BREAKING NEWS
Search

பணம் செலுத்த முயற்சிக்கும்போதே, லதா ரஜினியின் நிலத்தை கையகப்படுத்தியது தவறு! – மீடியா ஒன்

பணம் செலுத்த முயற்சிக்கும்போதே, லதா ரஜினியின் நிலத்தை கையகப்படுத்தியது தவறு! – மீடியா ஒன்

photo

சென்னை: கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும்போதே, உத்தரவாதமாக காட்டப்பட்ட லதா ரஜினியின் சொத்தை கையகப்படுத்தியதாக எக்ஸிம் வங்கி அறிவித்துள்ளது தவறானது என்று மீடியா ஒன் விளக்கம் வெளியிட்டுள்ளது.

மீடியா ஒன் குளோபல் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் வாங்கிய ரூ 20 கோடி திருப்பித் தரும் வணிகக் கடனுக்கு உத்திரவாதமாக லதா ரஜினியின் பெயரில் இருக்கும் படப்பை நிலத்தைக் காட்டியிருந்தனர்.

இந்தத் தொகையை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியதற்காக லதா ரஜினியின் அந்த நிலத்தை கையகப்படுத்திவிட்டதாக இன்று பத்திரிகையில் பெரிய விளம்பரம் கொடுத்திருந்தது எக்ஸிம் வங்கி.

இது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Automatically generated PDF from existing images.

இந்த நிலையில் இதுகுறித்து மீடியா ஒன் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதில், “மீடியா ஒன் குளோபல் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் உள்ளது. எக்ஸிம் வங்கியிடம் வாங்கிய ரூ 20 கோடியை தானே திருப்பிச் செலுத்தும் சக்தி எங்களுக்கு உண்டு.

இந்தக் கடனை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் திருப்பிச் செலுத்திவிடுவதாக வங்கிக்கு உத்தரவாதம் அளித்திருந்தோம். வங்கி அதிகாரிகளும் ஒப்புக் கொண்ட நிலையில், திடீரென நிலத்தை கையகப்படுத்தியதாக அறிவித்துள்ளனர்.

முதன்மைக் கடனாளிகளான நாங்கள் பணத்தை திருப்பிச் செலுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதே, எங்களுக்கு உத்தரவாதமளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளது வங்கி.

இந்த விஷயத்தில் லதா ரஜினி பற்றி மேற்கொண்டு செய்தி வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

இது கடன் பெற்ற கார்ப்பொரேட் நிறுவனத்துக்கும், வங்கிக்கும் இடையிலான ஒரு பிரச்சினைதான். விரைவில் தீர்க்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

-என்வழி

 
5 thoughts on “பணம் செலுத்த முயற்சிக்கும்போதே, லதா ரஜினியின் நிலத்தை கையகப்படுத்தியது தவறு! – மீடியா ஒன்

 1. SK

  all evil eyes on thalaivar….nothing much i can say…
  hope all these will get resolved very soon and he just enjoys good health & peace of mind. We want him with the best of his health and have a relaxed, peaceful life. some thugs r already writing bad things about this event linking lingaa movie collection fake news & so on…TIME will heal and answer everything….
  i think thalaivar knew these coming which is why he cautioned soundarya during audio release.

 2. மிஸ்டர் பாவலன்

  சவுக்கு என்ற பிரபல பத்திரிக்கையாளர் இந்த செய்தியை அவர் இணைய
  தளத்தில் வெளியிட்டு பண நெருக்கடி காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
  BJP கட்சியில் விரைவில் இணைய இருக்கிறார் என்ற செய்தியை வெளிட்டுள்ளார். இது டிவேட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

  மேலும் விவரங்களுக்கு சவுக்கின் இணைய தள லிங்க் இதோ:

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. நாஞ்சில்மகன்

  ‘மீடியா ஒன்’ நிறுவனத்தின் கடனுக்காக உடைமையாக்கப்படும் இந்த சொத்து தொடர்பாக, இதுவரை நடந்த பரிமாற்றங்கள் குறித்து பதிவுத்துறை வாயிலாக தெரிய வந்த விவரங்கள்:
  *கடந்த, 2006 ஆகஸ்டில், இந்த நிலங்களை லோகம்மன், ரவி, வேலு, ராஜேஸ்வரி, லதா, கவிதா, பிரேமா, கண்ணன் ஆகியோரிடமிருந்து, லதா ரஜினிகாந்த், ரேணுகா ரவிசங்கர் பெயருக்கு மாற்றப்பட்டது.
  * இந்த நிலங்கள், லதா ரஜினிகாந்த் பெயரில் இருந்து இந்தியன் வங்கி பெயருக்கு ஒரு கடனுக்காக, 2007ல் மாற்றப்பட்டது.
  *கடந்த, 2011ல் இந்தியன் வங்கியிடமிருந்து இதற்கான ஆவணம், லதா ரஜினியின் பெயருக்கே வருகிறது.
  * இதன் பின், 2011ல் லதா ரஜினி பெயரில் இருந்து, ‘மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் பெயருக்கு ஆவண ஒப்படைப்பாக மாறுகிறது.
  *இதில், ‘மீடியா ஒன்’ நிறுவனம் கடனை செலுத்தாததால், இந்த சொத்து, ‘எக்சிம்’ வங்கியின் உடைமையாகிறது.

 4. Devaraj

  Sad to see Rajini facing so many problems. Media also spreading false news. Thaliver needs peace. He has given enough entertainment, let him take rest and no more movies.
  Dev.

 5. RAJA

  “முதன்மைக் கடனாளிகளான நாங்கள் பணத்தை திருப்பிச் செலுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போதே, எங்களுக்கு உத்தரவாதமளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளது வங்கி”

  செலுத்த முயற்சி தான செஞ்சாங்க , செலுத்தி முடிகலையே… அப்ப ஜாமீன் கொடுத்தவங்கதான் பொறுப்பு ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *