BREAKING NEWS
Search

‘தலைவர்’ ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் ‘பிரதமர் வேட்பாளர்’ மோடி!

‘தலைவர்’ ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் ‘பிரதமர் வேட்பாளர்’ மோடி!

1966877_10154053476980165_953326280923961825_n

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

நாடே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த சந்திப்பு இது என்றால் மிகையல்ல. குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்காமல் நடுநிலை வகித்து வரும் ரஜினியை மோடி சந்திப்பது அரசியல் வட்டத்தில் பரபரப்பு கிளப்பியது.

இன்று மாலை 6.35 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.

ரஜினியின் வீட்டுக்குள் மோடியின் கார் மட்டுமே உள்ள சென்றது. பாஜகவினரின் மற்ற கார்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டன.

இந்தச் சந்திப்பில் ரஜினியும் மோடியும் பேசியதன் விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ரஜினியின் இல்லத்துக்குச் சென்று திரும்புவதற்குள், ரஜினியுடனான சந்திப்பின் புகைப்படம் உடனடியாக மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது. ‘வித் ரஜினிகாந்த்ஜி’ என்று பதிவிடப்பட்ட மோடியின் அந்த ட்வீட், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர். இந்த சந்திப்பு நட்பு ரீதியானது, பரஸ்பர மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தனர்.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *