BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

10360405_890356537655347_9116110357001379152_n

சென்னை: தலைவர் ரஜினியின் லிங்கா படத்தின் முதல் காட்சி இன்று நள்ளிரவு, அதாவது படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது.

சென்னையில் காசி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் மட்டுமே 350 பேர் பார்க்கிறார்கள். நடிகர்கள் பலரும் இந்த காட்சிக்கு வரவிருக்கிறார்கள்.

ரஜினி மனைவி லதா, மகள்கள் ஆகியோரும்கூட இந்த காட்சிக்கு வரக்கூடும் என்கிறார்கள்.

சைதை ராஜ் தியேட்டரிலும் நள்ளிரவுக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பெருமளவிலான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கியுள்ளனர். இந்த இரு தியேட்டர்களிலும் ரஜினி பிறந்த நாளுக்கு கேக் வெட்டி, வாண வேடிக்கை நடத்தி காட்சிகளை ஆரம்பிக்க உள்ளனர். இந்த கொண்டாட்டங்களில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் பங்கேற்கிறார்.

புறநகர் பகுதிகளிலும் பல அரங்குகளில் நள்ளிரவுக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னைக்கு வெளியே உள்ள பல நகரங்களிலும் நள்ளிரவுக் காட்சி நடைபெறுகிறது. ரசிகர்கள் இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். விலை சராசரியாக ரூ 500. சில அரங்குகளில் இது ரூ 1000 வரை போயுள்ளது.

காசி, ராஜ், எஸ்எஸ்ஆர் பங்கஜம், தேவி கருமாரி, வில்லிவாக்கம் ஏஜிஎஸ், குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா உள்ளிட்ட அரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு லிங்கா சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

20141210_234127

மாயாஜால், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் அரங்குகளில் காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.

வெளிநாடுகளில்…

தமிழகத்துக்கு இணையாக வெளிநாடுகளிலும் ஒரு நாள் முன்னதாகவே லிங்கா திரையிடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இன்று மாலையே சிறப்புக் காட்சி தொடங்குகிறது.

-என்வழி




3 thoughts on “சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

  1. arulnithyaj

    ஒரு டிக்கெட் காசி தியேட்டர்ல கிடைக்குமா வினோ 🙂

    ____________

    காசில ஃபுல்.. இந்த நேரத்துக்கு மற்ற அரங்குகளில் கிடைப்பதும் கஷ்டமாச்சே
    -என்வழி

  2. குமரன்

    பிரிட்டனில் எங்கு திரையிடப்படுகிறது என்ற விவரம் உள்ளதா? இப்போது நான் பிரிட்டனில் (லண்டனில் அல்ல) உள்ளேன்.

  3. arulnithyaj

    நன்றி வினோ..குடும்பத்துடன் (என் இரண்டு மகன்களும் (இரட்டையர்) ஒரு மகளும் ரெம்ப ஆர்வமா இருங்காங்க 🙂 ) ஞாயிறு மாயஜாலில் 2:30க்கு டிக்கெட் எடுத்துட்டேன்..இருந்தாலும் நான் மட்டும் பார்க்கனும்னு கேட்டேன் 🙂 இந்தோனேசியா வில் இருந்து படம் சூபெர்னு வருது வினோ..காத்திருக்கேன் தலைவர் தரிசனத்துக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *