BREAKING NEWS
Search

அமெரிக்காவில் லிங்காவின் வசூல் சாதனை… எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது!

அமெரிக்காவில் லிங்காவின் வசூல் சாதனை… எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது!

10479955_10205359670539563_8244000875692130712_n

ஜினி நடித்த லிங்கா திரைப்படம் அமெரிக்காவில் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி இந்தப் படம் சுமார் ரூ 10 கோடியை வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதலிடத்தில் ரஜினியின் எந்திரன்தான் இன்னமும் உள்ளது. ஆனால் அந்த இடத்தை இன்னும் ஓரிரு நாட்களில் லிங்கா பிடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 118 அரங்குகளில் நடந்த பிரிமியர் ஷோக்கள் மூலம் மட்டுமே 404,566 டாலர்களைக் குவித்து, ஹாலிவுட் படமான ஹன்டர் கேமை பின்னுக்குத் தள்ளியது. பின்னர் வெள்ளியன்று நடந்த வழக்கமான ஷோக்கள் மற்றும் சனிக்கிழமை காட்சிகளில் மேலும் 8.5 லட்சம் டாலர்களைக் குவித்தது. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே 1.52 டாலர்கள் வசூலானது. ஆக மூன்று நாட்களில் 1.37 மில்லியன் டாலர்களைக் குவித்த லிங்கா, எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது அமெரிக்காவில்.

நாளை எந்திரனை மிஞ்சி முதலிடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாக படத்தை வெளியிட்டுள்ள அட்மஸ் என்டர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இந்த 2014 ம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில் வசூலில் முதலிடத்தில் லிங்காவும், அடுத்த இடத்தில் கோச்சடையானும்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




4 thoughts on “அமெரிக்காவில் லிங்காவின் வசூல் சாதனை… எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது!

  1. M.MARIAPPAN

    டியர் வினோ வணக்கம் ,நான் தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா திரையரங்கில் MIDNIGHT ஒரு மணி ரசிகர் ஷோ தலைவர் படத்தை மிகுந்த ஆரவாரத்துடன் பார்த்தேன் .படத்தை சரியாக பார்க்க முடிய வில்லை அவ்வளவு கூட்டம் .படம் மிகவும் அருமையாக இருந்தது .தலைவர் 65 வயதிலும் இளமை துடிப்புடன் பாட்டு , FIGHT என அமர்க்கலபடித்திவிட்டார் .தலைவர் செத்து பிழைத்து 4 வருடம் கழித்து நமக்காக ஒரு அருமையான படம் தந்து உள்ளார் .இதில் பஞ்ச் டயலாக் இல்லை என்று பலர் குறை சொல்லுகிறார்கள் . இது வரை வராத நல்ல கதை. இரண்டு தலைவருக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்து உள்ளார். கிளைமாக்ஸ் FIGHTAI எல்லாரும் குறை சொல்லுகிறார்கள் .HOLYWOOD படத்தில் செஞ்சா மட்டும் கை தட்டி ரசிக்கிறோம் .சில நாயிகள் இந்த படத்தை பத்தி தப்பு தப்பாக FACEBOOKILUM WAATSOPPILUM எழுதுகிறார்கள் . இதற்க்கு தாங்கள் தக்க பதில் கொடுக்கவேண்டும் .மேலும் தங்களிடம் இருந்து விமன்சனம் வரவில்லை ,இந்த வாரம் படம் எப்படி போகிறது என்று தாங்கள் ஒரு நல்ல பதிவு தரும் படி கேட்டுக்கொள்கிறேன் .வாழ்க தலைவர் லிங்காவின் சாதனை தொடரட்டும் .நன்றி

  2. Lakshmikanth K

    சார், இட் இச் NOT ஹன்டர் கேம்ஸ். இட் இச் ஹுங்கேர் கேம்ஸ்

  3. prasad kumar.N

    Pls make an article Vino for stomach burning groups who are trying to find loopholes in this movie and spreading poisonous news.

  4. M. Predeep

    தலைவர் வாழ்க… உன்னை வெல்ல எவனும் கிடையாது இவ்வுலகில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *