BREAKING NEWS
Search

வெளியில் வந்தார் அஞ்சலி.. இனி கதைகளுக்குப் பஞ்சமிருக்காது!

வெளியில் வந்தார் அஞ்சலி.. இனி கதைகளுக்குப் பஞ்சமிருக்காது!

13-anjali311-600

முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழில் நட்சத்திரம் என்று ஒரு படம் வந்தது. ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். ஒரு நடிகையின் கதை என்பார்களே… அதற்கு உண்மையான விளக்கமாக அந்தப் படம் அமைந்தது.

நடிகை அஞ்சலியின் கதையும் கிட்டத்தட்ட இந்த நட்சத்திரம் படத்தின் கதைதான்.

சின்ன வயதில் பெற்றோரைப் பிரிந்து, சமூகத்தின் அத்தனை அவமரியாதைகளையும் தாங்கி, சித்தியால் சினிமாவுக்கு கொண்டுவரப்பட்டு, பின் நடிகையாக உயர்ந்ததும் பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்க்கப்பட்டவர் அஞ்சலி.

இடையில் களஞ்சியம், சித்தப்புகள் என ‘கருங்காலி’களுக்குப் பஞ்சமில்லை. வெங்கடேஷ் போன்ற பெரிய நடிகர்களின் துரத்தல், உடன்பிறப்புக் குடும்பத்தினரின் விரட்டல் என பல ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த அஞ்சலி, கடந்த வாரம் வெறுப்பின் விளிம்புக்குப் போய் எல்லோருக்கும் ஒரு ஷாக் கொடுத்தார்.

ஒரு வாரம் தலைமறைவாகவும் இருந்தார்.

ஒரு வழியாக நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்ததற்கு, “மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்தேன். இப்போது வந்துவிட்டேன். படங்களில் ஒப்புக் கொண்டபடி நடித்துக் கொடுப்பேன்,” என்றாராம்.

ஒரு வழியாக அஞ்சலி வந்துவிட்டார். இனி அவர் தங்கியிருந்தது எங்கே, யார் அவருக்கு உதவினார்கள் என்ற புலனாய்வுகள் ஒருபக்கம்…

சித்தி, கருங்காலி களஞ்சியம் போன்றவர்கள் சொல்லும் ப்ளாஷ்பேக் கதைகள் ஒருபக்கம் தொடரும்.

இதையெல்லாம் தாங்க முடியாமல், மீண்டும் சித்தியுடன் இணைந்து நாங்கள் சமாதானமாகிட்டோம் என்ற அஞ்சலியின் புதுக்கதையும் வரக்கூடும்!

-என்வழி செய்திகள்




5 thoughts on “வெளியில் வந்தார் அஞ்சலி.. இனி கதைகளுக்குப் பஞ்சமிருக்காது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *