சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்த மலேசிய பிரதமர்!
சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.
இந்தியாவுக்கு 5 நாட்கள் பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இது ஒரு நல்லிணக்க சந்திப்பு என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் ஏகப்பட்ட தற்படங்களை ( செல்ஃபி) எடுத்துக் கொண்டார் நஜிப். அந்தப் படங்களில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இனிய நட்பு ரீதியான சந்திப்பு இப்போது நடந்து முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ரஜினியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
I am extremely happy to have met an excellent, friendly and warm person today … The Honourable Prime Minister of Malaysia @NajibRazak ji pic.twitter.com/5Ui4oQaS6c
— Rajinikanth (@superstarrajini) March 31, 2017
-என்வழி