BREAKING NEWS
Search

அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்! – பா நடேசனின் கடைசி கடிதம்

அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்! – நடேசனின் கடைசி கடிதம்

கொழும்பு: முள்ளிவாய்க்காலில் இறுதிக் கட்டத்தை விடுதலைப் புலிகள் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், அரசியல் பொறுப்பாளர் பா நடேசன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் சென்று செயல்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், போரின் கடைசி மணித்துளிகளில் பிரபாகரன் இட்ட உத்தரவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பா நடேசன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள வரிகள்:

சுடருக்கு,

இங்கு எல்லாம் நிறைவடைந்துவிட்டது. உங்களுக்கு அண்ணர் குறிப்பிட்டதுபோல, எல்லாவற்றையும் வெளியில் சென்று செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கேஸ்ரோ எல்லாவற்றையும் உங்களிடம் தெரிவித்திருப்பார்.

எதிர்ப்பார்க்காத திருப்பம் ஏற்பட்டது உங்களுக்குத் தெரியும். தெளிவாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. எனது செய்மதியில் எதுவும் குறிப்பிட முடியாது, அவசரமாக நீங்கள்.

வைகோ அண்ணனைச் சந்திக்கவும் (முடிந்தால்). மற்றபடி இந்தக் கடிதம் கொண்டு வரும் —– விளக்கமாக தெரிவிப்பார் உங்களுக்கு.

என்று எழுதப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்து, முன்னணி தலைவர்கள் வெள்ளைக் கொடியோடு சரணடைவதற்கு முன் எழுதப்பட்ட கடிதம் இது.

இந்தக் கடிதத்தை அதிர்வு தளம் வெளியிட்டுள்ளது.

என்வழி செய்திகள்
படம்: அதிர்வு




2 thoughts on “அண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்கள்! – பா நடேசனின் கடைசி கடிதம்

  1. Kumar

    ஆஹா நாம இவ்ளோ நாளா கருணாநிதி தான் ஈழ தந்தைன்னு சொல்லிகுனு வந்தோம் ……இந்த நடேசன் இது தெரியாம வைகோவை பத்தி எழுதிட்டாரே….இன்னா பண்ணுறது ……ரொம்ப நோவுதுப்பா……

  2. gowrisankar

    இதிலிருந்து என்ன தெரிகிறது மாவீரன் பிராபகரன் அவர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே தலைவர் வைகோ மட்டும்தான் என்பது நன்றாகவே தெரிகிறது இரண்டாஎறது எட்டாம் ஆண்டில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் இலங்கை பிரச்னை குறித்து நிகழ்த்திய உரையை கேட்ட லேபர் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் ஜேம்ஸ் என்கிற பாராளுமன்ற உறுப்பினர் சபைக்குள்ளே கண்ணீர் விட்டு கண்கலங்கி என்வாழ்நாளில் நான் கேட்ட அற்புதமான உரை என்று சொல்லி முடித்தபோது அனைவரும் கை தட்டி தங்களின் பாராட்டை தேர்விதார்கள் நமக்கு ஒரு சுயநலமற்ற தமிழுக்காக அற்பநிதுகொண்ட தலைவர் வைகோ கிடைத்து இருக்கிறார் அவரை பின்தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றுவோம் .
    கௌரிசங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *