BREAKING NEWS
Search

‘கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்க என்ஜிஓக்களின் தூண்டுதலே காரணம்!’ – மன்மோகன் சிங்

கூடங்குளம் விவகாரம்: தொண்டு நிறுவனங்கள் மீது பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு!

டெல்லி: அணுசக்தியின் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத வெளிநாட்டு அமைப்புகளின் தூண்டுதல் பேரிலேயே கூடங்குளம் அணு உலையை திறக்கவிடாமல் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணு உலைக்கு அடிக்கல் நாட்டியதிலிருந்தே பல்வேறு வகையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் மத்திய மாநில அரசுகள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை.

இப்போது அணுஉலையில் சோதனை ஓட்டம் முடிந்து பணிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில், அதைத் திறக்கவே கூடாது என தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடந்தாலும், அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் குழு அறிவித்தாலும், அணு உலை மூடப்பட வேண்டும் என்பதில் போராட்டக் குழுவினர் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைக்கு அமெரிக்காவில் உள்ள சில தொண்டு நிறுவனங்களே காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் மரபணு மாற்று விவசாயத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

‘சயின்ஸ்’ என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி:  

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்படுகிறது. உயிரி தொழில் நுட்ப துறையில் மிகப் பெரிய வளம் உள்ளது. விவசாய துறையில் உற்பத்தியைப் பெருக்க இந்த தொழில் நுட்பத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும்.

ஆனால் இதை செயல்படுத்துவதில் பல தடைகள் உள்ளன. வளர்ச்சிக்காக நம்நாடு எதிர் கொள்ளும் முயற்சிகளை சில தொண்டு அமைப்புகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஸ்கான்டிநேவியன் நாடுகளை (நார்வே, சுவீடன் போன்றவை) மையமாக கொண்டு செயல்படும் அமைப்புகள் விரும்புவதில்லை. இது போன்ற விஷயங்களில் சீனாவை போல நாம் செயல்பட இயலாது. இது ஜனநாயக நாடாக உள்ளது.

கூடங்குளம்..

இந்தியாவின் இன்றைய மின்பற்றாக்குறையைச் சமாளிக்க அணுசக்தி தேவைப்படுகிறது.

ஆனால் இப்போது அணு சக்தி திட்டங்களை நிறைவேற்றுவது கடினமாகிவிட்டது.

இந்தியாவில் அணுசக்தி துறையில் தன்னிறைவும் வளர்ச்சியும் ஏற்படுவதை சில அரசு சாரா அமைப்புகள் விரும்பவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தொண்டு நிறுவனங்கள்தான் இடையூறு ஏற்படுத்துகின்றன.

இவை அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் சில அமைப்புகளின் ஆதரவோடு இங்கு எதிர்ப்பு காட்டி வருகின்றன என்று கருதுகிறேன். இந்தியாவின் எரி சக்தி தேவையை இவர்கள் புரிந்து கொள்ளாததே இதற்கு காரணம்,” என்று கூறியுள்ளார்.

இந்தப் பேட்டியின்போது, ஜப்பானின் ஃபுகுஷிமா அணுஉலைக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பிறகும், இந்தியாவுக்கு அணுஉலைகள் தேவை என்று கருதுகிறீர்களா? என்று கேட்டதற்கு, “இந்தியாவைப் பொறுத்தவரை நிச்சயம் அணுஉலைகள் தேவை. இந்திய எரி சக்தி துறையில் அணு மின் திட்டத்துக்கு முக்கிய பங்குள்ளது. இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள் அணு சக்தியை ஆதரிக்கின்றனர்,” என்றார் பிரதமர்.

நாராயணசாமி மாதிரி பேசுகிறாரே பிரதமர் – உதயகுமார்

பிரதமரின் இந்த பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பின் தலைவர் உதயகுமார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமரின் பேச்சு நியாயமற்றது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு அரசியல்வாதி இப்படிப் பேசினால்கூட பொறுத்துக் கொள்ளலாம். அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள பிரதமரே இப்படி ஆதாரமின்றிப் பேசலாமா…

அமெரிக்க நிறுவனங்கள் யாரும் இந்தப் போராட்டப் பின்னணியில் இல்லை என்று பகிரங்கமாக  கூறிவிட்டேன். அமெரிக்க தன்னார்வ அமைப்புகள் ஆதரவு இருப்பதாகக் கூறும் அரசு அதற்கான ஆதாரத்தை வெளியிடலாமே…

பொறுப்பான பிரதமர் பதவியில் உள்ள மன்மோகன் சிங், அவரது அமைச்சரான நாராயணசாமி மாதிரி பேச ஆரம்பித்துவிட்டாரே,” என்றார்.

-என்வழி செய்திகள்
9 thoughts on “‘கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்க என்ஜிஓக்களின் தூண்டுதலே காரணம்!’ – மன்மோகன் சிங்

 1. palPalani

  சார், அமெரிக்காரன் பெரிய முட்டாள் சார். அவுங்க பிரண்டு நீங்க இருக்கும்போது, இந்தாள(Mr உதயகுமார்) புடுச்சுக்குட்டு தொங்குராணுக!

 2. ஊர்க்குருவி.

  //இந்தப் பேட்டியின்போது, ஜப்பானின் ஃபுகுஷிமா அணுஉலைக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பிறகும், இந்தியாவுக்கு அணுஉலைகள் தேவை என்று கருதுகிறீர்களா? என்று கேட்டதற்கு, “இந்தியாவைப் பொறுத்தவரை நிச்சயம் அணுஉலைகள் தேவை. இந்திய எரி சக்தி துறையில் அணு மின் திட்டத்துக்கு முக்கிய பங்குள்ளது.//

  முக்கியபங்கு இருப்பது சரி அணு உலையை சீராக பாதுகாக்க இந்தியா என்ன உத்தரவாதத்தை வைத்திருக்கிறது.” சனத்துக்கு ஒரு நேர கஞ்சிக்கு “உலை” வைக்க உத்தரவாதமில்லாத அரசு அணு உலைக்கு உத்தரவாதமாம்!

  //இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள் அணு சக்தியை ஆதரிக்கின்றனர்,” என்றார் பிரதமர்.//

  அறிவுஜீவிகள் என்று அப்துல் கலாமை குறிப்பிட்டிருப்பார். அப்துல் கலாம் சமீபத்தில் ஊழல்களை ஒழிப்பதற்கு ஒரு ஐடியா குடுத்திருந்தார். நல்ல நகைச்சுவையாக இருந்தது. முல்லை பெரியாறு தீர்வுக்கும் ஒரு ஐடியா குடுத்திருந்தார்., வர வர பல வயோதிபர்களின் பேச்சு எவராலும் புரியமுடியவில்லை.

 3. Sanjev

  வினோ PM ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார் :
  பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று கூறியதாவது: தொழுநோயை ஒழிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளைச் செய்வதாகக் கூறி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்ற, மூன்று அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ.,க்கள்), அந்த நிதியை, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்காக, தவறாக பயன்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விசாரணையில், இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்காக பெருமளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக, அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர், டிராக்டர்களில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) விதிமுறைகளை மீறி, இந்த மூன்று அரசு சாரா அமைப்புகளும் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் தெரியவந்த விவரங்களின் அடிப்படையில் தான், பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
  அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள்

 4. மிஸ்டர் பாவலன்

  ///PM ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார் :////

  அமைதியான அறிஞர் நம் மாண்புமிகு பிரதமர்.
  அவர் ஒன்று சொன்னாலும் நன்று சொல்வார்.
  உதயகுமாரனுக்கு இனி ஆப்பு காத்திருக்கிறது.
  ஏகப்பட்ட வழக்குகளை மாநில அரசு உதயகுமாரன்
  தலைமையில் நடக்கும் போராட்டக்குழுவின் மீது
  சுமத்திய நிலையில் ஏதாவது குண்டர் தடுப்பு காவல்
  சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படலாம்.
  மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், மத்திய
  அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
  நடுநிலையாளர்கள் விருப்பம். தினமலர் என நாளேடு
  உதயகுமாரன் பற்றி தினமும் வெளியிட்டு வரும்
  செய்திகள் கவலை அளிக்கின்றன. நாட்டில் உள்ள
  எல்லா அணுமின் நிலையங்களையும் தடை செய்யவேண்டும்
  என விரும்பும் இந்த உதயகுமாரன் ஒரு NRI.

  இன்று நான் படித்த செய்தி:

  “”மூன்று அரசு சாரா அமைப்புகள், வெளிநாடுகளில்
  இருந்து வந்த நிதியை, கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு
  எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்தியது
  கண்டறியப்பட்டுள்ளது’ என, மத்திய அமைச்சர்
  நாராயணசாமி கூறினார். அதனால், அந்த அமைப்புகளின்
  லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும்
  தெரிவித்துள்ளார்.

  ஆய்வின் மூலம் எடுக்கப்பட்ட அதிரடி:
  அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி
  மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள
  தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி
  புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள் மீது,
  மத்திய அரசு சந்தேகம் அடைந்தது. இதன் பேரில், மத்திய
  உள்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், கடந்த மாதம் 10ம் தேதி
  முதல் 18ம் தேதி வரை, தூத்துக்குடி வந்து, தூத்துக்குடி மல்டிபர்பஸ்
  சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம்),
  கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு தொண்டு
  நிறுவனங்களில், அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக
  ஆவணங்கள் சிக்கின. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து
  தான் நிதியுதவி கிடைக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
  மத்திய அரசு அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை,
  டில்லிக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிவில்,
  வெளிநாட்டு நிதிக்கு சரியாக கணக்கு காட்டாத மூன்று
  நிறுவனங்களின், லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. (செய்தி)

  -=== மிஸ்டர் பாவலன் ===

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *