BREAKING NEWS
Search

லிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்.. – அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு!

லிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்.. – அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு!

12TH_LINGAA_2241624g

லிங்காவுக்கு எதிராக… என்று ஆரம்பிக்கும்போதே… அட அவனா.. விட்டுத் தள்ளுங்க.. அதான் அவனுங்க எதுக்காக, யாருக்காக இதையெல்லாம் பண்றாங்கன்னு தெரியுமே.. எனும் அளவுக்கு ரசிகர்களும் மக்களும் தெளிவாக உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஒரு புது வழக்கைப் போட்டிருக்கிறான் அதே ஆசாமி.

“லிங்கா’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு பெற்று அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கின் சாரம்.

“லிங்கா’ படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெறப்பட்டுள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அந்தப் படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும்; தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் விதமாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், “லிங்கா’ என்பது தமிழ்ப் பெயர் இல்லை. இது சம்ஸ்கிருத வார்த்தையாகும்.
படத்தின் கதை அமைப்பு தமிழ்க் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் இல்லை (?!). இந்த கேளிக்கை வரி விலக்கு மூலம் தமிழக அரசுக்கு ரூ. 21 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது,” என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவை ஒருமுறை படித்தாலே, அது எத்தனை பெரிய அபத்தம் மற்றும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்பது தெரிகிறதல்லவா.

லிங்கா படம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருந்த மூன்றாவது நாளே, அந்தப் படத்துக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சிலர் மேற்கொண்டதெல்லாம் நினைவிருக்கலாம். முதல் மூன்று நாட்களிலேயே போதும் போதும் எனும் அளவுக்கு லிங்காவில் சம்பாதித்துவிட்ட இவர்களின் நோக்கம் படம் நஷ்டம், அதற்கு ஈட்டுத் தொகை வேண்டும் என்பதல்ல.. ரஜினியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பது, படத்தை ஓட விடாமல் தடுப்பது மட்டும்தான் என்று ரசிகர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

MDSB150823-MDS-M

அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து ரஜினியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் சிலர். இதற்காக பெரும் தொகையையும் செலவழித்து வருகின்றனர். ‘இது ரஜினிக்கு எதிரான உண்மையான ப்ளாக் மெயில்’ என விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கண்டிருத்திருந்தன. உண்மையில் படம் நஷ்டம் என்றால், அதைப் பிரச்சாரம் செய்ய இவ்வளவு பணம் செலவழிப்பது ஏன்? என்ற மீடியா எழுப்பிய கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. இதுவரை ரூ 5 கோடி வரை லிங்காவுக்கு எதிரான பிரச்சாரத்துக்காக வாரியிறைத்திருக்கிறது இந்த கோஷ்டி.

பிச்சையெக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள். ரஜினியின் தொடர்ச்சியான மவுனம் இவர்களை இஷ்டத்துக்குப் பேச வைக்கிறது என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு பக்கம், லிங்காவையும் ரஜினியையும் தாக்கிப் பேசி வரும் இந்த விநியோகஸ்தர்களின் பின்னணி என்ன? யாருக்காக அவர்கள் இந்த வேலையைப் பார்க்கிறார்கள்? யாருக்கு நெருக்கமானவர்கள் இவர்கள்? என்பதை அவர்களாவே வெளிப்படுத்திக் கொள்ளட்டும் என்பதற்காகவே ரஜினி தரப்பு அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

ஒருவிதத்தில் அது உண்மையாகிக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் நடிகர் விஜய்யுடன் தொடர்பே இல்லை என்று சொல்லிவந்த ஆசாமி, திடீரென போய் விஜய்யுடன் பிரியாணி விருந்து உண்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அந்தப் போட்டோவை தன் ட்விட்டரில் வெளியிட்டு, அடுத்த நாளே ‘என்றும் உங்கள் வழியில்.. ‘ என விஜய் மக்கள் இயக்க கொடியை வெளியிட்டு, விஜய்யால் யாருக்குமே நஷ்டம் இல்லை என்ற ஒரு அண்டப் புளுகைச் சொல்லி, தான் யார் என்பதை அந்த ஆசாமி அடையாளப்படுத்திக் கொண்டதெல்லாம் நினைவிருக்கலாம்.

தோல்விப் படத்துக்கு எப்படி ரூ 21 கோடி வரி கட்ட முடியும்?

முன்பு லிங்கா படத்தால் நஷ்டம் என்று கூறிக் கொண்டிருந்த இதே நபர், இப்போது படத்துக்கு ரூ 21 கோடி வரி கட்ட வேண்டும் என்கிறார். அதாவது கேளிக்கை வரி என்பது படத்தின் வியாபாரத்திலிருந்து செலுத்தப்படுவதல்ல. திரையரங்க வசூலிலிருந்து கட்டப்படுவது மட்டுமே. அப்படிப் பார்த்தால் படத்தின் வசூலில் 21 கோடி வரி என்றால், அந்தப் படம் தமிழகத்தில் வசூலித்தது எத்தனை கோடிகள் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம் (தமிழகத்தில் கேளிக்கை வரி 15 சதவீதம்.. அப்படி என்றால் ரூ 140 கோடி வரை தமிழகத்தில் அந்தப் படம் வசூலித்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?).

ரூ 21 கோடியை வரியாகக் கட்டும் அளவுக்கு வசூலைக் குவித்த படம் வெற்றிப் படமா.. தோல்விப் படமா? இப்படி சம்பாதித்துவிட்டு நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள அவர்களே வழிகாட்டியிருக்கிறார்கள் இந்த வழக்கு மூலம். இப்படி முன்னுக்குப் பின் முரணாக தகவல்களைச் சொல்லி, விளம்பரத்துக்காக தினம் ஒரு நாடகமாடிவரும் நபர்களுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை தரவேண்டிய நேரம் இது.

MDSB150822-MDS-M

தமிழனுக்கு பெருமை சேர்த்த லிங்கா

லிங்கா படம் கிளீன் யு சான்று பெற்ற படம். படத்தில் ஆபாச, வன்முறை, விரச காட்சிகள் துளியும் இல்லை. குழந்தைகளுடன் தைரியமாகப் பார்க்கத் தக்க படம் என பாராட்டுகளைப் பெற்றிருந்தது. படத்தின் பல காட்சிகள் இந்தியரின், தமிழரின் பெருமையை எடுத்துக் கூறின.

கல்லணையை உதாரணம் காட்டி கரிகால சோழனின் பெருமையையும், கோவை மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணையைக் குறிப்பிட்டு தமிழனின் அணைக் கட்டும் திறனையும் ரஜினியின் குரலில் அழுத்தமாகக் கூறியிருந்தது படம் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். இதற்காக தமிழக விவசாயிகள் சார்பில் ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து போஸ்டர்கள் அடித்ததும் நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தின் கேளிக்கை வரி விலக்குக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? அவர் செல்வாக்கை உபயோகப்படுத்திவிட்டாராம். இதைவிட பெரிய அபத்தம் இருக்குமா? தமிழக சென்சாரை அவமதிக்கும் செயல் இது. சென்சார் போர்டு நியாயமாக இந்த விஷமக்காரர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். காரணம், லிங்கா சமயத்திலேயே வந்த எத்தனையோ பெரிய படங்களைப் பார்த்து, அவற்றுக்கு யுஏ சான்று கொடுத்தவர்கள் சென்னை மண்டல தணிக்கை அதிகாரிகள். உதாரணம் ஐ, என்னை அறிந்தால். இவற்றுக்கு யு சான்று பெற கடைசி வரை போராடிப் பார்த்து, கடைசியில் முடியாமல், யுஏ சான்றுடன்தான் வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள்.

இவர்களிடம் ரஜினி தன் செல்வாக்கைக் காட்டி யு சான்று பெற்றதாகக் கூறுவது அவர்களை அவமதிப்பதற்கு சமமாகாதா? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கு லிங்கா எதிர்ப்பாளர்களின் உண்மை முகம் என்னவென்பதைக் காட்டும் இன்னொரு அழுத்தமான ஆதாரம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

-என்வழி
14 thoughts on “லிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்.. – அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு!

 1. rajagopalan

  saw this news in dhinakaran today… totally stupid….another case…
  what they want actually?

 2. குமரன்

  உண்மை எப்படியும் அவர்கள் வாயாலேயே அதுவும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக வரவேண்டும் என்பது அந்த லிங்காவின் ஆணை. அதை யாரும் மாற்ற முடியாது.

  லிங்கா என்ற சொல் சமஸ்கிருதம் என்பதெல்லாம் அப்பட்டமான அவதூறு. ‘லிங்கம்’ என்பது தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்துக்களுக்கும் இறை மூர்த்தம். அதைத் தமிழ் அல்ல என்பது போல அபத்தம் எதுவும் இல்லை. திருமூலர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், 63 நாயன்மார், அவ்வையார், தொல்காப்பியர், அகத்தியர், பதினெண்சித்தர்கள், சிவவாக்கியர், அருணகிரிநாதர், குமரகுருபரர் என்று எத்தனையோ முன்னோர் தத்தமது தமிழ்ப் பாசுர்னக்களில் பயன்படுத்திய லிங்கா என்ற சொல், தமிழ் அல்ல என்று சொல்ல இந்தத் தற்குறி, கிரிமினல், பிளாக் மெயில் கொள்ளைக்காரன் சிங்க்காரவேலனுக்கு எந்தத் தகுதியும் இல்லை. எத்தனை முட்டாளானால் இவன் சிங்காரம் என்ற சமஸ்கிருதச் சொல்லில் துவங்கும் பெயருடைய இவன் லிங்கா என்ற சொல் குறித்து இப்படி பேசுவான்?

 3. Saravan

  Why are they even attempting to pay back these idiots? They shunt be paid a penny.
  Sarathkumar or tir.subramiam shud ask in why these idiots
  R spending s much to defame ? Who give them money if they faced loss?
  Why shud they be considered on humanitarian grounds?

 4. Saravan

  Vendhar movies is also the culprit behind. Y no other actor is coming out in open and supporting Thalaivar ??

 5. மிஸ்டர் பாவலன்

  பிராடுவேலன் இது போல் கேஸ் போடுவதை விட்டு விட்டு
  தமிழ்ப் படங்களில் ஏதாவது ‘வில்லன்’ ரோல் கிடைக்குமா என
  முயற்சி செய்து பார்க்கலாம்..

  ஒரு தேர்ந்த வில்லன் செய்வது போல் அவர் அடுத்தடுத்து
  செய்து வரும் காரியங்கள் நடந்து வருகிறது.. இதை தமிழ்
  தினசரிகள் தலையங்கத்தில் போடுவது தான் துயரமானது!

  இந்த பிராடுவேலன் கேஸ் தள்ளுபடியானால் நல்லது!

  பார்ப்போம்!

  -== மிஸ்டர் பாவலன்==

 6. Sankar

  Serupala அடிக்கணும் இவங்கள. ஏன் தலைவர் மௌனமா இருக்கார். சிங்கு bastard மேல கேஸ் போடணும். lossnu சொல்லி இத்தன நாள் பிரச்சினை பண்ண நாய் இப்போ என்னவாம்?

  தெருவுல இழுத்து போட்டு உதைக்கணும் இவன. விஜய் ஒரு போட்ட பையன்.
  தலைவா உங்க rangeku இவனுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லணும் ninaikareengala ?

  ஹ்ம்ம் சொல்லுங்க நாங்க எறங்கி அடிக்கறோம்.
  அமைதியா இருக்கறது நல்லது ஆனா அதுவே நம்ம யாரும் கேவலமா நினைக்க வச்சிட கூடாது .

  உங்கள் ரசிகன்
  தலைவராக உங்களை மட்டும் ஏற்று கொண்ட உங்கள் ரசிகன்.

  உங்களுக்காக மட்டும் தமிழ் படம் பார்த்த பார்க்கும் உங்கள் ரசிகன்.
  உங்கள் படத்தை தவிர யார் படத்தையும் ஓடி போய் பார்க்காத உங்கள் ரசிகன்.

  நீங்கள் நடிக்க வில்லை என்றால் தமிழ் படம் பார்க்க மாட்டேன் என்ற அளவிற்கு உங்களை நேசிக்கும் உங்கள் ரசிகன்

  நீங்கள் சந்தித்தாலும் எங்களை சந்திக்க விட்டாலும் நீங்கள் தான் எங்கள் தலைவர். உங்களை காயபடுத்த முயல்வதை காண சகிக்காமல் கஷ்டப்படும் உங்கள் ரசிகன்.

  Sankar

 7. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய நண்பர்களே.. லிங்கா என்பது தமிழ் சொல்லா, சம்ஸ்கிருத சொல்லா என்பது தேவையற்ற விவாதம். எனது நண்பர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்க பேராசிரியர்) அடிக்கடி குறிப்பிடுவது போல் தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் புராதன மொழிகள். இலக்கணம் (grammar),சொல்லகராதி (vocabulary), இந்த இரண்டிலும் ஒரு மொழியில் இருந்து மறு மொழிக்கு சென்று இரண்டற கலந்த பின் அவற்றை தமிழ், சமஸ்கிருதம் என பிரித்து பேசுவது சரி அல்ல. ‘வேதம்’ என்பது சம்ஸ்கிருத சொல். இன்று இது எல்லா மதத்தினர்களாலும் அவரவர் மறையை குறிப்பிட பயன்படுகிறது. இது ஒரு உதாரணம் அல்லது எடுத்துக்காட்டு.

  மடையன் பிராடுவேலன் கவனிக்க வேண்டியது ஒரு படம் வரிவிலக்கிற்கு உகந்ததா, இல்லையா என்பது அந்தப் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து அல்ல, அந்தப் படத்தின் content-ஐயும் வைத்து தான். ‘தலைவா’ என்பது நல்ல தமிழ் சொல். ஆனால் அந்த படம் தரமான படம் அல்ல – வன்முறை அதிகம் கொண்ட படம். வரிவிலக்கிற்கு உகந்தது அல்ல.

  இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றில் லிங்க வழிபாடு அருவுருவ நிலையை குறிக்கிறது.அஷ்ட லிங்க வழிபாட்டால் பக்தர்களின் நோய், தோஷங்கள் என்பன தீர்ந்து நிம்மதி கிட்டும் என்பது ஐதிகம்.

  அஷ்ட லிங்கங்களாக இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசானிய லிங்கம் என்பன போற்றப்படுகின்றன.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. drogba

  அவர்கள் செய்தது எந்த ஆச்சரியதையும் எனக்கு தர இல்லை. அதாவது சந்திரனை பார்த்து நாய் குரைக்காமலா இருக்கப்போகிறது? அதுவும் இது பைத்தியக்கார தெரு நாய். அவ்வளவுதான். அந்த நாய்கள் குரைக்கட்டும்

 9. anumantha rao

  ரஜினியின் மனோ நிலை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை…. அவரால் அவரது ரசிகர்களாகிய நாம் அன்றாடம் மன வேதனயிகு ஆள்வதே பொழப்பாஇவிட்டது… இனி மேலும் நமது பொழப்பை விட்டு இப்படி மன வேதனை அடைய நான் தயாராக இல்லை… ரஜினிக்கும் ஒரு கும்முடு அவர் படத்திற்கும் ஒரு கும்முடு….. அவரின் மவ்னம் இனி அவரை பின்னோகியே இட்டு செல்லும் இது உறுதி, என்னை மன்னித்துவிடுங்கள் நண்பர்களே..

 10. Anumantharao

  மவுனம் கலைத்து மனதை தேற்றி விடு தலைவா.. ந்ஞானியின் மவுனம் கலகக்காரர்களுக்கு புரியபோவதில்லை… அந்த ஆண்டவனி கல்கி அவதாரம் எடுத்தான் என்பது உனக்கு தெரியாதா? உன் மௌவ்னம் உன் சுயநலம் என அனைவரும் தூற்றுகிறார்கள் வேதனை தாங்கவில்லை…..

 11. Nanda

  Nice article. thalaivar is great.. Nothing we can do here… thalaivar needs to deal with this matter in legal way.. His motivation and intension to give as much as trouble to give thalaivar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *