BREAKING NEWS
Search

கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை

கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை

lingaa-movie-stills-13

வெளியாவதற்கு முன்பே பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது ரஜினியின் லிங்கா திரைப்படம்.

இந்தியத் திரையுலக வரலாற்றில் எந்தப் படமும் ரிலீசுக்கு முன் லிங்கா அளவுக்கு பணத்தைக் குவித்து சாதனைப் படைத்ததில்லை. ரூ 100 கோடியில் தயாரான லிங்கா, இதுவரை விநியோகம் மற்றும் இதர உரிமைகள் மூலமாக மட்டும் ரூ 200 கோடிக்கு மேல் குவித்துவிட்டது.

தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் உள்ள 950 அரங்குகளில் 700 அரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

lingaa_141612362230

இன்னும் ஒரு சாதனையாக, ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மொத்த தியேட்டர்களுமே லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் – திருப்பூர் ஏரியாவில் மட்டும் மொத்தம் 93 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 85 அரங்குகளில் லிங்காதான் ரிலீசாகப் போகிறது. இதற்கு முன் எந்த ரஜினி படத்துக்கும் இத்தனை அரங்குகள் கோவை ஏரியாவில் ஒதுக்கப்பட்டதில்லை. வேறு எந்தப் படத்துக்கும் இவ்வளவு அரங்குகள் ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

லிங்காவின் கோவை பகுதி உரிமை மட்டும் தனியாக விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்வழி




7 thoughts on “கோவை ஏரியாவில் மட்டும் 85 அரங்குகளில் லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை

  1. srikanth1974

    அவசரடிக்கு ரங்கா’
    அதிரடிக்கு லிங்கா’

  2. kumaran

    டிசம்பர் 12 நினைத்து பாருங்க எப்படி இருக்கும்

  3. மிஸ்டர் பாவலன்

    நண்பர்களே.. சௌந்தர்யா கோச்சடையான் படம் எடுக்க மிகவும்
    தாமதம் செய்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தார். ஆனால்
    கே. எஸ். ரவிகுமார் மிக குறைந்த காலம் எடுத்துக் கொண்டு,
    கிட்டத் தட்ட கமல் ஒரு படம் எடுத்து முடிப்பது போல், ஆறு மாசத்தில்
    எடுத்து முடிப்பது என்றால் இது ஒரு பெரிய சாதனை! (கமல் படம்
    மூன்று எடுத்தும் waiting -ல் இருப்பது அவருக்கு ஒரு புதிய சோதனை!
    ரஜினி படம் மூன்று எடுத்து waiting -ல் இருந்தது என்ற நிலை அவருக்கு
    நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் கூட வந்தது இல்லை..)

    இந்தப் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனபின் சௌந்தர்யா சற்று
    கமல் ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘கோச்சடையான்-2’
    எழுதி இயக்கினால் உலக நாயகனின் மூன்று படங்களும் ஒன்றன் பின்
    ஒன்று ரிலீசாகி திப்பு சுல்தான் படமும் ரிலீசாக ரெடியாகி விடும்!

    லிங்கா சூப்பர் ஹிட் சாதனை படைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    -=== மிஸ்டர் பாவலன் ==–

  4. gandhidurai

    இந்த சீமான் அறிவாளி யை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க. லிங்கா வந்தபின் மக்கள் இவன் மூஞ்சிலே குத்தபோரங்க

  5. gandhidurai

    எல்லாவனும் மேடை கிடைத்தால் கரகோசம் வேனும்னா உடனே தலைவரை பத்தி பேச ஆரம்பிச்சுடுறாங்க .எல்லாத்துக்கும் தலைவர் தேவை படுகிரார்

  6. மிஸ்டர் பாவலன்

    நண்பர்களே.. சீமான் பேச்சைப் பற்றி அக்கறை இல்லை.. ஆனால்
    “இயக்குனர் இமயம்” எனப் புகழப் படும் பாரதிராஜா தேவை இல்லாமல்
    சூப்பர் ஸ்டாரை இகழ்ந்து ஆனந்த விகடனில் பேசியது மிகவும்
    உறுத்தலாக இருந்தது.. ரஜினி நடித்து வந்த “கொடி பறக்குது” படம் தான்
    பாரதிராஜாவுக்கு ஒரு “comeback ” கொடுத்தது.. குப்பையான படமாக
    இருந்தாலும் நட்புக்காக ரஜினி செய்து கொடுத்தது இன்று பேச்சு
    கேட்க வேண்டி உள்ளது…

    -=== மிஸ்டர் பாவலன் ==-

  7. chozhan

    மிஸ்டர் பாவலன், பாரதிராஜா பேசியது ஒன்றும் தவறில்லை என்றுதான் நினைக்கிறேன், கமல் சொல்வதுபோல் நடிகர்களை நடிகனாக மட்டும் பாருங்கள். 20 வருஷமாகவா அரசியலுக்கு கூப்பிடுவிங்க? போய் வேலையை பாருங்கப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *