BREAKING NEWS
Search

இது தனியாள் செஞ்சதில்ல.. கூட்டு சதி! – பகுதி 1

இது தனியாள் செஞ்சதில்ல.. கூட்டு சதி! – பகுதி 1

lingaa-6

லிங்காவில் தன் சொத்தையெல்லாம் இழந்த நிலையில் தலைவர் ஒரு வசனம் சொல்வார்.. ‘இது தனியாள் செஞ்சதில்லை… கூட்டு சதி’ என்பார்.

படத்தில் அவருக்கு எதிராக மட்டுமல்ல.. அந்தப் படத்துக்கு எதிராகவும் நடந்தது இந்த கூட்டு சதிதான். நடத்தியவர்கள் இதே சினிமாக்காரர்கள்தான்… சினிமா தயவு ரொம்பவே தேவைப்படும் மீடியாக்காரர்கள்.

லிங்கா நல்ல படமா..? ஆம். மிக நல்ல படம். வழக்கமாக ரஜினியின் படங்களை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் கூட இந்தப் படத்தைப் பாராட்டியிருந்தனர். குழந்தைகளோடு குடும்பமாகப் போய் பார்க்கத் தகுந்த படம் என்ற வாய் வழி தகவல்கள் பரவின.

அப்போதுதான் அந்த விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது ஒரு கும்பல். தியேட்டர்களில் நல்ல கூட்டத்துடன் லிங்கா படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே ‘படம் சரியில்ல.. கூட்டம் குறைஞ்சிடுச்சி… ரஜினி ரசிகர்களுக்கு வயசாகிடுச்சி.. ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா’ என்றெல்லாம் கேட்டனர்.

படம் ஓட வேண்டும், நல்ல வசூல் வரவேண்டும் என்று நினைக்கும் யாரும் இப்படியெல்லாம் கேள்வி கேட்பார்களா? ஆனால் எதிர்மறைப் பிரச்சாரம் செய்து படத்தை தூக்குவதிலேயே குறியாக இருந்தனர்.

உண்மையில் லிங்கா வசூல் எப்படி?

இந்தப் படத்தைப் போல பெரும் வசூல் குவித்த படம் எதுவும் சமீப காலத்தில் இல்லை என்பதே உண்மை. ஆனால்,  குவிந்த வசூலை மோசடி செய்து மறைத்துள்ளனர் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும். இதுதான் அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை.

லிங்கா படம் திரையிட்ட அத்தனை இடங்களிலும் சிறப்பான வசூலைப் பெற்றது. பாராட்டுக்களைக் குவித்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் திரையிட்டவர்களே படத்தைக் கொன்ற கொடுமை நடந்தது. படத்துக்கு எதிரான அத்தனை வேலைகளையும் செய்தவர்கள் சில விநியோகஸ்தர்களே.

லிங்காவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் முதல் நாள் முதல் காட்சி நடந்தது. சில இடங்களில் ரசிகர் மன்றத்தினர் காட்சியை மொத்தமாக எடுத்தனர். அவர்களுக்கே தியேட்டர்காரர்கள் ஒரு டிக்கெட் ரூ 400 முதல் 500 என்றுதான் விலை வைத்து விற்றனர்.

அந்த டிக்கெட்டை சராசரியாக ரூ 500 கொடுத்து வாங்கினர் ரசிகர்கள். அந்த முதல் நாள் முதல் காட்சிக்கு சென்னையில் எந்த அரங்கிலும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிய கூட்டம் கொஞ்சமல்ல. சென்னையில் சில அரங்குகளில் மட்டும் முதல் நாள் 8 காட்சிகள். அடுத்த இரு தினங்களில் ஆறு காட்சிகள். மற்ற ஊர்களில் முதல் மூன்று நாட்கள் தினசரி 6 காட்சிகள். சில இடங்களில் 5 காட்சிகள். இந்த மூன்று நாட்களும் லிங்கா திரையிட்ட அறுநூற்றுச் சொச்சம் அரங்குகளும் நிரம்பி வழிந்தன.

இந்த மூன்று தினங்களிலேயே இவர்கள் மொத்தப் பணத்தையும் எடுத்துவிட்டனர். காரணம் வைத்த டிக்கெட் கட்டணம் அப்படி.

BL13_BP_3LINGA_2242009f

ஆனால் இன்று கூட்டம் வரவில்லை, நஷ்டம்… என்றெல்லாம் பொய்க் கணக்கு காட்டிக் கொண்டுள்ளனர்.

சரி, இவர்கள் டிசிஆர் என்று ஒரு பொய்யான தின வசூல் அறிக்கை தருகிறார்கள் அல்லவா.. அதை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதை, மூன்று திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஒருவர் சொன்னது:

“என் கட்டுப்பாட்டில் மூன்று அரங்குகள் உள்ளன. மூன்று தேனி மாவட்டத்தில் உள்ளன. தலா 800 இருக்கைகள் கொண்டவை. மூன்றிலுமே லிங்கா படத்தைத் திரையிட்டேன். நல்ல கூட்டம். முதல் மூன்று நாட்கள் அரங்குகள் நிரம்பிவிட்டன. முதல் நாள் டிக்கெட் ரூ 250-ம், அடுத்த இரு நாட்களுக்கு ரூ 200ம் வைத்து விற்றோம்.

முழுமையான வரிவிலக்கு பெற்ற படம் என்பதால், வணிக வரித்துறை சோதனை எதுவும் நடக்கவில்லை.

அதனால் டிசிஆரில் காட்சியொன்றுக்கு 100 முதல் 170 பேர் வரை வந்ததாகத்தான் கணக்கு காட்டினேன். அதே போல டிக்கெட் விலை, சி சென்டர்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட ரூ 10. 20 30.. என்றுதான் காட்டினேன்.

இந்தக் கணக்குப்படி பார்த்தால், லிங்கா நஷ்டம்தான்”, என்றார்.

ஒரு சதவீதம் கூட கூட்டாமல், குறைக்காமல் அந்த தியேட்டர்காரர் சொன்னதைத்தான் இங்கே குறிப்பிட்டுள்ளேன். இப்போது நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.. லிங்கா லாபமா நஷ்டமா என்று.

தமிழகத்தில் சென்னை, கோவையில் சில மால்கள் மற்றும் அரங்குகள், பிற நகரங்களில் ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி கொண்ட சில அரங்குகளில் மட்டும்தான் இந்த தில்லு முல்லு நடக்கவில்லை.

hqdefault

‘பிச்சைக்கார’ விநியோகஸ்தர்களே.. இவங்ககிட்ட வாங்கின காசெல்லாம் எங்கே?

மற்றபடி, தமிழகம் முழுக்க இந்த மோசடி வசூல் கணக்குகள்தான் காட்டப்பட்டன. திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தரப்பட்ட கணக்கும் இதுதான். அவரே ஏழு தியேட்டர்களை நடத்துபவர். அனைத்திலும் லிங்காவைத் திரையிட்டு வசூல் பார்த்தவர். அவருக்குத் தெரியாதா என்ன வசூல் ஆகியிருக்கும் என்று… அதனால்தான் போனால் போகட்டும் என்று பத்து சதவீதத்தை நஷ்ட ஈடாகத் தரச் சொன்னார். ஆனால் அதை ஏற்க மறுத்து மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்.

லிங்கா வசூலித்தது என்ன? தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம்? எவ்வளவு நஷ்டம்? என்றெல்லாம் ஒரு கள்ளக் கணக்கை சில விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் பத்திரிகையாளர்களிடம் இன்று சனிக்கிழமை கொடுத்துள்ளனர்.

அதில் தமிழகத்தில், சென்னை தவிர்த்து, மொத்தமே 40 லட்சம் பேர்தான் லிங்காவைப் பார்த்தார்கள் என்றும், அதன் மூலம் ரூ 27 கோடிதான் வசூலானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் எத்தனை பெரிய அயோக்கியர்கள்.. இவர்கள் கொடுத்திருப்பது எத்தனை பெரிய மோசடியான விவரம், இது எத்தனை கடைந்தெடுத்த, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதை விளக்க வேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்ட கணக்கு அது.

லிங்கா பிரச்சினையின் ஆரம்பத்திலிருந்தே, இது ஒரு பெரும் மோசடி, தலைவர் ரஜினிக்கு எதிரான கூட்டு சதி என்பதைச் சொல்லி வருகிறோம்.

எதற்காக இப்படி ஒரு சதி?

விரிவாக அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

வினோ
-என்வழி
30 thoughts on “இது தனியாள் செஞ்சதில்ல.. கூட்டு சதி! – பகுதி 1

 1. rajiniramachandran

  சூப்பர்,அருமையான பதிவு,இது அனைவரும் அறிந்த உண்மை.நன்றி கலந்த பாராட்டுக்கள்

 2. Rishi

  I agree with vino. The people of tamilnadu don’t deserve a leader like thalaivar. No ethics, no appreciation, no respect for humanity, no satisfaction, no gratitude. As a fan I don’t want thalaivar to dedicate rest of his life to serve these shameless ethic less people. Instead fans like me willing to join his spiritual peace seeking movement. leave us alone. We are hurt.

  Rishi

 3. arulnithyaj

  அண்ணா மனசே சரி இல்லைன்னா இவ்வளுவு கேவலமா நடக்குறாங்கன்ன தலைவர் அரசியலுக்கு, அடுத்து சினிமா எடுக்க கூடாதுன்னு தான் பண்ணுறாங்க இது நிச்சயமா தலைவருக்கு எதிரான எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு சதி அண்ணா. தலைவர் ரசிகர் எல்லோரும் பிரிந்து கிடக்கிறோம் அண்ணா, எல்லோரும் ஒன்றாக சேர்ந்து செய்ய தலைவர் தான் உத்திரவு கொடுக்கணும் ..

 4. baba

  டியர் வினோ,

  தயவு செய்து அந்த ஓநாய் கூட்டங்களின் முகத்திரையை கிழிக்க உதவுங்கள்…முதலில் அந்த தெருபொறுக்கி சிங்கரவேலனின் பின்புலம் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகை செய்யுங்கள்…நான் படித்த வகையில் அவன் ஒரு புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் நிறைய பேரை மிரட்டி பணம் பார்க்கும் ஒரு கேடு கேட்ட நாய் என்று தகவல்…

  தலைவரின் வெறிகொண்ட பக்தன்

  கணேசன்

 5. srikanth1974

  பிச்சக்காரன் பிச்சைதான் எடுப்பான்.

 6. R O S H A N

  Daily kadavul kitta vendittu irukken, seekiram intha prechana sumugama mudinchu Thalaivar nimmathiya irukkanum nu…….intha news padichutu, ratham kothikkuthu ji…..vida maatanunga pola….enna oru vayitherichal pudicha eena piravinga, antha nalla manushana ippadi paadu paduthuraanuga…..kadavul irukkaru, seekiram ithukku oru mudivu erpadum…..

 7. V. SURESH

  நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் உண்மை. ஆனால் ஹிந்து பத்திரிகை தவறான் தகல்வல்கள் தருவதில் குறியாக உள்ளனர். சினிமா துறையில் யாருமே தைரியமான ஆம்பளைங்க இல்லை என்றுதான் தோன்றுகிறது. ராதா ரவி அவர்களை தவிர. இன்று லிங்காவிற்கு நடப்பவை நாளை வேறு படத்திற்கு நடக்கும். ஐ மற்றும் என்னை அறிந்தால் படங்களை சென்னை புறநகர் பகுதிகளில் நான் பார்த்தேன் டிக்கெட் கட்டன்னம் குறிபடவே இல்லை. நிலைமை இப்படி இருக்க இவர்கள் எப்படி கணக்கு காட்டுவார்கள் இந்த ஒரு சின்ன விஷயத்தை ஏன் யாருமே கவனிக்காமல் உள்ளனர்.இது தொடர்ந்தால் இவர்களே மாட்டி கொள்வார்கள்.வினோ அவர்களே நீங்கள் இதை கோர்ட் கொண்டு சென்றால் விநியோகஸ்தர்கள் மற்றும் குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் மாட்டி கொள்வார்கள்.ஏன் என்றால் தமிழகதில் உள்ள பெரும்பாலான தியேட்டர் நிலைமை இப்படி தான் உள்ளது. டிக்கெட்டில் கட்டணம் குறிபடுவதில்லை

 8. Sk

  Sir, my blood boils…DCR is fake and no point in expecting these guys to tell the original figures. As I told before they shud never be compensated…. Let them do whatever they want… No movie had this collection in recent times and all inspire of pulling down the movie . Am still trying to connect the dots but could t understand the intentions and people behind it. Everyone in cine industry are also very jealous of thalaivar.
  Let these idiots go beg but am sure that no one will even put left over food for these beggars.
  Am shocked to see the extent to which people go to defame someone.

 9. Sanjev

  பிச்சைக்கார பசங்க, எறியும் வீட்டில் புடுங்கும் கூட்டம்

 10. Arujuna Arul

  நான் கண்ணால் கண்ட பகல் கொள்ளை !!!
  இலங்கையில் இருந்து தமிழ் நாடு சென்று லிங்கா பார்த்தேன். சென்னை, திருச்சி, சேலம், திருப்பூர், கோவை, காரைக்குடி என்று பல இடங்களில் 10 தடவைக்கு மேல் லிங்கா பாத்தாச்சு, படம் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு 200 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் வாங்கியதாக எனக்கு இம்மி அளவும் ஞாபகம் இல்லை, அட பாவிங்களா லிங்கா வெளியாகிய 10 ஆவது நாள் திருச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல 6 தியேட்டரில் செக் செய்து ஆன்லைன் டிக்கெட் ஒன்னு கூட கிடைக்காமல் திண்டாடினேன். 110 ரூபாய், 70 ரூபாய்க்கெல்லாம் தமிழ் நாட்டில எப்போ எங்கடா டிக்கெட் வித்தீங்க ???

 11. karthik

  கவலை வேண்டாம் நண்பர்களே. இதுவும் நன்மைக்கே. தலைவரை சீண்டி பார்த்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை, காயபடுத்தி பார்கிறார்கள். மகாவதார் பாபாஜி தலைவரை வழி நடத்துவார். கடவுள் என்று ஒரு சக்தி இருந்தால் நல்லது நடக்கும். ஒவ்வொருத்தனுக்கும் சீத பேதி வந்திருக்கு. மருந்து தலைவர் கையிலே தான் இருக்கு.

 12. ganesh

  sir,
  All the points shown by you should be conveyed to press by the vendar movies orTiruper subramanian.The Print media creating sensation in the name of thalaivar should be taken for Defamation case for heavy amount.

 13. Murali

  Unhappy to see thalaivar not using iron fists to demolish the detractors. This is needed to run a successful political organization and implement strict rules as CM. we need a kejrewal type of no tolerance attitude for upheaval. Only then thalaivar’s political career would be meaningful. Else I would assume Rajini sir’s public life would have missed a grand opportunity.

 14. saranya

  neenga ellarum aen thalaivar uththaravidanumnu kaathitirukeenga. neengale muyarchi edukalaame. kaasu koduthu ticket vaangi padam paarthathu neenga thaane. unmayileye thalaivarai vida itha thattikekkara urimai namaku thaan iruku. idha neenga online la website la ezhuthuratha vida patthirikai la ezhuthunga. apdi illaya oora kootunga. oora kooti enna nadakuthunu ooruku theriyapaduthunga

 15. ramesh

  கவலைபடாதீர்கள் நண்பர்களே……..கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள் “உண்மை” வெளிவரும்………ரஜினியை யாராலும் வெல்ல முடியாதுன்னு அந்த கேடுகெட்ட மனித ஜென்மங்களுக்கு தேறியும்….அதன் வேற என்ன என்ன வழிகளில் தலைவர் பெயரை கெடுக்க பார்கிறார்கள்…..

  இதில் இருந்தும் தலைவர் வெளிவருவார்……ரஜினி என்றும் எங்க கடவுள்…………ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………….ரஜினி என்றும் எங்க கடவுள்………

 16. karthikeyan

  நாம சும்மா இப்பிடி பேசிகிட்டு இருந்த கண்ட நாயும் தலைவர பத்தி தப்ப பேசிகிட்டு அலையும். ரஜினி ரசிகர் தனி தனியாய் இருக்கான் .நம்ம ஒன்னு சேரநும் .இல்லேன்னா இது போல இன்னும் பல நாய்கள் கிளம்பிடும் ..இப்போது தலைவர் வரனும் …நான் என்பது நாம் ஆகவேண்டும்

 17. s venkatesan, nigeria

  தலைவர் உத்தரவுக்கு காத்து இருக்காமல் ரசிகர் மன்றங்களை விரிவு படுத்த வேண்டும் மன்றங்களின் செயல்பாடுகள் அதிகம் ஆக வேண்டும். நாம் பலமாக இருந்தால் மட்டும் போதாது. நாம் பலமாக இருக்கிறோம் என்று எதிரிகளுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் பயம் இருக்கும்.

 18. raja paris

  நண்பர்களே உற்று நோக்கினால் தெரியும் உண்மை …..இதில் மிக பெரிய பங்கு ஜெயா டிவி க்கு உண்டு …ஒன்றுமில்லாத படத்துக்கு கூட நிறைய ப்ரொமோட் கொடுத்து ஓடவைக்கும் சன் டிவி & விஜய் டிவி எங்கே …கோச்சடையன் னையும் & லிங்கா வையும் வாங்கிய ஜெயா டிவி என்ன பண்ணியது யோசித்து பாருங்கள் அதிக பணம் கொடுத்து படத்தை வாங்கி ரஜினியின் பெயர் இல்லாமல் பண்ணுவது தான் இவர்கள் குறிக்கோள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு தலைவரின் பெயரையும் புகழையும் ஜெயா டிவி இடம் அடமானம் வைத்த eros நிறுவனத்து மிக்க நன்றி ( ஆண்டவன் இருக்கான் ) கண்கொள்ள சில உண்மை நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கோம் ….பணத்தாசை பிடித்த தயாரிப்பாளர்கள் என்னும் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது அடுத்த படத்தை யாவது ஜெயா டிவி இடம் போகமால் தடுப்பதே ஒவ்வொரு ரசிகனின் கடமை …இதை நண்பர் ***வினோ ** தலைவர் காதுக்கு எடுத்துசொல்லவெண்டும்…

 19. Rajagopalan

  Raja Paris comments is true. This already i posted. Jaya Tvs non publicity.
  For “I”, they are promoting , but for Linga, nothing.
  Also Vendhar Movies, Eros etc nobody is coming with any statements.
  But all fans are just putting comments in facebook, twitter…
  Rajini fans are not active like before . This has to be accepted….

  See all these Kosu fans… How they are promoting the kosu movie…

 20. Rajagopalan

  I dont know how many of you have read todays Dhina Malar..
  There is a article regarding the issues surrounding Lingaa.
  In that , they had put as , Rajini is not going to act in movies after Lingaa.
  After seing that, iam totally mood out…
  Please Thalaiva do something ….

 21. குமரன்

  ராஜா பாரிஸ் சொல்வதில் உண்மை இருக்கிறது.

  எனக்குக் கிடைத்த அதிமுக உயர் வட்டத்தகவல் ஒன்றுடன் இது ஒத்துப் போகிறது.

  லிங்காவில் மோனா மோனா மோனா பாடல் தொடர்ந்து கேட்டால், நமோ நமோ என்று வருவது போல இருப்பதாக ஜெயா அபிப்பிராயம். அந்த டிசம்பர் 12,13 தேதி வாக்கில் அவர் உள்ளிருந்து வெளியே வந்தும் கூட வீட்டை விட்டு வெளிவரமுடியாத நிலைமை. ரஜினி பா.ஜ.க பக்கம் சாய்கிறார் என்ற பேச்சு வேறு அவ்வப்போது வந்த நேரம். மோடி சென்னை வந்து ரஜினி வீட்டுக்குப் போனதால் பொறாமை வேறு. எனவே அமைதியும் கருணையும் மட்டுமே வடிவமான ஜெயா, தனது சில்லரைப் புத்தியைக் காட்டி இருக்கிறார்.

  ஜெயாவின் கொத்தடிமைகளாக அறிக்கை கொடுப்பதும், அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதுமாக இருந்து வரும் சீமானும், வேல்முருகனும் இந்த அயோக்கியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதும் கூட, ஜெயாவின் ஆணைப்படியே.

  ஜெயா தொடர்ந்து கமல், விஜய், ரஜினி என்று எல்லா முன்னணி நடிகர்களும் அரசியல் பக்கம் வந்துவிடக் கூடாது என்று அவர்களது படங்களுக்குப் பிரசினை உண்டுபண்ணி வருகிறார்.

  அஜித் செத்த பாம்பு, அதை ஜெயா அடிப்பதில்லை. ரசிகர் மன்றத்தைக் கலைத்தது அஜித்தின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

 22. RAVI

  எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு தலைவர் புகழ் இன்னும் இன்னும் கூடிக்கொண்டே தான் போகும்.

  உண்மை. இது ஒரு கூடு சதி தான். ஒவ்வொரு ரசிகனின் ரத்தமும் கொதிக்கிறது. தலைவர் அமைதி காப்பது ஒருவிதத்தில் நல்லதுதான் அப்போ தான் எல்லாருக்கும் தெரிய வரும் ஏன் அரசியல் வாதிகளும் மீடியா வும் இப்படி ஒற்றை மனிதனை வாட்டுகிறது என்று. அப்போது தான் தலைவரின் பெருந்தன்மை எல்லாருக்கும் புரியும்.
  என்னை பொறுத்தவரை இவை எல்லாம் தலைவரின் அரசியல் பிரவேசத்தின் படிக்கட்டுகள்.
  இந்த நெருக்கடி நேரத்தில் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையை தமிழ்நாட்டில் உள்ள அநாதை ஆசிரமங்களுக்கு அல்லது வேறு எதாவது நல்ல காரியங்களுக்கு தலைவர் செய்தால், தலைவர் யார் என்பது எல்லோருக்கும் புரியும் அதே நேரம் அந்தே நரிகளின் கூடு சதியும் அம்பலப்படும். (இது என்னுடைய கருது தான்) இப்படி செய்யும்போது தலைவர் அவர்களுக்கு பணியாத சிங்கம் என்பதும் புலப்படும்.உண்மையை சொன்னால் என்னால் இரண்டு நாட்கள் தூங்கவே முடியவில்லை, ஏன் ஏன் என்று எனக்குள்ளே கேட்கிறேன் மனம் வலிக்கிரதிறது. ஒரு கடைகோடி ரசிகன் எனக்கே இப்படி என்றல் தலைவருக்கு எப்படி இருக்கம் என்னால் ஊகிக்க முடிகிறது.
  அனால் தலைவருக்கு தெரியம் எப்போ, எதை, எப்படி செய்யவேண்டும் என்று. தலைவர் மறைமுகமாகவோ நேராகவோ ரசிகர்களை சிறியதாக தூண்டினால் போதும் நம்மால் நம் சக்தியை காட்ட முடியும். அனால் தலைவர் யாரையும் கஷ்டபடுத்தகூடியவர அல்ல. அதால் தான் அவர் கோடிகளில் ஒருவர்.
  “பொறுத்தார் பூமி ஆழ்வார்”

 23. S.Vijay

  வினோ,
  அந்த பிரஸ் மீட்டில்… சி.வேலன் & கோ சொன்னது : திருப்பூர் சுப்ரமணியமும் நஷ்டமடைந்துள்ளார். 10% என்பது மிகக் குறைவு என்று கூறினார்கள். !!

 24. raja paris

  லிங்கா பிரச்னை: விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்: நடிகர் சங்கம் மவுனம்
  ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமல்ல தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் தவறாமல் வாக்களித்திருக்கிறார். சங்கத்தின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால் இந்த பிரச்னை பற்றி இதுவரை நடிகர் சங்கம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. “சின்ன பிரச்னைகளுக்கு கூட தினமும் அறிக்கை வெளியிடும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இந்த பிரச்னையில் மவுனமாக இருப்பது ஏன் என்றும் புரியவில்லை” என்கிறார்கள் மற்ற முன்னணி நடிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *