BREAKING NEWS
Search

‘ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வருவார்கள்!’

‘தமிழர் வாழ, திராவிடம் செழிக்க ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வருவார்கள்!’

சென்னையில் திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் கலைஞர்,  பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ம.நன்னன், சுப.வீரபாண்டியன்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய கலைஞர்,  “தந்தை பெரியார்,  அறிஞர் அண்ணாத்துரை காட்டிய வழியில் பகுத்தறிவுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது:

நூறாண்டு முடிகின்ற தருவாயில் நம்முடைய இயக்கம் இன்றைக்கு திராவிட இயக்கம் என்ற பெயரால் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் “நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்” என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நாம் திராவிடர்கள் என்று திராவிட இயக்கம் என்பதற்கு ஆண்டு விழா நடத்துகிறோம் என்று சொல்கிற காரணத்தால், தமிழனை மறந்துவிடவில்லை. தமிழ் மொழியை மறந்து விடவில்லை. நம்முடைய இனத்தை இங்கே மறக்காமல் இருக்கிறோம் என்பதற்காகத்தான் இதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

திராவிடமே தமிழ்…

அது மாத்திரமல்ல; 8.3.1942ல் அண்ணா “திராவிட நாடு” இதழைத் தொடங்கியபோது ஐந்து நாட்கள் ஒரு தொடர் தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கத்தில், “தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும் “திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடம் என்று மாறிற்று” என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன. உதாரணமாக, 1926ல் டி.ஏ.சாமிநாதய்யர் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம் டிக்ஷனரியில் “திராவிட” என்பதற்கு “தமிழ்நாடு” என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம்- திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை” என்று அப்போதே விளக்கம் அளித்துள்ளார்.

நான், கடந்த சில நாட்களாக இங்கு பேசுவதற்கான ஆதாரங்களை திரட்ட முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு போன்ற நூல்களைப் படித்தேன். இந்த நூல்களை இளைஞர்கள் படித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை திராவிட இயக்கம், நீதிக்கட்சி வரலாற்றை தமிழக இளைஞர்கள் அறிந்து கட்டிக்காக்க வேண்டும். அண்ணா 1962ல் மாநிலங்களவையில் நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றார்.

திராவிடர் என்ற சொல் நாங்கள் கண்டுபிடித்த சொல் அல்ல. நாங்கள் தவறான பாதையில் மக்களை இழுத்துக்கொண்டு செல்வது போல சில ஏடுகளில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தை தலையெடுக்க விடாமல் செய்து விடலாம் என்ற நம்பிக்கை இன்னும் அவர்களிடம் இருக்கிறது. நாங்கள் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இது சாதாரண இயக்கமல்ல, நூறாண்டுகள் கடந்த இயக்கம் என்று சொன்னார்களே, இன்னும் சொல்லப் போனால் 1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியது என்றால், அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே 1847ம் ஆண்டிலேயே “திராவிட தீபிகை” என்ற தமிழ் இதழ் தமிழகத்திலே நடத்தப்பட்டிருக்கிறது. ஆக, “திராவிட” என்கின்ற சொல், நானோ, பேராசிரியரோ, மேடைகளிலே இருக்கின்றவர்களிலே யாரோ ஒருவர் கண்டுபிடித்த சொல் அல்ல.

தேசிய கீதத்தில் திராவிடம்

தேசிய கீதம் யார் எழுதிய பாட்டு? இது நான் எழுதிய பாட்டா? இல்லை ரவிந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம். அந்தப் பாடலிலே இருக்கிறது, “திராவிட” என்கின்ற சொல். நாங்கள் யாரும் புதிதாகக் கண்டுபிடித்தது அல்ல. பழைய வார்த்தை. பழைய இனம் பற்றிய வரலாற்று வரி.

இன்னும் சொல்லப் போனால் கடற்கரைச் சாலையிலே நடந்து போகிறபோது, அங்கே மாநிலக் கல்லூரி வாசலில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல் ஒரு சிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. உ.வே.சாமிநாத அய்யருடைய சிலை. அந்தக் கல்லிலே என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? சாமிநாத அய்யரைப் பற்றி எழுதியிருக்கிறது. யார் அவர்? “திராவிட வித்யாபூஷண உ.வே.சாமிநாத அய்யர்.” நல்ல காலம்; நாளைக்கு அந்தக் கல்லை யாரும் அகற்றாமல் இருக்க வேண்டும்.

ஏனென்றால் திராவிடம், தமிழ், செம்மொழி என்றால், அதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். இந்த விழா, ஆட்சி மாற்றத்துக்காகவோ அல்லது நாம் பதவிக்கு மீண்டும் வரவேண்டும் என்பதற்காகவோ, இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காகவோ நடத்த வில்லை. இன உணர்வு புதைக்கப்பட்டால் மீண்டும் எழ எவ்வளவு காலம் ஆகும் என்ற கவலையில், அதை தூக்கி நிறுத்த இந்த விழா நடத்தப்படுகிறது.

தமிழர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறோம் என்றும் திராவிட இனம் தலையெடுக்கக்கூடாது என்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சிலர் வருகின்றனர். அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

1921ம் ஆண்டு நடந்த பொது தேர்தல் முடிவு பற்றி இந்திய அரசு எழுதும்போது தாழ்த்தப்பட்ட, கீழ் ஜாதி மக்கள் மத்தியில் மகத்தான மாற்றம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் பழிவாங்க தொடங்கி விட்டார்கள். அதன் அடையாளம்தான் இந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வளவு காலம் நாம்பட்ட அநீதி, இழிவுக்கு பழிவாங்க திராவிட இயக்கம் காத்திருக்கிறது. பழி வாங்கினால்தான் முன்னேற முடியும்.

அல்லது பொட்டுப்பூச்சி, புன்மைதேரை, புழுக்களாக இருக்க நேரிடும். நாம் புலிகளாக, பந்தைய குதிரைகளாக மாறி எதிரிகளை வீழ்த்த வேண்டும். இந்த நிகழ்ச்சி உங்களை வீறுகொண்டு எழச்செய்ய, நம் வரலாறுகளை புரட்டிப்பார்க்க நடைபெறுகிறது. இந்த முழக்கம் நாடு முழுவதும் கேட்க வேண்டும். அந்த அளவுக்கு நாம் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

பிராமணர் ஆதிக்கம்

1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பிராமணர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர் பிராமணர்கள். 1496 பொறியாளர்களில் 1096 பேர் பிராமணர்கள். 3 சதவீதம் இருந்த பிராமணர்கள் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள்.

இந்த அநியாயத்துக்கு விடிவு காலம் ஏற்படுத்தவே திராவிட இயக்கம் தோன்றியது. நாம் நடத்திய போராட்டத்தால் அடிபட்டு, உதைபட்டு, சிறை சென்று சமூக நீதிகண்டு பாடுபட்ட காரணத்தால், இன்று ஓரளவு நிமிர்ந்து நிற்க முடிகிறது. இதையும் பறிக்க இன்று எல்லா பக்கத்தில் இருந்து பயமுறுத்தல், அச்சுறுத்தல் தினம் தினம் வருகிறது. அது பற்றி கவலைப்படாமல் பெரியார், அண்ணா வழியில் நாம் இயக்கம் நடத்தி வருகிறோம். தொடர்ந்த இந்த இயக்கத்தை நடத்த இளைஞர்கள் முன்வரவேண்டும். அதற்காக தொண்டாற்ற வேண்டும்.

எழுந்த இனம்

இது எழுந்த இனம்- திராவிட இனம். இன்றைய தினம் அந்த வரலாற்றுப் புகழை மறந்து விட்டு, புதைக்கப்படுமேயானால் மீண்டும் எழுவதற்கு எத்தனை ஆண்டுக் காலம் ஆகும் என்ற அந்தக் கவலையினால்தான் இப்பொழுதே தூக்கி நிறுத்த இந்த நூறாம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கும் நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூக நீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல, இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.

அப்படி விழித்தெழுந்த இனம் இப்போது அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக பழி வாங்க காத்திருக்கிறது. திராவிட இனத்தை புழுக்களாக கருதுபவர்களை புலிகளாக மாறி நாம் விரட்டமாட்டோமா தமிழர்கள் இப்போது ஓரளவு நிமிர்ந்து நிற்கின்றனர்.

இதையும் அழிப்பதற்கு, இன்றைய தினம் எல்லா பக்கமிருந்தும் நமக்கு பயமுறுத்தல்கள், நமக்கு அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம், நம்முடைய வழியில் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும், அதற்கு இன்றுள்ள கட்சியினுடைய காவலர்கள் உடனடியாக தொண்டாற்ற தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

கருணாநிதியின் பரம்பரை

தொடங்கி விட்டோம் தோழர்களே! தொடர் போராட்டம் தொடங்கிவிட்டோம். ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே’ என்று பரணி பாடிய கருணாநிதி; 13 வயதிலே இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக- ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக- தமிழ்க் கொடி பிடித்து தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன் கருணாநிதி. இன்றைக்கும் அந்த கருணாநிதியினுடைய பரம்பரை கருணாநிதியினுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, அப்போது கேட்ட திராவிட நாடு திராவிடர்க்கே என்ற குரல் மீண்டும் ஒலிக்காமல் இருக்க நாம் நிச்சயமாக வெற்றியை ஈட்டுவோம் என்றார் கருணாநிதி.:

 

-என்வழி செய்திகள்
40 thoughts on “‘ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வருவார்கள்!’

 1. jain

  ஏன் இந்தியாவ விலைக்கு வாங்கவா ,போதும் இதுக்கு மேல வேணாம்ப தமிழ்நாடு தாங்காது

 2. குமரன்

  ஏற்கனவே பல கருணாநிதிகள் இருக்கிறார்கள் …..
  ஒன்றேமுக்கால் லட்சம் கோடிகள் இருக்கிறார்கள் ……

  தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள் …
  ஸ்டாலின். அழகிரி, தமிழரசு, செல்வி
  கனிமொழி
  தயாநிதி, கலாநிதி
  உதயநிதி, அறிவுநிதி, துரை தயாநிதி,
  கவிதாயினி ….
  செல்வம், அமிர்தம் …..

  எத்தனை எத்தன் ……. ஐ ….

  தமிழ் நாடும் தாங்குகிறது …
  திமுகவும் தாங்குகிறது ….
  திஹாரும் தாங்குகிறது ….
  ஆனால், தமிழனால்தான் தாங்கமுடியவில்லை …

 3. மிஸ்டர் பாவலன்

  ///ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள்
  நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ,
  தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க,
  வருவார்கள்,” என்றார்.////

  “தி.மு.க.-வில் அடுத்த தலைவர் யார்?” என்ற போட்டி
  இப்போது சூடு பிடித்திருக்கிறது. ‘செயல் தலைவர்’
  (Acting President) என்ற போஸ்ட் வேண்டும் என ஸ்டாலின்
  பிரயத்தனம் செய்தார். “அப்போது நான் என்ன செயல்படாத
  தலைவரா?” என கலைஞர் அதை நிராகரித்தார். “சரி,
  அடுத்த தலைவர் யார் என கலைஞர் அறிவித்துவிடட்டும்”
  என சென்ற பொதுக்குழுவில் ஸ்டாலின் முயன்றார்.
  அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வீரபாண்டி
  ஆறுமுகத்தை பயன்படுத்தி, ஒரு அமளியை செட் அப் செய்து,
  பின் பேராசிரியர் மூலம் “கழகத்திற்கு கலைஞர் தான் தலைவர்”
  என்ற அறிவிப்பு வரவைத்தார். கதை, வசனம், இயக்கம் கலைஞரே.

  அடுத்த பொதுக்குழு மீட்டிங்கில் சென்ற முறை மாதிரி
  ஏமாந்துவிடக் கூடாது என ஸ்டாலின் அலெர்ட்டாக இருக்கிறார்.
  அழகிரி அவர் பங்கிற்கு “தலைவர் பதவி வந்தால் அதை நான்
  ஏற்றுக் கொள்வேன்” என பேட்டி கொடுக்க இப்போது இது பெரும்
  போட்டியாகி விட்டது. வாக்கெடுப்பு என வந்தால் கலைஞருக்கு
  “தனக்கு எத்தனை பேர் வாக்களிப்பார்கள்?” என ஒரு சந்தேகம்
  வந்து விட்டதால் (அவர் அரசியல் சாணக்கியன் அல்லவா!)
  தலைவரின் எந்திரன் படம் மாதிரி, சிட்டி ரோபோ தன்னுருவில்
  பல்லாயிரம் ரோபோக்களைக் களம் இறக்கி பாம்பு, கிங் காங்,
  என பல வடிவங்களில் வருவது போல், ஒரு கருணாநிதி பல
  கருணாநிதிகளாக பொதுக்குழு மீட்டிங்கில் களமிறங்கி பதவியைத்
  தக்கவைத்துக் கொள்வார் என்பது போலத் தெரிகிறது.

  இது ஒரு க்ளைமாக்ஸ் சண்டையாக இருக்கலாம் என்பதால்
  பொதுக் குழு நடப்புகளை அவர்களது சன் டி.வி., கலைஞர் டி.வி.,
  சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வார்களா என நாம் பார்ப்போம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 4. http://koothadiveddai.blogspot.com/

  சென்னையில் திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் (நா நாடகமணி,வாழும் ஹரிச்சந்திரன்) கருணா,நிதி, பொதுச்செயலாளர் (பொம்மலாட்டம்)அன்பழகன், (வடமாவட்ட பிரிவுத்தலைவர்) பொருளாளர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் (குஞ்சாமணி)கி.வீரமணி, (பொழுதுபோக்கு) ம.நன்னன், (கைத்தடி) சுப.வீரபாண்டியன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  இவ்விழாவில் பேசிய கலைஞர்நிதி, ‘’ராசாத்தி, கனிமொழி, காட்டிய வழியில் பகுத்தறிவுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

  அவர் மேலும், “இன்றைய தினம் நமக்கு 2G கொள்ளை, நில அபகரிப்பு, குடும்ப ஆதிக்கம், எனது கபட நாட்கங்கள் ஆகியவற்றிற்கு விஷமிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன. அவைகளைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நம்முடைய அஞ்சா நெஞ்சன் அழகிரி வழியில், தயாநிதி அமைத்துக்கொடுத்த பாதையில், கனிமொழி அமைத்துக்கொடுத்த அற வழியில் நாம் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

  இங்கே பேசியவர்கள் எல்லாம் சொன்னார்கள். தொடர்ந்து இந்த முயற்சி தழைத்தோங்கி தொடருவதற்கு நீங்கள் முன்வரவேண்டும். அதற்கு இன்றுள்ள கட்சியினுடைய காவலர்கள் உடனடியாக தொண்டாற்ற தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

  தொடங்கிவிட்டோம் தோழர்களே தொடங்கிவிட்டோம். தொடர் நாடகத்தை தொடங்கிவிட்டோம். 13 வயிதிலே இந்தியை எதிர்ப்பதாக கொடிபிடித்து மக்களை ஏமாற்றி “நேருவின் மகளே வருக நிலையான வாழ்க்கை தருக, என்று தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன் இந்த கருணாநிதி. இன்றைக்கு இந்த கருணாநிதி தனது பரம்பரை செழிக்கவேண்டும் என்பதற்காக, தள்ளுவண்டியில் டில்லிக்கு சென்று “தியாகத்திருவிளக்கே வருக திகட்டாத வாழ்வு தருக என்று மண்டியிட்டாலும்,, தமிழ்நாடு தாண்டியும் தளரா வைடாக்கியத்துடன் கோலோச்சிக்கொண்டுதானிருக்கிறது. கருணாநிதியுடைய வழித் தோன்றல்கள் இதை வரவேற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

  அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனால் பல கருணா(நிதிகள்) உதயநிதி, துரை தயாநிதி,கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அன்புநிதி, அற்புதநிதி,என்று பலநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, வருவார்கள்,” என்றார்.

 5. மிஸ்டர் பாவலன்

  ///அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனால் பல கருணா(நிதிகள்) உதயநிதி, துரை தயாநிதி,கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அன்புநிதி, அற்புதநிதி,என்று பலநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, வருவார்கள்,” என்றார்.///

  ஹா..ஹா.. ஹா… அருமையான கற்பனை!!

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 6. Kumar

  when staying in govt he will loot all public excehequer money.Whn not in govt will say about tamils.what an act…

 7. karthik

  ரெண்டு கருனாக்கள் போதாதா.. தமிழர் அழிய ?

 8. Ganesh Shankar

  பேசுவதற்கு ஒன்றும் இல்லை.இதை போல் எதையாவது எடுத்து விடுவார்.
  அதுவும் இப்போது மக்கள் சற்றே இவரது நாடகத்தை நன்றாக புரிந்து வைத்து இருகிறார்கள்,அதனால் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
  அவர் செய்த சாதனைகள் ஒன்றுமே சொல்ல வில்லையே.
  இதை போல் திராவிடம்,ஆரியம்,பிராமணம் இவற்றை எடுத்து வண்டியை ஓட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.

  மக்களை எவ்வாறாவது ஏமாற்றி விடலாம் என்ற ஒரு ஆசை,சாதி வெறி,
  குடும்பத்தை காப்பற்ற,கட்சியை காப்பற்ற எவ்வாறாவது முன்னே வந்து விட வேண்டும் என்பதனால் பேசுகிறார்.

  நான் சொன்னதை கேட்டு கலைஞர் தொலைகாட்சியில் பங்கு தாரர் ஆனதை தவிர்த்து தவிர,கனிமொழி வேற ஒன்றும் செய்ய வில்லை என்று சொல்லி இருக்கிறார்.
  இவர் சொல்வதை கேட்டதால் பெற்ற பொண்ணுக்கே என்ன கதி என்று அதை காண்பித்தும் விட்டார்,இதற்கு பிறகும் நாம் இவரை நம்பினால் என்ன ஆகும் என்பதை நாம் தான் யோசிக்க வேண்டும்.

  வர போகின்ற தேர்தல்கள்,திராவிட முன்னேற்ற கழகத்தை எங்கே எடுத்து செல்ல வழி தெரியவில்லை,குடும்ப பாசம் இவை எல்லாம் சேர்ந்து அவரை இவாறு எதாவது பேசினால் ஒரு வேலை மக்கள் மயங்கினால் மயங்குவார்கள் என்று ஆடு நனைய ஓநாய் அழுகிற கதையாக இருக்கிறது.

 9. குமரன்

  ///ரெண்டு கருனாக்கள் போதாதா.. தமிழர் அழிய ?///

  சரியாகச் சொன்னீர்கள். இந்த இருவரால் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்தார்கள், மேலும் ஒரு லட்சம் பேர் முடமாகி விட்டார்கள். இன்னமும் சில லட்சம் பேர் வீடு, வாசல், உற்றார், உறவினர் அனைவரையும் இழந்து அனாதைகளாக / அகதிகளாக அலைகிராகள். சொந்த மண்ணில் வாழக்கூட நாதியற்ற நிலைக்கு அவர்களை ஆளாக்கிய அந்தக் கருணா அந்த அரசில் அமைச்சர். இந்தக் கருணாவின் சந்ததிகள் எல்லாம் முன்னாள் / இந்நாள் அமைச்சர், எம்.பி. வருங்கால முதல்வர்/ அமைச்சர் எல்லாம். ஈழத்தமிழர் உயிரைக் கொடுத்துத் தனது மகள் சார்பாகப் பெற்ற பதவியில் பல ஆயிரம் கொடியைச் சுருட்டியதன் வினைப்பயனை இவர் 120 ஆண்டுகள் வாழ்ந்து அனுபவிக்கவேண்டும்.

 10. குமரன்

  புரட்டிப் பேசும் வழக்கத்தை கருணாநிதி விடமாட்டார்.

  “நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்” என்று சொல்வது ஒருபக்கம். அதைத் தொடர்ந்து “தொடங்கி விட்டோம் தோழர்களே! தொடர் போராட்டம் தொடங்கிவிட்டோம். ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே’ என்று பரணி பாடிய கருணாநிதி; 13 வயதிலே இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக- ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக- தமிழ்க் கொடி பிடித்து தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன் கருணாநிதி.” என்றும் வெட்கமில்லாமல் கூறுவார்.

  நான் இந்தியன் என்று சொன்ன பின்னால் இந்திப் பெண்ணை சகோதரி என்றழைத்து வெளியே அனுப்பாமல், விரோதியாகப போர் தொடுப்பது என்?

  சிங்களன் வெளி நாட்டவன், அவனுக்கு எதிராகப் போரிடாது கடற்கரையில் ஆறுமணி நேர உண்ணாவிரத ஓரங்க நாடகத்தை நடத்திய வீரன் இதே கருணாநிதிதானே?

 11. குமரன்

  திராவிடம் என்பது இனம் அல்ல, அது தெக்கணம் என்று தமிழில் சொல்லப்படும். Deccan Plateau என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். திராவிடப் பீடபூமி என்பது பூகொனவியல் ரீதியான ஒரு நிலப் பகுதி. மேற்குத் தொடர்ச்சிமலை, கிழக்குத் தொடர்ச்சி மலை இவற்றின் அடிவாரத்தில் அமைவதால் உருவான பீடபூமிப் பகுதி. பண்டைய பாரத மரபில் தெக்கணம் என்பதைத் தேசம் – திராவிட தேசம் என்றும் குரிப்ப்டியாப்பட்டு வந்திருக்கிறார்கள். அது ஐம்பத்தாறு தேசங்கள் அடங்கிய பாரதக் கண்டம் என்று உரைக்கும் மன்னர் காலத்தில் அப்படி வழங்கியது.

  ஆக திராவிடம் என்பது நிலப்பரப்பைக் குறிக்குமே அல்லாது ஒரு இனத்தை அல்ல. வடக்கிலிருந்து தேற்கு வரை அனைத்து இந்தியர்களும் ஒரே இனம். மொழிகள்தான் வேறு.

  திராவிட மொழிகள் எனப்படுவன – தமிழ் மட்டும் அல்ல, துளு, கொங்கணி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என்று அனைத்துமே திராவிட மொழிகள்தான்.

  திராவிட பூமியில் ஒரு பகுதியே தமிழ்நாடு. திராவிட மொழிகளில் ஒரு மொழியே தமிழ். இதை அவர் ஒப்புக் கொண்டால் அவரது தொழிலுக்குக் கேடு வந்து விடும். எனவே புரட்டிப் பேசுகிறார்.

 12. குமரன்

  ///ரவிந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம். அந்தப் பாடலிலே இருக்கிறது, “திராவிட” என்கின்ற சொல். நாங்கள் யாரும் புதிதாகக் கண்டுபிடித்தது அல்ல. பழைய வார்த்தை. பழைய இனம் பற்றிய வரலாற்று வரி.///

  என்னமாகப் புரட்டிப் பேசுகிறார்?

  Bhārata bhāgya vidhātā
  Pañjāba Sindhu Gujarāṭa Marāṭhā
  Drāviḍa Utkala Vaṅga
  Vindhya Himāchala Yamunā Gaṅgā
  Ucchala jaladhi taraṅக

  நமது தேசீய கீதம் சொல்லுவது என்ன?

  “ஜன காண மன அதி நாயக ஜெயஹே
  பாரத பாக்ய விதாதா
  பஞ்சாப் சிந்து குஜராத மராட்டா
  திராவிட உத்கல வங்கா
  விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா
  உச்சல ஜலதித ரங்கா ” ……

  ரபீந்திரநாத் தாகூர் …..
  பஞ்சாப் , சிந்து, குஜராத், மகாராஷ்டிரா, திராவிட, உத்கல்(இது ஒரிசா பகுதி) வங்காளம் என்று பல பிறந்தியங்களைத்தான் குறிப்பிட்டார்.

  இதில் இருக்கும் திராவிட என்பதை மட்டும் இனம் என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும்? இப்படிப் புரட்டிப் பேசித்தான் தமிழ்ப் புத்தாண்டையும் கருணாநிதி மாற்றினார். அவருக்கு எதோ ஒரு தனிப்பட்ட காழ்ப்பு அதனை எதிலெல்லாமோ காட்டி தனது குடும்பத்துக்கு வியாபாரமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்.

 13. குமரன்

  ///உ.வே.சாமிநாத அய்யருடைய சிலை. அந்தக் கல்லிலே என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? சாமிநாத அய்யரைப் பற்றி எழுதியிருக்கிறது. யார் அவர்? “திராவிட வித்யாபூஷண உ.வே.சாமிநாத அய்யர்.” நல்ல காலம்; நாளைக்கு அந்தக் கல்லை யாரும் அகற்றாமல் இருக்க வேண்டும்.///

  கருணாநிதியே அகற்றாத “அய்யர்” சிலையை வேறு யார் அகற்றுவார்?

  அய்யர்கள் எவரும் தமிழர் அல்ல, திராவிடர் அல்ல என்று வாய் கிழியப் பேசுவார். அவரே இப்போது என்ன சொல்லுகிறார்?

  “திராவிட வித்யா பூஷன உ.வே. சாமிநாத அய்யார் ”

  தினத்தந்தியில் தினமும் சிரிப்பு படம் என்று ஒன்று வரும் .சில படங்களுக்குக் கீழ் போட்டிருப்பார்கள்:

  “இந்த சிரிப்பு படத்துக்கு வசனம் தேவையில்லை.”

  அதுதான் நினைவுக்கு வருகிறது.

  உ.வே.சாமிநாத அய்யர் என்ற திராவிடத் தமிழர் தெருத்தெருவாக அலைந்து வீடு வீடாகப் பழைய ஓலைச் சுவடிகளுக்குப் பிச்சை எடுத்து அதனைத் தற்காலத் தமிழில் மீட்டு எழுதி கதிரேசன் செட்டியார் என்கின்ற பெருமனம் படைத்த திராவிடத் தமிழரின் ஆதரவில் பதிப்பிட்ட ……

  புறநானூற்றுப் பாடலை …

  மனப்பாடம் செய்து அதனைத் தனது நாடகங்களில் பயன்படுத்திய கலைஞர் மு.கருணாநிதி …..

  தனது இதே பேச்சில் தாக்கத் தேர்ந்தெடுத்த அய்யர் பற்றிப் பேசுவதற்கு முன்னர் உ.வே.சா அவர்களைப் பற்றிப் பேச வைத்தது எது என்றால் …

  அது அவரது வினைப்பயன்.

 14. குமரன்

  /// இந்த அநியாயத்துக்கு விடிவு காலம் ஏற்படுத்தவே திராவிட இயக்கம் தோன்றியது. ///

  இந்த அநியாயம் இங்கு மட்டுமா நடந்தது. அனைத்திந்தியாவிலும் நடந்தது.

  அதற்கு விடிவு காலம் வந்தது யாரால்?

  பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கரால். அவர் மட்டும் இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் இடம் பெறச் செய்யா விட்டால் கருணாநிதி மார் தட்டுவதேது?

  இந்த தேசத்துக்கும், பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஒரு வகையில் இந்து மதத்துக்குமே கூட மகத்தான சேவை ஆற்றியவர் எவர் என்றால் உண்மையான சாதனையாளர் ஆன பாபாசாஹேப் பீமாராவ் அம்பேத்கர் அவர்கள்தான்.

 15. குமரன்

  தேசிய கீதத்தில் மட்டுமா திராவிடம் வருகிறது?

  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து இதோ…. இதில் வருகிறது திராவிடம் என்பது பூமியைக் குறிக்கும் என்கின்ற வகையில் உள்ள ” வரலாற்று வரிகள் ” தமிழினத்தலைவர் இதை விட்டு ஏன் தேசிய கீதத்தைத் தேர்ந்தெடுத்தார்? ஏனெனில் அதில் மொழி வேறு, தமிழ் மக்களை அதை வைத்துத்தான் ஏமாற்ற முடியும்……

  “நீராரும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
  தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
  அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
  எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
  தமிழணங்கே!
  நின் சீரிளமைத் திறம்வியந்து
  செயல் மறந்து வாழ்த்துதுமே!
  வாழ்த்துதுமே!
  வாழ்த்துதுமே!”

 16. குமரன்

  நமது தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசு உபயோகிக்கும் பகுதியை மேலே கொடுத்திருக்கிறேன். அதன் முழுப்பாடல் இதோ…

  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
  சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
  தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
  தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
  அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
  எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

  ….. மேற்கூறிய பாடலில் உள்ள ஐந்து வரிகளை நீக்கியது யார்? திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். …. ஏன் இந்த நீக்கம்.?

  இறை மறுப்பு என்ற தனது கொள்கைக்காக … ஒரு கவிஞரின் படைப்பை இப்படிச் சிதைக்கும் சிறந்த சிந்தனையாளர் யார்? கலைஞர் மு.கருணாநிதி.

  அது மட்டுமா? இந்த முழுப் பாடலை வைக்கும்போது திராவிடம் ஆரியம் என்பது “இனத்தைக் குறிப்பது அல்ல, திராவிடம் என்பது நான் முன்னரே சொன்னது போல … கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் … உள்ளிட்டதுதான் என்பதும் அதுவுமன்றி ஆரியம் என்ற சொல் வடமொழியான சமஸ்கிருதத்தைக் குறிப்பது என்பதுவும் தெளிவு ஆகிறது. எனவே தான் சதி மனத்துடன் இந்தச் சுருக்கல்.

 17. குமரன்

  திராவிடம் என்ற சொல் நமது தேவாரத் திருப்பதிகங்களில் வருகிறது. எல்லா இடங்களிலும் அது குறிப்பது மொழியை, அந்த காலத்தில் அது குறித்த மொழி தமிழே. ஆரியம் என்று தேவாரத் த்ரயுப்பதிகங்கள் குறிப்பது சமஸ்கிருதத்தை.

 18. விமலானந்தன்

  ஆசிரியர் அவர்களுக்கு,

  குமரன் என்ற வாசகரின் கருத்து மிகுந்த வருத்தத்தை – கோபத்தைத் தருவதாக உள்ளது.

  கருணாநிதி மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு அளவே இல்லையா?

  திராவிடம் வேறு, திராவிட மொழிக்குடும்பத்துக்கு தலைமையான தமிழ் வேறு என்று கூட சொல்வீர்களோ.

  காய்தல் உவத்தல் இன்றி எதையும் பாருங்கள். ரவீந்திர நாத் தாகூர் பாடிய தேசிய கீதத்தை இப்படியா அவமானப்படுத்துவீர்கள்.

  பஞ்சாப் என்பது ஒரு பூகோளப் பரப்பு. அதன் மக்களை என்னவென்கிறீர்கள்… அவர்கள் பஞ்சாபியர் இல்லையோ? அவர்களை வேறு விதமாகவா குறிப்பிடுகிறீர்?

  மராட்டியம் என்பது இடப்பரப்பின் பெயர். அப்படியானால் அங்கு வசிப்பவர் மராட்டியர் இல்லையோ? மராட்டி மைந்தன் என்றெல்லாம் வரலாற்று ரீதியாக அவர்கள் சொல்லிக் கொள்வது உங்கள் கருத்துப்படி தவறோ!

  மற்ற மாநிலத்துக்காரன் எல்லாம் தங்கள் இடப்பரப்பைச் சார்ந்து தங்கள் பஞ்சாபி என்றும், வங்காளி என்றும், குஜராத்தி என்றும் சொல்லிக் கொள்ளலாம். அவர்கள் அந்த இனத்துக்காரர்கள் என்று ஏற்பீர்கள். ஆனால் திராவிடன் என்று சொன்னால் உங்களுக்கு கசக்கிறதா…

  உங்கள் பிரச்சினை திராவிடம் அல்ல. கருணாநிதி. கருணாநிதியை கண் முழுக்க நிரப்பிக் கொண்டு, எதிரில் நிற்கும் எதுவும் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

  கருணாநிதி சொல்லிவிட்டார் என்றால் அது சரியாகவே இருந்தாலும் தவறு, இல்லையா மிஸ்டர் குமரன்?

  உங்களைப் போன்றவர்கள் எந்த அளவு காழ்ப்புணர்வும் வெறுப்புணர்வும் மிக்க மனநிலையோடு ஊருக்கு உபதேசிக்கிறீர்கள் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

  //ஆக திராவிடம் என்பது நிலப்பரப்பைக் குறிக்குமே அல்லாது ஒரு இனத்தை அல்ல. வடக்கிலிருந்து தேற்கு வரை அனைத்து இந்தியர்களும் ஒரே இனம். மொழிகள்தான் வேறு.//

  -அடடா. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு. இந்த வலையில் கருத்தெழுதும் அறிவார்ந்த நண்பர்களே. இந்த முரண்பாடுகளின் மூட்டைக்கு பதில் சொல்லுங்கள்.

  மார்வாடியும் மலையாளியும் ஒரே இனம். வங்காளியும் தமிழனும் ஒரே இனம். அப்படித்தானே. பலே!

  வரலாறு என்பது என்வழியின் கமெண்ட் பாக்ஸ் அல்ல. கண்டபடி திரித்து கூட்டிப் பெருக்கி கழித்துக் கொண்டிருக்க. வரலாறு எந்த கொம்பனாலும் மாற்றவியலாத உண்மை.

  இந்தியா என்ற ஒரு தனித்த நாடே 18-ம் நூற்றாண்டுக்கு முன் இல்லையே. அதாவது தெரியுமா? இனங்களின் தேசத்தை அழித்து உருவான புதிய நாடுதானே இந்தியா? அசோகன் காலத்தில் இந்தியாவா இருந்தது? அன்று ஒவ்வொன்றும் தனித்தனி தேசம். தனித்த தேசங்கள் ஆங்கிலேயன் காலம் வரை அடையாளங்களுடன் தொடர்ந்தன, சமஸ்தானங்களாக திகழ்ந்தன. அவற்றை உருட்டி மிரட்டி ஒரு தேசமாக்கியது நிர்வாகத்துக்காகத்தான். அதற்காக அந்த தேசங்களில் வாழ்ந்தவெல்லாம் ஒரே இனம் என்பது, கலப்பின உற்பத்தியின் விளைவுதான் தமிழன் என்று சொல்வதற்குச் சமம். கருணாநிதி மீதுள்ள வெறுப்பில் உங்களைப் போன்றவர்கள் இதையும் சொல்வீர்கள், இதற்கு மேலேயும் போவீர்கள்.

  திராவிட மொழிக் கூட்டத்தின் தாய் மொழி தமிழென்கிது ஹரப்பா ஆராய்ச்சி. நீங்களோ, அது பத்தோடு பதினொன்றான மொழி என்கிறீர். அப்படியெனில் பத்தோடு பதினொன்றான மொழிக்குதானா செவ்வியல் அந்தஸ்து தந்திருக்கிறார்கள்?

  கொஞ்சம் அறிவைப் பயன்படுத்திப் பேசுங்கள். அரசியல் காழ்ப்புணர்வில் என்தாய் மலடி என்று சொல்லித் திரிய வேண்டாம்.

  திராவிட நாடு இது. தொன்மம் நிறைந்த திராவிட பூமி. இதன் மக்கள் திராவிடர். திராவிட இனத்தின் மொழி தமிழ். உலகில் தோன்றிய முதல் மொழிகளில் ஒன்று என உலகம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்தத் தமிழின் பிரிவுகளே நீங்கள் சொல்லும் மற்ற மொழிகள் என்பது மொழியியல் வல்லுநர்கள் ஆய்வின் முடிவு. கவனிக்க. இந்த ஆய்வு முடிவு வந்த நேரத்தில் கருணாநிதி என்ற மனிதர் பூமியில் பிறக்கவே இல்லை அய்யா.

  அப்பேர்ப்பட்ட உண்மைகளை, வெறும் காழ்ப்புணர்ச்சிக்காக திரித்து எழுதுகிறீரே. பெரியாறும், அண்ணாவும், கருணாநிதியும், அன்பழகனும் காலகாலமாய் இந்த திராவிடர்களை எச்சரித்தது உம்மைப் போன்றவர்களால் இந்த சமூகத்தில் பரவப் போகிற விஷமத்தனத்தை கறுவறுக்கத்தான்.

  இந்த தளத்தின் உரிமையாளருக்கு:

  ஒரு நடிகரை முன்னிறுத்தும் தளத்தில் பல கட்டுரைகள். சந்தோஷம். ஆனால், களைகளும் நிறைய உள்ளன, கருத்துரைகள் என்ற பெயரில். வாசகன் கருத்து சொல்ல சுதந்திரம் அளிக்கலாம். விஷத்தைத் துப்பிவிட்டுப்போக அனுமதி அளிப்பது உங்களை நீங்களே கொன்று கொள்வதற்கு சமம்.

  -விமலானந்தன்

 19. விமலானந்தன்

  ஆக, இங்கே குமரன் கொந்தளிப்பது தமிழுக்காகவோ, திராவிடத்துக்காகவோ அல்ல. அவர் சார்ந்த இனத்துக்காகவே என்பது வெள்ளிடை மலை.
  இதற்கு ஏன் தமிழ் உணர்வு என்ற போர்வை. செத்தவனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஈழத்து அரசியல்வாதிகளுக்கும் உங்களைப் போன்றvaர்களுக்கும் ஏது வித்தியாசம்?

 20. விமலானந்தன்

  //பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே//

  இதற்காக கருணாநிதியை குறை கூறும் முன்,

  ஐந்து சரணங்களாக உருவாக்கப்பட்ட தேசிய கீதத்தை இரு சரணங்களா சுருக்கிக் கொண்ட இந்திய அரசைக் கேட்க உமக்கு தைரியமிருக்கிறதா?

  -விமலானந்தன்

 21. விமலானந்தன்

  மொழியின் தொன்மத்தை எதை வைத்துக் கண்டறிவீர்கள்? அந்த மொழியின் லிபி உருவான காலம், அந்த லிபியில் இலக்கியம் அல்லது மொழி நூல்கள் உருவான காலத்தை வைத்துதான்.

  இந்தியாவில் என்றல்ல. உலகில் வேறு எந்த மொழியிலும் நூல்கள் உருவாகும் முன்பே தொல்தமிழில் நூல்கள் உருவாகின. தமிழின் தொன்மை குறித்த லெமூரியாக் கண்ட கதைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டாலும் கூட, தமிழின் இலக்கியத் தொன்மையே 5000 ஆண்டுகளுக்கும் மேல்.

  பர்ரோ, எமனோ இணைந்து வெளியிட்ட திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி பார்த்து இந்த மொழியின் தொன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தக் காலகட்டத்தில் நீங்கள் சொல்லும் எந்த மொழியும் தோன்றவே இல்லை.

  கால மாற்றம், இயற்கை மாற்றம் காரணமாக பிரிந்து போன திராவிடர்கள், தத்தமது இடவியலுக்கு ஏற்பட தமிழ் மொழியை பேச்சுவழக்காக்கிக் கொண்டனர். அதற்கு தனி லிபியை உருவாக்கினர். தமிழைப் போல, தெலுங்கும், மலையாளமும், துளுவும் வந்தது. துளுவுக்கு இன்னும்கூட முழுமையான லிபி இல்லை. கொங்கணியும் அப்படித்தான்.

  திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்பது எத்தனையோ சதிகளை வென்று நிறுவப்பட்ட மொழி ஆய்வாளர்களின் முடிவு. அதை மாற்ற சதிகார குமரன்கள் முளைத்திருக்கும் காலமடா.

  -விமலானந்தன்

 22. விமலானந்தன்

  ஒரு தமிழ் ஆசிரியன் நான். என் தமிழாசான் விமலானந்தரின் பெயரையே எனக்கும் சூட்டிக் கொண்ட பற்றாளன் நான். பகுத்தறிவு அனுமதிக்காவிட்டாலும், தமிழுக்கு நேரும் அவமானம் பார்த்து நெஞ்செரிந்து எழுதுகிறேன். வயிறெரிந்து சொல்கிறேன், சீர்மிகு தமிழையும் திராவிட தொல்பெருமையேயும் தூற்றும் இந்த தலைமுறை நாசமாய் போகட்டும்!
  -விமலானந்தன்

 23. மிஸ்டர் பாவலன்

  கலைஞர் திராவிடம், தமிழ் என்பதை அவரது அரசியல்
  குறுகிய நோக்கத்திற்கு எப்படி வேண்டுமானாலும்
  பயன்படுத்தினாலும் திராவிடர் என்பது அரசியல் கட்சிகளால்
  எப்படி பயன்படுத்தப்பட்டாலும் (DK, DMK, ADMK,..), தமிழ்
  மொழியின் பாரம்பரியத்தையும், தமிழ் பண்பாட்டின்
  தொல் சிறப்பையும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

  மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்றவர்கள்
  தங்கள் கட்டுரையில் தமிழின் சிறப்பைப் பற்றி எழுதும்
  போது அவற்றில் சம்ஸ்கிருத வெறுப்பையும், பார்ப்பனர்களுக்கு
  எதிரான கருத்துக்களையும் (anti-brahmin views) சேர்த்து
  எழுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழின் பாரம்பரியத்தை
  மறுத்து, அறிஞர் சொன்னது போல் இதுவும் ஒரு மொழி என்ற
  தவறான கருத்துக்களிலும் உடன்பாடில்லை. ஒரு நடுநிலை
  கருத்து வேண்டும். வையாபுரிப் பிள்ளை, தொ.மு.சி. ரகுநாதன்,
  கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞர்கள்
  நடுநிலையாக பல கருத்துக்களையும், நூல்களையும் எழுதி
  வைத்திருக்கிறார்கள். அவற்றில் கருத்து வேறுபாடு நமக்கு
  இருக்கலாம் என்றாலும் ஆராய்ச்சிக்கு அவை அவசியமானவை.
  (நான் ரகுநாதனைப் பல தடவை பெருமாள் புரத்தில் – நெல்லை-
  அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். “உங்களுக்கு
  அப்பாயின்ட்மென்ட் வேண்டாம், எப்போது வேண்டுமானாலும்
  சந்திக்கலாம்” என்று அவர் காட்டிய அன்பை மறக்க முடியாது).

  மேலை நாட்டு அறிஞர்களும் பல அற்புதமான ஆராய்ச்சி
  செய்திருக்கிறார்கள். இவர்களில் ஜார்ஜ் ஹார்ட் முக்கியமானவர்.
  அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, தமிழ் மொழி, சமஸ்கிருதம்
  இரண்டையும் கசடறக் கற்று, சங்க நூல்கள், காளிதாசனின் நாடகங்கள்,
  வட மொழி நூல்களை படித்து சிறந்த ஆராய்ச்சி செய்திருக்கிறார்.
  அவரது doctorate thesis நான் அவருடன் autograph-உடன் பத்திரமாக
  வைத்திருக்கிறேன். Kamil Zvelebil என்ற Czech அறிஞரும் பல
  ஆய்வுகள் செய்திருக்கிறார். அவரது Smile of Murugan என்ற நூல் ஒரு
  அற்புதமான படைப்பு. இவற்றை எல்லாம் விரிவான கட்டுரைகளாக
  நான் எழுத எனக்கு நேரம் இல்லை.

  இந்த வலையில் உள்ள அறிஞர்களுக்காக ஜார்ஜ் ஹார்ட்
  எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரை இணைப்பைத் தருகிறேன்.
  இதைத் தமிழாக்கம் செய்து தர எனக்கு நேரம் இல்லை. நேரம்
  கிடைத்தால் இதை தனியாகவே ஒரு கட்டுரையாக தருகிறேன்.

  ஹார்ட்டின் கட்டுரை முகவரி: http://bit.ly/w7m1um

  கட்டுரை தலைப்பு: Letter on Tamil as a Classical Language

  -=== மிஸ்டர் பாவலன் ===

 24. குமரன்

  பெருமதிப்பிற்குரிய தமிழ் ஆசான் விமளானந்தர் அவர்களுக்கு
  தங்களை வருந்துவது எனது நோக்கம் அல்ல. தங்கள் மனம் நோகுமெனில் எனது வருத்தங்கள். ஆனால் உண்மையை நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். நான் எங்கேனும் தமிழின் தொன்மத்தைச் சிதைக்கும் படிக்கு நீங்கள் சொல்வது போல சொல்லியிருக்கிறேனா? இல்லவே இல்லை. இங்கே எங்கு “எனது சதி” வந்தது?

  தமில் எனது தாய்மொழி. அதன் தொன்மமும் வரலாறும் தங்களுக்கு எத்தனை உணர்வு பூர்வமானதோ அதே அளவுக்கு எனக்கும் உணர்வு பூர்வமானது.

  இங்கே நம் முன்னர் இருக்கும் விஷயம் தமிழ் குறித்து என்பதனால் நான் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஐந்து வரிகளைச் செதுக்கியது குறித்துப் பேச வேண்டி வந்தது. அதில் நான் கூறிய படிக்குச் செதுக்கியதற்கு நீங்கள் சொல்வது என்ன? நான் போய் நமது தேசிய கீதத்தில் செதுக்கிய வரிகளைப் பற்றிக் கேட்க வேண்டும் என்பது உங்கள் கருத்து. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இது அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது போல அல்லவா இருக்கிறது? நமது தமிழ்த் தாய் வாழ்த்தில் அந்த ஐந்து வரிகளை நீக்கியதால்தானே நமது தமிழினத் தலைவர் கலைஞர் அதனைத் தனது உதாரணமாகக் கொள்ளாமல், தேசிய கீதத்துக்குத் தாவினார்? என்னைச் சாடும் தமிழ் ஆசிரியரான தாங்கள் இது குறித்து என்ன சொல்வீர்கள்?

  தேசிய கீதத்திலும் சரி, நமது தமிழ்த்தாய் வாழ்த்திலும் சரி திராவிடம் என்ற சொல்லுக்கு இடம் பொருள் இவள பார்த்து பொருள் கொள்வதானால் அவை குறிப்பன “இனம்” அல்ல, “பூமி”யைத்தான் என்பதுதானே சரி.

  இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்ளுகிறேன். தமிழ் எனது அன்னை. என்னிடம் நேரில் பேசிப் பழகியவர்கள் அனைவரும் அறிவர் எனக்குத் தமிழ்தான் முதல் மொழி என்பதை. இந்தி எதிர்ப்புப் போருக்குப் பின்னர் எந்தக் காரணம் கொண்டும் இந்தி கற்காமல் என்னிடம் ஹிந்தியில் பேசுபவர்களிடம் அந்த மொழி புரிந்தாலும் புரிவதில்லை என்று சொல்லி வருபவன். அவர்கள் என்னிடம் பேசுவதானால் என் மொழியிலோ அல்லது எனக்குத் தெரிந்த ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும் என்று மிக உறுதியாக நிற்பவன். எப்பேர்ப்பட்ட சம்பளம் தரும் வேலை வந்தாலும் தமிழ்நாட்டை விட்டுப் போவதில்லை என்று உறுதி கொண்டவன். நான் எதிர்ப்பது போலிகளையும் நாடக தாரிகளையும்தான். நான் வெளிப்படுத்தியது எனது கருத்துக்களை. அதில் நீங்கள் சொல்வதுபோலத் திராவிடத்தின் தமிழின் தொல்பெருமைகளை எங்கணுமே தூற்றவில்லை. எனக்கு “உண்மையின் தாக்கம் பலமானது” என்பதில் நம்பிக்கை இருக்கிறது.

 25. senthilbabu

  போதும்பா ஒரு கருணாநிதியே போதும். தமிழ் தமிழ் னு சொல்லி ஏமாத்த இன்னும் பல கருணாநிதி வந்தா தமிழ் நாடு நாசமா போய்டும்…..

 26. குமரன்

  பெருமதிப்பிற்குரிய தமிழ் ஆசான் விமலானந்தர் அவர்களுக்கு,

  எனது சென்ற பதிலில் சில எழுத்துப் பிழைகள், நான் கவனித்துப் பதிந்திருக்கவேண்டும். பிழை பொறுக்கக் கோருகிறேன்.

  ///கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்///

  இவை தமிழ்த்தாய் வாழ்த்தில் செதுக்கப்பட்ட வரிகள். என்ன சொல்கின்றன? தமிழிலிருந்து பிறந்தனவாக – கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு – ஆகிய மொழிகளைக் கூறுகின்றது. இதனைச் செதுக்கி, புறம் தள்ளியதை விடவா தமிழுக்குப் பெரும் அவமானம் வந்து விட முடியும்?

  இதனைச் சுட்டிக் காட்டிய நான் செய்வது சதிஎன்றும் நான்தான் தமிழுக்கு அவமானம் செய்து விட்டேன் என்றும் நீங்கள் கூறுவது முறைதானா ஐயா?

 27. குமரன்

  பெருமதிப்பிற்குரிய தமிழ் ஆசான் விமலானந்தர் அவர்களுக்கு,

  கோபம் இருக்கும்போது நியாயம் கண்ணுக்குத் தெரியாது. ….

  இது எங்கள தலைவர் ரஜினி அவர்கள் படத்து வசனம்.

  சற்றே நிதானமாக நான் எழுதியிருப்பதை எல்லாம் படித்துப் பாருங்கள்.

  நீங்கள் சொல்வதுபோல தமிழின் தொன்மையை நான் குறை கூறவே இல்லை.

  மாறாகத் தமிழிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்ததைக் கூறும் வரிகளை தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கியவர்கள்தான் தமிழின் தொன்மைக்குத் தீங்கு இழைத்திருக்கிறார்கள்.

  நான் அதனைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

  நான் எதோ தனிப்பட்ட வெறுப்பினால் எழுதுவதாகக் கூறும் நீங்கள் அமைதியாக ஆழ்ந்து சித்தித்தால் உண்மை புலப்படும்.

 28. http://koothadiveddai.blogspot.com/

  பஞ்சாப் ஒரு நிலப்பரப்பு என்றும் அங்குவாழும் மக்கள் மொழியில் பஞ்சாபிகள் என்றும். மராட்டிய நிலப்பரப்பில் வாழ்பவர்கள் மொழியில் மராட்டியர் என்றும், நியாயப்படுத்தும் நண்பர்கள் திராவிட நிலப்பரப்பில் வாழ்பவர்கள் திராவிட மொழி பேசுகிறார்களா? அப்படியாயின் அது என்னமொழி. மொழி வாரி மானிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் திராவிட நாடு என்று சொல்லப்பட்ட இடத்தில் தெலுங்கு, கன்னடம், மலயாளம், துளு, தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றது. ஆக நாம் திராவிட நிலப்பரப்பின் ஒரு பகுதியில் வாழும் ஒரு மொழியை பின்பற்றும் ஒரு மக்கள் கூட்டம். இதே திராவிட நிலப்பரப்பில் வாழும் மற்ற மொழி பேசுபவர்கள் என்மை திராவிடனாகவோ மனிதனாகவோ மதிக்க தயாராக இல்லை. எமது வாழ்வியலில் தொன்று தொட்டு தொடர்ந்த இயற்கை வளங்களை பங்கிடத்தயாராக இல்லை! இந்த லட்சணத்தில் திராவிடத்தை பிடித்து தொங்கி திராவிடத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு தமிழனுக்கு மட்டும்தான் உண்டா.

  வரலாறு வரலாறாக இருந்துவிட்டுப்போகட்டும். மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் புதிய புதிய ஏற்ற மாற்றங்களுடன் ஒன்றி பயணிப்பதுதான் இயல்பு. முன்னேற்றத்துக்கான வழியும் அதுதானே!

  கருணாநிதியை தனிப்பட்ட குடுக்கல் வாங்கல் பிரச்சினையால் தமிழ்நாடு ஒதுக்கிவிடவில்லை. அவரது பொய்யும் வரலாற்று திரிப்புக்களும் மக்களால் எற்றுக்கொள்ளமுடியவில்லை. அத்துடன் கருணாநிதி பொதுசேவை என்ற பெயரில் பல ஆண்டுகளாக மக்களிடம் அறிமுகமாகியிருக்கும் ஒருவர். அவரது பிரசங்கம் வேகமாக பாமர மக்களிடம் சென்றடைந்துவிடுவதால் அவரது பித்தலாட்டங்களை இணையங்களில் கிடைக்கும் “பின்னூட்ட கருத்துக்கள் மூலமாவது” எதிர்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு.

 29. விமலானந்தன்

  திரு குமரன்

  நண்பர் ஒருவர் அனுப்பிய சுட்டியின் மூலம் என்வழி தளத்துக்கு மூன்றாம் முறையாக வருகிறேன். இதற்கு முன்பு இருமுறை பின்னூட்டமிட்டுள்ளேன். ஆனால் உங்களைப் போன்றவர்கள் வழமையாக இங்கே கருத்துக்களைப் பகிர்கிறீர்கள்.

  என் ஆதங்கமெல்லாம்.. தமிழுணர்வு மிக்க உங்களைப் போன்றவர்கள், கருணாநிதியை எதிர்ப்பதாக நினைத்து எம் உயிர் மூச்சாம் அன்னைத் தமிழை சிறுமைப் படுத்தி விடுகிறீர்களே என்பதுதான். நான் கடைசியாக இட்ட மறுமொழியை இந்த தளத்தின் ஆசிரியர் அப்படியே வெளியிட்டுவிட்டார். இப்போது படித்தால் நானும் உணர்ச்சிவசப்பட்டு விட்டது புரிகிறது.

  ஆனால் ஒன்று சொல்வேன். தேசிய கீதத்தை இந்திய மத்திய அரசு பயன்படுத்திய விதத்தைப் பார்த்துத்தான் கலைஞர், தமிழ்த்தாய் வாழ்த்தை நெறிப்படுத்தியுள்ளார். அவர் பொறுப்புக்கு வந்த காலம் பகுத்தறிவுக் காலம். எனவே அவர் பக்கம் உள்ள நியாயத்தை, இன்றைய சூழலுடன் பொருத்தி தவறாகப் புரிந்து கொள்ளல் சரியாகுமா?

  இன்றைய அரசியல் வேறு. அது எனக்கு தேவையில்லை. ஆனால் தமிழ் மொழிபால் மெய்யான பற்றுறுதியோடு இயங்கியவர்தான் கலைஞர். அவரை விட்டால் தமிழுக்கு நாதியுமில்லை. நான் அவருக்காக PR பண்ணுவதாக நினைக்க வேண்டாம். அவர் தன் அரசியலுக்கு தமிழைப் பயன்படுத்தலாம். ஆனால் தமிழுணர்வாளர்கள், யார் மூலம் தமிழுக்கு அதிகபட்ச நன்மை என்றே பார்ப்பார்கள்.

  என்னுடைய அய்யா அப்படித்தான் பார்த்தார். அவரை ஆசானாகக் கொண்ட என் பார்வையும் அதுவே.

  நமக்கு முக்கியம் தமிழ். கல்தோன்றிய காலத்துக்குத் தோன்றியதா இல்லையா என்பதைவிட, மனித நாகரீகம் தோன்றிய காலத்தே உதித்ததுதான் இந்த தமிழும் திராவிட கலாச்சாரமும் என்பதில் நாம் கருத்து பேதம் கொள்ளலாகாது. கருணாநிதிகளைவிட முக்கியம் திராவிடமும், அதில் தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமாய் வீற்றிருக்கும் அன்னைத் தமிழும்.

  பின்னிரவு என்றாலும் உங்கள் மறுமொழிக்காய் காத்திருந்தேன். நன்றி.

  -அன்புடன்

  விமலானந்தன்

 30. ராசாமணி

  “அவரது பொய்யும் வரலாற்று திரிப்புக்களும் மக்களால் எற்றுக் கொள்ளமுடியவில்லை.”

  எப்படிங்க.. எம்ஜியார் செயல் இழந்து விட்டார். என்னை முதல்வராக்குங்கள் என்று ராஜிவ் காந்தியிடம், தனது கட்சி தலைவர் உயிரோடு இருக்கும் போதே துரோகம் செய்து விட்டு, அவர் இறந்த பிறகு ஆசான், அய்யனார் என்று சொல்லி அவர் கட்சியை கபளீகரம் செய்ததை விடவா பொய் சொல்லிவிட்டார். அல்லது தனது கையெழுத்தையே பொய் என்று கோர்ட்டிலேயே பொய் வாக்குமூலம் கொடுத்தாரே அதை விட பொய் சொல்லி விட்டாரா?

  வெறும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே கலைஞரை எதிர்ப்பவர்களிடம் இருப்பது வருந்ததக்கது.. நம்பியார் மிக நல்ல மனிதர் என்றாலும் எல்லா எம்ஜியார் ரசிகர்களுக்கும் கடைசி வரை வில்லனாகத்தான் தெரிந்தார். அதே தான் கலைஞர் விஷய்த்திலும் சிலருக்கு..

  ஆ ஊ ன்னா கொள்ளை அடிச்சார் அப்படி இப்படின்னு என்னமோ இவங்க தான் பக்கத்திலே இருந்து எடுத்து கொடுத்த மாதிரி பேசுறதே வழக்கமாப் போச்சு.. அம்மா பத்து வருஷம் ஆட்சியில் இருந்தாங்களே.. ஏதாவது ஒரு வழக்கு அவர் மீது போட்டு கோர்ட்டில் நடக்குதா. ஆனா அவர் போட்ட வழக்குக்கு பதினைந்து வருஷத்திற்கு பிறகும் வாய்தா கேக்குறதிலேயே உண்மை என்னன்னு தெரியுது..

  இந்தம்மா கை சுத்தமாம். போங்கப்பா போங்க

 31. மிஸ்டர் பாவலன்

  /// கருணாநிதியின் பொய்யும் வரலாற்று திரிப்புக்களும் மக்களால் எற்றுக்கொள்ளமுடியவில்லை. ////

  தி.மு.க. தொண்டர்கள், தமிழ் அறிஞர்கள் இன்னும் கலைஞரின்
  ‘எதுகை, மோனை’ பேச்சை ரசித்து, கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும்
  நிலையிலேயே தமிழகம் இருக்கிறது.

  “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி” என்பது போல்
  “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்ற வீர
  முழக்கங்களை கழகத் தொண்டர்கள் இன்னும் மறக்கத் தயாரில்லை.
  பொதுவாக தேர்தலை ஒட்டி தான் கலைஞர், பேராசிரியர் இது மாதிரி
  திராவிட நாடு, திராவிட இனம், தன்மானத் தமிழன், சுயமரியாதை
  தமிழன், இனப் போராட்டம் எனப் பேசுவார்கள். தேர்தலுக்கு சில ஆண்டுகள்
  வர இருக்கையில் இப்போதே ஏன் இந்த பேச்சை ஆரம்பித்திருக்கிறார்
  எனத் தெரியவில்லை. கலைஞர் ஒரு மாபெரும் அரசியல் சாணக்கியன்.

  /////அத்துடன் கருணாநிதி … பிரசங்கம் வேகமாக பாமர மக்களிடம் சென்றடைந்துவிடுவதால் /////

  இதை.. இதை..தான் நான் சொன்னேன். அவரது பிரசங்கம் பாமர
  மக்களை (தி.மு.க. தொண்டன் இன்னும் பாமரனாகவே இருக்கிறான்!)
  எளிதாக சென்று அடைந்து விடுகிறது.

  “கோடு வளர் காடு தனில்
  ஓடி விளையாடி வரும்
  பீடு மிகு மாநிலமும்,
  பாடுமிசை ஜோடிக் குயில்
  தாளமிடு, பாவமிடு,
  கானமயில் புள்ளினமும்….”

  என கலைஞர் ஆரம்பித்தால் விசில் பறக்கும், கழக மேடைகளில்.

  ////அவரது பித்தலாட்டங்களை இணையங்களில் கிடைக்கும் “பின்னூட்ட கருத்துக்கள் மூலமாவது” எதிர்க்கவேண்டிய கட்டாயமும் உண்டு.///

  இதைத் தான் வழக்கறிஞர் குமரன் செய்து வருகிறார். குமரன் ஒரு
  பக்திமானும் கூட. அவர் தேவாரம், திருவாசகம் இவற்றில் கரை கண்டவர்.
  சென்னை பொதிகை தொலைக்காட்சியில் வரும் திருவண்ணாமலை
  தீபம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் வர்ணனை தந்திருக்கிறார். அவரை
  தமிழுக்கு எதிரியாக நோக்குவது சரியல்ல. அவர் எழுத்தில், கருத்தில்
  தவறு இருந்தால் அதை நேரிடையாக சொல்லலாம்.

  “சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்” சிறிதும் கட்சி சார்பு இல்லாமல்
  நானும் எனது கருத்துக்களை எழுதி வருகிறேன்.

  தமிழ் அறிஞர், கற்றவர், நற்றவர், குறள் அருள் பெற்றவர்,
  நண்பர் நடேசனும் அவரது கருத்துக்களை எழுதலாம்.

  -==== மிஸ்டர் பாவலன் ===-

 32. anaani

  இரண்டு நாளாக தேடியதில் “விமலானந்தா” என்ற பெயருக்கும் (தமிழில் எழுதப்பட்டிருப்பது ஒன்று தவிர) தமிழுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை!

 33. மிஸ்டர் பாவலன்

  ///போதும்பா ஒரு கருணாநிதியே போதும். தமிழ் தமிழ் னு
  சொல்லி ஏமாத்த இன்னும் பல கருணாநிதி வந்தா
  தமிழ் நாடு நாசமா போய்டும்…..///

  “ஒரு கலைஞர் போதும்” என்பதை நானும் ஏற்கிறேன்.
  அவர் ஒரு மாபெரும் அரசியல் சாணக்கியன்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 34. M Senthil

  After reading the article and comments, I agree with Mr. விமலானந்தன் comments

  Poiya Poruntha chonna unmai thiru thiru nu mulikkumam?! Athu mathiri than irrukku, Thiravidan / Tamilan ku ethirana pechu.

  உங்கள் பிரச்சினை திராவிடம் அல்ல. கருணாநிதி. கருணாநிதியை கண் முழுக்க நிரப்பிக் கொண்டு, எதிரில் நிற்கும் எதுவும் தெரியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்

  உங்களைப் போன்றவர்கள் எந்த அளவு காழ்ப்புணர்வும் வெறுப்புணர்வும் மிக்க மனநிலையோடு ஊருக்கு உபதேசிக்கிறீர்கள்

 35. anaani

  //எப்படிங்க.. எம்ஜியார் செயல் இழந்து விட்டார். என்னை முதல்வராக்குங்கள் என்று ராஜிவ் காந்தியிடம், தனது கட்சி தலைவர் உயிரோடு இருக்கும் போதே துரோகம் செய்து விட்டு, அவர் இறந்த பிறகு ஆசான், அய்யனார் என்று சொல்லி அவர் கட்சியை கபளீகரம் செய்ததை விடவா பொய் சொல்லிவிட்டார். அல்லது தனது கையெழுத்தையே பொய் என்று கோர்ட்டிலேயே பொய் வாக்குமூலம் கொடுத்தாரே அதை விட பொய் சொல்லி விட்டாரா?//

  இப்போ யார் அதுக்கு இது சரி என்று வாதாட வந்தது. ஒன்று ஆலகால நஞ்சு என்றால். மற்றது ரசாயன நஞ்சு “Cyanide” அவ்வளவுதான் மாறுபாடு.

  ஈழத்தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து என்னை மாய்த்துக்கொள்ள தீர்மானித்துவிட்டேன், மனிதச்செயின், கூண்டோடு ராஜினாமா, கனிமொழி கலைஞர் ரீவியில் பங்குதாராராக சேர்ந்தது தவிர வேறு குற்றம் செய்யவில்லை! அதையும் எடுத்து விடுங்க சாமி.

 36. Manoharan

  ஒரு கருணாநிதியை வைத்துக் கொண்டே தமிழகம் படும் பாடு சொல்லி மாளாது. இதுல இன்னுமா ? ஐயோ இப்பவே கண்ணை கட்டுதே.

 37. Manoharan

  கருணாநிதி மற்றும் அவர் சந்ததியின் சாதனைகள் :
  Red giant movies.
  Cloud Nine Movies.
  Sun Pictures.
  2G
  3 மணி நேர உண்ணாவிரதம்.
  திருமங்கலத்தை இந்தியாவே கேவலமாக பார்க்க வைத்தது.
  etc .etc etc

 38. குமரன்

  பெருமதிப்பிற்குரிய தமிழ் ஆசான் விமலானந்தன் அவர்களுக்கு,

  தங்கள் அன்பான பதிலுக்கு நன்றி. தாங்கள் என்னிலும் மூத்தவராக இருப்பீர்கள் என்றே கருதுகிறேன். வயது எதுவெனினும் ஓர் ஆசிரியர் என்ற முறையில் தாங்கள் கடுஞ்சொற்கள் கூறினால் கூட நான் அதனைப் பொருட்படுத்த மாட்டேன். பிழை என்று தோன்றும்போது ஆசிரியருக்கு இல்லாத உரிமை ஏது? எங்கள் வழக்கில் சொன்னால் “கவுண்ட மணி சொல்வது போல வாழ்க்கையில இதெல்லாம் சாதரணமப்பா” என்று போய் விடுவோம்! நான் கடும் சொல் கூறக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்கிறேன். இறைவன் அருளால் இன்றுவரை அதுவும் சாத்தியமாகவே இருக்கிறது.

  ஆனால் கூட நான் எனது எந்த பதிலிலும் தமிழைச் சற்றேனும் சிறுமைப்படுத்தும் விதமாக எழுதவே இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.

  இன்னமும் சொல்லப் போனால் பல தளங்களில், நேரில் சந்திப்போரிடம் எல்லாம் கூட என் முனனால் எவரும் தமிழைச் சிறுமைப் படுத்துவதை நான் அனுமதிப்பவன் அல்ல.

  அய்யா அவர்களுக்கு இன்னும் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மனோன்மணியம் சுந்தரனாரைப் போல இறை நம்பிக்கை கொண்டவர்களும் தமிழின் பால் பற்றும் பாசமும் கொண்டிருப்பார்கள், தமிழ்ப் பற்று என்பது “பகுத்தறிவாளர்கள்” அல்லது “நாத்திகர்கள்” ஆகியோருக்கு மட்டுமே உரித்தானது அல்ல. நமது தேவாரத் திருப்பதிகங்களை, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை, திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்களை வழங்கியவர்கள் பெரும்பாலும் இறை பக்தி கொண்டவர்களே. இற்றைக்கும் சைவ மடாலயங்களில் உள்ள அம்மடங்களின் தலைவர்கள் தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர்களாகவே திகழ்கின்றனர். எண்பது பிராயத்தினரான தற்போதைய காஞ்சி தொண்டை மண்டல ஆதீனகர்த்தரின் தமிழ்ப் புலமை அனைவரும் அறிந்ததே. தமிழ் மீது பற்று என்பது எந்த ஒரு இயக்கத்தாருக்கும் தனிப்பட்ட உரிமை அல்ல. எனவே எந்த ஒரு மனிதரையும் முன் கூட்டியே கணிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

  அன்புடனும் மரியாதையுடனும்

  குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *