரசியல் மற்றும் திட்டமிட்ட சதிகள் இருக்குமோ என்று பலரும் கூறிவருவதை இன்னும் உறுதிப்படுத்துவது போலத்தான் இருந்தது இந்த மூத்த பத்திரிகையாளர் சொன்னது.

பத்மவிபூஷன் பட்டம் என்பது ரஜினிக்கு ஒரு பொருட்டல்ல. அவர் அதற்காக ஏங்கிக் கிடக்கவும் இல்லை. வருகிற பெருமைகளை ஒரு புன்முறுவலோடு கடந்து போகும் அந்த மனிதருக்கு, அரசியல் உள்நோக்கத்துடன் மனச்சங்கடங்களை உண்டாக்குவது எந்த மாதிரியான பலனைத் தரும் என எதிர்ப்பார்க்கிறார்கள்?

என்வழி
12 thoughts on “மோடி சர்க்காரின் ‘விருது அரசியல்’!

 1. குமரன்

  இதுவும் கடந்து போகும்.

  நல்லது என்றும் வெல்லும்
  நல்லவர் என்றும் வெல்வர்.

  பாரத ரத்னா உள்ளிட்ட பத்ம விருதுகளுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது.

  இவை எந்த விதமான சுயநலமும் இல்லாமல், தேசத்துக்காக சேவை செய்பவர்களைக் கௌரவிக்க ஏற்படுத்தப் பட்டவை. .

  போரில் தேச சேவை செய்யும் முப்படையினரைக் கௌரவிக்க ஏற்படுத்தப்பட்டவை பரம்வீர் சக்ரா முதலிய விருதுகள்.

  விளையாட்டுத் துறையில் சேவை செய்வோருக்கு ஏற்படுத்தப்பட்டவை அர்ஜுனா உள்ளிட்ட விருதுகள்.

  சச்சினுக்கு அர்ஜுனைத் தாண்டி, பொதுப் பிரிவில் அரசியல் காரணத்துக்காக பாரத ரத்னா விருது தரப்பட்ட போது பாரத ரத்னாவின் மரியாதையை போய்விட்டது. இனி பத்ம விருதுகள் இப்படித்தான் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும்.

  சச்சின் விஷயத்தில் சோனியா தலைமையிலான மிகத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டது. இந்தத் தவறை ஜன்மத்துக்கும் சரி செய்யவே முடியாது.

 2. குமரன்

  மகத்தான உயிர்த் தியாகத்தையே செய்த படை வீரர்களுக்குக் கூட பரம்வீர் சக்ராதான், பாரத ரத்னா கிடையாது, ஏனெனில் அந்தப் பிரிவே தனி.
  சச்சின் செய்த தியாகம் என்ன?

 3. manithan

  இந்தக்கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது ,என்வழியில் இதற்கான விளக்கம் வருமெனெ எதிர்பார்த்து பலமுறை வந்து எமர்ந்த நேரத்தில் ,நன்றி ,,,,,,,,,,,,என்னைப்பொருத்தவரையில் தலைவர் ,அந்த பழைய கோபக்கார ரஜினியாக மாற வேண்டும் ,எப்படி இப்படி எல்லாதிற்கும் பொறுமையாக தலைவரல் முடியுது ,எப்பவும் இறிதியில் அவர்தான் ஜெயிப்பார் எதிலும் ,ஆனால் எங்களால் தான் போருக்க முடியவில்லை .

 4. anbudan ravi

  நெருப்பை (தலைவனை) தொட்ட எவனும் சரிந்து விடுவான் என்பதற்கு பா.ம.க ராமதாசே சாட்சி. பா.ஜ.க விளையாடுவதை இதோடு நிறுத்திவிடுவது நல்லது.

  அன்புடன் ரவி.

 5. arulnithyaj

  அண்ணா,

  நிச்சியம் இதுல மிகபெரும் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியே லிங்கா படத்தை இவ்வளவு தூரம் பிரச்சினயாகுனதுளையும் அரசியல் தான் irukkuthu. நான் உங்களிடம் பேசிய போதே சொன்னேன் இதில் பிஜேபி பங்கு இருக்குதுன்னு வேந்தர் மூவீஸ் SRM. பச்சமுதுவோடது அவர் பிஜேபி சப்போர்ட்டர் தலைவர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினபோதே பிஜேபி பிளான் பண்ணிட்டாங்க அமித்ஷா ரஜினி பிஜேபி ல சேருவதற்கு நெருக்கடி கொடுப்பத்ர்க்கு எல்லா வேலையும் செய்யுறாங்க ஆனால் தலைவர் எல்லாவற்றையும் வெல்வார் ஆண்டவனே நம்ம பக்கம் தான் தலைவர் அன்பின், மனிதபண்பின்,தெய்வீக சிந்தனையின் ,உண்மையின் நேர்மையின் உழைப்பின் அமைதியின் வீரத்தின் பொறுமையின் உறைவிடம் இவை அனைத்தும் குடியிருக்கும் நம் தலைவர் ஆண்டவனின் உறைவிடம் கடவுள் நிச்சயம் நம்மை நம் தலைவராய் வெல்ல வைப்பார் இந்த புல்லுரிவிகளிடம் இருந்து காப்பாற்றுவார்

 6. ram

  I too …
  “இந்தக்கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தது ,என்வழியில் இதற்கான விளக்கம் வருமெனெ எதிர்பார்த்து பலமுறை வந்து எமர்ந்த நேரத்தில்…நன்றி ”
  And Waiting for “Ennai Arinthal” review….

 7. jegan

  waiting for thalaivers next move……earlier thalaiver was is distress during baba release that time he proved that he is not an elephant but a horse….this time he ll come come bigger than ever

 8. மிஸ்டர் பாவலன்

  //சச்சின் செய்த தியாகம் என்ன?// (குமரன்)

  அவர் காங்கிரஸ் கட்சி கொடுத்த ராஜ்ய-சபா எம்.பி. போஸ்ட்
  ஏற்றுக் கொண்டது சச்சின் செய்த ‘தியாகம்’.

  ரஜினி அல்லது கமல் அது போல் ராஜ்ய-சபா எம்.பி. போஸ்ட் BJP
  ஆதரவில் ஏற்றுக் கொண்டிருந்தால் ஏதாவது ‘பலன்’ கிடைத்திருக்கும்..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 9. BP

  Disclaimer: This is my view… not to hurt anyone. views differ.

  About Sachin – if i compare sportsman ship vs. cinema, Sportsman ship is much much tougher job. playing for our self itself tough in small game. take any game and play for one hour…

  carrying people’s wish and playing and winning for the country is tougher than cinema.

  Offcourse – i can’t compare sports wtih Army. Army is top class. People are giving life for us to serve this country. Cinema is nothing before that. Its enterinament, no one acts for free here.

  Being Thalaivar fan – CM post is not the only thing that one should aim for. there are so many things that campaign can be made to bring change in this state, country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *