BREAKING NEWS
Search

24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது லிங்கா டீசர்!

24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது லிங்கா டீசர்!

lingaa-teaser
வெளியான 24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா டீசரைப் பார்த்து மகிழந்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருந்த லிங்கா படத்தின் முதல் டீசர் நேற்று யு ட்யூபில் வெளியானது.

ஒரே நேரத்தில் பல லட்சம் ரசிகர்கள் இந்த டீசரைப் பார்க்க ஆரம்பித்ததால் யூட்யூப் தளமே திணறியது. எத்தனைப் பேர் பார்த்தார்கள் என்ற views count-ஐ தற்காலிகமாக நிறுத்திவிட்டது. அந்த அளவுக்கு அதிகமான பார்வையாளர்கள் இந்த டீசருக்கு.

டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சில லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருந்த நிலையில், யூட்பிலிருந்து அந்த வீடியேவை, தயாரிப்பாளரான ராக்லைன் என்டர்டெயின்மென்ட் நீக்கிவிட்டது.

டீசரின் கடைசியில் வரும் லிங்கா போஸ்டரை நீக்கிவிட்டு மீண்டும் யூட்யூபில் பதிவேற்றனர். இந்தப் புதிய லிங்க்தான் அதன் பிறகு பார்வையாளர்களுக்குக் கிடைத்தது. இந்த புதிய லிங்கில் மட்டும் லிங்கா டீசரை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இது புதிய சாதனை என்று திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய அவசியமில்லை. கோச்சடையான் படத்தின் போஸ்டர் டீசரும் முதல் நாளில் ஒரு மில்லியனைத் தொட்டது. அந்த சாதனையை லிங்கா முந்தியிருக்கிறது!




8 thoughts on “24 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது லிங்கா டீசர்!

  1. anbudan ravi

    சற்று முன்னர் ஒரு செய்தியை தினமலரில் பார்த்தேன்…..லிங்கா முன்னோட்டம் ‘ஐ’ யை முந்தவில்ல என்று……விஷமத்தனமான செய்தி அது. எதற்க்காக முந்த வேண்டும். ட்விட்டர் மற்றும் பேஸ் புக்கினால் படம் சரியில்லை என்றாலும் படத்தை ஓட்டிவிட முடியுமா? மேலும் தலைவரின் ரசிகர்கள் ஏழைகளும் நடுத்தர வர்கத்தினருமே…..அவர்களிடம் கணினி வசதிகள் இருக்குமா என்பதுகூட தெரியாது…… இந்த சுல்லான்களைப்போல யூடுபில் அதிக கணக்கு காட்டி படத்தை ஓட்டவேண்டிய அவசியம் தலைவருக்கு இல்லை. லிங்கா வந்ததும் அனைத்து சுல்லான்களையும் அடித்து நொறுக்குவது உறுதி. காத்திருக்கிறோம்.

    அன்புடன் ரவி.

  2. Rajagopalan

    I also heard that news as Mr Ravi said…
    Edhu ellam avasiyam ellai thalaivaruku…

    Padam varatum appo theriyum massna enna enbedhu…..

  3. srikanth1974

    அன்புடன் ரவி அவர்களின் கருத்து மிக அருமை.

  4. மிஸ்டர் பாவலன்

    நண்பர்களே.. குருவியின் மேனேஜர் இது வரை வந்த தென்னிந்திய
    படங்களின் வசூல் அனைத்தையும் விட குருவியின் புதிய படம்
    நூறு கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது என ஒரு தகவல்
    வெளியிட்டுள்ளார்.. குருவியின் புதிய படம் ‘ஹிட்’ என்றாலும் இந்த
    தகவல் நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது!!!

    -== மிஸ்டர் பாவலன் ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *