BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கையைப் படமாக்குவது நல்ல யோசனை ; ஆனால்…! – மணிரத்னம்

ரஜினி வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவாரா மணிரத்னம்?

rajini-mani

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையை படமாக எடுப்பது நல்ல யோசனைதான்… ஆனால் அப்படி ஒரு படம் எடுத்தால் அதில் நடிக்க பொருத்தமான நடிகர் கிடைப்பது கடினம் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்தார்.

8-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் (பிப்ரவரி 4) இத்திரைப்பட விழா முடிவடைய இருக்கிறது.

இத்திரைப்பட விழாவில் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். மணிரத்னம் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ‘எம்ஜிஆர், அம்பானி போன்ற பல முன்னணி நபர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் எடுத்துள்ளீர்கள். ஏன் ரஜினிகாந்த் வாழ்க்கையை மையப்படுத்தி படம் எடுக்கக்கூடாது?’ என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு இயக்குநர் மணிரத்னம், “ரஜினிகாந்த் வாழ்க்கையை படமாக எடுப்பது நல்ல யோசனைதான். ஆனால் ரஜினிகாந்தின் ஆளுமையை திரையில் கொண்டு வர, அதற்கு ஏற்ற கச்சிதமான நடிகர் கிடைத்தால் தான் என்னால் அதை செய்ய முடியும்.

நான் ரஜினியுடன் ஒரே ஒரு முறை தான் வேலை பார்த்துள்ளேன். அது அற்புதமான அனுபவம். ரஜினி என்ற நட்சத்திரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்த நடிகரை என்னால் முடிந்தவரை வெளிக்கொண்டு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

வேலையின் மீது அவருக்கிருக்கும் அர்ப்பணிப்பு எனக்குப் பிடிக்கும். நாங்கள் மைசூரில் ‘தளபதி’ படப்பிடிப்பில் இருக்கும்போது அவரது எண்ணற்ற ரசிகர்கள் அங்கு குவிந்துவிடுவார்கள். அது எங்களது படப்பிடிப்பை பாதிக்கும். பெங்களூரிலிருந்து கூட அவ்வளவு தூரம் பயணம் செய்து அவரைப் பார்ப்பதற்காகவே பலர் வந்தனர்.

ஆனாலும் அவர் முடிந்தவரை ரசிகர்களை சந்தித்துப் பேசுவார். நாங்கள் இயற்கை ஒளியில் படமாக்கி வந்ததால் படப்பிடிப்பு எப்போது இருந்தாலும் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்,” என்று பதிலளித்துள்ளார்.

-என்வழி




One thought on “சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க்கையைப் படமாக்குவது நல்ல யோசனை ; ஆனால்…! – மணிரத்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *