BREAKING NEWS
Search

லைகா சுபாஷ்கரன் கைது திட்டமிட்ட நாடகமா?

கத்தி வெற்றியைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய லைகா சுபாஷ்கரன் கொழும்பில் கைதாகி விடுதலை!

lyca_boss4
லைகா நிறுவனம் தயாரிப்பில், தயாரிப்பாளர் பெயரே இல்லாமல் வெளியான கத்தி படத்தின் வெற்றியைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய சுபாஷ்கரன் அல்லிராஜாவை  விமானத்தில் கைது செய்த இலங்கை அரசு, சில மணி நேரங்களுக்குப் பிறகு ரிலீஸ் பண்ணியது.

லைக்கா தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைவரும் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளருமான சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் லைகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேம் சிவசாமியும் கைது செய்யப்பட்டார்.

கத்தி படத்தின் வெற்றியை மாலத் தீவில், படக் குழுவினருடன் கொண்டாடினார் சுபாஷ்கரன். பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு விமானத்தில் பயணம் செய்தார். இடையில் கொழும்பு விமான நிலையத்தில் அந்த விமானம் நின்றபோது, அவரை இலங்கை அரசு கைது செய்தது.

இந்த கைது எதற்காக என்று தெரிவிக்கப்படவில்லை. இவர் கைதானது குறித்த தகவல் அறிந்து, பிரிட்டிஷ் தூதரகம் இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டதோடு, சுபாஷ்கரனை உடனே விடுதலை செய்ய அழுத்தம் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து சுபாஷ்கரனும், சிவசாமியும் விடுதலையானார்கள்.

இந்த சுபாஷ்கரனும் அவரது நிறுவன அதிகாரிகளும் சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை ராணுவத்தின் ஹெலிகாப்டரில் வட இலங்கையில் வந்திறங்கி, போர் பாதித்த பகுதிகளை ராணுவ அதிகாரிகள் துணையுடன் பார்த்துவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம்.

எனவே இந்த கைது என்பது தமிழகத்தில் உள்ளவர்களிடம் தன்னை ராஜபக்சேவின் நண்பன் இல்லை எனக் காட்டிக் கொள்ள சுபாஷ்கரன் நடத்திய நாடகமாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

-என்வழி




2 thoughts on “லைகா சுபாஷ்கரன் கைது திட்டமிட்ட நாடகமா?

  1. குமரன்

    சு.சுவாமி அவருக்கும் ஒரு பாரத ரத்னா ரிசர்வ் செய்து விடுவார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *