BREAKING NEWS
Search

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது என மத்திய அரசு அறிவிப்பு – என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?

“தமிழீழம்” என்பது இந்தியாவுக்கு எதிரானது – டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர். இது இந்திய குடிமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழ் ஈழம் என்பது இந்திய அரசுக்கு எதிரானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி ஈழம் கோரி கருணாநிதி டெசோ மாநாடு நடத்த தேதி அறி்வித்துள்ள நிலையில் மத்திய அரசு இப்படி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாத குழுக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுக்களும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தளத்தை உருவாக்கி வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் இணையதளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு என்று தொடர்ந்துபிரச்சாரம் செய்து வருகின்றனர். இணையதளங்களின் மூலமான இத்தகைய பிரச்சாரங்களால் இந்திய அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து புலிகளின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கான தமிழருக்கென தனி தாயகம் – தமிழீழத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பு விளைவிக்கக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி என்ன செய்யப் போகிறார்?

இலங்கையில் தமிழருக்கு எனத் தனித் தாயகமான தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்னை ராயப்பேட்டையில் ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தமிழீழம் என்பதே இந்தியாவுக்கு எதிரானது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தனக்கு விரோதமானது என அறிவித்துள்ள தமிழ் ஈழத்தை தொடர்ந்து வலியுறுத்துவாரா? பார்க்கலாம்!

-என்வழி செய்திகள்




9 thoughts on “தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது என மத்திய அரசு அறிவிப்பு – என்ன செய்யப் போகிறார் கருணாநிதி?

  1. Kumar

    கருணாநிதி என்ன செய்வார்? மத்திய அரசில் இருந்து விலகுவார், அழகிரியின் மந்திரி பதவிய தூக்கி எறிவார், மெரினாவில் மனைவி துணைவியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்…..

    சொக்க தங்கம் என்று அழைத்த சோனியாவை சூனியக்காரி என்று சொல்லி அறிக்கை விடுவார்…..

  2. குமரன்

    ஈழத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்க அல்லது முடக்கப் பட்டுவிட்டதாக இலங்கை அறிவித்து விட்டது. இப்போது உலகெங்கும் பரவலாக இருப்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி போராடியவர்கள் அல்லர். எப்படி இருந்தாலூம் கிட்டத் தட்ட முழுவதுமாக ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக எப்படி இயங்க முடியும்?

    தனி ஈழம் என்பது அங்குள்ள தமிழர்களின் உரிமை. இலங்கை என்ற அயல் நாட்டுக் குடிமக்களின் உரிமை இந்தியாவுக்கு எதிரானது என்று சொல்வது வேடிக்கை.

    பாலஸ்தீன விடுதலை இந்தியாவுக்கு எதிரானது என்று சொல்வார்களா? அல்லது அயர்லாந்தின் விடுதலை இந்தியாவுக்கு எதிரானது என்று சொல்வார்களா? வங்காளதேசத்தின் விடுதலையா ராணுவ ரீதியாகவே ஆதரித்த நாடு இந்திரா தலைமையிலான இந்தியா என்பதை அவரது மருமகள் சொக்கத் தங்கம், அன்னை, தியாகத் திருவிளக்கு சோனியா மறந்து விட்டார்களா?

    இப்போது கருணாநிதிக்கு இரண்டு கேபினெட் பதவி தேவை என்று கோரிக்கை வைத்துவிட்டார். இந்த சமயத்தில் அதைச் சாக்காக வைத்து சொக்கத் தங்கம் சில பல விஷயங்களை அவரிடம் சாதித்து விடுவார்.

    ஒருவேளை பதவிகளை மனதில் வைத்து அவர் டெசோ என்றாரா? அல்லது சொக்கத் தங்கம் சோனியா கருணாநிதியின் டேசோவை முடக்கப் பதவி தருகிறாரா?
    ……………. என்பது “சமத்துவப் பெரியாருக்கே” வெளிச்சம்.

  3. மிஸ்டர் பாவலன்

    ///இப்போது கருணாநிதிக்கு இரண்டு கேபினெட் பதவி தேவை என்று கோரிக்கை வைத்துவிட்டார். இந்த சமயத்தில் அதைச் சாக்காக வைத்து சொக்கத் தங்கம் சில பல விஷயங்களை அவரிடம் சாதித்து விடுவார்.///
    (குமரன்)

    நண்பர் கிருஷ்ணன் அளவிற்கு எனக்கு ஞாபக சக்தி இல்லை. அவரை
    இந்த வலையில் சில நாட்களாக காணவும் இல்லை. ஆகஸ்ட் மாதம்
    ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் மந்திரி மாற்றம் மத்திய அரசில்
    நடக்கும் எனக் கேள்விப் பட்டேன். டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு
    காபினெட் மந்திரி போஸ்ட் கிடைக்கலாம் என சில இணைய தளங்களில்
    படித்தேன். மற்ற போஸ்ட் யாருக்குன்னு தெரியல.

    கலைஞர் ஒரு மாபெரும் அரசியல் சாணக்கியன். தொண்டர்களையும்,
    தமிழக மக்களையும் நன்கு study செய்து வைத்துள்ளார். குமரன், சோ
    போன்ற அறிஞர்கள் கலைஞர் எப்படி அரசியல் சதுரங்கத்தில் காய்
    நகர்த்துவார் என விளக்கம் கொடுத்தாலும், கலைஞர் அந்த செயல்பாடுகளை ‘கேள்வி-பதில் அறிக்கை’, எதுகை-மோனை பேச்சு
    இவற்றால் மக்கள் ஏற்கும் படி பல விளக்கங்கள் கொடுத்து தொண்டர்களிடம் “தமிழினக் காவலர்”, “முத்தமிழ் வித்தகர்”, விட்டுப் போன புதிய பட்டங்கள் இவற்றை பெறுவார். இந்த வலையிலும் சிலர்
    கலைஞர் அறிக்கைகளைப் பாராட்டி எழுதி வருகின்றனர். அவர்கள்
    ‘யார் யார்’ என நண்பர்கள் அறிவார்கள். தொண்டர்களும் அதே போல் தான்.

    ஆகஸ்ட் மாதம் காபினெட் மாற்றம் என அறிவிக்கப்பட்டதும் ‘திமுக மத்திய மந்திரி சபையில் புதிய பதவிகள் கேட்குமா?’ என்றால் கலைஞர்
    ‘செயற்குழு கூடி முடிவு செய்யும்’ என்பார். அல்லது ‘பொதுக்குழு முடிவு
    செய்யும்’ என்பார். தனது குடும்பத்தினர் காட்டும் நபர்களுக்கு மந்திரி
    பதவி கேட்டுப் பெறுவார். டெசோ மாநாட்டையும் செயற்குழு அல்லது
    பொதுக்குழு ஒத்திப் போடலாம். அரசியலில் ஆதாயத்திற்காக எதுவும்
    நடக்கும்.

    இந்த டெசோ மாநாட்டை நம்பி இலங்கைத் தமிழர்கள் ஏமாறாமல் இருந்தால் அவர்களுக்கு நலம்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  4. குமரன்

    மிஸ்டர் பாவலன்

    என்னை ஒருவழி பண்ணாமல் விட மாட்டீர்கள்.
    ///”குமரன், சோ போன்ற அறிஞர்கள்”///
    உங்கள் நையாண்டி ஊரறிந்தது! ஐயா என்னை விட்டுவிடுங்கள்!!

    கலைஞரைப் பொறுத்த மட்டில் திமுக தொண்டர்களில் இப்போது 2 ,24 ,000 “தியாகத் திருவிளக்குகள்” இருக்கின்றனர்.

    போலீஸ் அதை 93 ,000 “தியாகத் திருவிளக்குகள்தான்” என்று சொல்வது ஆளும் கட்சியின் ஊதுகுழலாகவே!

    எப்படியாவது இன்னமும் ஒரு இரண்டரை லட்சம் “சொக்கத் தங்கங்களையும்” ஒரு இரண்டரை லட்சம் “அன்னைகளையும்” (‘திராவிட இடை’ குஷ்புவின் தலைமையில்) வரும் ஒரு வருடத்துக்குள் உருவாக்கி விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

  5. மிஸ்டர் பாவலன்

    குமரனின் அவர்களே.. இந்த வலையில் ஒரு VIP ஆக நீங்கள்
    கருதப் படுகிறீர்கள். அறிஞர் என்று பாராட்டியது நையாண்டி அல்ல.

    இந்த வலையில் திமுக, அதிமுக கட்சிக்கு என்று இரு கட்சிகளுக்கும்
    ஆதரவாளர்கள் சிலர் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்கள்
    பெயரையோ, அல்லது முதல் எழுத்தையோ, குறிப்பிடுவது நாகரிகமாக
    இருக்காது. தினசரி கிறுக்கல் போல் கனமாக சங்கடம் கொடுத்து தேவை
    இல்லாமல் என் கருத்தை வெண்கலத்தில் எழுதுவது இல்லை.

    தனித்து நீங்கள் நடுநிலையில் எழுதுவதால் உங்களைப் பாராட்டுகிறோம்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  6. enkaruthu

    என்னை பொறுத்தவரை அழகிரி மற்றும் கனிமொழி போன்றவர்களால்தான் கலைஞர் அவர்களுக்கு இன்று இந்த நிலைமை.இலங்கையில் வெறியாட்டம் போட்டு விட்டு வந்த அமைதிப்படையை நான் வரவேற்க மாட்டேன் என்று அன்று ஆட்சியை இழந்தவர் கலைஞர்.இந்த பெருமை இந்த தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எந்த முதலமைச்சருக்கும் கிடையாது.
    கலைஞர் அன்று இதை செய்ய முடிந்ததிற்கு காரணம் அவரால் அன்று சுயமுடிவெடுக்க(அழகிரி,கனிமொழி எல்லாம் அன்று சின்னவர்கள்) முடிந்ததுதான்.உண்மையாலுமே இன்று பேசாமல் கலைஞர் அவர்கள் இவர்கள் இரண்டு(அழகிரி,கனிமொழி) பேரையும் அடக்கிவைத்துவிட்டு ஸ்டாலினுக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு அவர் இந்த ஈழ போராட்டத்தை இனியாவது உண்மையாகவும் இவருக்கே உரிய தந்திரத்தை இந்த நல்ல விஷயத்துக்கு காட்டியும் தன் கடைசி நாளில் நல்ல பெயர் வாங்கலாம்.

    ஏனென்றால் கனிமொழியும் அழகிரியும்(கனிமொழிக்கு இவர் கூட பரவாயில்லை) இந்த கட்சிக்கு வாங்கி தந்த கெட்ட பெயர் ரொம்ப அதிகம். என்னை பொறுத்தவரை ஸ்டாலின் அவர்களால் எந்த ஒரு பெரிய கெட்ட பெயரும் இந்த கட்சிக்கு வந்ததில்லை.

  7. Kumar

    என்ன வினோ, கருணாநிதியின் பல்டி பத்தி எழுதவே இல்ல…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *