BREAKING NEWS
Search

லிங்கா விவகாராம்… கிழிகிறது சிங்காரவேலன்கள் முகமூடி!

லிங்கா விவகாராம்… கிழிகிறது சிங்காரவேலன்கள் முகமூடி!

10897850_887766071245642_4004512542937188075_n

லிங்கா விவகாரத்தை பக்கா அரசியலாக்கிவிட்டார்கள், அதன் விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்.

லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள்.

அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் செவழித்து பிரஸ் மீட்டுகள் நடத்தி வரும் இவர்கள் இப்போது, ரஜினி குடியிருக்கும் ஏரியாவிலிருந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோர, சில ‘லெட்டர் பேட்’ கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில்தான் லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பொதுத் தலைப்பை பயன்படுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு போஸ்டர் அடித்துள்ளனர் (பெரும்பாலான லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் இவர்களின் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

அதில்தான் இந்த குழுவின் நோக்கம், பின்னணி எல்லாமே அம்பலமாகியுள்ளது. இது லிங்கா நஷ்டஈடு கேட்கும் போராட்டம் அல்ல. மாறாக ரஜினிக்கு எதிரானது என்று பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த போஸ்டரில் ‘சினிமாவுக்குள் அரசியல் நுழையக்கூடாது என்பார்களாம்.. ஆனால் இவர்கள் மட்டும் குறிப்பிட்ட கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பார்களாம்… இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, என்று சொன்னவருக்கு ஸ்ரீரங்கத்து அரங்கநாதரே உங்களை அங்கீகரித்துவிட்டார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை…’ என்று போகிறது அந்த போஸ்டர் வாசகங்கள்.

அதாவது ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டிவிடுகிறார்களாம்!

ஆக இவையெல்லாம் தெள்ளத் தெளிவாக ரஜினியின் செல்வாக்குக்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது.

‘இவர்கள் வர்த்தகம் செய்தது வேந்தர் மூவீஸ், ஈராஸ் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுடன். ஆனால் அங்கெல்லாம் போகவில்லை. அவர்களின் முகவரி தெரியவில்லையா இவர்களுக்கு?  ரஜினியை அவமதிப்பதுதான் இவர்கள் நோக்கம். அவரது சினிமா மற்றும் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடக்க சிலர் செய்யும் சதியின் முகங்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் முன் இப்போது அம்பலப்பட்டு விட்டார்கள்’ என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

யார் இந்த சிங்கார வேலன்?

விதம் விதமாக, ரகம் ரகமாக போராட்ட நோட்டீஸ் போட்டு வரும் இந்த குழுவின் தலைவராக செயல்படும் சிங்காரவேலனின் பின்னணி கதைகள் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இன்று ரஜினிக்கு எதிராக, மக்களின் முதல்வருக்கு நோட்டீஸ் அடித்த இதே சிங்காரவேலன், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மக்கள் முதல்வரை கடுமையாகச் சாடி அளித்த பழைய பேட்டிகளை எடுத்து வெளியிட்டுள்ளன மீடியாக்கள்.

சிங்கார வேலன் பழைய கதை

சிங்கார வேலன் பழைய கதை

குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அளித்த பேட்டியில், “தளபதியே அடுத்த முதல்வர். உலகமெங்கும் குடும்ப ஆதிக்கம் ஓங்கியிருக்கும் போது திமுகவை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்? அம்மையார் ஆட்சியில் அவருக்கு எவ்வித ரத்த பந்தங்களும் இல்லாதவர்கள் மண்டலவாரியாக ஆளுமை செலுத்தினார்களே, அதற்கு என்ன பெயர் என்று அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா குறித்து ஏக வசனத்தில் பேசியிருக்கிறார்.

அன்று முக ஸ்டாலினுக்கு ஜால்ரா.. இன்று 'மக்கள் முதல்வருக்கு'.. உங்களை அவருக்கு தெரியும் கண்ணனுங்களா!

அன்று முக ஸ்டாலினுக்கு ஜால்ரா.. இன்று ‘மக்கள் முதல்வருக்கு’.. உங்களை அவருக்கு தெரியும் கண்ணனுங்களா!

அது மட்டுமல்ல, இந்த சிங்கார வேலன் முன்பு திமுக சார்பில் போட்டியிட முயன்று, அங்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றவர். அந்த தேர்தலில் தன்னிடம் மொத்தமே ரூ 3 லட்சம்தான் ரொக்க, சொத்து மதிப்பு என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் லிங்காவை ரூ 8 கோடிக்கு வாங்கியதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதுபற்றியும் பல கேள்விகளை மீடியா எழுப்பி வருகிறது. வருமான வரித்துறைக்கும் புகார்கள் அனுப்பி வருகின்றனர் சிங்காரவேலனுக்கு எதிர்த்தரப்பினர்.

சிங்கார வேலன் மீதுள்ள வழக்குகள், அவர் மீது சென்னை மேயர் சைதை துரைசாமி அளித்த தொடர்ந்த வழக்கு, புகார்கள், எஸ் ஆர் எம் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருடனான மோதல் மற்றும் சமரச கதைகள் போன்றவையும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தன்னைப் பற்றி கீழ்த்தரமான விமர்சனத்தை தானே நடத்திய பத்திரிகையில் வெளியிட்ட இந்த சிங்கார வேலனுக்கு எப்படி லிங்கா விநியோக உரிமையை பாரிவேந்தர் கொடுத்தார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த சதியில் பாரிவேந்தரின் பங்கும் இருக்கிறதா என்ற கேள்வி பலரையும் புருவம் உயர வைத்துள்ளது.

இப்படி லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் தனக்கு எதிராக நடத்தப்படும் விஷயங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தெரிந்திருக்கிறதா… அவர் நிலைப்பாடு என்ன?

அதுகுறித்து அடுத்த செய்தியில் பார்க்கலாம்!

-என்வழி

Courtesy: சிங்காரவேலன் படம் – செய்திகள்.காம்
37 thoughts on “லிங்கா விவகாராம்… கிழிகிறது சிங்காரவேலன்கள் முகமூடி!

 1. arulnithyaj

  அண்ணா உண்மை நிச்சயம் வெல்லும். உண்மையின் முன் அந்த ஆங்கில ஆட்சியே மண்டியிட்ட போது இவர்கள் தலைவருக்கு என்ன செய்து விட முடியும் தலைவர் வென்று விட்டார் இந்த தகவல்களை தந்த உங்களுக்கும் “செய்திகள்” தளத்துக்கும் கோடான கோடி நன்றி

 2. Mahesh

  லிங்கா விவகாரத்தில் களத்தில் இறங்கி போராட வேண்டும் . இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் ரசிகர்கள் போராடாமல் இருப்பது சிங்காரவேலன் போன்ற நாய்களுக்கு ரஜினி மீதான பயம் போய்விட்டது . நானும் என் நண்பர்களும் போராட தயார் . அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் . என்ன செய்யலாம் . தயவு செய்து வலைத்தளத்தில் மட்டும் பேசிவிட்டு போகாமல் களத்தில் இறங்கி போராட வேண்டும் . நாம் பற்ற வைத்துவிட்டால் போதும் ரசிகர்கள் பற்றிகொள்வார்கள். தொடக்கம்தான் அவசியம்.

  கீழே இருப்பது ஒரு பத்திரிக்கை கட்டுரை

  இன்னொரு கோபம் ரஜினி ரசிகர்கள் மீது. ஆம் தங்கள் அபிமான நடிகரைக் கொச்சைப்படுத்தும் இவர்களை எதிர்த்து எந்த ஒரு ரஜினி மன்றமும் போராட்டம் நடத்தவில்லை. குறைந்தபட்சம் கண்டண அறிக்கைகள் கூட வரவில்லை. 1996ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002 ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011ல் தங்கள் தலைவனுக்காக கோவில் கோவிலாக அலைந்தவர்கள் திராணி இவ்வளவுதானா?? எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால் தான் அந்தக் கூட்டம் இப்படி ஆட்டம் போடுகிறது. இல்லை மேலிட உத்தரவின் பேரில் அமைதி காக்கின்றனரா ?? எனக்குப் புரியவில்லை. தங்களின் பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான், செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.

 3. saranya

  vino sir, what r u going to do for this issue sir. avanga anga pichai edukka varaangala. apdi avanga varaangana adhuku munnadi naama anga irukkanum. namma kootatha paathu avanunga therichi odanum. ivana epdi adakarathune theriyalaye. ipdiye net la news pottitiruntha velaiku aagathu. lingaa padam unmayileye nashtama illaya nu namakku thaan theriyum. aena kaasu koduthu padatha paathathu naama thaan. rajini rasigargal saarba aen oru press meet vaikka koodathu. nama kitta thaan ellaa aadharamum iruke

 4. saranya

  kandippa paarivendharoda pangum irukku, s. madhan oda pangum iruku. padatha ivanunga vaangum pothe naan nenaichen ipdi aagumnu

 5. Suresh R Athreyaa

  மிக்க நன்றி. தங்களின் ரிப்போர்ட் அனைத்தும் மிக சிறப்பாகவும் உண்மையாகவும் உள்ளது.

 6. alexander

  ரஜினி சார் (தலைவர்) அரசியலுக்கு வரவேண்டும்.
  மக்களுக்கு நல்லது செய்யவேண்டும்.

 7. rajkumar

  During the election all katchium ready to told rajini voice for us. Now they Wat doing. 1.kalaigar 2.viko 3.algorithm 4.gk vasan 5. Tamilisai 6.karmic chidambaram

 8. ganesh

  sir,
  The Above write up should be made to be published in the print media of morning and evening editions, Tody malai malar has started writing .J.V.has written his imagination. Hindu should give only the real news. instead of sensitising the matter. The Intellectuals rely on hindu News. Still we must ask god about this.

 9. Manikandan S

  மார்ச் 1, 2015 அன்று அணி திரள்வோம் தலைவருக்கு ஆதரவாக….

 10. baba

  Dear Vino,

  In today JV Thiruppur subramaniam also talked negative about Linga movie collections, I guess that stupid Vikatan purposely put negative news and they left positive news which was told by him.

  Is it possible for you to do interview with him and bring truth to this world.

  Thanks lot.

 11. anbudan ravi

  லிங்கா காப்பீடு செய்யப்பட்டிருப்பதாக முன்பு செய்திகள் வந்தது….ஒரு வேலை வேந்தர் மூவீஸ் மதனும் இந்த கருங்காலிகளும் சேர்ந்து காப்பீடு பெறுவதற்காக சதி செய்கிறார்களா? என்ற எண்ணத்தோன்றுகிறது. தயாரிப்பாளர் சார்பாக ஒரு அறிக்கையும் வரவில்லை….அமைதியாக இருங்கள் என்பது தலைவரின் உத்தரவா…..இவ்வளவு அமைதி எதற்காக?

  இந்த அசிங்காரலன் ஒரு சந்தர்ப்பவாதி சுயநலவாதி என்பதை இப்பொழுது அரசியல்வியாதிகள் உணர்ந்து இவனைப்போன்ற கயவனுக்கு ஆதரவு அளிக்காமல் இருப்பது நல்லது.

  இது தலைவன் புகழை அழிப்பதற்கான செயல் என்று தெரிந்து ரசிகர்கள் வெகுண்டு எழ ஆரம்பித்து விட்டார்கள்….இனி அவர்களை தடுப்பது சிரமம்.

  அன்புடன் ரவி.

 12. saranya

  “Mistakes1.baba loss return 2.arasiyaluku varen. Varen solli solli padatha oda visa muyarchi 3.ippavum padam nadikkirathu.” wat is ur problem mr rajkumar. arasiyaluku varen nu solli avar entha padatha oda vachaar nu konjam solreengala. neenga ellam enna avvalavu muttal ah. edhavathu pesanumnu pesarathu. ippavum padam nadikkiraaraam. aen amitabh bachchan nadikkala. neenga thaana ya adutha padam eppa adutha padam eppa nu usura vaangureenga. dhanush solraaru 31 vayasuleye en fitness la difference theriyuthu nu. aana thalaivar 65 vayasula udambu sari illama irunthu vanthu engalukkaga padam nadichi kodutha adhu ungalukku kevalam ila. pesarathuku munnadi yosinga naama enna pesaromnu. after that u cant get back ur words. rajini padam illama ungalala venam irukka mudiyum engalaala mudiyathu. rajini padame illama iruntha appa theriyum. intha maathiri kulla nari kootatha mudhala ozhikanum

 13. Rajakumar R I

  @rajkumar
  // Mistakes1.baba loss return 2.arasiyaluku varen. Varen solli solli padatha oda visa muyarchi 3.ippavum padam nadikkirathu.//
  Ungalukku evlo panam koduthanga ipti post pannurathukku ?

 14. bahrainbaba

  தலைவர் நினைப்பது போல்.. இவர்கள் கத்தி கத்தி பின்பு அடங்க போவது இல்லை.. ஏன் என்றால் இவர்கள் நோக்கம் வேறு.. ரஜினி என்பவருக்கு ஆதரவோ ரசிகர்களோ இல்லை.. அவர் ஒரு சக்தியே இல்லை என்று மக்கள் மன்றத்தில் வைப்பதற்கான ஒரு கேவலமான செயலை முனைப்பெடுத்து செய்து கொண்டிருக்கிறார்கள்..
  கொட்டினாதான் தேள்.. அப்டினாதான் அது மேல பயம் வரும்.. அதா சீண்ட யோசிப்போம்..
  எல்லா நேரமும் அமைதி உதவாது.. அதுவும் இந்த கலியுக காலத்தில்.
  தப்போ சரியோ.. எதிரி என்று ஒருவன் உருவெடுத்தால்…. நாம் களத்தில் இறங்கதான் வேண்டும்.. நம் பலத்தை ஒருவனிடம் காட்டினால்.. அடுத்து வரிசையில் இருப்பவர்கள்.. பின் வாங்குவர்.. இந்த சிங்காரவேலன் மட்டும் அல்ல இவன் வரிசையில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. இது வெறும் முன்னோட்டம் மட்டுமே..
  இது தலைவருக்கு தெரியாததில்லை.. இனியும் தலைவர் முடிவெடுக்க யோசித்தால்.. நம்மை போன்ற ரசிகர்கள்தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவர்.

  நெல்லை ரசிகர் கார்த்திகேயனுக்கு கோடான கோடி நன்றி..

 15. Raj

  RAJINIKANTH Arasiyalu kum vara vaendaam, Ene Nadikavum Vaendaam. Na arasiyalukum ene nadika maataen endru oru press meet vachi solli vitta ok. Rajini Rasikargal ellaam pazasa poi vittathu. Munbu eruntha rasikarkal eppo erukura thu 10% thaan.

 16. arulnithyaj

  ராஜ் வெண்ணைக்கு பிறந்த விளக்கண்ணை உன் soo….மூடிட்டு போடா …எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு நீயல்லாம் பகல்ல …பிறந்தவனாதான் இருப்படா ..இங்கவந்து உன்னை யாருடா கமெண்ட் போடசொன்னது …

 17. BP

  in current condition with dirty politics, bribe, money for vote – do you think SS can come to politics and be successful ? votes are today bought by money…

  why to come to politics ? do you think people who vote for money deserve kamraj kind of leader? i dont think so this state is ready for non bribe leaders. its all political game. when fake distributors couldn’t be stopped by anyone be it fans or media… i doubt the success. again one need be in politics to serve this state or country. you can do a lot – take a problem to fix and help the need.

  like it or not – though i am not surya fan – his seed of education for need – has come out well. there are lot of people getting benefited. i don’t with what intention its started.. as long as someone is getting benefited – that’s amazing. we have to see something foundational name for our thalaivar. Million dollar question?

 18. Rajini Fan

  தலைவர் சொன்னா பொங்கி எழுவோம் ன்னு சொல்லிகிட்டே இருப்பவன் செயல் வீரனா? அது வெறும் வெத்து வெட்டு பேசும் பேச்சு. ரஜினி க்கு எந்த அளவு மாஸ் இருக்குன்னு காண்பிக்க வேண்டும். இதை தலைவரே ஒரு போதும் வெளிபடையாக சொல்ல முடியாது. சில விஷயங்களை நாம் தான் தானாக செய்ய வேண்டும்.. தான் அடாவிடாலும் தன் தசை ஆடுவது போல்.

 19. Rajini Fan

  இவ்வளவு ஆகியும் ரஜினி ரசிகர்கள் சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பது ஏன்? உங்களுக்கு தெரியாது டிக்கெட் எவ்வளுக்கு விற்றார்கள் என்று? ஒரு சிங்கத்தை பன்றிகளின் கூட்டம் கடித்து குதறி ஓட செய்யும் செயலை எப்படி உங்களால் வேடிக்கை பார்த்து கொண்டு இறுக்க முடிகிறது? ரஜினி மூலம் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற போதுதான் செயல் பட போகிறிர்களா? SHAME ON YOU.

 20. Rajini Fan

  விஜய், அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் க்கு இருக்கிற வேகம் ரஜினி ரசிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? எல்லோருக்கும் வயசாகி போச்சா? இந்த லட்சணத்தில் போராட்டம் செய்யும் சில Lingaa Distributor கல் ரஜினி ரசிகர்களாம்!!! என்ன கொடுமை சார் இது!

 21. Rajini Fan

  ரஜினி அரசியலுக்கு வர தயக்கம் காட்டுவது இந்த மாதிரி வேடிக்கை பார்க்கும் உதவாக்கரை ரசிகர்களை நம்பாமல் இருப்பதுதான். இதுவே அரசியலுக்குள் வந்துவிட்டால் இன்னும் சேற்றை வாரி இறைப்பார்கள். அப்போதும் இந்த ரசிகர் மன்றம் வேடிக்கை பார்த்துகொண்டு தோல்வி அடைய செய்யும். YOU ARE AS GOOD AS YOUR TEAM. Rajini doesn’t have a smart, sincere and honest team.So it is better he stays away from politics. One man army can work in cinema but not in real life. Stop dreaming… wake up and ACT.

 22. Rajini Fan

  இன்றைய சூழலுக்கு தமிழக மக்களின் என்னத்துக்கு ஒரு நல்லவன் தலைவனாக இருக்க முடியாது. Tamil people have accepted corruption as a way of life.. they are okay if their leaders are corrupt as long as they get their share during election times. Srirangam election result is a good example to refect their mindset. People like Traffic Ramasamy couldn’t win! That too in a consitutency like Srirangam where brahim domination is high.தலைவர் சொன்ன மாதிரி இனி கடவுளே வந்தாலும் தமிழ்நாடு வை காப்பற்ற முடியாது. AMEN.

 23. Rajini Fan

  BTW – Don’t abuse me for writing so hard.. I have just shared my frustration with this whole episode of Lingaa Loss Distributors and our inaction. I am also one of rajini’s admirers and a well wisher.

 24. Rajini Fan

  ரஜினி தமிழக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமானால் சூர்யா போல் ஒரு Foundation தொடங்கி மக்களுக்கு சேவை செய்யலாம். அரசியல் மட்டும்தான் சேவை செய்ய வழியா?

 25. Rajini Fan

  ஏன் எல்லோரும் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்து பதவிக்கு வந்தபிறகு மக்களை ஆழ வேண்டும் என்று என்னவேண்டும்? அதை விட சேவை மட்டும் செய்ய வேண்டும் என்று எண்ணலாமே? யார் வேண்டுமானும் சேவை செய்யலாம் ஆனால் எவர் வேண்டுமாலும் ஆள முடியாது.அதற்கென்று சில சாமர்த்தியங்கள் வேண்டும்.

 26. Rajini Fan

  என்னை பொறுத்தவரை ரஜினிக்கு நல்ல எண்ணம் உண்டு… ஆனால் அரசியல் தில்லு முல்லுகள் செய்வதில் நாட்டம் கிடையாது. அவரை ஏன் நாம் தொல்லை செய்ய வேண்டும்?

 27. kaka

  விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்” என்றார் சிங்காரவேலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *