BREAKING NEWS
Search

எம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்!

எம்ஜிஆரும் ரஜினியும் மக்கள் தலைவர்கள்!
மூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வருடமாக கை வலிக்க எழுதி ரஜினியை ஜோக்கர்’ராக்கி விட பலர் பாடுபட்டு கொண்டிருந்தார்கள். அரசியல் கட்சிகளின் ஆதரவு  மீடியா ‘ க்கள் மூலம் கேள்விகளால் ரஜினியை தூண்டவும் முயற்சித்து வருகிறார்கள். ஒரே மேடை பேச்சில் இவர்களை கிடுகிடுக்க வைத்து விட்டார். தன் மீதான விமர்சனங்களுக்கு ரஜினி பதில் சொன்ன பாணியே பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டது. பல முக்கிய பத்திரிக்கைகள் ரஜினியின் எதார்த்த பேச்சை பாராட்ட, சிலர் அவரை கடுமையாக விமர்சிக்கவும் தவறவில்லை.
ரஜினியின் பேச்சுக்குப் பிறகு கொதித்து போனது சில மீடியாக்கள். ஏனென்றால் இவர்கள் அரும்பாடு பட்டு ரஜினியை டேமேஜ் பண்ணிக்கொண்டிருக்கும் போது, அவர் இப்படி எல்லாவற்றையும் சுக்குநூறாக்கி விட்டார்,  அந்த கோபம்தான். இவர்களின் விமர்சனங்களின் முக்கியமான அம்சம் இதுதான், ரஜினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நட்பு இருந்ததா ? ரஜினி கதை விடுகிறாரா? சில விஷயங்களை ரஜினி சொல்லவில்லையே ஏன்? இவ்வுளவு நாள் ஏன் எம்.ஜி.ஆர் பற்றி ரஜினி பேசவில்லை? இது போக சில நேரிடையான விமர்சனங்களையும் பார்க்க முடிந்தது.
அரசியல்வாதியாக முதலில் ரஜினி சென்றது எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவுக்கு. அங்கு எம்.ஜி.ஆரை பற்றி பெருமையாக பேசுவதுதான் நாகரீகம். இதற்கு முன் ஜெ. இருந்த வரை வேறு எவராலும் எம்.ஜி.ஆர் படத்தையோ பெயரையோ பயன்படுத்த  எந்த விழாக்களுக்கும் அனுமதித்ததில்லை. ஏன் அவர்கள் கட்சியிலே எம் .ஜி.ஆர் படத்தை இருட்டடிப்பு செய்தனர் என்பதே உண்மை.ஆரம்ப காலங்களில் எம்.ஜி.யாருக்கு ரஜினி மீது பொறாமை இருந்திருக்கலாம், ஏனென்றால் அவரின் கடைசி மூன்று படங்கள் வந்த ஆண்டு அதை விட பெரிய வெற்றியை கொடுத்தவர் ரஜினி.ஜெயமணி என்பவர் ரஜினியை பற்றி ஒரு பத்திரிக்கையில் தவறான செய்திகளை எழுதி வந்தார். அதை கேட்க சென்று பிரச்சனை ஆனது உண்மைதான், அன்று ரஜினி சாதாரண நடிகர், மிகுந்த கோபமுள்ள சாமானியன். ஒரு சராசரி மனிதனுக்கு உள்ள உணர்ச்சிகளிலேதான் அவர் செயல்பட்டார். என்றைக்கு மக்கள் அவரை கவனிக்க ஆரம்பித்து விட்டார்களோ அன்றே தன்னை ஒரு பண்புள்ள மனிதாக மாற்றிக்கொண்டார். இப்பொழுதும் தன்னுடைய பழைய தவறுகளை வெளிப்படையாக சொல்லக்கூடியவர் தான் ரஜினி.
என்றைக்கு எம்.ஜி.ஆர்  முதலமைச்சர் ஆனாரோ அன்றே  ரஜினியை பெரிய நடிகராக அவரும்  சிவாஜியும் ஏற்று கொண்டுவிட்டார்கள் இல்லையென்றால் தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் தயாரித்த பல படங்களில் ரஜினியை நடிக்க வைத்திருக்க மாட்டார்கள். இந்த தயாரிப்புகளில் ரஜினி நடித்த படங்களெல்லாம் பெரிய ஹிட். அந்த காலகட்டத்திலே எம்.ஜி.ஆரை ரஜினி பல மேடைகளில் புகழ்ந்துள்ளார், ரஜினிக்கு எம். ஜி.ஆர் தன் கையால்  விருது கொடுத்துள்ளார். என்ன… மற்றவர்களைப் போல ரஜினி தன் படங்களில் ‘வாத்தியார்’ புராணங்கள் படித்து கைத்தட்டு பெற முயன்றதில்லை. பாக்யராஜ், பாரதிராஜா, விஜயகாந்த் போல் எம்ஜிஆருடன்   ஒட்டி உறவாடவில்லை. இவர்கள்தான் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அவர் இடத்தை பிடிக்க துடித்தவர்கள்.
முதல்வரானாலும் எம்.ஜி.ஆர் திரையுலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதே உண்மை. ரஜினியையும், டி.ராஜேந்தரையும் தவிர எல்லோரும் அவரிடம்  சரணடைந்திருந்தனர், கமல் உட்பட. ரஜினி என்றைக்குமே யாரிடமும் உதவியென கேட்டு நிக்காதவர், அன்று மட்டுமல்ல இன்றுமே தனக்கு மிக பெரிய அரசியல் நட்பு வட்டமிருந்தும் யாரிடம் போய் நின்றதில்லை. 1985’ல் எம்.ஜி.ஆர் இருந்த போதே வந்த “ஜூனியர் ஸ்பெஷல்”(இன்றைய ஜூனியர் விகடன்) இதழில் தான் அந்த சரித்திர கேள்வி முதலில்  வந்தது “அரசியலுக்கு வரப் போறீங்களா ?”. அந்த காலகட்டத்தில் ரஜினி யாருக்கும் பயந்து பணிந்து நடந்ததில்லை. அந்த வேகமான கோபமான ரஜினியை இன்றைய தமிழகம் பார்த்ததில்லை.
சினிமாவில் எப்படி எம்.ஜி.ஆர் புகழ் பாடாமல் ரஜினிகாந்த் என்ற தனி நடிகராக, சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்டாரோ அதே போல் தான் அரசியலிலும் ரஜினிகாந்தாகவே வலம் வர போகிறார். தன் பரம வைரியானா ஜெ. வைக் கூட இரங்கல் மேடையில் புகழ்ந்தார். ஜெ. இறந்த பின் அவரை மனதார புகழ்ந்த ஒரே பிரபலம் ரஜினிதான். இதுபோலவே எம்.ஜி.ஆர்கும் ரஜினிக்கும் மிக பெரிய நட்பு இல்லாவிட்டாலும் சில இடங்களில் தனக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்ததை தான் ரஜினி குறிப்பிட்டிருக்கிறார், மேடையில் கூறிய விஷயங்களை முன்பு ஒரு முறை துக்ளக் பேட்டியிலும் வெளிப்பதியுள்ளார் என்பதே உண்மை. இது தெரியாமல் அரசியலுக்காக ரஜினி கதை ஜோடிக்கிறார் என எழுதுகின்றனர்.
தனக்கென ஒரு செல்வாக்கையும், அடையாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் ரஜினி. அதுதான் அவரது பெரிய ப்ளஸ். மேடைக்கு மேடை எம்.ஜி.ஆர் பெயர் சொல்லி அரசியல் செய்ய போகிறார் ரஜினி என நினைப்பவர்களை விட அறிவற்றவர் எவருமிலர். எப்போதும் பிறர் பாதையில் போகிறவரல்ல ரஜினி, தனக்கென தனி வழி அமைப்பார். அதில் சந்தேகம் வேண்டாம்!
– வசந்த்7 thoughts on “எம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்!

 1. Sridhar

  thaangal irukum Thatstamil pathirigaiyil kooda thalaivarai pathi thavarana seithigal varugindranave..

 2. Sekar

  தமிழக மக்கள் அனைவரின் ஆதரவும், தலைவர் ரஜினி அவர்களுக்கு தான். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் முதல் அமைச்சர் ஆவதை தான் மக்கள் விரும்புகிறார்கள். திராவிட ஊழல் கட்சிகளை, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களால் மட்டுமே, தமிழகத்தை விட்டு அகற்ற முடியும். தமிழகத்தில், தலைவர் ரஜினி அவர்களின் தலைமையில் ஒரு நல்லாட்சி அமைவது உறுதி.
  இப்ராஹிம்

 3. Vazan

  Note to Mr Sankar/Vithuran and other reporting staff at Envazhi.
  Like Mr Sridar, I used to read Thatstamil but NOT anymore as there are too much hyped bad publicity about Thalaivar, they are mostly Opinion articles not actual reporting. Me and many of my friends stop reading it and moved to other online news without a choice. I put this here bcoz like me I believe many of Thatstamil readers came from Envazhi.

 4. Prssad

  Thatstamil guys think that only they are tamilians and others are not. One more fringe idiotic group is being formed. What have you done significantly for Tamil people other than creating publicity for yourself

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *