BREAKING NEWS
Search

இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா!

இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா!

10511267_323289001206937_7032987985476563155_n
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் வரும் டிசம்பர் 26-ம் தேதி இந்தியில் உலகெங்கும் வெளியாகிறது. வட இந்தியாவில் அதிக அரங்குகளில் வெளியிட ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்த படம் லிங்கா. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

படத்தின் இந்திப் பதிப்பை அதே தேதியில் வெளியிடப் போவதாகக் கூறியவர்கள், திடீரென நிறுத்திவிட்டனர்.

இப்போது வரும் டிசம்பர் 26-ம் தேதி இந்திப் பதிப்பை உலகெங்கும் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கில் இரண்டே முக்கால் மணி நேரமாக உள்ள இந்தப் படம், இந்தியில் இரண்டரை மணி நேரப் படமாக வெளியிடப்படுகிறது. மேலும் சில காட்சிகள் இதில் குறைக்கப்பட உள்ளதாக இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.

-என்வழி




2 thoughts on “இந்தியில் டிசம்பர் 26-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா!

  1. chozhan

    சந்தேகமேயில்லை, இந்தியில் நஷ்டத்தையே கொடுக்கும்

  2. Arul

    Vino,
    Why you are publishing these kind of hater’s comments. What is the difference between Thatstamil and this site? There can be opposing views. But that should be genuine argument. Please do the needful.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *