BREAKING NEWS
Search

லிங்கா பிரச்சினையைத் தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு!

லிங்கா பிரச்சினையைத் தீர்த்து வைத்த ரஜினிகாந்துக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு!

rajini2

லிங்கா பட விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

ஒரு படத்துக்கு, அதன் நாயகனுக்கு எதிராக செய்யக்கூடாத அத்தனை கேவலமான விஷயங்களையும் லிங்காவுக்கும் அதன் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் செய்தனவர் சிங்காரவேலன் தலைமையிலான சில விநியோகஸ்தர்கள்.

உண்ணாவிரதம், பிச்சைப் போராட்டம், படத்துக்கு வரிவிலக்கு கொடுத்ததற்கு எதிராக வழக்கு, ரஜினி மீது மோசடி வழக்கு என்றெல்லாம் கீழ்த்தரமாக இறங்கி தங்கள் உண்மையான முகத்திரையை தாங்களே கிழித்துக் காட்டினர் இவர்கள்.

இந்த நிலையில் ரஜினி பெரும் தொகை கொடுத்து இப்பிரச்சினையை முடித்து வைத்தார்.

இதுகுறித்து சிங்காரவேலன் மற்றும் அவர் கூட்டாளிகள் இன்று நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளதோடு, நன்றி அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக ரஜினியை, ராக்லைன் வெங்கடேஷை கன்னடர் என்று கூறி கண்டபடி அறிக்கைவிட்ட சிங்கார வேலன், அதற்காக கூனிக் குறுகுவதாகக் குறிப்பிட்டு மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த அறிக்கை:

‘லிங்கா’ பட நஷ்டஈடு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்களில் சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் முக்கியமானவர்கள். கலைக்குடும்பத்தில் கலகம் கூடாது என்று உழைத்தனர்.

10 கோடி ரூபாய் பணத்தை வாங்கி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரித்து கொடுக்க கலைப்புலி தாணு பட்டபாட்டை பார்த்த போது அவரது பதவி முள் கிரீடம் என தெரிந்து கொண்டோம்.

ராக்லைன் வெங்கடேஷ் எங்களை உபசரித்ததை பார்த்த போது அவரை போய் கன்னடர் என பேசி விட்டோமே என்று மனம் கூனி குறுகுகிறது. வில்லுக்கு விஜயன் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ்தான். அவரை அப்படி பேசியதற்காக மன்னிப்பு கோருகிறோம்.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து சந்தோஷப்படுத்துங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார். அதை ஏற்று நஷ்டஈடு வழங்கினார் ராக்லைன் வெங்கடேஷ். வேந்தர் மூவிஸ் இதில் பங்கு கேட்பது ஒன்றும் ஏற்புடையதாக இல்லை. திங்கட்கிழமை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல் கட்டமாக வைப்பு தொகை திருப்பி தரப்படும் என தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்கிறோம். எல்லா விநியோகஸ்தர்களும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

எங்களுக்கு உதவிய சூப்பர் ஸ்டார் ரஜினி, ராக்லைன் வெங்கடஷ், சரத்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

-என்வழி




6 thoughts on “லிங்கா பிரச்சினையைத் தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் பாராட்டு!

  1. sharajinis

    காசுக்காக எப்படி எல்லாம் பேசுரானுங்க நம்ம காசை வாங்கிக்கொண்டு நம்மளையே திட்னானுங்க தலைவரையும் திட்டிட்டு அவர் போட்டிருக்கிற பிச்சையையும் வாங்கிக்கொண்டு பாராட்டு அறிக்கைக் கொடுத்திருக்கானுங்க மானங்கெட்ட நாய்ங்க

  2. Rajagopalan

    what thalaivar did was totally not correct…
    he should not done that… it will create again the same problem for the next movies also…
    because of this, everybody saying that really Linga is a flop 🙁 thats y rajini had returned money….

  3. Rajagopalan

    please put the news about Rajini Bala . I guess you will be knowing this.. Rajini Bala is a fan of our thalaivar & met him last week…Rajini Bala is really god gifted child…

  4. srikanth1974

    திருவோடு ஏந்தியவர் வாழ்கை இனி நடுத்
    தெருவோடு நாறிப்போகட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *