BREAKING NEWS
Search

லிங்கா விவகாரம் : ரஜினி ரசிகர்கள் பெயரால் அரங்கேற்றப்பட்ட புது மோசடி!

லிங்கா விவகாரம் : ரஜினி ரசிகர்கள் பெயரால் அரங்கேற்றப்பட்ட புது மோசடி!

-இர தினகர்

 

sivaji
லிங்கா வெளியான சில நாட்களிலிருந்தே அதன் வினியோகிஸ்தர்கள் சிலர் விதவிதமான பேட்டிகளும், அறிக்கைகளும் கொடுத்து வருவதோடு உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி முடித்துவிட்டனர்.

அடுத்ததாக மெகா பிச்சை போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை பற்றிய வெவ்வேறு பரிமாணங்களும்  நடந்துள்ள மோசடிகளும் ’த்ரில்லர் படக் காட்சிகள்’ போல் வந்து கொண்டே இருக்கின்றன!

ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயரில் வினியோகிஸ்தரே அரங்கேற்றியுள்ள ‘ப்ளாக் டிக்கெட்’ வியாபாரத்தை அவருக்காக நடத்தியவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ரஜினி ரசிகர் மன்ற பெயரில் அறிக்கை

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர் மன்றம் பெயரில் ஒரு அறிக்கையை திருநாவுக்கரசு , சுவாமி நாதன்,  கணேஷ் குமார் என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளனர். மன்ற பெயரைப் பார்த்தாலே இது ‘டகால்டி வேலை’ என்று தெரிகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ரஜினி ரசிகர் மன்றமும் அவருடைய படப்பெயரோ அல்லது படத்தில் வரும் கேரட்க்டர் பெயரோ அடைமொழியுடனேயே இருக்கும். முதலாமவர் நகர பொருளாளர், இரண்டாமவர் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.. மூன்றாமவர் உறுப்பினர் என்று கூட போட வில்லை. முக்கூட்டுச்சாலை, மதுக்கூர், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சை மாவட்டம் என்ற முகவரியையும் கொடுத்துள்ளனர். பிரச்சனைக்குரிய வினியோகிஸ்தர் சிங்காரவேலனின் சொந்த ஊர் தான் மதுக்கூர் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் பொருளாளராம்…

இந்த அறிக்கையைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இது ரஜினி ரசிகர் மன்ற பெயரை கெடுப்பதற்காக சிங்காரவேலன் செய்த சூழ்ச்சி என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அறிக்கையில் கையெழுத்திட்ட திருநாவுக்கரசு என்பவரை இணையதளம் ஒன்று பேட்டி எடுத்து ஆடியோவை வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியில் அவர் சிங்கப்பூரில் பத்து வருடங்கள் இருந்துவிட்டு தற்போது தான் ஊர் திரும்பியுள்ளதாகவும், சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு பொருளாளராக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ப்ளாக் டிக்கெட் வியாபாரம்

அவரும் மற்ற இரு நண்பர்களும் ஆளுக்கு தலா முன்று லட்சம் போட்டு, 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு அன்னபூர்ணா மற்றும் அருண் தியேட்டர்களில் ஒரு நாளைக்குரிய நான்கு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். முதலாம் தியேட்டரில் 550 இருக்கைகள் என்று அவரே கூறியுள்ளார். கிட்டதட்ட ருபாய் 170 வீதம் 4600 டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். அதை சாதாரண வகுப்பிற்கு 200 ரூபாய்க்கும், பாக்ஸ் வகுப்பிற்கு 250க்கு விலை நிர்ணயம் செய்து விற்றுள்ளார்கள். அவர்கள் பாஷையில் மழுப்பலாக ‘டிக்கெட் எடுத்து செய்யலாம்’ என்று கூறியுள்ளார். எடுத்து செய்வது என்பது ப்ளாக் டிக்கெட்டில் விற்கலாம் என்பதே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

அதாவது தியேட்டருக்கு வரும் அனைவரும் இவர்களிடம் மட்டுமே 200 விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்துள்ளார்கள். அப்படியென்றால் தியேட்டர் கவுண்டரில் விற்கப்படவில்லையா? தியேட்டர் உரிமையாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்வியும் எழுகின்றன. சட்டப்படி இது குற்றமும் கூட.

பெண்களுக்கு 40 ஆண்களுக்கு 80

சாதாரண படங்களுக்கு பெண்களுக்கு 40 ரூபாயும், ஆண்களுக்கு 80 ரூபாயும் டிக்கெட் விற்கப்படும் தியேட்டரில், 806 டிக்கெட்டுகள், மற்ற தியேட்டரில் 820 டிக்கெட்டுகள் என விற்று 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். அதாவது சராசரியாக ஒரு டிக்கெட்டின் விலை 220 ரூபாய். ரசிகர் மன்றத்தில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத ஒருவர் மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு பட்டப் பகலில் விற்பனை செய்துள்ளார். திருநாவுக்கரசு என்பவர் தனக்கு விருப்பம் இல்லை என்றும் சிங்காரவேலன் தான் வற்புறுத்தினார் என்றும் பேட்டியில் கூறியுள்ளார். ப்ளாக் டிக்கெட் விற்றவரே படம் நல்லா இருக்கு சூப்பர் என்று சர்டிபிகேட் கொடுத்திருப்பதுதான் இந்த பேட்டியின் பெரிய ஹைலைட்டாகும்.

MDSB149412-MDS-M

மன்றத்தின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர், கடன் வாங்கி மொத்தமாக டிக்கெட்டுகள் வாங்கி விற்று விட்டு நஷ்டக் கணக்கு காண்பிக்கிறார். படம் வெளியான முதல் நாளில் இரண்டு தியேட்டர்களிலும் சேர்த்து எட்டு காட்சிகள் திரையிட்டுள்ளார்கள். அனைத்து காட்சிகளையும் சேர்த்து அதிகாரபூர்வமான இருக்கைகளின் எண்ணிக்கை 4600 என்று அவர்களே கணக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரஜினி படம் முதல் நாள் 1600 பேர் மட்டுமே பார்த்தார்களாம். மீதம் 3000 இருக்கைகள் காலியாக இருந்ததாம்.

திருச்சி நகரில் ஒரு திரையரங்கில் ஆன்லைனில் 95 ரூபாய்க்கு விற்றதாகவும் அங்கே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதாகவும் இதே சிங்காரவேலன் கூறியிருந்தார், தாங்கள் நினைத்தது போல் மக்களிடம் வசூலிக்க முடியவில்லை என்பதைத்தான் நஷ்டம் என்று கூறி படத்தின் ரஜினியிடம் வசூலிக்கத் துடிக்கிறார்கள் போலிருக்கிறது.

திரைப்பட வினியோகத்தில் நடைபெறும் அனைத்து தில்லுமுல்லுகளையும் வெளிக்கொண்டு வராமல் லிங்கா பிரச்சனை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. மத்திய வருமான வரித்துறையும்  நடக்கும் காட்சிகளை உன்னிப்பாக கவனித்து வந்தால் பெருமளவில் நடைபெறும் வருமான வரி ஏய்ப்பையும் கண்டுபிடிக்க முடியும்.

-என்வழி




6 thoughts on “லிங்கா விவகாரம் : ரஜினி ரசிகர்கள் பெயரால் அரங்கேற்றப்பட்ட புது மோசடி!

  1. arulnithyaj

    அண்ணா நான் உங்களிடம் பேச முயற்ச்சித்தேன் ஆனால் முடியவில்லை (தொலைபேசியில் அழைத்தேன்) 🙁 . http://www.seythigal.com/?p=5798 அண்ணா இது உண்மையென்றால் தலைவர் பெயரை இத்தனை நாள் இவர்கள் கெடுத்தார்களே, எங்களை போன்ற ரசிகர்களின் உள்ளத்தில் வேல் பாய்ச்சினார்களே அதற்கு என்ன பதில் தலைவரிடம் சொல்லுங்க அவருக்காக நாங்கள் எதையும் தாங்குவோம். அவர் அவர்களை மன்னிக்கட்டும் ஆனால் அவர்களை சினிமாவில் இருநந்து ஒதுக்கி வையுங்கள் என்று கேட்கிறோம். அவர்கள் நம் சுய மரியாதையை கேலி கூத்தாகியதற்கு அவர்களுக்கு என்ன தண்டனை ..தலைவருக்கே வெளிச்சம் .. என்றும் தலைவரின் கடை கோடி பக்தன் –அருள்

  2. SENTHILKUMAR

    அன்னபுர்ண தியேட்டரில் சனவரி 2 ந் தேதி (20 தாவது நாள் ) படம் பார்த்தேன். கவுன்ட்டர் ல ஒரு டிக்கெட்டோட விலை 150(பாக்ஸ் ) ,100 . டிக்கெட்ல உள்ள ஒரிஜினல் விலை 30 ,40 துதன். அப்ப முதல் வாரத்துல எவ்வளவு கொள்ளை!. வினோ அண்ணா , இன்னும் பத்து வருஷம் கழிச்சு , எங்களுக்கு லாபம் தான் தியேட்டர் காரங்க சொல்லுவாங்க. எங்ககிட்ட கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு. பிச்சை வேற.

    செந்தில்குமார்.
    பட்டுக்கோட்டை

  3. குமரன்

    நான் பொதுவாக என்னைத் தமது விருந்தினராக அழைக்கும் தியேட்டர்களுக்கு மட்டுமே போவதை வழக்கமாக வைத்துள்ளேன், அதுவும் கூட நல்ல படம் என்ற பெயர் பெற்ற படம் என்றால் மட்டுமே அழைப்பை ஏற்கிறேன், இல்லாவிட்டால் மறுத்துவிடுவதே வழக்கம்.

    ரஜினி படம் மட்டுமே தியேட்டரில் பார்க்கிறேன். எந்த அழைப்பையும் எதிர்பார்க்காமல், டிக்கெட் வாங்கிப் பார்க்கிறேன். எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போதுதான் சென்று பார்ப்பது வழக்கம். முதல் நாள், முதல்ஷோ என்றெல்லாம் விரும்புவது கிடையாது. சிவாஜி படம் மட்டும் அதன் வினியோகஸ்தர் அழைத்ததால் முதல் நாள் முதல் ஷோ சென்றேன், ஆனால் நானே வலியுறுத்தி டிக்கட் அதன் முறையான விலைக்கு வாங்கி என் குடும்பம், நண்பர் அவர் குடும்பம் என்று சென்று பார்த்தேன்.

    இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் தியேட்டர்க் காரர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் யார் காரணம்?

    கொடுப்பவன் இருப்பதால்தானே எடுப்பவன் இருக்கிறான், அல்லது பிடுங்குகிறவன் இருக்கிறான்?

    30 அல்லது 40 அல்லது 80 ரூபாய் டிக்கட் 200 அல்லது 250 ரூபாய்க்கு ஏன் வாங்கவேண்டும்? முடியாது என்று ஒவ்வொரு ரஜினி ராசிகனும் முடிவெடுப்போம்.

    சரியான நியாயமான சட்டபூவமான விலையை விட அதிகம் கொடுத்து வாங்க மாட்டோம் என்று முடிவெடுப்போம் , அதை இப்போது அறிவிப்போம், நமது ரசிகர் மன்றம் மூலமாக.

    பிறகு பாருங்கள் எல்லா தியேட்டர் காரனும் சிங்காரவேலனின் குரல் வளையைப் பிடித்துத் திருகி உன்னால்தான் எங்கள் கொள்ளை நின்றது என்று செருப்பால் அடிப்பார்கள். மற்ற விநியோகஸ்தர்களும் தங்கள் கொள்ளை நின்றதால் சிங்காரவேலன் வகையறாவை அவர்களும் வறுத்தெடுப்பார்கள்.

    இது போக, ஊழலற்ற அரசு வேண்டும் என்று வாய் கிழியப் பேசிவிட்டு லஞ்சம் கொடுத்துத் தன் வேலையை முடித்துக் கொள்ளும் குடிமகனுக்கும், தியேட்டர் கொள்ளை என்று கூபாடு போட்டுவிட்டு, பிளாக்கில் டிக்கட் வாங்கிப் படம் பார்ப்பவனுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    ரஜினி ரசிகனாக இருப்பதால், நம் பணத்தை அநியாயமாக இவர்களுக்கு அதிக விலைக்கு டிக்கட் வாங்கிக் கொடுக்க அவசியமே இல்லை. முதல் நாள் பார்த்தால் என்ன? மூன்றாம் நாள் பார்த்தால் என்ன? படம் அதேதான், வெட்டி பந்தாவுக்கு நான் முதல்நாள் முதல் ஷோ பார்த்தேன் என்று சொல்வதற்க்கு நமது உழைத்து சம்பாதித்த பணத்தை இந்த அயோக்கியர்களுக்கு அழ வேண்டுமா? என்று யோசியுங்கள். இதில் மிச்சமாகும் பணத்தை நல்ல விஷயத்துக்கு செலவிடலாம், இல்லை இன்னொரு முறை அதே படத்தையே கூடப் பார்க்கலாம், அப்போது பல நாட்களுக்கு ரஜினி படம் ஹவுஸ்புல்லாக ஓடும், இந்த சிங்காரவேலன் போன்ற பிளாக் மெயிலர்கள் பிழைப்பும் கெடும்.

  4. Kumar

    இப்போ வருமான வரித்துறை விசாரிக்கணும்னு சொல்றீங்களே அப்ப மட்டும் மதிய அரசு ரஜினியை சப்போர்ட் செய்யணுமாம் ஆனால் மதிய அரசு ஒரு மாசத்துக்கு முன்னாடி ரஜினியை அவமானபடுத்தி அரசியலில் ஈடுபட்டர்கலாம்.என்னையா இது.இதே ஆறு வருடங்கள் முன்பு சீமான் அவர்கள் அரசியலில் ஈடுபட்ட பொது நான் என்வழி அவரை சப்போர்ட் செய்வது தவறு அவரின் நோக்கம் வேறு என்று தொடர்ந்து கூறிகொண்டே இருந்தேன்.அதை இப்போது தான் வினோ பகிரங்கமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்.அது போல் தான் இதுவும்.ரஜினியை அழிக்க நினைப்பது எதோ மதிய அரசு அல்ல தமிழகத்தை நாற்பது வருடமாக ஆண்டு அழித்த திராவிட கட்சிகள் தான்.இந்த பிரச்னையை ரஜினியின் ரசிகர்கள் செரியாக அணுகவில்லை.இப்போது ரசிகமன்றதில் இருக்கிறவர்களுக்கு வெறும் பேருக்கும்,போச்டேருக்கும் செலவிடுகிரர்கலே தவிர ரஜினியின் பழைய ரசிகர்கள் இந்த பிரச்சனை அணுகி இருந்தால் சிங்காரவேலன் கும்பல் சின்னபின்னமாகி இருக்கும்.அவர்கள் 1980-1990கலில் பார்க்காத பிரச்சனையா.எவளவோ பிரச்சனைகள் ரஜினி சந்தித்தபோது ரசிகர்கள் அதை அனுகியவிததை கண்டு தமிழக சினிமா துறையே மிரண்ட காலம் அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *