BREAKING NEWS
Search

‘ஏன் சங்மாவை நீங்க ஆதரிக்கலாமே…’ – கலாமுக்கு ஆதரவு கோரிய மமதாவுக்கு ஜெ தந்த பதில் இது…!!

‘ஏன் சங்மாவை நீங்க ஆதரிக்கலாமே…’ – கலாமுக்கு ஆதரவு கோரிய மமதாவுக்கு ஜெ தந்த பதில் இது…!!

கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமுக்காக ஆதரவு கேட்ட மமதாவிடம், பதிலுக்கு சங்மாவை ஆதரிக்குமாறு கேட்டு அதிர வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அரசியல் கட்சிகளிடையே ஆதரவில்லை எனத் தெரிந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை களம் இறக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளார் மமதா பானர்ஜி.

அப்துல் கலாமுக்கு ஆதரவு திரட்ட மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளிடம் பேசி வருகிறார் மமதா.

கலாம் தமிழர் என்ற சென்டிமென்டைக் காட்டி, ஜெயலலிதாவின் ஆதரவைக் கோர முடிவு செய்தார் மமதா.

இதையடுத்து நேற்று இரவு ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலாமை ஆதரிக்குமாறு மமதா கேடுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, “நானும் ஒடிஷா முதல்வர் பிஜூ பட்நாயக்கும் ஏற்கெனவே சங்மாவை நிறுத்தியிருக்கிறோம்.. என்டிஏவுக்கும் அவர்தான் வேட்பாளர். எனவே நீங்கள் வேறு தனியாக வேட்பாளரை நிறுத்தாமல், எங்கள் பிரதிநிதி சங்மாவை ஆதரிக்கலாமே,” என்று கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவிடமிருந்து இப்படியொரு பதில் வரும் என்று மமதா எதிர்ப்பார்க்கவில்லையாம். அப்துல் கலாம் தமிழர், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர், எனவே ஜெயலலிதா ஆதரிக்கக் கூடும் என்ற அவரது நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

இதனால் அப்செட் ஆன மமதா, மோடி மற்றும் நிதீஷ் குமாரைத் தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

ம்ம்… ‘தமிழர் கலாமை ஆதரிக்க ஜெயலலிதாவுக்கு மனமில்லாமல் போகும் அளவுக்கு செய்தவர் கருணாநிதி’தான் என்று கூப்பாடு கிளம்பாமலிருந்தால்  சரி!

-என்வழி செய்திகள்
15 thoughts on “‘ஏன் சங்மாவை நீங்க ஆதரிக்கலாமே…’ – கலாமுக்கு ஆதரவு கோரிய மமதாவுக்கு ஜெ தந்த பதில் இது…!!

 1. குமரன்

  நல்ல வேலை சங்மா நமது அமைச்சர்கள் போல “போஸ்” தரும் படம் எதுவும் வரவில்லை!

  தனிப்பட்ட முறையில் சங்மா பிராவிடன்ட் பண்டு விதிமுறை/ நடவடிக்கைகளில் சிறந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்ற முறையில் எனக்கு அவர் மீது மதிப்பு உண்டு. பொது நலன்/ தொழிலாளர் நலன் கருதிய எனது கடிதங்களின்/ நேரில் சந்தித்து செய்த முறையீடுகளின் அடிப்படையில் அந்த சீர்திருத்தங்கள் அமைந்தன என்பதால் எனக்கு அவரிடம் நன்றி பாராட்டுதலும் உண்டு. ஆனால் அவர் இதற்கெல்லாம் சரிப்பட மாட்டார் என்ற நம்பிக்கையும் உண்டு! (வடிவேலு பட காமெடி போல)

 2. பாவலன்

  ///நல்ல வேலை சங்மா நமது அமைச்சர்கள் போல “போஸ்” தரும் படம் எதுவும் வரவில்லை!/// (குமரன்)

  ஹி..ஹி..ஹி..

 3. பாவலன்

  ///ஜெயலலிதாவிடமிருந்து இப்படியொரு பதில் வரும் என்று மமதா எதிர்ப்பார்க்கவில்லையாம். ///

  கலாமை ஜெயலலிதா ஆதரிக்காதது மாபெரும் தவறு.

  -பாவலன்

 4. Krishna

  //கலாமை ஜெயலலிதா ஆதரிக்காதது மாபெரும் தவறு//

  பாவலன் அவர்களே, கலாமை ஜெயலலிதா ஆதரிக்காததும் தவறல்ல, கருணாநிதி ஆதரிக்காததும் தவறல்ல என்பது தான் என் கருத்து. காங்கிரசை தவிர இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரித்தாலும் அவரால் வெற்றி பெற முடியுமா என்பது ஒரு கேள்விக்குறி. இது எப்படியெனில் 2008-ல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் பண மூட்டைகளை வெள்ளமாக அவிழ்த்து விட்டது. இவ்வளவுக்கும் கட்சி கொரடா whip கொடுத்தால் அதை மீறும் உறுப்பினர்கள் disqualify செய்யப்படுவார்கள். ஆனால் குடியரசு தலைவர் தேர்தலிலோ யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடலாம். இதற்கு whip கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் படி குற்றம். இதை ஒரு துருப்பு சீட்டாக வைத்து கொண்டு தான் இந்திரா காந்தி காங்கிரசால் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டியை தோற்க்கடிப்பதர்க்காக விவி கிரியை நிறுத்தி தனது கட்சிக்காரர்களிடம் “மனசாட்சி” படி ஒட்டு போடுங்கள் என்று தெரிவித்தார். அந்த சமயத்தில் எத்தனை மனசாட்சிகள் ஒட்டு பெட்டிக்குள் விழுந்தன என்பது நாடறிந்த உண்மை. இப்பொழுதோ பணம் என்றால் பல்லை இளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள். சோனியாவை பிரதமராக விடாமல் தடுத்த அப்துல் கலாமை தோற்கடிப்பதற்கு காங்கிரசார் வெறியுடன் முயற்சி செய்வார்கள் என்பது தான் யதார்த்தம். இதை வைத்து பார்க்கும் போது கருணாநிதி ஆகட்டும் ஜெயலலிதா ஆகட்டும் – இருவருமே insignificant என்று தான் சொல்ல முடியும். இதில் யார் யாரை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஒரு வித்தியாசமும் இல்லை.

 5. தினகர்

  ///நல்ல வேலை சங்மா நமது அமைச்சர்கள் போல “போஸ்” தரும் படம் எதுவும் வரவில்லை!//

  ’எதுவும் வெளி வரவில்லை’ என்று வேண்டுமானால் சொல்லலாம் 🙂

 6. enkaruthu

  //இது எப்படியெனில் 2008-ல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் பண மூட்டைகளை வெள்ளமாக அவிழ்த்து விட்டது. //

  சரி சரி காங்கிரஸ் என்றவுடன் மட்டும் பண மூட்டைகளை பேசும் நீங்கள் புதுகோட்டை இடை தேர்தலில் ஜெய்க்க ஜெயா இறக்கிய பண மூட்டைகளை மட்டும் மறந்து போய் கூடும் சொல்லாது விட்டீர்கள்.நல்லா இருக்கு உங்களின் மத பாசம் .

 7. Krishna

  //சரி சரி காங்கிரஸ் என்றவுடன் மட்டும் பண மூட்டைகளை பேசும் நீங்கள் புதுகோட்டை இடை தேர்தலில் ஜெய்க்க ஜெயா இறக்கிய பண மூட்டைகளை மட்டும் மறந்து போய் கூடும் சொல்லாது விட்டீர்கள்.நல்லா இருக்கு உங்களின் மத பாசம் .//

  இதில் மத பாசம் எங்கிருந்து வந்தது? புதுக்கோட்டையின் பண மூட்டையை விட திருமங்கலத்தின் பண மூட்டை பெரியது என்று சிறு குழந்தைக்கும் தெரியுமே.

 8. தேவராஜன்

  புதுக்கோட்டையோடு ஒப்பிட்டால் திருமங்கலமெல்லாம் ஜூஜுபி. அந்த அளவு பணம், அதிகார துஷ்பிரயோகம் தூள் கிளப்பியது இந்தத் தேர்தலில். ஒரு வீட்டுக்கு ரூ 16000 வரை சம்பாதித்துள்ளனர், ஆளுங்கட்சியினர் தந்த பணம் மூலம் மட்டுமே. எதையும் கருணாநிதியோடு தொடர்பு படுத்தாவிட்டால் உங்களுக்கெல்லாம் திண்ண சோறு செரிக்காது போல!

 9. Venkatesh, Madurai

  இந்த குடியரசுத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜக, ஜெயலலிதா, மம்தா, உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு என்ன ஆதாயம் என்று பார்த்துதான் வேட்பாளர்களை அறிவித்தனர்.

  இவர்கள் யாருக்குமே நாட்டின் நலன், அல்லது நல்ல தலைவர் வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. தங்கள் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய ஒருவரை தேடி வந்தார்கள் என்பதே உண்மை.

  காங்கிரஸுக்கு அந்த கட்டாயம் எதுவும் கிடையாது. காரணம், அங்கே அமரப் போகிறவர் ஒரு பக்கா காங்கிரஸ்காரர்தான். எனவே திறமையான வேட்பாளர், எதிரணியும் மதிக்கும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளனர். ஏற்கெனவே இங்கு சிலர் கருத்து கூறியிருப்பதைப் போல, பிரணாப் ஒன்றும் சோனியாவின் ஏவலாளி அல்ல. எந்த சூழலையும் சமாளிக்கும் திறமைசாலி. அப்புறம் எப்படி, சோனியாவின் வீட்டு வேலை செய்பவர்தான் ஜனாதிபதியாக வரமுடியும் என குமரன் போன்றவர்கள் கூறுகிறார்கள்?

  காங்கிரஸ் கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை. அவர்கள் மமதாவின் மிரட்டலை பொருட்படுத்தவே இல்லை. மவுனம் சாதித்தே மமதாவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர்.

  இங்கே பலரும் தாங்கள் நினைப்பது, தங்கள் விருப்பத்தை சோனியாவும் காங்கிரஸ் கூட்டணியும் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள். அது எத்தனை பெரிய பேதைமை?

  காங்கிரஸ் தனக்கென வேட்பாளரை வைத்திருக்கும்போது கலாமை எதற்காக அவர்கள் பீல்ட் பண்ணனும். உங்க அணி நிறுத்தட்டுமேன்னு கேட்டால், “இல்லயில்ல, காங்கிரஸ் கலாமைத்தான் நிறுத்தனும். எங்களுக்கெல்லாம் அவரைப் பிடிச்சிருக்கு,” என்ன சின்னபுள்ளத்தனமா திரும்பத் திரும்ப அதையே சொல்லி வருகிறார்கள்.

  எல்லாவற்றையும் விட்டுவிட்டு இப்போது சோனியாதான் அனைத்துக்கும் காரணம் என்ற பல்லவியைப் பிடித்துக் கொண்டார்கள்.

  ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்பாளர் பிரணாப். உங்களுக்கு யார்? இந்த நேரடிக் கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாமல், கண்டதையும் இங்கே எழுதக் கூடாது. எப்படிக் கேட்டாலும், தனக்கு வசதியாக பதில் சொல்லிக் கொண்டிருப்பது ஒருவித நோயுற்ற மனநிலையின் அறிகுறி.

  தேவராஜன் குறிப்பிட்டிருப்பதைப் போல கமெண்டுகளைப் படிக்கவே வெறுப்பாக இருக்கிறது எனும் நிலையை கிருஷ்ணா என்பரும், கணேஷ் சங்கர் என்பவரும் உருவாக்கி வைத்துள்ளனர் (இரண்டல்லது ஒன்றோ!!).

  கட்டுரைக்கு ஆரோக்கியமான கருத்து சொல்வது இவர்கள் நோக்கமல்ல. கட்டுரை கிடக்கட்டும். நாம் நினைப்பதுதான் சரி என எல்லோரும் பேசிவிட வேண்டும் என்ற சூழலை உருவாக்கும் ஒரு நச்சுத் திட்டம் இது.

  தமிழகத்தில் கரண்ட் இல்லை என்றால், கருணாநிதியே காரணம் என்கிறார்கள். ‘சரி*, வெளக்கெண்ணெய் வந்து ஒரு வருஷம் ஆச்சே, என்ன கிழிச்சாங்க.. இருட்டு மட்டும்தானே மிச்சம்’ என்றால், அதெப்படி ஒரு வருஷம் போதும், 10 வருஷம் வேணும் என்கிறார்கள். ஆடத் தெரியாத தாசி மேடை சரியில்லன்னு முறுக்கிக்கிட்டாளாம்!

  ஏற்கெனவே இந்த வலையில் கொஞ்ச நாள் இந்தப் பிரச்சினை இருந்து, ஓய்ந்தது. மீண்டும் அந்த நிலையை ஆரம்பித்திருக்கிறார்கள். வெளியில் எங்களைப் போன்றவர்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 10. தேவராஜன்

  ஜெயலலிதா, என்டிஏவை விமர்சிக்கும் என்னைப் போன்றவர்கள், கருணாநிதியையும் விமர்சிக்க தவறவில்லை. ஏடிஎம்கே சிம்பதி உள்ளது எனக்கு என்று கூறும் திரு பாவலன் கூட, ஜெயலலிதாவின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, இது மக்கள் விரோதம் என்கிறார். ஆனால் கிருஷ்ணா போன்றவர்கள், ஜெயலலிதாவை அனைத்து தவறுகளுக்கும் அப்பாற்பட்டவராக வைத்துதான் கருத்து சொல்கிறார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் நான் அந்த வரியை எழுதவேண்டி வந்தது. நடுநிலையில் பேசுங்கள். நாம் ஒன்றும் paid party cadres alla!

 11. Krishna

  //ஆனால் கிருஷ்ணா போன்றவர்கள், ஜெயலலிதாவை அனைத்து தவறுகளுக்கும் அப்பாற்பட்டவராக வைத்துதான் கருத்து சொல்கிறார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் நான் அந்த வரியை எழுதவேண்டி வந்தது. நடுநிலையில் பேசுங்கள். நாம் ஒன்றும் paid party cadres alla!//

  நான் இந்த வலையில் எழுதும் யாரையும் அதிமுக அனுதாபி என்றோ திமுக அனுதாபி என்றோ சொன்னதில்லை. இந்த செய்திக்கு ஜெயலலிதாவை விமரிசிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எப்பொழுது அவர் கட்சி 2009 பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வியதோ அப்போதே குடியரசு தலைவர் தேர்தலில் அவர் கட்சி செல்லா காசு ஆகிவிட்டது. ஒரு செல்லா காசு யாரை ஆதரித்தால் என்ன, எதிர்த்தால் தான் என்ன – ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே அவரையும் அவர் கட்சியையும் இந்த விசயத்தில் விமரிசிப்பது அனாவசியம். அவர் நானும் களத்தில் இருக்கிறேன் என்று சங்கமாவை நிறுத்தியிருப்பது ஒரு காமெடி என்று சொல்லலாமே தவிர அது கண்டனத்துக்குரியதல்ல. அதே சமயத்தில் திமுகவையும் குறை சொல்ல முடியாது – அவர்கள் கூட்டணியின் முடிவிற்கு கட்டுபட்டாக வேண்டும். அந்த வகையில் திமுக கலாமை ஆதரித்தால் தான் அது தவறு. பிரனாபை ஆதரித்தால் அது சரி.

  கடந்த ஓர் ஆண்டு ஜெ ஆட்சியை பொறுத்த வரையிலும் அவர் செய்த ஒரே தவறு நூலகத்தை மாற்றும் முயற்சி தான். மற்றபடி புதிதாக செட் போட்டு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியை புறக்கணித்ததில் தவறில்லை. கட்டண உயர்வு என்பது ஒரு ஆட்சியில் ஒரு முறை வந்தால் அதில் தவறில்லை. 1996 மற்றும் 2000 என்று இருமுறை கட்டண உயர்வை செய்தது திமுக. சென்ற ஆட்சியில் அவர்கள் கட்டண உயர்வு செய்யாததற்கு ஒரே காரணம் அவர்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தி கொண்டிருந்தார்கள். மூன்று இலக்க சீட்டுகள் கூட திமுகவுக்கு கிடைக்க வில்லை. ராமதாஸ் துணை நகரம் திட்டத்துக்கே வெட்டு வைத்தார். திமுக ஆட்சி கட்டண உயர்வை கொண்டுவர முற்பட்டிருந்தால் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிவிடுவார். ஆட்சி கவிழாது என்றாலும் காங்கிரசை நம்பி ஆட்சி செய்ய வேண்டியிருக்கும். இதை ஒரு அறிய வாய்ப்பாக வைத்துகொண்டு ஆட்சியில் பங்கு என்று அவர்கள் ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஒரு காரணத்தால் தான் திமுக ஆட்சியில் கட்டண உயர்வு செய்யவில்லை. திமுகவுக்கு மட்டும் தனி மெஜாரிட்டி இருந்திருந்தால் நிச்சயம் கட்டண உயர்வு ஏற்பட்டிருக்கும்.

 12. பாவலன்

  ///ஏடிஎம்கே சிம்பதி உள்ளது எனக்கு என்று கூறும் திரு பாவலன் கூட, ஜெயலலிதாவின் தவறுகளைச் சுட்டிக் காட்டி, இது மக்கள் விரோதம் என்கிறார். /// (தேவராஜன்)

  MGR தான் அந்த sympathy-க்கு காரணம். இன்னமும் அ.தி.மு.க.
  மீட்டிங்குகளில் போடப்படும் MGR பாடல்கள் எனக்கு பழைய
  நினைவுகளைக் கொடுக்கும். ஒரு சமயத்தில் நான் தீவிர
  MGR ரசிகனாக இருந்திருக்கிறேன். இப்போதும் TV-யில் அவர்
  பாடல்களை விரும்பி பார்ப்பதுண்டு.

  இன்று JJ தலைமையில் நடக்கும் ஆட்சியின் மீதான
  அரசியல் விமர்சனங்களை நான் ஒதுக்குவதில்லை. நேர்மையான
  விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள், புதிய திட்டங்கள்
  வளர்ச்சிக்கு உகந்தவை எனவே நான் கருதுகிறேன். இந்த
  வலையில் என் மீதான நேர்மையான விமர்சனங்களை
  (தினகர், என் கருத்து) நான் ஒரு நாளும் அவதூறாக நினைத்ததில்லை.

  கலாம் பற்றிய அனைவரது கருத்துக்களும் படிக்கும் படி இருந்தன.
  நல்ல கருத்துப் பரிமாற்றம் நல்லது. இதை அனுமதித்து ஆரோக்கியமான
  கருத்து பரிமாற்றத்திற்கு வழிகாட்டும் இணைய ஆசிரியர் வினோவிற்கு
  மனமார்ந்த நன்றி.

  -பாவலன்

 13. Ganesh Shankar

  //கலாமை ஜெயலலிதா ஆதரிக்காதது மாபெரும் தவறு.//(பாவலன்)

  அவ்வாறெல்லாம் ஒன்றும் கிடையாது.
  ஜெயலலிதா அவர்கள் முன்பே தனது வேட்பாளரை அறிவித்துவிட்டார்.
  ஆகவே,அந்த நபர் அதை வேண்டாம் என்று சொல்லும் வரை,இப்படி வார்த்தை மாறுவது தவறு.
  ஒரு தலைவருக்கு,இந்த மாதிரி தனி நம்பரை ஆதரிக்கும் விடயத்துக்காக வார்த்தை மாறுவது,மக்களின் மீது அவரிடம் உள்ள நம்பிகையை குறைக்கும்.
  சொன்ன வார்த்தையை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும்.
  அப்படி அவர் இருந்தால்,அவர் நாளை நமக்கு(பொது மக்களுக்கு) ஒன்று சொன்னால்,அதை செய்து காட்டுவார் என்று நம்ப முடியும்.
  அவர் தான் சொன்ன வார்த்தையை காப்பாற்றியது, நாம் அவர் மீது மற்றவர்களை விட கூடுதல் நம்பிக்கை வைக்கலாம் என்ற நம்பிகையை கொடுக்கிறது பாருங்கள்.

 14. யாரோ

  ஜெயலலிதாவிடம் தற்போது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க வாக்கு வங்கி இல்லை. எனவே அவர் யாரை ஆதரித்தாலும் அதில் பெரிய மாற்றம் வந்து விட போவதில்லை. நீங்கள் எதற்காக இப்படி அடித்து கொள்கிறீர்கள் என்று தான் புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *