BREAKING NEWS
Search

தலைவர் ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம்! – தயாரிப்பாளர்

தலைவர் ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம்! – தயாரிப்பாளர்

10322729_573678976080043_7157958685308592646_n

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் லிங்கா படம் அவர் பிறந்த தினமான டிசம்பர் 12-ல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில்  நடித்து வரும் திரைப்படம் லிங்கா. இத்திரைப்படத்தில் ஒரு ரஜினிக்கு சோனாக்ஷியும் இன்னொரு ரஜினிக்கு அனுஷ்காவும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.

மேலும் ஒரு நாயகியாக ஹாலிவுட்டிலிருந்து லாரன் இர்வின் அறிமுகமாகிறார். ஒரு பாடலுக்கு நயன்தாரா ஆடுகிறார். காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் மைசூரிலும், கடந்த இரு வாரங்களாக ஹைதராபாதிலும் நடந்து வருகிறது. இந்த 60 நாட்களிலும் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் (இந்தப் படத்துக்கு ரஜினி 40 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்தார் என்று முன்பு சிலர் எழுதியது நினைவிருக்கலாம். தலைவர் கொடுத்தது 100 நாட்கள். அதற்குள் படப்பிடிப்பு முடியப் போகிறது!).

ரஜினியும் ரவிக்குமாரும் மூன்று படங்களில் இதுவரை இணைந்துள்ளனர். முத்து, படையப்பா மற்றும் கோச்சடையான் என மூன்றுமே பெரும் வெற்றிப் படங்கள். கோச்சடையானை இயக்கியவர் சவுந்தர்யா ரஜினி என்றாலும், அந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் கேஎஸ் ரவிக்குமார்தான்.

இந்த கூட்டணி எப்போதுமே வெற்றிக் கூட்டணி என்பதால், லிங்கா படத்தை பெரும் விலைக்கு வாங்க, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளனர்.

லிங்காவை வரும் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இப்போது அதில்
ஒரு மாற்றம். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்தப் படத்தை உலகெங்கும் வெளியிடப் போகிறார்கள். இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் சார்பாக வெளியிட்டுள்ளனர்.

-என்வழி




11 thoughts on “தலைவர் ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம்! – தயாரிப்பாளர்

  1. Ganesan

    Dear Vino,

    There are many rumours about Rajini with Shankar movie…please give us true details about this topic.

    Thanks lot

  2. kabilan.k

    சரியான தினமாக படவில்லை,மழைகாலம்,பின்பு பொங்கல் வேறு ஒரு மாதத்தில் வந்துவிடும்.சந்திரமுகி மிக பெரிய வெற்றி பெற்றதற்கு காரணம்,தலைவர் படம் என்பதையும் தாண்டி அது கோடை விடுமுறையில் வந்தது தான்.தலைவர் படம் வெளியாக சரியான மாதம் கோடை விடுமுறை மாதங்கள் தான்,ஏன் என்றால் தலைவர் படங்கள் குடும்பத்தோடு கொண்டாட பட வேண்டிய திருவிழா.தயாரிப்பாளர்கள்,கண்ணைமூடிக்கொண்டு முடிவு எடுக்காமல்,அனைத்தையும் பரிசீலித்து கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு எடுப்பதே சாலச் சிறந்தது

  3. chozhan

    என்ன ஆச்சி வினோ சார், கடந்த 17 நாட்களாக ஒரு கட்டுரையையும் காணவில்லை, 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது, ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் எல்லாம் வந்து போய்விட்டது. ஒரு கட்டுரையையும் காணவில்லை, எதுவும் காரணமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *