BREAKING NEWS
Search

ஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு! – லிங்கா அடுத்த ஷெட்யூல்

ஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு! – லிங்கா அடுத்த ஷெட்யூல்

lingaposters

ஜினியின் அடுத்த படமான லிங்காவின் பாடல் காட்சிகள் இன்னும் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவும் இரண்டு பாடல்கள்தான்.

இந்த இரண்டில் ஒரு பாடலை ஸ்காட்லாந்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம்.

ஒரு பாடலை ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே செட் போட்டு படமாக்குகிறார்கள். ரஜினியும் சோனாக்ஷி சின்ஹாவும் ஆடும் டூயட் இது.

இன்னொரு பாடலை மட்டும் ப்ரான்ஸ், ஹாங்காங் மற்றும் மக்காவோவில் படமாக்கப் போகிறாராம் கே எஸ் ரவிக்குமார். எஸ்பிபி பாடும் ரஜினியின் அறிமுகப் பாடலாம் இது.

ரஜினிக்கான அறிமுகப் பாடலை வெளிநாடுகளில் படமாக்குவது இதுவே முதல் முறை.

-என்வழி




2 thoughts on “ஹைதராபாதில் ஒரு பாட்டு… பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு! – லிங்கா அடுத்த ஷெட்யூல்

  1. குமரன்

    அடடா, ஸ்காட்லாந்தில் இல்லையா?

    முன்னர் ஸ்காட்லாந்தில் சூட்டின் என்ற செய்தியைப் பார்த்ததும், நான் விரைவில் ஸ்காட்லாந்து போகும் திட்டம் இருப்பதால், ஸ்காட்லாந்தில் எங்கே எப்போது ஷூட்டிங் என்று தெரிந்து கொள்ளக் கூகிள் பண்ணிப் பார்த்தேன், கிடைத்த தகவல்கள் வியப்பைத்தந்தன.

    ஸ்காட்லாந்தில் சில தீவுகளின் பெயர் லிங்கா !!!
    http://en.wikipedia.org/wiki/List_of_islands_called_Linga
    http://mapcarta.com/17619570

    இது மட்டும் அல்ல, ஸ்காட்லாந்திலும், அயர்லாந்திலும் இருந்த பூர்வகுடிகள் வணங்கியது லிங்க வடிவிலான கடவுளையே. அவர்களது கடவுள் நமது சிவபெருமான் போலவே சடை முடியுடைய கடவுள் என்பது கூடுதல் வியப்பு. அவரை வழிபட்ட விதமும் பாலபிஷேகம் என்பது மேலும் வியப்பு. அது மட்டுமல்ல, அந்தப் பழங்குடி மக்களது மூப்பனை ஐரோப்பியர்கள் இன்றளவும் “Druid ” என்றே வழங்குகின்றனர். இது திராவிட் என்பதுடன் ஒத்துப் போகிறது. அப்படியானால் ஐரோப்பியாவின் பழங்குடி இனத்து மதம், திராவிட மதம் என்று ஆகிறது அல்லவா?

    பெயரும், உருவமும், வழிபடும் கல்லின் உருவமும் ஒத்துப் போவதோடு, வழிபடும் முறையும் ஒத்துப்போவதால், அங்கு இருந்தது சிவ வழிபாடே, சிவலிங்க வழிபாடே என்பது புலனாகிறது.

    http://setantii.wordpress.com/2010/11/03/shiva-lingam-and-other-stones/
    என்ற ஒரு பிளாக்கைப் படியுங்கள். இது ஒரு ஐரோப்பியருடையது.

    Meadow, Grove and Stream
    A Druid’s Life in the Cheshire Wildwood.

    இதிலிருந்து ஒரு பகுதி:

    “The Rev. Mr. McQueen of Skye says that in almost every village the sun, called Grugach or the Fair–Haired, is represented by a rude stone; and he further states that libations of milk were poured on the Gruaich stones”

    இந்தோனேசியாவிலும் இதே மாதிரி லிங்கா தீவுகள் உள்ளன.

  2. குமரன்

    அயர்லாந்தில் இருக்கும் ஒரு நடுகல்லில் நமது சிவபெருமானுக்குடைய திரு நீற்று முப்பட்டை போன்று வடிக்கப்பட்டுள்ளது என்பதும் ஒரு வியப்பைத் தரும் தகவல். இந்தக் கல் பழைய கற்காலத்தைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த இடம் அந்த நாட்டின் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *