BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்திப்பு!

மலேசிய பிரதமருடன் தலைவர்!

Thalaivar-MPM

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ முகமத் நஜிப் பின் துன் அப்துல் ரசாக் நேற்று சென்னை வந்தார். ஐந்து நாள் இந்திய பயணமாக வந்துள்ள அவரை வரவேற்று சென்னையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவருடன் மனைவி டதின் பதுகா செரி ரோஸ்மா மன்சூரும் வந்துள்ளார். இருவருமே ரஜினியின் தீவிர ரசிகர்கள்.

தங்கள் சென்னைப் பயணத்தின்போது ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக் வந்தார். அவரை ரஜினிகாந்த், லதா ரஜினி, மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் வரவேற்றனர்.

ரஜினியின் படங்கள், அவருக்கு தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினார் மலேசிய பிரதமர்.

சந்திப்பு மிக இனிமையாகவும் நட்புணர்வோடும் அமைந்ததாக மலேசிய பிரதமர் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக இனிய, நட்பான மலேசிய பிரதமரைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி,” என குறிப்பிட்டுள்ளார்.




One thought on “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்திப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *