BREAKING NEWS
Search

லிங்கா நஷ்டமில்லை… ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! – ராக்லைன் வெங்கடேஷ்

லிங்கா நஷ்டமில்லை… ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! – ராக்லைன் வெங்கடேஷ்

11-1420953867-rajini-rockline-venkatesh-60990

சென்னை: ஒரு தயாரிப்பாளராக லிங்கா படத்தால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இந்தப் படத்தை வெளியான நான்காம் நாளிலிருந்து ஓடவிடாமல் கொன்று விட்டார்கள் சிங்கார வேலன் போன்ற நபர்கள், என்று கூறினார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அவர் பிறந்த நாளன்று வெளியானது.

படத்துக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. முதல் மூன்று நாட்களில் ரூ 104 கோடி ரூபாயை வசூலித்தது இந்தப் படம்.

ஆனால் அடுத்த நாளே, இந்தப் படம் சரியில்லை.. படத்துக்கு கூட்டமில்லை.. படத்தால் எங்களுக்கு நஷ்டம்…. பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து எதிர்மறைப் பிரச்சாரத்தில் இறங்கினார் சிங்கார வேலன் என்ற மீடியேட்டர்.

இது படத்தை வெகுவாகப் பாதித்தது. உலகெங்கும் மூன்றாயிரம் அரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருந்த போதே இப்படி பிரச்சாரம் செய்தது தமிழ் சினிமா இது வரை பார்த்திராதது. தாங்கள் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ள லிங்கா படம் ஓட வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு இல்லை. வேறு உள்நோக்கத்துடன் படத்தை ஓட விடாமல் செய்ய மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்று ரசிகர்களும் மீடியாக்களும் சொல்லும் அளவுக்கு மிக மோசமாகப் போனது இந்த பிரச்சாரம்.

குறிப்பாக இந்த சிங்கார வேலன் ரஜினியை மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் என்பதே உண்மை. அதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்களை பெரும்பாலான செய்தியாளர்கள் வைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினைையை அரசியல் ஆக்கி, அதில் சீமான், வேல் முருகன் போன்றவர்களை கொண்டு வந்தனர். நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிரான அரசியலையும் அரங்கேற்றினர் சிங்கார வேலன் அன்ட் கோ.

இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் விநியோகஸ்தர் வேந்தர் மூவீஸ் டி சிவா இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், “நான் 30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன். 12 வருடங்களுக்கு முன் ரஜினி எனக்கு நண்பரானார். அவர் கடவுளின் அம்சம். அவரை நான் கடவுளாகத்தான் அவரைப் பார்க்கிறேன். அத்தனை சிறந்த மனிதர் அவர். அவர்தான் எனக்கு இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். கடவுள்தான் அவர் மூலம் இந்த பாக்கியத்தை கொடுத்தாக கருதினேன்.

இந்தப் படத்தின் பப்ளிசிட்டிக்காக நாங்களே கேஸ் போட்டதாகவெல்லாம் சிங்கார வேலன் என்பவர் கூறியிருக்கிறார். அப்படி சீப் பப்ளிசிட்டி, அதுவும் ரஜினி சார் படத்துக்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாங்களே கேஸ் போட்டு, கோர்ட்ல பத்து கோடி கேரண்டி கட்டுவோமா..

அடுத்து டிசம்பர் 12 ம் தேதி என்ன தேசிய விடுமுறையான்னெல்லாம் கேட்டிருக்காரு…

படம் பூஜை போடும்போதே ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ம்தேதிதான் ரிலீஸ்னு அறிவிச்சிட்டோம். சரி, டிசம்பர் 12 தேசிய விடுமுறை நாள் இல்லேன்னு தெரியும் இல்லே.. அப்புறம் ஏன் படத்தை வாங்கினீர்கள்? நாங்களா வந்து வாங்கச் சொன்னோம்? எத்தனையோ ஆஃபர்ஸ் இருந்தது. அவங்களையெல்லாம் ஓவர்டேக் பண்ணி வாங்கியது நீங்கதானே..

பண விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக யாரிடமும் ஒரு பைசா கடன் வாங்காமல் என் முழு பணத்தையும் முதலீடு செய்தேன். ரஜினி சார் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார், ‘டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கிட்ட பணத்தை முன்கூட்டியே வாங்கிட்டா, அதுக்காக அவங்க கட்ட வேண்டிய வட்டி அதிகமாயிடும். கவனமா இருங்கன்னு,” சொன்னார். அதனால் முழுக்க சொந்தப் பணத்தில் தயாரித்தேன்.

நான் தயாரித்த படத்தை ஈராஸ் நிறுவனத்திடம் விற்றோம். அவர்கள் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டனர். அம்மா கிரியேஷன்ஸ்தான் இந்த விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றார்கள்.

ஆனால் படம்  வெளியான உடனேயே படம் சரியில்லை, எந்த ஷோவும் ஃபுல்லாகவில்லை என்று விநியோகஸ்தர்கள் மீடியாவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உலகிலேயே இதுபோன்ற ஒரு செயலை நான் எங்கும் பார்த்ததில்லை.

rockline-1

இது படத்துக்கு வரவேண்டிய கூட்டத்தை பாதித்தது. இதனை ரஜினி சார் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர், ‘நானும் பார்த்தேன் வெங்கடேஷ்.. அதிக பணம் கொடுத்த அழுத்தத்தில் ஏதோ பேசியிருக்கிறார்… மனசில் வச்சிக்காதீங்க. நான்கைந்து வாரம் போகட்டும்.. கணக்கு வழக்கு பார்த்து, அவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு ஒரு முடிவு எடுக்கலாம்,’ என்றார். தன்னால் யாரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை தெளிவாக இருக்கும் மனிதர் அவர்.

டி சிவாவிடம் சொன்னபோது, சிங்கார வேலனிடம் சொல்லிவிட்டேன். இனிமேல்  பேச மாட்டார் என்றார்.

ஆனால் இந்த சிங்கார வேலன் தன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் போட்டார். ஆங்காங்க நின்று இஷ்டத்துக்கும் பேசினார்.

படம் ஓடக் கூடாது என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது. படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது.. புரமோஷன் செய்யுங்கள் என்று என்னிடம் கூறியிருந்தால் நான் ரஜினியிடம் பேசி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்போம். ஒரு நியாயமான விநியோகஸ்தர் அதைத்தான் செய்திருப்பார். மற்ற படங்களுக்கும் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் நோக்கம் அதுவல்ல.

சிறிது நாட்களிலேயே படம் ஓடவில்லை என்று கூறி உண்ணாவிரதம் அளவிற்கு கொண்டு வந்துவிட்டார். அவர் பப்ளிசிட்டி, பாலிடிக்ஸுக்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். உங்க பாலிடிக்ஸுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. இந்த சினிமாவுல வேணாங்க..

சிங்கார வேலன் சொல்றாரு, நான் கர்நாடகக்காரன். இங்கேயிருந்து காசையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போயிட்டேன்’னு.. நான் அரசியல் பேச வரலை. ஆனா அவர்தான் அரசியல் பேசியிருக்காரு. அரசியல் பண்றாரு.. இங்க வந்து கர்நாடகம், தமிழ்நாடுன்னு பேசவே முடியாது. நான் தமிழ்ல இதுக்கு முன்னாடியும் படங்களை தயாரிச்சிருக்கேன். தயாரிப்பேன். இங்கதான் இருப்பேன்.

ரஜினி ஸார் எப்பேர்ப்பட்டவர்..? இந்திய சினிமாவுக்கே ஒரு அடையாளம் அவர். அவரை போயி வாய்க்கு வந்தபடி பேசினா எப்படி..? அப்படி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு..? இந்தப் படத்தை நான் அவரோட ஒரு ரசிகனாத்தான் தயாரிச்சேன். லாபம் நிறைய கிடைக்குமேன்னு நினைச்சு தயாரிக்கலை.. என் தலைவன்.. என் ரஜினி ஸார்.. அவர் படத்தைத் தயாரிக்க நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும்.. அவர் படத்தைத் தயாரிக்க பல பேர் இருக்கும்போது அவர் என்னைக் கூப்பிட்டு ‘இந்தப் படத்தை நீங்க தயாரிங்க’ன்னு சொன்னது நான் செஞ்ச புண்ணியம்..

அவரையே இவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தறவங்களுக்கு நான் ஏன் ஹெல்ப் பண்ணனும்… இதை ரஜினி சார் கிட்டயே சொல்லிட்டேன். அவரும் உங்க விருப்பப்படி செய்யுங்கன்னு சொல்லிட்டார்.

எப்பேர்ப்பட்ட படம் இது.. எத்தனை பேரோட உழைப்பில் உருவானது? அப்படி என்ன நான் தப்பான படமா தயாரிச்சேன்? என்கிட்ட பேசின அத்தனை ஜர்னலிஸ்டுங்க கிட்டயும் கேட்டுட்டேன். படம் நல்லாருக்கு, அருமை, பிரமாதம்னுதான் சொன்னாங்களே தவிர யாரும் ஒரு வார்த்தை தப்பா பேசலை. சின்னப் பசங்க எல்லாம் ரசிச்சிப் பார்த்த படம் இது. இதை கொன்னுட்டாங்க… இன்னொரு முறை எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வருமா?

10511267_323289001206937_7032987985476563155_n

45 கோடியில் படத்தை தயாரித்து ரூ. 220 கோடிக்குமேல் லிங்கா படத்தை வியாபாரம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் செய்த செலவுகளையும் படத்தை விற்றதற்கான ஆதாரத்தையும் நான் காண்பிக்கிறேன். ஆனால் ரூ. 220 கோடிக்கு மேல் விற்கப்பட்டதற்கான ஆதாரத்தை காண்பித்து நிரூபித்தால், அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதை அங்கேயே நான் செய்கிறேன். அப்படி இல்லையெனில் இந்த சிங்கார வேலன் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…

தன்னோட கோரிக்கையை அவங்க ஒரு மாசம் கழிச்சுதான் எழுப்பியிருக்கணும். அதுதான் நியாயம். அதையும் முறைப்படியான வழில செஞ்சிருக்கணும். இதுதான் சரியான முறையா..? சினிமாவிலேயே இருந்து கொண்டு இப்படித்தான் செய்வார்களா?

சிங்கார வேலன் கொடுத்தது வெறும் 75 லட்சம்

நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. ஆனா இப்போ அவங்க கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்’னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்த்து. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.

இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம் ரூபாயை கடைசிவரைக்கும் அவர் தரவேயில்லை. வெறும் 75 லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே சம்பாதிச்சிட்டாரு..

அவர் சொல்றாரு.. நான் ஏதோ முறைகேடா கோடி, கோடியா சம்பாதிச்ச காசுலதான் படம் தயாரிக்கிறேன்னு.. நான் பிலிம் இண்டஸ்ட்ரில 32 வருஷமா இருக்கேன்.  கன்னடத்துல 31 படங்களை தயாரிச்சிருக்கேன். யாரும் என்னை பத்தி இதுவரைக்கும் இப்படி சொன்னதில்லை. இவர் சொல்லும்போது நான் ஒண்ணு யோசிக்க மாட்டேனா..?

சிங்காரவேலன் சாரைப் பார்த்தாலே சின்ன வயசு மாதிரி தெரியுது.. அப்புறம் எப்படி அவருக்கு இவ்வளவு பணம் வந்தது..? கப்பல்ல வேலை பார்த்து சம்பாதிச்சேன்னு சொல்றாரு.. அப்போ நானும் சொல்லலாமே, அவரும் கப்பல்ல வேலை பார்க்குறேன்னு சொல்லிட்டு நாடு, நாடா போயி கொள்ளையடிச்சு வந்த காசைத்தான் இதுல கொட்டியிருக்காருன்னு.. சிங்காரவேலன் சார்.. கொஞ்சம் அளவா பேசுங்க.

சிங்காரவேலன் எதுக்காக இதை பெரிய பிரச்சினையாக்குகிறார்ன்னு எனக்குத் தெரியலை. ஒருவேளை இதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்கான்னும் எனக்குத் தெரியலை. ஆனா அவருக்கு மீடியால முகம் தெரியணும்.. பெரிய ஆளாகணும்.. நம்மள பத்தி பரபரப்பா பேசணும்ன்ற மீடியா வெறி இருக்கும் போலிருக்கு.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துல இருந்தே நிறைய பேர் எனக்கு போன் செய்து ‘இந்த மாதிரி நஷ்டஈடெல்லாம் கொடுத்துப் பழக்காதீங்க. இது ரொம்ப தவறான செயலாயிரும். அப்புறம் இதுவே ஒரு பழக்கமாயிரும்’ன்னு சொன்னாங்க. நான் எந்தக் கருத்தும் அவங்ககிட்ட சொல்லலை..

சிங்காரவேலன் முறைப்படி இந்தப் பிரச்சினையை அணுகியிருந்தால் இதற்கொரு தீர்வை நானே முன் வந்து சொல்லியிருப்பேன். ஆனா இப்போ முடியாது. நீங்க சட்டப்படி இந்த விஷயத்தை சந்திக்கணும்னு நினைத்தால் நானும் ரெடி.. சட்டப்படியே கோர்ட்டில் இந்தப் பிரச்சினையை சந்திப்போம்..,” என்றார்.

சரி, ஒரு தயாரிப்பாளராக சொல்லுங்கள்.. லிங்கா படம் லாபமா நஷ்டமா?

“ஒரு தயாரிப்பாளராக லிங்கா லாபம்தான். எனக்கு நஷ்டமில்லை. ஆனால் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படத்தை இந்த சிங்கார வேலன் தன் விஷமப் பிரச்சாரத்தால் கொலை செய்தார் என்பதுதான் உண்மை. இது ஒரு பெரிய சதி. திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். இதனை அவர் எந்த உள்நோக்கத்தோடு செய்தார் என்பது சீக்கிரமே வெட்ட வெளிச்சமாகிவிடும்,” என்றார்.

-என்வழி
14 thoughts on “லிங்கா நஷ்டமில்லை… ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! – ராக்லைன் வெங்கடேஷ்

 1. arulnithyaj

  நன்றி வெங்கடேஷ் சார் .. விடுங்க சார் ஆண்டவன் இருக்கான் சார்..

 2. krs

  தலைவர் பிறந்த தேதி டிசம்பர் 12. ஜனவரி 12 இல்லை.

 3. krs

  —–நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் கடந்த ஜனவரி 12-ம் தேதி அவர் பிறந்த நாளன்று வெளியானது.—-

  தலைவர் பிறந்த தேதி டிசம்பர் 12. ஜனவரி 12 இல்லை.

 4. Suresh

  Singaravelan Thevudiya payalae. Un akka thangai un amma un pondatti a vaithu sambathi da. Kena payalae, Baadu. Kuchi kari movanae.

 5. sethu

  Well said Venkatesh Sir, We Rajini fans understand your feelings. Don’t pay back any money to that Rascal Singarvelan & Co. Lingaa is a very good movie all Rajini fans liked the movie very much.

 6. sajiv

  one & only unbetable Star SUPERSTARRAJINI sir
  ivar movie flopna Worldhae Trustpannathu
  RAJINI MOVIE ALWAYS
  HIT
  MEGA HIT
  SIVER JUBLIEE
  MASS MVE
  BLOCKBUSTER so same Result only LINGAA

  MVE HIT BLOCKBUSTER

 7. winston raj

  தயாராக இரு தலைவா

  அடுத்து உன் படத்தை அட்டையில் போட்டோம், ஆனால் எதிர்பார்த்த மாதிரி பத்திரிகை விற்கவில்லை, ஆகவே நஷ்டஈடு வேண்டும் என்று வந்து நிற்பார்கள்.

  இது தொடரும் உன் புன்னகையும் அமைதியும் உடையும் வரை..!

  இதோ இந்த வீடியோவில் தயாரிப்பாளரின் நேரடி சவாலுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்..?

  சினிமவை வைத்து ரஜினியை வைத்து தேர்தலில் வாய்ப்பு தேடுகிறார்களா.?

  இதை இரு மாநில பிரச்சனையாக ஆக்குவது ஏன்.?

 8. winston raj

  இவர்களின் தவறான பிரச்சாரம் காரணமாக படத்திற்கு எதிர் பார்த்த வசூல் வரவில்லை.

  எனவே அவர்களால் நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

  இந்த நஷ்டஈட்டை உண்ணாவிரதம் இருந்த அனைவரும் பகிர்ந்து தர வேண்டும் என்று ஏன் தயாரிப்பாளர் சார்பாக நீதிமன்றம் போக கூடாது..!

 9. kumaran

  அந்த நாயே இனிமே அவன் குடும்பத்தார்கள் கூட மதிக்க மாட்டாங்க

 10. R O S H A N

  எப்பேர்பட்ட நல்ல மனுஷங்களா இந்த எச்ச நாயிங்க அசிங்க படுத்திட்டாங்க. அப்படியே பத்திக்கிட்டு வருது……Rockline வெங்கடேஷ் அவர்களோட பேச்சு கேட்டேன், அவர் கண் கலங்கினது பாத்து ரொம்ப கஷ்டமா இருந்துது…..ஒரு தயாரிப்பாளரோட வலி, வேதனை என்னனு தெரிஞ்சுது…….ஒன்னு சொன்னாரு பாருங்க, இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எனக்கு இனிமேல் கெடைக்குமா, ஒரு படத்த கொலை பண்ணிடாங்க……பாவம் வினோ அவரு, இந்த மாதிரி ஒரு bad experience இதுவரைக்கும் அவர்க்கு இருந்துருக்காது 🙁 🙁 அவர் கிட்ட சொல்லுங்க வினோ ஜி, எங்களோட மனசுல பெரிய எடத்துல இருக்காருன்னு…….அதே மாதிரி, ஒரு சல்லி பைசா கூட குடுக்க கூடாது இந்த கேடுகெட்ட ஈன பசங்களுக்கு…அதுல steady ah நின்ன போதும், தப்பான முன்னுதாரணம் ஆயிடும்……

 11. raja

  பத்து வருடத்திற்கும் முன் தலைவரை எவனாவது ஒருவன் தப்பாக பேசினால் அவன் இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும்.ஆனால் இன்று ஒரு சிறு பையன் பின்னால் ஒரு கூட்டம் சேர்ந்து கொண்டு எம் தலைவனை பற்றி பேசுவதை தட்டி கேட்க ஒரு மன்றம் கூட வரவில்லை ஏன்?

  பற்றி பேசினால் இருக்கும்

 12. Hari

  திரு. வினோ அவர்களே,இந்த சிங்கரவேலனுக்கு பதிலடி கொடுத்தால் தான் இனிவரும் காலங்களில் தலைவரை பற்றியும் அவரது ரசிகர்கள் நம்மை பற்றியும் ஒரூவன் கூட பேச பயபடுவான் மேலும் தலைவர் பற்றி தப்பாக எழுதும் மீடியா கூட இனி எழுத தயங்கும்.இதற்கு வழி இருந்தால் தங்களது என்வழி முலம் நமது ரசிகர்களை தமிழகம் முழுவதும்
  இணைத்திடுங்கள்.ஒரு மிக பெரிய போராட்டத்தை நடத்துவோம்!!!
  நமது வழி…..எப்பொழுதும் தனி வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *