BREAKING NEWS
Search

‘சிங்காரவேலன் சொல்வது அனைத்தும் பொய்.. வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!’

‘சிங்காரவேலன் சொல்வது அனைத்தும் பொய்.. வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!’

OLYMPUS DIGITAL CAMERA

சிங்காரவேலன் என்ற மோசடிப் பேர்வழியை ஆரம்பத்தில் மறைமுகமாக உற்சாகப்படுத்திய அத்தனை பேரும் இப்போது, அவர் எத்தனை ஆபத்தானவர் என்பதை உணர்ந்து, அவரை அம்பலப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.

இந்த இருவருமே ஆரம்பத்தில், சிங்கார வேலன் ஏதோ ஆர்வக் கோளாறில் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால் சிங்கார வேலன் எப்பேர்ப்பட்ட மோசடிப் பேர்வழி, கையில் ஒத்தை ரூபாய் கூட இல்லாமல், ரஜினி படத்தையே ‘ஆட்டையைப் போடப் பார்க்கும்’ கேடி என்பதை கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் முக்கியப் புள்ளிகள் அனைவருமே தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட ரஜினி தரப்பிலிருந்து பனிரெண்டரைகோடி கொடுக்கப்பட்டதென்றும் அதனால் அந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் சொல்லப்பட்டது. அது குறித்த ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்திடப்பட்டு, அதை தாணுவிடமிருந்து பெறுவது போல போஸ் கொடுத்த இதே சிங்காரவேலன்தான் இப்போது ரஜினி யாருக்குப் படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்.

மே 26 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிங்கார வேலன் அன்ட் கோ, ‘சொன்னபடி பணம் வரவில்லை. ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம்தான் கொடுத்திருக்கிறார்கள். மீதி ஆறு கோடியே ஒரு லட்சம் இதுவரை வந்து சேரவில்லை’ என்று சொன்னார்கள்.

அதோடு பனிரெண்டரை கோடி என்பதை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே, அடுத்து ரஜினி வேந்தர் மூவிஸூக்கு ஒருபடம் நடித்துத் தருவார் என்றும் அந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இணை தயாரிப்பாளர்களாகி விடுங்கள்.
அந்தப் படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்கும் என்று ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணி வாய் மொழியாகச் சொன்னதாகவும் தெரிவித்தார்கள்.

இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இது கடைந்தெடுத்த பொய் என்றார்.

பனிரெண்டரை கோடியில் ஆறரைக் கோடியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே?

எங்களுக்கு ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து ஆறு கோடிதான் வந்தது. அதைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். மீதிப்பணம் வந்ததும் அதையும் பிரித்துக் கொடுத்துவிடுவோம். அவர் மகள் கல்யாணம் முடிந்ததும் இந்த செட்டில்மென்ட் முடிந்துவிடும்.

ராக்லைன் வெங்கடேஷ் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டார் என்றும் நீங்களும் தாணுவும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தராமல் இருக்கிறீர்கள் என்று சிங்காரவேலன் சொல்கிறாரே?

அவர் சொல்வது அனைத்துமே கடைந்தெடுத்த பொய்கள். எங்களுக்கு வந்தது ஆறு கோடிதான் அதைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டுமானால் ராக்லைன் வெங்கடேஷிடமே கேட்டுக் கொள்ளலாம்.

வேந்தர் மூவிஸூக்கு ரஜினி ஒருபடம் நடித்துத் தருவார் என்று நீங்கள் வாய்மொழி உத்தரவாதம் கொடுத்ததாகச் சொல்லுகிறார்களே?

ரஜினி சாரும் அப்படிச் சொல்லவில்லை, நானும் அப்படி ஒரு வாக்குறுதி அவர்களிடம் கொடுக்கவில்லை, மொத்தமாகப் பொய் சொல்லுகிறார்கள். ரஜினி சார் என்றைக்குமே இப்படி வாக்குறுதிகள் தந்ததில்லை. வெறும் பப்ளிசிட்டிக்காக திரும்பத் திரும்ப இப்படி பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிங்கார வேலன். வந்த வரை லாரம் என்று அவருடன் இருக்கும் சிலரும் அமைதியாக அவருக்கு உடன்படுகிறார்கள். மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருவதுதான் வருத்தமாக உள்ளது.

-என்வழி
10 thoughts on “‘சிங்காரவேலன் சொல்வது அனைத்தும் பொய்.. வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!’

 1. தமிழ்ச்செல்வன்

  எந்த கொம்பனும் என் இறைவன் என் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நிர்பந்தம் கொடுக்க முடியாது. இந்த மோசடி பேர்வழி அசிங்காரவேலன் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

 2. ELUMALAI

  அசிங்கப்பட்டாண்டா இந்த அசின்காரவேலன். நாயா செருப்பால அடித்து துரத்த வேண்டும். சிங்காரவேலன் ஒழிக. ஏமாற்று பேர்வழி அசிங்கார வேலன் ஒழிக.

 3. ELUMALAI

  அசிங்கப்பட்டாண்டா இந்த அசின்காரவேலன். நாயா செருப்பால அடித்து துரத்த வேண்டும். சிங்காரவேலன் ஒழிக. ஏமாற்று பேர்வழி அசிங்கார வேலன் ஒழிக. சினிமா சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இவனை துரத்தி அடிக்க வேண்டும்.

 4. kumaran

  சிங்காரவேலன் செருப்படி கேக்குறான்

 5. Mathi

  தலைவர் ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அற்ப பயல்களுக்கு சுளுக்கு எடுப்போம். எங்கள் இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வம்புக்கு இழுத்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தெய்வத்தின் கட்டளைக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்.

 6. Rajini Sridhar

  எனது இறைவன் எனது கடவுள் எனது தெய்வம்
  எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் பாட்டாளிகளின் தோழன் உழைப்பாளிகளின் தொண்டன் ரஜினி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு வாழ வேண்டுகிறேன்.

 7. வினயரசு

  சிங்காரவேலன் குழுவினருக்கு விநியோக உரிமை கொடுத்தால் அவ்வளவு தான் – கொதிக்கும் திரையுலகம்!!! லிங்கா, கங்காரு, புறம்போக்கு என்ற பொதுவுடமை என்று விநியோக உரிமை பெறும் எல்லாத் திரைப்படங்களிலும் நஷ்டக் கணக்கு காண்பித்து பிரச்னை கிளப்பி வருகிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர்.

  “எல்லா வியாபாரங்களிலும் லாப நஷ்டம் சகஜம். திரைத்துறையைப் பொறுத்தவரையில் லாபம் எவ்வளவு அதிகமோ, அவ்வளவு நஷ்டமும் இருக்கும். காலம் காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டம் வரும் போதெல்லாம் சுமுகமாகப் பேசித் தீர்த்து வரும்நிலையில், சிங்காரவேலன் குழுவினர் போட்ட காசுக்கு ஒரே வாரத்தில் பல மடங்கு லாபத்தை எதிர்பார்த்து, அது வந்தாலும், வராவிட்டாலும் நஷ்டக் கணக்கைக் காண்பித்து பிரச்னை செய்து வருகிறார்கள். லேட்டஸ்டாக ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் என்று நடத்தப்பட்டது. சமீப காலமாக திரைப்படங்கள் தயாரித்து வெளிவருவதே சிரமமான சூழலில் இந்த மாதிரியான ‘சக்சஸ் மீட்’டுகள் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை பார்க்க மக்களை மேலும் கவர்ந்திழுக்கும். புறம்போக்கு என்ற பொதுவுடமை ஊடகங்கள் மத்தியில் பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படத்தின் சில ஏரியாக்களின் விநியோகஸ்தர்களான சிங்காரவேலன் குழுவினர் ‘எங்களுக்கு நஷ்டம். இதில் UTV தயாரிப்பு நிறுவனம் சக்சஸ் மீட் நடத்தியது சரியல்ல” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, இவர்களின் தொடர் நடவடிக்கைகள் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு திட்டத்துடன் திரைத்துறையில் நுழைந்து பிரச்னைகளைக் கிளப்பி திரைத்துறையைக் கைப்பற்றி யாருக்கோ ஜால்ரா அடிக்கும் நடவடிக்கைகள் இது. இனிமேலும் இந்தக் குழுவினருக்கு யாரும் விநியோக உரிமை கொடுத்தால் என்னவாகும் என்பதை வரிசையாக ஆராய்ந்து பார்ப்பது நல்லது” என்கிறார்கள் திரைத்துறையினர்.

 8. ஸ்வேதா ரவி

  நான் வணங்கும் தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.
  தலைவா உங்கள் வருகை தான் எங்களுக்கு உயிர் துடிப்பு.
  நீங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 9. manikandan

  இவ்ளோ நடந்தும் அந்த நாயை ஒன்னும் பண்ணலையே யாரும் அதுதான் ரொம்பவும் வருத்தமாவும் கோவமாவும் இருக்கு.தலைவர் வழி நடக்கலாம் ஆனா தலைவர டென்சன் பண்ற அவன எதாவது பண்ணனும்

 10. S Venkatesan, Nigeria

  மோடியே என் நண்பர் ரஜினி என்கிறார். ஒரு போன் போட்டால், சிங்காரவேலன் பற்றிய மொத்த விவரமும் எடுக்கப்பட்டு வைக்க வேண்டிய இடத்தில அவனை வைக்கலாம்.

  இல்லை என்றால் அவரின் புகழை கெடுத்து மன உளைச்சல் கொடுத்ததற்காக 500 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு போடணும். கோர்ட்டில் வந்து பம்முவான் அந்த நாய்.

  தலைவரிடம் எனக்கு பிடிக்காத விழயம் இதுதான். நல்லவராக இருந்தால் போதுமா? சிங்காரவேலன் கொ@$#ய நசுக்கி கதற விடனும். அப்போதான் என் கோவம் அடங்கும். ரசிகர்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *