BREAKING NEWS
Search

டிச 12-ல் தமிழ், தெலுங்கு, இந்தியில் 5000 திரையரங்குகளில் லிங்கா! – தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்

டிச 12-ல் தமிழ், தெலுங்கு, இந்தியில் 5000 திரையரங்குகளில் லிங்கா! – தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்

lingaa-movie-stills-13

சென்னை: ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி லிங்கா படம் 5000 அரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இன்று அறிவித்துள்ளார்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள லிங்கா படம் நேற்று சென்சார் ஆனது. 3 மணி நேரப் படமான லிங்காவுக்கு, எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்துள்ளனர்.

ரிலீசுக்கு இன்றும் 17 நாட்கள் உள்ள நிலையில், லிங்கா படம் சென்சார் சான்றிதழ் பெற்றது திரையுலகில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், திட்டமிட்டு ஒவ்வொரு பணியையும் முடித்து வருவதற்காக லிங்கா குழுவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

படத்துக்கு கேளிக்கை வரி விலக்குப் முன்கூட்டி தணிக்கை பெற்றுள்ளது பெரிதும் உதவியாக இருக்கும் என்று திரை வர்த்தகத் துறை நம்புகிறது.

rajinikanth_141500410920

இந்தப் படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், “ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் லிங்கா. ரசிகர்கள் உணர்வுப் பூர்வமாக ரசிக்கும் படமாக வந்திருக்கிறது.

5000 அரங்குகள்

லிங்காவை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகெங்கும் 5000 அரங்குகளில் வெளியிடவிருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் லிங்காவை பார்த்து மகிழலாம்,” என்றார்.

-என்வழி




5 thoughts on “டிச 12-ல் தமிழ், தெலுங்கு, இந்தியில் 5000 திரையரங்குகளில் லிங்கா! – தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்

  1. sri

    லிங்கா சுற்றி வளைத்து லைக்கா கையில்? அண்ணன் வேல்முருகன் எங்கையா? போனீர் வாருமய்யா வாரும்

  2. srikanth1974

    கத்தி பட விவகாரத்திலேயே உங்க மொன்னப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது.எனவே லிங்கா பற்றியோ அல்லது லைக்கா பற்றியோ பேச இங்கு எந்த வால்முருகனுக்கும்,யோகிதையோ,அருகதையோ,கிடையாது.
    திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி ச்சும்மா பொத்திக்கிட்டு இருக்கணும்.

  3. yaseenjahafar

    இந்த படம் வெற்றி படமா அமைய வாழ்த்துக்கள்

  4. yaseenjahafar

    ரஜினி பற்றி சத்தியராஜ் பேசியதை இங்கா பதிவு செய்ய வீரும்புகீரன்

    சத்யராஜ் பெருசா பேசுகிறார் ரஜினிகாந்தை பத்தீ ஏன் MGR பற்றி பேசா வில்லை ஜெயலிதவை பற்றி பேசா வில்லை இவர்கள் எள்ளுரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள இல்லை அதை பற்றீ யாரும் ஒரு வார்த்தை
    பேசவது கூட கிடையாது ஏன் என்றல் பயம் சத்யராஜ் , வன்னியர் ராமதாஸ்
    சீமான் , பாரதி ராஜா போன்றவர்கள் இது மதி ரி செய்திகளை பேசி கொண்டு
    இருக்கிறார்கள் பஸ் கன்ராக்டர் இருந்தவர் உழைப்பால் உயர்வது தப்பா
    போரமியில் பேசுகின்ற பேச்சு மதரீ பேசுகிறார்கள் நீ வேண்டும் என்றல் உனது பெயரை கூடத்தில் சொல்லி பாரு கை தட்டல் கெடைக்குமா எஆன்று
    பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *