BREAKING NEWS
Search

‘போதை டான்ஸ்’: நித்தியானந்தா மீது நானே கேஸ் போடுவேன்…- கொதித்தெழுந்த நீதிபதி!

‘போதை டான்ஸ்’: நித்தியானந்தா மீது நானே கேஸ் போடுவேன்…- கொதித்தெழுந்த நீதிபதி!

மதுரை: மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீர் என்ற பெயரில் போதை நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்பட ஏராளமானோர் கெட்ட ஆட்டம் போட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்யாவிட்டால் நானே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி செல்வம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக் கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.

அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன.

அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் டான்ஸ் ஆடினர். கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.

இந்த நடவடிக்கையால் மதுரை ஆதீனத்தின் புனிதம் கெட்டு விட்டது. ஆதீனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது புகாரின் மீது அவர்கள் நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளனர். புகாரைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு  உத்தரவிட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

மேலும் நித்தியானந்தா, மதுரை ஆதீனம், வைஷ்ணவி ஆகியோரைக் கைது செய்யவும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  செல்வம், மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்ட 6 பேர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜூன் 22ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

நானே கேஸ் போடுவேன்…

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செல்வம், “புகாரில் முகாந்திரம் இருக்கிறது. எனவே உடனடியாக போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதைச் செய்ய  மறுத்தால் நானே வழக்குப் பதிவு செய்ய வேண்டி வரும்,” என்று அதிரடியாக அறிவித்தார்.

முன்னதாக உயர்நீதிமன்றக்கிளை அனுப்பிய சம்மனை மதுரை ஆதீனம் பெற மறுத்து விட்டார். அதேசமயம், நித்தியானந்தாவும், வைஷ்ணவியும் பெற்றுக் கொண்டனர்.

கள்ளச்சாமியார்கள் எப்படியெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்பதை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியின் கழுகு படத்தில் காட்சிகளாக வைத்திருப்பார்கள். அதில் இதேபோல போதை தீர்த்தம் அருந்திவிட்டு ‘ஆனந்த நடனமாடும்’ காட்சிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது!

-என்வழி செய்தீகள்
7 thoughts on “‘போதை டான்ஸ்’: நித்தியானந்தா மீது நானே கேஸ் போடுவேன்…- கொதித்தெழுந்த நீதிபதி!

 1. குமரன்

  நித்தியானந்தா கைது செய்யப்பட்டால் ஒரு ஆறு மாதமாவது ஜாமீன் தராமல் இழுத்தடித்தால் தேவலை.

 2. மு. செந்தில் குமார்

  எப்படி போட்டோவை டைட்டில்-க்கு ஏத்த மாதிரி புடிக்கிறீங்க?

 3. enkaruthu

  அனைவரும் நித்யனந்தாவை கைது செய்ய வேண்டும் மதுரையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்லியும் ஜெயலலிதா தன போலீசாரை அமைதியாக வைத்ருப்பதன் மர்மம் ஏன் என்றுதான் தெரியவில்லை.தி.மு.கவின் பிரச்சினை என்றால் மட்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உடனடியாக தன் போலீசாரை வைத்து நடவடிக்கை எடுக்கும் ஜெயலலிதா இந்த விஷயத்தில் மட்டும் அமைதியாக இருப்பது ஏன்.ஒருவேளை பணமா அல்லது இவனின் வண்டவாளங்களை வெளியே கொண்டு வந்த சன் டிவி மற்றும் நக்கீரன் மேல் ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் கோபமா.

 4. sitlu

  இவனை தமிழ் நாட்டுக்குள் விடவே கூடாது

 5. HOTLINKSIN திரட்டி

  நித்தியானந்தா மீது தவறு இல்லை… அவனை நம்பிக் கொண்டு பின்னாலே செல்லும் மக்களைதான் முதலில் குற்றம் சாட்ட வேண்டும். இந்த அடிவருடிகளில் அரசியல்வாதிகள்… முதல் அயோக்கியர்கள் வரை… அத்தனைபேருமே அடக்கம்…

 6. Manoharan

  நித்தியிடம் ஜெ பெட்டி வாங்கி விட்டாரா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *