BREAKING NEWS
Search

நவம்பர் 24-ம் தேதி லிங்கா சென்சார்.. டிசம்பர் 12-ல் ரிலீஸ் உறுதி!

நவம்பர் 24-ம் தேதி லிங்கா சென்சார்.. டிசம்பர் 12-ல் ரிலீஸ் உறுதி!

lingaa-7
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் டிசம்பர் 12-ம் தேதி அவரது பிறந்த நாளன்று வெளியாவது உறுதியாகிவிட்டது.

சென்சார் முடியும் வரை லிங்கா வெளியீடு குறித்து எதையும் வெளியில் சொல்ல மாட்டேன் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

இப்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. நவம்பர் 24-ம் தேதி, அதாவது வரும் திங்களன்று இந்தப் படத்தை சென்சார் குழுவினர் பார்க்கின்றனர்.

சென்சார் சான்றிதழ் பெற்றபிறகு வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

லிங்காவின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.

-என்வழி




7 thoughts on “நவம்பர் 24-ம் தேதி லிங்கா சென்சார்.. டிசம்பர் 12-ல் ரிலீஸ் உறுதி!

  1. Arul

    சூப்பர் 🙂 பாட்டு எல்லாமே அருமை. கேட்க கேட்க பாட்டு மிகவும் சூப்பரா உள்ளது. மோனோ கசொலின சான்சே இல்ல . மரண மாஸ் . படம் மெகா ஹிட் . நோ டவுட்.

  2. Thiru

    ஒரே நாளில்(Dec12) இரண்டு திருவிழா.. தலைவர் தரிசனத்துக்கு இன்னும் 18 நாட்கள் உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *