BREAKING NEWS
Search

லிங்கா விமர்சனம்

லிங்கா விமர்சனம்

-எஸ் ஷங்கர்

lingaa-rajini-latest-stills2-60

டிப்பு: ரஜினிகாந்த் (இருவேடங்கள்), சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார், இயக்குநர் விஸ்வநாத்

ஒளிப்பதிவு: ரத்னவேலு

கதை : பொன் குமரன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பு : ராக்லைன் வெங்கடேஷ்

இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்

இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ரஜினியின் லிங்கா, சரித்திரமும் சமகாலமும் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதை. அரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் அனைத்து விதங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு பிரமாண்டம்.

கதை மிக அழுத்தமானது. ஊருக்கு ஆறு என ஒன்று இருந்தாலும், அந்த ஆறால் எந்தப் பயனுமின்றி, பஞ்சத்தில் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சோலையூர் மக்களுக்காக ஒரு அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி). இந்த அணைக்காக தான் வகிக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசின் கலெக்டர் பதவியைத் துறக்கிறார். சொத்து முழுவதையும் இழக்கிறார். ஆனால், எந்த மக்களுக்காக அணை கட்டினாரோ அதே மக்களால் விரட்டப்படுகிறார் ஒரு பிரிட்டிஷ் அதிகாரின் நயவஞ்சகம் மற்றும் நம்ம ஊர் எட்டப்பன்களால். எழுபதாண்டு காலம் ஓடுகிறது. மீண்டும் அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்து நேர்கிறது, அரசியல்வாதி ரூபத்தில். எப்படி இவர்களைக் காக்கிறார் ராஜாவின் வாரிசு (இன்னொரு ரஜினி) என்பது திரையில் பார்க்க வேண்டிய மீதி.

வாரே வா… என்ன ஒரு அருமையான கதை, அதற்கேற்ற திரைக்கதை. பாராட்டுகள். குறிப்பாக அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் அத்தனை கச்சிதம். இவற்றை மட்டும் தனியாகப் பிரித்தால் கூட ஒரு முதல் தரமான வரலாற்றுப் படம் கிடைத்துவிடும் எனும் அளவுக்கு அற்புதமான பகுதி அது. ரஜினிக்கு மட்டுமே இப்படி அற்புதமான ப்ளாஷ்பேக்குகள் அமைகின்றன.

அடுத்து ரஜினி. படம் முழுவதையும் சுமப்பவர் ரஜினிதான். அறிமுகமாகும் அந்த முதல் காட்சி பிரமிக்க வைக்கிறது. இந்த மனிதருக்கு திரையில் மட்டும் வயதே ஆகாது என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த ஸ்டைலும் அழகும் இளமையும் அவரது உடல் மொழியும் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. அந்த ரயில் சண்டையில் கிரிக்கெட் மட்டையால் அவர் ஸ்டன்ட் ஆட்களைப் பந்தாடும் ஸ்டைல் அருமை.

இரண்டு வேடங்களிலுமே ரஜினி தன் ரசிகர்களை வசியம் செய்துவிட்டார் என்றால் மிகையல்ல. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்கள், காஸ்ட்யூம் பார்த்தவர்கள் அனைவருக்குமே பாராட்டுகள். லீ விட்டேகரின் அந்த ரயில் சண்டைக் காட்சி உறைய வைக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் அத்தனை நேரமும் சலிப்பின்றி ரஜினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு மனிதர் வசீகரிக்கிறார்!

10479955_10205359670539563_8244000875692130712_n

ரஜினியின் நாயகிகளாக வரும் சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா இருவருக்குமே நடிக்க வாய்ப்புடன் கூடிய பாத்திரங்கள். அருமையாக நடித்துள்ளனர். அந்த மரகத நெக்லஸ் திருடும் காட்சியில் அனுஷ்காவும் ரஜினியும் ரசிகரின் உள்ளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ரஜினியிடம் அனுஷ்கா தன்னைப் பறிகொடுக்கும் நெருக்கமான காட்சிகளில் காதல் ரசம்..!

ஜாக்கெட் போடாத காலத்துப் பெண்ணாக வரும் சோனாக்ஷி சிறப்பாக நடித்துள்ளார். ஒரு காட்சி… எல்லாம் இழந்த ரஜினியிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார் சோனாக்ஷி. பின்னர் ஊர்க்காரர்கள் எங்கெங்கோ தேடி ஒரு நாள் அவர்களைக் கண்டுபிடித்து ஊருக்கு அழைக்கிறார்கள். மீண்டும் ராஜவாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள். அதை சிம்பிளாக மறுத்துவிட்டு, இந்த வாழ்க்கை எப்படி என மனைவி சோனாக்ஷியைப் பார்ப்பார். அதைப் புரிந்து, நிறைந்த மனசு முகத்தில் எதிரொலிக்க சோனாக்ஷி பார்க்கும் பார்வையில் அவரது பக்குவ நடிப்பு தெரிகிறது.

முந்தைய படங்களில் ரஜினியுடன் கொஞ்சம் எட்ட நின்றே காமெடி செய்த சந்தானம் இந்த முறை, மிக நெருங்கிய ‘நண்பேன்டா’ தோழனாக (கவனிக்க நண்பேன் மட்டும் சந்தானம் சொல்ல, டா என முடிப்பார் ரஜினி.. மரியாதை மரியாதை!!) வருகிறார். முதல் பாதி முழுக்க ரஜினியுடன் சந்தானம் கலக்குகிறார்.

வில்லனாக வரும் ஜெகபதி பாபு, கருணாகரன், விஜயகுமார், ராதாரவி, அனுமோகன், பொன் வண்ணன், ஜெயப்பிரகாஷ், அந்த பிரிட்டிஷ் கலெக்டர் மற்றும் அவர் மனைவி என அனைவருமே சரியாகச் செய்துள்ளனர்.

படத்தின் அத்தனை காட்சிகளுமே பிரமாண்டம்தான். அதுவும் அந்த அணை கட்டும் காட்சியும், கூடவே வரும் ஆயிரக்கணக்கான துணை நட்சத்திரங்களும்.. இவ்வளவு பெரும்படையைக் கட்டியாள ரவிக்குமார் மாதிரி இயக்குநர்களால்தான் முடியும்.

ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் ‘வந்தா மட்டும் போதும்’தான். ஆனால் மற்றவர்களுக்கு…?

படத்தின் ஆகப் பெரிய குறை.. அநியாயத்துக்கு நீளும் அந்த க்ளைமாக்ஸ் துரத்தல், பவர் ரேஞ்சர்ஸ் கேம் மாதிரி ஆகிவிட்ட அந்த பலூன் சண்டை… (ஆதவன் ராக்கெட் லாஞ்சர் மேட்டரை விட மாட்டேங்குறாரே டைரக்டர்!) இத்தனை நம்பகமான வரலாற்று ரீதியான கதையை உருவாக்கியவர்கள், எதற்காக இத்தனை சினிமாத்தன க்ளைமாக்ஸை வைத்தார்கள்? இவற்றை நிச்சயம் தவிர்த்துவிட்டு, தரையிலேயே நடப்பது போல ஒரு அழுத்தமான காட்சியை வைத்திருக்கலாம்.

p8b

முத்து, படையப்பா, அருணாச்சலம், சிவாஜி படங்களில் ரஜினி எல்லா சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார். இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி. சென்டிமென்ட் என்றாலும், கதையின் போக்கை எளிதில் யூகிக்க முடிகிறது.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமிப்பை பல மடங்காக்குகிறது. ரஜினியை ஏக ஸ்டைல், இளமை, அழகுடன் படம்பிடித்திருக்கிறார். கலை இயக்குநருக்கு செம வேலை. அந்த பிரமாண்ட அணையை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் கட்டி, படமாக்கியது அசர வைக்கிறது.

ஏ ஆர் ரஹ்மான் இன்னொரு ஹீரோ. அனைத்துப் பாடல்களும் பிரபலம். மன்னவா, இந்தியனே.. பாடல்கள் இனிமை. மோனா கேசோலினாவில் ரஜினியின் ஸ்டைல், நடனம், அனுஷ்காவின் அழகு கிறங்கடிக்கிறது. துவக்கப் பாடல் இன்னும் கூட நன்றாக ட்யூன் செய்திருக்கலாம். அதே போல, ரஜினி படங்களில் அவர் நடந்து வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பொதுவாகவே கலக்குவார் ரஹ்மான். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். ஆனால் அந்தக் குறையைப் போக்குகிறது ரஜினியின் நடனம். அதே பழைய உற்சாகம், துடிப்பு, துள்ளல்!

இதுவரை ரஜினியைக் காட்டாத அளவுக்கு இந்தப் படத்தில் புதிதாகக் காட்டிவிட வேண்டும் என்ற மெனக்கெடல் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு. அதற்கான பலனும் திரையில் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி, க்ளைமாக்ஸை நச்சென்று முடித்திருந்தால், லிங்கா வெறும் படமல்ல, சரித்திரமாய் மனதில் பதிந்திருக்கும்.

ஆனால் ரஜினியை, அவர் படத்தை ரசிக்க இது ஒரு பெரும் தடையல்ல.. என்ஜாய்!

நன்றி: ஒன்இந்தியா

குறிப்பு: விரைவில் என்வழி விமர்சனம்
23 thoughts on “லிங்கா விமர்சனம்

 1. HARIHARAN

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா உங்கள் பிறந்தநாள் பரிசாக எங்களுக்கு லிங்கா படத்தை வழங்கியுள்ளீர்கள்.
  படம் சூப்பர் .

 2. chozhan

  நடுநிலையான விமர்சனம், என்வழியிலையும் இதையே எதிர்பார்க்கிறேன்

 3. kumaran

  எனக்கு குறையே தெரியவில்லை படம் சூப்பர்

 4. sasikumar

  vino anna correct tana box office collection ah tomorrow upload pannunga please intha vijay fans kaththi padam vanthapa romba comedy pan
  nitu irunthanunga lingaa evlo periya hit nu avanungaluku puriya vaikanum

 5. sharajinis

  Happy birthday thalaiva எனக்கு படம் பிடுச்சுருக் கு but flashback screenplay கொஞ்சம் தொய்வாகத்தெரிகிறது back round music rahman no score

 6. prakash

  padam super….matured acting from thalaivar lingaeswaran..flashback is the heart and soul of the film..sonakshi role is very cute..thumps up….

 7. chozhan

  படத்தின் பெரிய மைனஸ் ரஹ்மான், ரஹ்மான் இல்லாமல் யாரு இசை அமைத்திருந்தாலும் சூப்பராக இருந்திருக்கும் ஏனெனில் ரஜினிக்காக மெனக்கிட்டு சிறப்பாக இசை அமைத்து இருப்பார்கள், ரஹ்மான் வேஸ்ட் bad சாய்ஸ், பெரிய பிளஸ் ரஜினி & ரவிக்குமார், ரஜினி இல்லாத சீனை எண்ணி சொல்லிவிடலாம். ரஜினியை திருடனாக காட்டவேண்டியதில்லை. மற்றபடி படம் சூப்பர். from kamal fan

 8. மிஸ்டர் பாவலன்

  //படத்தின் பெரிய மைனஸ் ரஹ்மான்//

  இந்தப் படத்தின் பாடல்கள் வெளியான உடனே – பாட்டு ரொம்ப சுமார்
  ராகம் தான்.. ஐந்துக்கு ரெண்டு பிழை இல்லை என்று எழுதி இருந்தேன்.
  தேவா-வை புக் செய்திருந்தால் கூட சூப்பராக போட்டு கொடுத்திருப்பார்!

  ‘கமல் ரசிகன்’ என சிலர் ஏசியது தான் பரிசு! அடுத்த படம் ஆவது ரஜினி
  ரெஹ்மானை விட்டு விட்டு – யுவன் ஷங்கர் ராஜா, இல்லை, ஹாரிஸ்
  ஜெயராஜ் இவர்களில் ஒருவருக்கு chance கொடுக்கலாம். நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 9. Vazeer

  வினோ சார் சூப்பர் ஸ்டார் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கார். குவைத் பாக்ஸ்ஆபிசில் டாப் டென் வரிசையில் லிங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உங்கள் பார்வைக்கு குவைத்தின் சினிஸ்கேப் தளத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். மறவாமல் இதை என் வழி மற்றும் தட்ஸ்தமிழில் இந்த முக்கிய செய்தியை பதிவு செய்யவும். “குவைத்திலிருந்து அப்துல் வசீர்” என்று என் பெயரை தயவு செய்து குறிப்பிடவும். சுட்டி இதோ:

  http://webserver2.kncc.com/index.php

  நன்றி…..

 10. Vazeer

  வினோ சார் சூப்பர் ஸ்டார் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கார். குவைத் பாக்ஸ்ஆபிசில் டாப் டென் வரிசையில் லிங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உங்கள் பார்வைக்கு குவைத்தின் சினிஸ்கேப் தளத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். மறவாமல் இதை என் வழி மற்றும் தட்ஸ்தமிழில் இந்த முக்கிய செய்தியை பதிவு செய்யவும். “குவைத்திலிருந்து அப்துல் வசீர்” என்று என் பெயரை தயவு செய்து குறிப்பிடவும். சுட்டி இதோ: –

  http://webserver2.kncc.com/index.php

  நன்றி!

 11. JB

  நான் ரஜினி ரசிகன் என்பது முன்பே தெரிந்த விஷயம். இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் போய் பார்த்தேன். கடைசியில் ஏமாற்றமாக இருந்தது. முத்து, படையப்பா போன்ற படங்களை தந்த கூட்டம், இந்த படத்தை தந்தது பெரிய ஆச்சரியம்.

  படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. ரஜினியின் குறும்பும் துள்ளலான நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது. அதுதான் படத்தின் வலு.

  படத்தின் weakness என்று பார்த்தால், பல உள்ளது.
  1) Flashback ரொம்ப நீளம். குறைச்சு பண்ணி இருக்கலாம்.
  2) ரஜினி திருடும் scene , english படத்தில் இருந்து சுட்டது. அதை கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்.
  3) Climax scene , ஹிந்தி Khiladi 420 படத்தில் irunthu சுட்டது. அதுவும் ரொம்பவும் சரியில்லாமல் இருந்திச்சுது. ரஜினி பட climax எல்லாத்திலும், இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்றாக இருந்தது.
  4) சொத்தை இழப்பது, பல தடவை நடந்த ஒன்று. திரும்பவும் அதையே செய்ய, வித்தியாசம் தெரியவில்லை. முத்து படத்தில் ரஜினி கொடுத்து விட்டு செல்வது இதை விட பல மடங்கு நன்றாக இருந்தது.
  5) பாட்டு எல்லாம் பழைய படங்களை திரும்ப பண்ணியது போல இருந்தது.
  Oh நண்பா பழைய ஆசை நூறு வகை பாட்டு modern முறையில் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது.
  Mona Gasolina பாட்டு அப்படியே சிவாஜி படம் Athiradee பாட்டு போல இருந்தது. ஆனால் அதிரடி இதை விட பல மடங்கு மேல்.
  என் மன்னவா பாடல், சிவாஜியின் சகானா போல இருந்தது.
  உண்மை ஒருநாள் வெல்லும் பாடல், முத்துவின் விடுகதை பாடல் போல வலுவாக இல்லை. அடுத்தடுத்து வந்ததால், அதன் 3 பகுதி பெரிதாக தெரியவில்லை.

  படத்தின் கதை வலுவானது. ரஜினியின் நடிப்பும் திறமாக இருந்தது. இந்த பிழைகளை KS ரவிக்குமார் கொஞ்சம் கவனிச்சு இருந்தால், படம் நன்றாக வந்து இருக்கும். அதை கவனிக்க தவறியதால், இந்த படம் மனதினில் ஒட்டாமல் போய் விட்டது.

 12. chozhan

  ஒவ்வொரு படத்தை பற்றி விமர்சனம் எழுதும் போதும் எந்த காட்சி எந்த படத்திலிருந்து திருடப்பட்டது என்பதை எழுதும் வினோ, இந்த படத்தை பற்றியும் எழுதுவார் என்று நம்புவோம்.

 13. Vazeer

  வினோ சார் எப்படி இருக்கீங்க? படம் 10 நிமிடம் ட்ரிம் செய்த பின் படத்தை பார்த்தீர்களா? என்னை பொறுத்த மட்டில் இது தேவையற்ற ஒன்று. முட்டாள்தனமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஏன் நாம் அடங்க வேண்டும்? பட்டிதொட்டியெங்கும் படம் சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. குவைத்தில் ஒரு வாரம் மிக அற்புதமாக முடிந்து விட்டது. நாளை முதல் இரண்டாம் வாரம். அது மட்டுமில்லாமல் குவைத் டாப் டென் பாக்ஸ் ஆபிசில் லிங்கா இரண்டாவது இடம். இது எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் கிடைக்காத பாக்கியம். (எந்திரன் விதிவிலக்கு) எந்திரம் தொரடர்ந்து 5 வாரங்களுக்கு முதலாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது குவைத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
  நன்றி!
  அப்துல் வஜீர் – குவைத்

 14. Anand kg

  I fully agree with JB,

  I am sure it is the same feed back echoed in the heart of All Rajni rasigan. But yes, the film stands just for this wonderful man called Superstar !!!

  It is all the news ( TV Channels) Lingaa crossed Rs.100 crores world wide with in 3 days !!!!

 15. Anand kg

  It is all the news ( TV Channels) Lingaa crossed Rs.100 crores world wide with in 3 days !!!!

  And I fully agree with JB,

  I am sure it is the same feed back echoed in the heart of All Rajni rasigan. But yes, the film stands just for this wonderful man called Superstar !!!

 16. prakash

  Trimming is not necessary. Lingaa nice family entertainer. Thalaivar and KSR rocks. Why cant we appreciate nice story and acting? Do we need always punch dialogs with background sound? Here and there we also need to appreciate good movies like this. It is far better than Muthu and Padaiyappa. Lingaa nee super maa…

 17. AKG

  First of all, the film should not be more than 150 minutes. recent rajni films except kochadaiyan, all are running around 3 hrs. Shankar film also running around 3 hrs. That should be reduced to keep the screen play racy.

 18. M.MARIAPPAN

  ரஜினி ரசிகர் என்று சொல்லும் J B அவர்களே , ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் . உண்மையா ரஜினி ரசிகர் யாரும் படத்தை பார்த்து இப்படி குறை சொல்லமாட்டான் . நீங்க படத்தில் குறை கண்டுபிடுக்கணும் என்று படம் பார்த்த மாதிரி தெரிகிறது . தலைவர் 65 வயதிலும் இந்த அளவுக்கு ஒரு நல்ல படம் கொடுத்து உள்ளார் .FAMILY யோடு போய் ரசிக்க கூடிய நல்ல படம் கொடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *