BREAKING NEWS
Search

‘பாட்ஷா மாதிரி கதை அமைஞ்சிட்டா, அடுத்த நாளே ரஜினி சார் வீட்டு வாசல்ல நிப்பேன்!’ – லிங்குசாமி

‘பாட்ஷா மாதிரி கதை அமைஞ்சிட்டா, அடுத்த நாளே ரஜினி சார் வீட்டு வாசல்ல நிப்பேன்!’ – லிங்குசாமி

DSC_0054-580x425
யக்குநர் லிங்குசாமி எப்பேர்ப்பட்ட தீவிர ரஜினி ரசிகர் என்பதை நாமறிவோம். அடிக்கடி சூப்பர் ஸ்டாரைச் சந்தித்துப் பேசும் இயக்குநர்களில் ஒருவர் அவர்.

ஒரு தயாரிப்பாளராக இப்போது கமல்ஹாஸனை வைத்து படம் தயாரிக்கும் லிங்குசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் தனது ஆசை பற்றி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இது..

”நான் ரஜினி சாரோட பயங்கர ஃபேன். நான் இயக்கும் படங்களில் ஹீரோயிஸ மூட் எங்கேயாவது இருந்தா, அது அவர்கிட்ட இருந்து எடுத்ததா இருக்கும். ‘இங்கே ரஜினி சார் பேசினா எப்படி இருக்கும்?’னு ஒரு தடவை கற்பனை பண்ணிப் பார்த்துதான், என் ஹீரோக்களுக்கு டயலாக் எழுதுறேன்.

‘உன் அண்ணனுக்கு என்ன ரெண்டு உசுரா? அடிச்சா வலிக்கும்ல… வெட்டுனா ரத்தம் வரும்ல?’னு ‘ரன்’ல பேசுனது மாதவனா இருக்கலாம். ஆனா, அது ரஜினி சார் மாடுலேஷனுக்கும் செட் ஆகும். டயலாக்லாம் யோசிப்பேன். ஆனா, ரஜினி சாருக்குக் கதை மட்டும் என்னால யோசிக்கவே முடியாது.

ஏன்னா, திருப்தியே வராது. என்ன யோசிச்சாலும், ‘பத்தலைடா’னு எனக்குள்ளேயே இருக்கிற ரஜினி ரசிகன் சொல்லிட்டே இருப்பான். ‘பாட்ஷா’ மாதிரி ஒரு கதை அமைஞ்சிட்டா, அடுத்த நிமிஷம் அவர் வீட்டு வாசல்ல போய் நின்னுடுவேன்.

DSC_0051
இப்பவும் அவர் என்ன மாதிரி படங்கள் பண்ணினா நல்லா இருக்கும்னு அவரைச் சந்திக்கிற தருணங்கள்ல ஒரு ரசிகனாச் சொல்லிட்டே இருப்பேன்.

சமீபத்தில் பேசினப்ப,  ‘என்ன லிங்கு அடுத்த படம் மும்பையா?’னு கேட்டார்.

‘ஆதாரமே, உங்க படம்தான் சார்’னு சொன்னேன். ‘சூப்பர்… சூப்பர். நீங்க நல்லாப் பண்ணுவீங்க, பண்ணுங்க’னார். எனக்கு அவ்வளவு சந்தோஷம்!”

-என்வழி

Courtesy: விகடன்




3 thoughts on “‘பாட்ஷா மாதிரி கதை அமைஞ்சிட்டா, அடுத்த நாளே ரஜினி சார் வீட்டு வாசல்ல நிப்பேன்!’ – லிங்குசாமி

  1. Basha

    k but unga Mumbai Based Padam na Basha saayala……. LIngu Thalaivar Padam Sayalna….. Adhu Thalaivarala Mattum Thaaan Mudiyum ……… Many of them failed by taking basha kind of Movie…. So dont try to do that

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *