BREAKING NEWS
Search

கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் ‘கிங்காக’ நிற்கும் லிங்கா!

கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் ‘கிங்காக’ நிற்கும் லிங்கா!

10479955_10205359670539563_8244000875692130712_n

கிறிஸ்துமஸுக்கு புதிய படங்கள் வெளியானாலும், பல அரங்குகளில் நிலையாக ஓடிக் கொண்டிருக்கிறது ;சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா.

தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் லிங்கா இன்னும் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பது படத்தை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

கடந்த டிசம்பர் 12-ம் தேதி தலைவர் ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா படம். இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவுக்கு பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தது தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியான லிங்காவுக்கு.

முதல் மூன்று தினங்களில் ரூ 104 கோடியை இந்தப் படம் குவித்தது. இந்தியில் வெளியாகும் படங்களுக்கு இந்த வசூல் சாத்தியம் என்ற நிலையில், மாநில மொழியில் வெளியான லிங்கா மூன்றே நாட்களில் நூறு கோடி க்ளப்பில் சேர்ந்தது. அடுத்து வந்த ஆமீர்கானின் பிகேவால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் லிங்காவுக்கு சரியான கூட்டமில்லை, நஷ்டம் என்றெல்லாம் சிலர் புகார் கிளப்பி வந்தனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் அந்தப் புகாருக்கு பதிலளிக்கும் வகையில் கூட்டம் அதிகரித்துள்ளது படத்துக்கு.

கிறிஸ்துமஸ் விடுமுறையில் புதிய படங்கள் வருவது படத்தை பாதிக்கும் என்று இன்னொரு தரப்பினர் கூறிவந்தனர்.

ஆனால் அனைவரின் கணக்கையும் கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் லிங்கா படம் வெளியிட்ட திரையரங்குகள் பலவற்றில் ஓடிக் கொண்டுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், “லிங்கா படம் 720 அரங்குகளில் வெளியானது. எங்கு பார்த்தாலும் அந்தப் படம்தான் கடந்த இரு வாரங்களாக ஓடிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் முதல் வாரம் முடிந்ததுமே கொஞ்சம் அரங்குகளைக் குறைத்திருக்க வேண்டும். அப்போதுதான் படம் ஹவுஸ்புல்லாகவே தொடரும்.

ஆனால் இந்த வாரம் புதிய படங்கள் நான்கைந்து வந்துள்ளன. இவற்றைத் திரையிடுவதற்காக சில காட்சிகளை, அரங்குகளைக் குறைத்திருக்கிறார்கள். இது இயல்பான விஷயம்தான். இப்போது இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் லிங்கா ஓடுவதாக ரிப்போர்ட்ஸ் வருகிறது,” என்றார்.

தமிழகத்தில் சென்னையில் லிங்கா இன்னும் பெருமளவு அரங்குகளில் மூன்றாவது வாரமாக ஓடிக் கொண்டுள்ளது. சத்யம், ஐநாக்ஸ் உள்ளிட்ட மால்களில் இன்றைக்கும் இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் நல்ல வசதியான மால்களில் படத்துக்கு நல்ல கூட்டம். விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற அரங்குகளிலும் 90 சதவீத பார்வையாளர்களுடன் லிங்கா வெற்றி நடை போடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

-என்வழி
5 thoughts on “கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் ‘கிங்காக’ நிற்கும் லிங்கா!

 1. dhinesh kumar

  Vino sir naan super star big big fan lingaa movie paththi bad news tharanga thina malar cinema newsla antha website pakave pudikala antha writer vijay fana iruparonu enaku thonuthu ungaluku theriyuma avara

 2. dhinesh kumar

  Thalaivar next movie சொல்லுங்க கமல் தலைவர் சேர்த்து movie பண்ண போவதா இயக்குனர் sigaram சொன்னத kelvipatten அவர் இப்ப illa

 3. Hariharan

  புதன் கிழமை நைட் ஷோ லிங்கா பாத்தன். Fantastic movie. என்ன பொறுத்த வரை லிங்கா சிவாஜி, எந்திரன் விட better movie. லிங்கேஸ்வரன் படம் முழுக்க கிங்கா நிக்கிறார். அந்த train fight ஹாலிவுட் கிளாஸ். Zorro movie fighta விட பெட்டெர். Planning for செகண்ட் டைம் வித் பிரிஎண்ட்ஸ் 🙂

  Importantly படம் housefull (பெங்களூர், கோபாலன் சினிமாஸ்) :). PK வுக்கு டிக்கெட் available 🙂 பட் லிங்கா வுக்கு houseful :):)

 4. குமரன்

  வருத்தம் தரும் செய்தி. இவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1147164

  இப்படியும் ஒரு ரஜினி ரசிகர்… பாவம்!

  கோவை: கோவை, பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56. சிறுநீரக பாதிப்பு காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், லிங்கா படம் ரிலீஸ் ஆகியுள்ளதை கேள்விப்பட்ட ராஜேந்திரன் எப்படியாவது ரஜினியின் லிங்காவை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தார். ஆனால், மருத்துவமனை கட்டுப்பாடுகள் அவரை கட்டிலேயே கட்டிப்போட்டன. சமயம் பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லிங்கா படத்தை பார்க்க பகலில் சென்றால் மருத்துவமனை ஊழியர்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து, இரவு காட்சியை பார்க்க திட்டமிட்டார். இதையடுத்து, நேற்று இரவு கையில் குத்தியிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து கோவை, எஸ்.பி.ஐ., ரோட்டில், லிங்கா படம் ஓடும் தியேட்டருக்கு சென்றார். 10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்து, உள்ளே சென்றார். லிங்கா படத்தை ரசித்து பார்த்தார். படம் முடிந்து அனைவரும் வௌியில் சென்றனர். ராஜேந்திரன் மட்டும் இருக்கையிலேயே கிடந்தார். தியேட்டர் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அவர் இறந்து போனது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *