BREAKING NEWS
Search

முதலாம் பிரான்சிஸ் புதிய போப் ஆண்டவராக தேர்வு!

முதலாம் பிரான்சிஸ் புதிய போப் ஆண்டவராக தேர்வு!

VATICAN_POPE5_1394253g

வாடிகன்: புதிய போப் ஆண்டவராக 76 வயது முதலாம் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

அவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.  அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்.

போப் ஆண்டவராக இருந்த 16ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க கத்தோலிக்க மத கார்டினல்கள் வாடிகனில் கூடினர். முதல் 3 சுற்று வாக்குப் பதிவில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக வாக்கெடுப்பு நடந்த சிஸ்டின் தேவாலய புகைபோக்கியில் கரும்புகை போடப்பட்டது. கரும்புகை என்றால் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்று அர்த்தம்.
VATICAN_POPE2_1394250g
இந்நிலையில் நேற்று நடந்த 4வது சுற்று வாக்குப்பதிவில் புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவைச் சேர்ந்த 76 வயதாகும் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார்.

இந்தத் தேர்வை அறிவிக்கும் வகையில் புகைப்போக்கியில் வெண்ணிற புகை வெளியேறியது.

புதிய போப் இனி முதலாம் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார்.

ஐரோப்பாவைச் சேராத ஒருவர் போப் ஆண்டவராக கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டிருப்பது கடந்த 1,300 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

போப் பிரான்சிஸ் அர்ஜென்டினா தலைநகரான பியூனஸ் ஹேர்ஸ் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப்பாக இருந்தார். கடந்த 2001ம் ஆண்டில் கார்டினல் ஆனார்.

ரோம் தேவாலயத்தில் முதல் பிரார்த்தனை

போப் ஆண்டவராக பதவி ஏற்ற பின்னர், தனது முதல் நாளை ரோம் நகரில் உள்ள கன்னி மரியாளின் தேவாலயத்தில் பிரார்த்தனையை நடத்தினார்.

மக்கள் போப்

முதலாம் பிரான்சிஸை மக்கள் போப் என்கிறார்கள். காராணம், இவர்  சாதாரண மக்கள் மீது அதிக  ஈடுபாடு கொண்டவர்.  மிகவும் எளிமையானவர். குறிப்பாக  அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில்தான் பல இடங்களுக்கும் இவர் போவாராம்.

ஆர்ச்பிஷப் என்ற பெரிய பதவியில் இருந்தாலும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறாராம். இவரே சமைத்துக் கொள்வாராம்.

கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கை போன்றவற்றுக்கு எதிரானவர் முதலாம் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *