BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டத்தோ விருது.. மலேசிய அரசு முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டத்தோ விருது!

makkal thalaivar rajini

பாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ள ரஜினிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளித்துள்ளனர் மலேசிய மக்கள்.

அவரைப் பார்க்க நாள்தோறும் பலர் பல நகரங்களிலிருந்தும் கபாலி படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றவண்ணம் உள்ளனர். சிலர் பக்கத்து நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்திலிருந்து மலேசியா வர விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள்.

தன்னைக் காணவரும் மக்களின் ஆர்வம் புரிந்து, அவர்களை அருகில் அழைத்து படமெடுத்துக் கொள்கிறார் ரஜினி. மிகுந்த ஆசையுடன் தன்னுடன் பேச வரும் அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசி மகிழ்விக்கிறார்.

தமிழர்கள் என்றில்லை, மலேசிய, சீன, ஜப்பானிய மக்கள் அவரைப் பார்க்க வந்து படமெடுத்துக் கொள்வது தொடர்கிறது. படப்பிடிப்பின் இடைவேளைகளிலும் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.

Kabali-Mal-10

இந்த நிலையில், ரஜினிக்கு மலேசிய அரசின் மிக உயர்ந்த டத்தோ விருதினை வழங்க மலாக்கா ஆளுநர் முகமது கலில் பரிந்துரைந்துரைத்துள்ளாராம். இதனை உடனடியாக மலேசிய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ரஜினி மலேசியாவிலிருந்து திரும்புவதற்குள் பிரமாண்ட விழா எடுத்து இந்த விருதினை அவருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ஜாக்கிசான், ஷாரூக்கான் ஆகியோருக்கு டத்தோ விருது வழங்க பரிந்துரைத்தவர், இதே மலாக்கா ஆளுநர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் மட்டும் ரஜினி ஒரு மாத காலம் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

-என்வழி
22 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டத்தோ விருது.. மலேசிய அரசு முடிவு!

 1. Renugopal

  ஹலோ வினோ Singapore அண்ட் Thailand people நோ need விசா டு Malaysia it is on arrival விசா for them no need to wait

 2. enkaruthu

  எனக்கு கொஞ்ச நாட்களாக காய்ச்சல்.மேலும் ஒரு நல்லவரை ஏன் இப்படி தொல்லை பண்ணுகிறார்கள் என்ற ஏக்கம்.மேலும் தலைவர் போலவே நேர்மையாக வாழ்ந்து வேறு எவருக்கும் துரோகம் செய்யாமல் வாழ்ந்த என் அப்பாவின் இறந்த தினம் இன்று.இன்று இந்த விஷயத்தை பார்த்தவுடன் என் அப்பா மற்றும் நம் தலைவர் சொல்வதை போல் கண்ணா அமைதியாக இரு நல்லவனாக இருந்தால் எல்லாம் தேடி வரும் என்பதை இன்று புரிந்துகொண்டேன்.

 3. The Editor Post author

  ஆனால் நமது நண்பர்கள் சிலர் விசாவுக்கு விண்ணப்பித்ததை படமாக எடுத்து அனுப்பியிருந்தார்கள்!

  -என்வழி

 4. Rama

  சிங்கபுரு/ தாய்லாந்து குடிமக்களுக்கு மலேசிய விசா தேவையில்லை, மற்ற அனைவருக்கும் மலேசியா போக விசா thevai

 5. குமரன்

  டத்தோ ரஜினிகாந்தாகச் சென்னை திரும்ப வாழ்த்துக்கள்.

  நல்லவரை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான்.
  தலைவரைத் தேடி வரும் கவுரவங்களில் இன்னும் ஒன்று இந்த விருது.

  1% நாசர் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி. ரஜினிக்கு இந்த விருது வசங்கப்பட்டபின்னால், இந்த நாசர் ஒருவேளை அவரை மலேசியர் என்று சொல்லி விடுவாரோ?

 6. Lingaa karthi keyan

  விசாவை படமாக எடுத்து உங்களுக்கு அனுப்பி இருந்தால் அதனை என்வழியில் post செய்யலாமே.

 7. ரேவதி ரவி

  மன்னிக்கவும். விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் மனித தெய்வம், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இருப்பினும் விரும்பி கொடுப்பதை, நமது மனித தெய்வம் நாகரிகம் கருதி பெற்று கொள்வார் என நம்புகிறேன்.
  நான் வணங்கும் தெய்வம், எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க, வாழ்க, பல்லாண்டு வாழ்கவே.

 8. velmurugan.a

  Mr.Renugopal,

  If they are citizen of singapore and Thailand only no need of visa to malaysia, else thy need to get visit visa.

 9. ruskin

  இந்தியன் பாஸ்போர்ட் வைதிருப்பர்களுக்கு மலேசியா விசா தேவை

 10. simbu

  இதே போன்று தமிழ்நாடு மக்களையும் சூட்டிங் நடக்கும்போது புகைப்படம் எடுக்க அனுமதித்தால் நன்றாக இருக்கும் ஆனால் இது வரை அவ்வாறு நடந்ததாக சரித்திரம் இல்லை …. என்ன இருந்தாலும் வெளிநாட்டுகாரன் நம்மை விட உசத்தி தானே !!!

 11. S.dhinesh kumar

  Ethukuna tamil rasikarkalai photos eduka anumathicha tamil nadu rasikarkal thalaivar kudavethan irupanga apram eppadi thalaivar work pantrathu don’t feel bro

 12. enkaruthu

  தம்பி சிம்பு தலைவர் தமிழ் நாட்டிலும் ஆரம்ப காலத்திலிருந்து அனைத்து ரசிகர்களையும் பார்த்து வந்துள்ளார்.இங்கே அவர் போட்டோ கொடுக்க ஆரம்பித்தால் அவர பொழுதுக்கும் அவர் போட்டோ கொடுத்துகொண்டே இருக்கவேண்டும்.இது பாச கூட்டம்.என்ன பண்ணுவது உங்களை போன்றோர்கள் உங்கள் பணத்துலையே கண்ணு குட்டி வாங்கி கொடுத்துவிட்டு உங்களுடன் ஒரு படம் எடுத்துவிட்டால் அவரை தலைவராக பார்க்கும் உங்களுக்கு எங்கள் தலைவரின் குணம் பற்றி தெரியாது.அவர் ஷூட்டிங் தான் போய் உள்ளார் .ஆனால் அங்கு தன்னால் வந்த வரவேற்ப்பு.அதை ஏற்கிறார் அவ்வளவுதான்.எங்கள் தலைவரை பொறுத்தவரை மலாய் கவர்னரும் ஒன்றுதான் ஒரு சாதாரண ரசிகரும் ஒன்றுதான் .ஒருத்தரை பார்த்தால் இன்னொருவர் கஷ்டபட mata

 13. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகன் விரைவில் அவரது படப்பிடிப்பிற்கு மலேசியா
  செல்ல நேர்ந்தால் அவருக்கும் இது போல் வரவேற்பு இருக்கவேண்டும்
  என கமல் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் உலக நாயகனுக்கு
  விளம்பரம் சிறிதும் பிடிக்காது. அவரது ரசிகர்களும் அடக்கமானவர்களே..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 14. simbu

  சரியாக சொநீர்கள் பாவலரே !!! புகழ்ச்சி ஒரு போதும் பிடிக்காத பரமக்குடி பண்பாளர் …….

 15. MK

  “ஆனால் உலக நாயகனுக்கு
  விளம்பரம் சிறிதும் பிடிக்காது. அவரது ரசிகர்களும் அடக்கமானவர்களே”

  இந்த சைட்ல நீ மட்டும் தான் அந்த தெனாலிக்கு சால்ரா(ரசிகன்) ன்னு எல்லோருக்கும் தெரியும்.

 16. MK

  “உலக நாயகன் விரைவில் அவரது படப்பிடிப்பிற்கு மலேசியா
  செல்ல நேர்ந்தால் அவருக்கும் இது போல் வரவேற்பு இருக்கவேண்டும்”

  கண்டிப்பாக இருக்காது.
  தலைவர் மீதும், அவர் புகழ் மீதும் பொறாமை பிடித்த மற்றவரை மதிக்காத, தான் என்ற ஆண…..வம் பிடித்த ஒரு ஈ… பிறவிக்கு எப்படி வரவேற்பு இருக்கும். அதை எப்படி எதிர் பார்க்கலாம்.

  தலைவர்க்கு, அவரின் அன்புக்கு உயிரினும் மேலான ரசிகர்கள், மக்கள் காட்டும் பிரதி அன்பு இந்த வரவேற்பு.

  ஏன்னா

  “இது தானா சேர்ந்த கூட்டம். அன்பால சேர்ந்த கூட்டம்.”

 17. MK

  ” ஆனால் உலக நாயகனுக்கு
  விளம்பரம் சிறிதும் பிடிக்காது. அவரது ரசிகர்களும் அடக்கமானவர்களே..”

  சீ.. சீ இந்த பழம் புளிக்கும்.
  கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல….
  (…அந்தோ பரிதாபம்…….)

 18. இந்திரன்

  ஐயா சிம்பு எந்த விதத்தில் கமல விட எங்கள் தலைவர் குறஞ்சவர்.நடிப்பில மட்டும் தான் கமல் பேர் வாங்கி இருக்களாம்.but தனி மனித ஒழுக்கம் நாகரிகம் இது க்கு பக்கதல கமலால வரவே முடியாது .ரஜினியால கமல மாதிரி நடிக்க முடியாதுனு கிடையாது ஆனால் ரசிகர்கள் அத ஏற்க்க மாட்டார்கள் .கமல்வேணும்னா ரஜினி மாதிரி நடிக்கட்டும் படம் ஓடுதானு பார்ப்போம் .தலைவர நம்பி 300கோடி போட்டு படம் எடுக்க ரெடியா இருக்காங்க , ஆனால் கமல நம்பி எடுத்தா தெருவுக்குதான் போகனும் நம்ம தாணுவ மாதிரி

 19. MK

  ” ஆனால் உலக நாயகனுக்கு
  விளம்பரம் சிறிதும் பிடிக்காது. அவரது ரசிகர்களும் அடக்கமானவர்களே..”

  ஹ ஹா ஹாஹாஹாஹா…… எந்த கல்லறையில் அடக்கமானவர்கள்……..

 20. இந்திரன்

  ஐயா சிம்பு எந்த விதத்தில் கமல விட எங்கள் தலைவர் குறஞ்சவர்.நடிப்பில மட்டும் தான் கமல் பேர் வாங்கி இருக்களாம்.but தனி மனித ஒழுக்கம் நாகரிகம் இது க்கு பக்கதல கமலால வரவே முடியாது.ரஜினியால கமல மாதிரி நடிக்க முடியாதுனு கிடையாது ஆனால் ரசிகர்கள் அத ஏற்க்க மாட்டார்கள் .கமல்வேணும்னா ரஜினி மாதிரி நடிக்கட்டும் படம் ஓடுதானு பார்ப்போம்.தலைவர நம்பி 300கோடி போட்டு படம் எடுக்க ரெடியா இருக்காங்க , ஆனால் கமல நம்பி எடுத்தா தெருவுக்குதான் போகனும் நம்ம தாணுவ மாதிரி

 21. Prasanna

  who’s the hero who’s the hero என்று தனக்கு தானே பாட்டு எழுதியவருக்கு விளம்பரம் பிடிக்கதா

 22. மிஸ்டர் பாவலன்

  கமல் பிறந்த நாளிற்கு என்வழியில் ஒரு கட்டுரையை எதிர்பரத்தேன்..

  மூன்று அடி ரசிகரக்காக முட்டி போட்ட கமல் – என்ற செய்தியைப் பார்த்தேன்.

  ஒரு மூன்றடி ரசிகருக்காக முட்டி போட்டு அவர் கொடுத்த பிறந்தநாள் பரிசை
  கமல் வாங்கி கொண்டதைப் பார்த்த கமல் ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கினர்.

  கமல் தான் ஒரு “மாமனிதன்” என்பதை நிரூபித்து விட்டார்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *