BREAKING NEWS
Search

லிங்காவுக்கு எதிரான சதி.. தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்ட சிங்கார வேலன்!

லிங்காவுக்கு எதிரான சதி.. தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்ட சிங்கார வேலன்!

1511129_337230363146134_7232503117342333656_n
டந்த மூன்று தினங்களாக வாட்ஸ்ஆப்பிலும், சவுண்ட் க்ளவுட், யுட்யூப் தளங்களிலும் உலா வந்து கொண்டிருக்கும் ஒரு ஆடியோ ஃபைல் குறித்துதான் பலரும் பேசி வருகிறார்கள். கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

அது லிங்கா படத்தின் விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்டு அந்தப் படத்துக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே எதிர்மறைப் பிரச்சாரம் செய்து வந்த சிங்கார வேலன் என்பவருக்கும், ஒரு பத்திரிகையாளருக்கும் இடையே நடந்த உரையாடல் அல்லது வாதம்.

அந்த பத்திரிகையாளர் வேறு யாருமில்லை.. நான்தான்!

சிங்கார வேலன் எப்படிப்பட்ட நபர், அவர் பின்னணி என்ன? எந்த நோக்கத்துக்காக லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் என்பதையெல்லாம் பல முறை சொல்லியிருக்கிறோம்.

லிங்கா நஷ்டம் என்ற குரல் கிளம்பியதிலிருந்து, அதன் உண்மைத் தன்மை என்ன.. இது விஷமப் பிரச்சாரமா… என்பதையெல்லாம் விசாரித்து எழுதி வந்தேன். அந்தக் குற்றச்சாட்டை கிளப்பிய சிங்காரவேலனிடம் அடுத்த நாளே பல கேள்விகளைக் கேட்டேன். ஆனால் அவர் கூறிய பதில்கள், சொன்ன விதம் நமது சந்தேகத்தை அதிகப்படுத்துவதாகத்தான் அமைந்தன.

லிங்கா படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. அடுத்த சில தினங்களில், அதாவது 18.12.2015 அன்று லிங்கா படத்தால் பெரிய நஷ்டம் என்று கூறி பிரச்சாரத்தில் இறங்கினார் சிங்கார வேலன். செய்தியாளர்களைச் சந்திக்க அழைப்பும் அனுப்பினார்.

அன்றுதான் லிங்கா படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். நாம் முதலில் ரவிக்குமாரைச் சந்தித்தோம். அவரிடம் சிங்கார வேலன் அழைப்பு குறித்து காட்டியபோது, ‘படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் எப்படி லாப நஷ்டக் கணக்கு போடமுடியும்?’ என்று திருப்பிக் கேட்டார் ரவிக்குமார்.

கேஎஸ் ரவிக்குமார் பேட்டியை முடித்த பிறகு, சிங்கார வேலனைச் சந்திக்கச் சென்றோம். ஆனால் போலீசார் வந்ததால் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

அடுத்த நாள் வேந்தர் மூவீஸ் சார்பில் சிங்கார வேலனுக்கு மறுப்பு அறிக்கையும், தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியானது.

ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் மீடியாவில் லிங்கா படத்துக்கு எதிராக இன்னும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார் சிங்காரவேலன். அது பிரச்சாரமாகவே இருந்தாலும், அவர் கூறிய அனைத்துக் கருத்துக்களும் ஒன் இந்தியா தளத்தில் இடம்பெற்றது நினைவிருக்கலாம். மண்ணுளிப் பாம்பு மோசடி, காந்தப் படுக்கை மோசடி என்றெல்லாம் அவர் லிங்கா வியாபாரம் குறித்துப் பேசிய பேச்சுகளும் இந்தத் தளத்தில் இடம் பெற்றன.

இந்த நிலையில் லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார் சிங்கார வேலனும் அவரது சகாக்கள் சிலரும். அன்று மாலையே தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து, சிங்கார வேலன் செய்தது அப்பட்டமான கொலை.. என் படத்தை அவர் தனது விஷமப் பிரச்சாரத்தால் கொன்றுவிட்டார் என்று கண்ணீர் மல்க பேட்டி தந்தார்.

இன்னொன்று சிங்கார வேலனின் பங்கு ரூ 1.25 கோடிதான் என்றும், அதிலும் கூட ரூ 55 லட்சத்தை அவர் பாக்கி வைத்துள்ளார் என்றும் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார். விநியோகஸ்தரான டி சிவாவும் இது குறித்துப் பேசினார். குறிப்பாக ‘ரஜினி சார் பற்றி இந்த சிங்காரவேலன் சொன்னதை வெளியிட்டால் ரசிகர்கள் கொந்தளித்துப் போவார்கள்.. அவ்வளவு மோசமாகப் பேசினார்,’ என்றார்.

இவற்றை முழுவதுமாகத் தொகுத்து நேற்று செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கடந்த திங்களன்று காலை என்னைத் தொடர்பு கொண்ட சிங்கார வேலன், தொடர்ந்து தனக்கு எதிரான செய்திகள் வருவதாக குறைப்பட்டார். இருதரப்பு செய்திகளையும் வெளியிடுவதுதானே முறை.. செய்தியாளராக அதைத்தான் செய்தேன் என்று கூறினேன். தான் மீடியேட்டர் அல்ல என்றும், விநியோகஸ்தர் என்றும் கூறினார்.

இது ஒரு சினிமா பிரச்சினைதானே, இதில் சீமான், வேல்முருகன் போன்ற அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை என்றும் நாம் கேட்டோம். அதற்கு அவரிடம் ஒழுங்கான பதில் இல்லை. பணம் கொடுத்து வாங்கிய படத்தை நான்கைந்து நாளிலேயே மோசமான படம் என்று எந்த விநியோகஸ்தராவது பிரச்சாரம் செய்வாரா? என்றெல்லாம் அவரைக் கேட்டோம்.

மேலும் அவர் தொடர்ந்து கத்தி படத்தை முன்னிறுத்துவது குறித்தும், விஜய்க்கு பிஆர்ஓ மாதிரி செயல்படுவது குறித்தும் கேள்வி எழுப்பியபோது அவரிடம் பதில் இல்லை. மாறாக ரஜினி மற்றும் ராக்லைன் வெங்கடேஷுக்கு ஆதரவாக செயல்படுவதாக நம்மைக் குற்றம் சாட்டினார். இத்தனைக்கும் இந்த சிங்கார வேலன் தினசரி அளிக்கும் பேட்டிகளை தொடர்ந்து நான் வெளியிட்டு வந்துள்ளேன்.

திங்களன்று நாம் பேசியது அனைத்தையும் திருட்டுத்தனமாக பதிவு செய்து வைத்துக் கொண்ட சிங்கார வேலன், அடுத்த சிலமணி நேரங்களில் அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு, ‘ஒன் இந்தியா சங்கர் எனக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,’ என்று வாட்ஸ்ஆப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும் இதுகுறித்து நாம் அவரைத் தொடர்பு கொண்டபோது, எனக்கு எதிராக எதுவும் எழுதக்கூடாது நீங்கள். அதற்கான எச்சரிக்கைதான் இது என்று மிரட்டினார். ஒரு நேரடியான ப்ளாக்மெயிலாகத்தான் இதனைப் பார்க்க முடிந்தது.

அன்று மாலை நடக்கும் செய்தியாளர் சந்திப்பிலும் இதுகுறித்து பேசுவேன் என்றார்.

அப்படிச் சொன்ன அடுத்த சில நிமிடங்களில் அவர் வெளியிட்ட இரண்டு ஆடியோ க்ளிப்புகள், சில நிமிடங்களில் உலகெங்கும் உள்ள ரசிகர்கள், சினிமா விரும்பிகள் மத்தியில் பரவியது. முதல் க்ளிப் 2.55 நிமிடம்தான் இருந்தது. அதை பலரும் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டாவது க்ளிப் 23 நிமிடங்கள் ஓடியது. அதில்தான் எங்களின் உரையாடல் முழுவதுமாக இடம்பெற்றது.

சிங்கார வேலன் எனது பேச்சைப் பதிவு செய்யும் நோக்கத்துடன், எச்சரிக்கையாக பேசிக் கொண்டிருக்க, அப்போதுதான் உறக்கத்திலிருந்து எழுந்த நான், அதைப்பற்றி கவலைப்படாமல், லிங்கா படத்துக்கெதிரான இவர்களின் மோசமான பிரச்சாரம் மற்றும் சிங்காரவேலனின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றியெல்லாம் சற்று வேகமாகப் பேசியிருந்தேன்.

பொதுவாக சினிமா, அரசியல் போன்ற துறைகளைச் சேர்ந்த பலருடனும் தினசரி பேசுபவன் நான். இவர்கள் அத்தனை பேரும் என்னுடனான உரையாடலைப் பதிவு செய்கிறார்கள் என்ற உணர்வு ஏற்பட்டுவிட்டால், எதையாவது சகஜமாகப் பேச முடியுமா? தகவல் சேகரித்து வெளியிட முடியுமா? அதுவும் ஒரு பத்திரிகையாளரின் பேச்சை அவரது அனுமதியின்றி பதிவு செய்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

ஆனால் எந்த நியாய தர்மத்தையும் பார்க்காமல் ஒரு பெரிய படத்தையே கொன்றவரான சிங்கார வேலன் இதையெல்லாம் அன்று செய்தார்.

ஒருவிதத்தில் அதுவே அவருக்கு எதிராக அமைந்தது. என் கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல முடியாமல, தன்னைத் தானே அவர் Expose செய்து கொண்டது லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிராக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பலருக்கும் உணர்த்த உதவியது என்றுதான் நினைக்கிறேன்.

இன்னொரு பக்கம், இந்த ஆடியோ க்ளிப்பில் சீமானைப் பற்றி நான் சில வார்த்தைகளைப் பிரயோகத்திருந்தேன். அவரை எனக்கும் என்னை அவருக்கும் நன்கு தெரியும்.

அவரிடம் இந்த க்ளிப்பை போட்டுக் காட்டியிருக்கிறார் சிங்காரவேலன். வெளியிட்டது தான்தான் என்ற உண்மையைச் சொல்லாமலே!

இன்று என்னைத் தொடர்பு கொண்ட சீமான், ‘நீங்க நம்ம தம்பியாச்சே.. என்ன இப்படிப் பேசியிருக்கிறீர்கள்?’ என்றார். நான் நடந்தததைச் சொன்னேன். மேலும், ‘ஏற்கெனவே நீங்கள் ரஜினிக்கு எதிராகப் பேசி வரும் நிலையில், இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று தயங்காமல் கேட்டேன்.

அதற்கு, ‘அவர்கள் வந்து என் ஆதரவைக் கேட்டார்கள். நான் வந்து பங்கேற்ற பிறகுதான் அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. அதற்காக என்னை மோசமாகப் பேசலாமா?’ என்றார். இன்னொன்று அந்த ஆடியோவை வெளியிட்டது நான்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த இரண்டாவது க்ளிப்பை மட்டும் கேட்டதால். இந்த இரு ஆடியோக்களையும் வெளியிட்டது சிங்கார வேலன்தான் என்பதைச் சீமானிடம் எடுத்துச் சொன்னேன்.

தனிப்பட்ட முறையில் இருவர் பேசியதை திருட்டுத்தனமாக பதிவு செய்து அதை வெளியிட்டு உங்களை அவமானத்துக்குள்ளாக்கியது அந்த நபர்தான் என்பதை தெளிவாக அவரிடம் சொன்னேன். அப்போதுதான் அவருக்கு விஷயம் புரிந்தது. ஆனாலும் தனிப்பட்ட முறையில் அவரை மரியாதைக் குறைவாகக் குறிப்பிட்டதற்காக, பணம் பெறுகிறார் என குற்றம்சாட்டியதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொண்டேன். அதேநேரம், லிங்கா வெளியான நாளிலிருந்து இந்த நபர் செய்து வந்த பிரச்சாரம், திட்டமிட்ட அரசியல் அனைத்தையும் அவரிடம் தெளிவாக விளக்கினேன். முழுவதுமாகக் கேட்டபிறகு ‘இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே!’ என்றார்.

இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்க, சில விஷமிகள் சமூக வலைத் தளங்களில் ‘ஒரு பத்திரிகைக்காரர் எத்தனை அராஜகமாகக் கேட்கிறார் பாருங்கள்… பிரபலங்களை ஒருமையில் விளிக்கிறார் பாருங்கள்..’ என்றெல்லாம் கமென்ட் அடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மனதிலிருந்ததைப் பேசினேன். எனக்குத் தெரிந்ததன் அடிப்படையில் வாதிட்டேன். அவற்றை அந்த நபர் அனுமதியின்றி பதிவு செய்வார், வெளியிடுவார் என்று யோசிக்கவில்லை. இதற்கு முன் அப்படி நடந்ததும் இல்லை. அந்த நபரின் செயல் எத்தனை பெரிய தவறு, மோசடி, அநாகரீகமானது என்பதைக் குறைந்தபட்சம் கண்டிக்கக் கூட துப்பில்லாதவர்கள், என்னைக் குறை கூறியிருந்தனர்.

இன்னொரு பக்கம், சிங்கார வேலன் என்பவர் லிங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர் பிரச்சாரம் மற்றும் இதைச் சுற்றிப் பின்னிய அரசியல் அனைத்தும் திட்டமிட்டவையே என்பதைப் புரிந்து கொள்ள இதைவிட வேறு தெளிவான ஆதாரங்கள் தேவையில்லை அல்லவா..

இப்போது அந்த நபர் ரஜினியின் காலில் விழுகிறேன் என்கிறார். ஒரு பக்கம் அவர் நடித்த படத்தை செத்த பாம்பு என்று கூறிக் கொண்டே காலில் விழுகிறேன் என்னும் இவரை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

-எஸ் ஷங்கர்

Clip -1

Clip 2

 
36 thoughts on “லிங்காவுக்கு எதிரான சதி.. தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்ட சிங்கார வேலன்!

 1. anbudan ravi

  சிங்காரவேலன் போன்ற கேவலமான பிறவியை இதுவரை கண்டதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் திரு வினோ அவர்களே, தலைவரின் மேல் விழ வேண்டிய பல கணைகளை நீங்க தடுத்து விட்டீர்கள். இது தலைவருக்கு தெரியுமா என்றுகூட தெரியவில்லை…..அந்த ஈனப்பிறவியை தோலுரித்து காட்டியதற்கு மனம் மகிழ்ந்த பாராட்டுக்கள்.

  இருவர் பேசும்போது ஒருவர் அனுமதி இல்லாமல் மற்றொருவர் பதிவு செய்யவே கூடாது என்கிற சட்டமே இருக்கிறது. அந்த அசிங்காரவேலன் மேல் நீங்கள் வழக்கு கூட பதிவு செய்யலாம். நீங்கள் எந்தளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. ஆனால் அதை எல்லாம் ஊதி தள்ளி விட்டு நீங்கள் உங்கள் பணியை தொடர்கிறீர்கள்…இன்னும் மிகப்பெரிய மன வலிமையை உங்களுக்கு ஆண்டவன் கொடுக்கட்டும்.

  அன்புடன் ரவி.

 2. baba

  வினோ/ஷங்கர்

  என்வழி படிக்கும் அனைவருக்கும் அது நீங்கள் தான் என்று அன்றைக்கே தெரியும்…அவன் விரித்த வலையில் அவனே சிக்கி கொண்டான்…அவன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது…அவர்களை கடவுள் பார்த்து கொல்வார்…ஒரே ஒரு வருத்தம்…அவனை mediator என்று சொல்ல கூடாது…அவன் ஒரு கீழ்த்தரமான மாமா வேலை செய்பவன்….

  எக்காரணம் கொண்டும் தலைவர் இந்த நாய்களுக்கு பணம் கொடுக்க கூடாது…
  கண்டிப்பாக வேந்தர் மூவீஸ் சிவாவின் சதியும் இதில் இருக்கிறது…

 3. Raj

  I sincerely hope this incident does not affect your career and your relationship with celebs. We have to be careful dealing with this guy.

 4. மிஸ்டர் பாவலன்

  //அது லிங்கா படத்தின் விநியோகஸ்தர் என்று கூறிக் கொண்டு அந்தப் படத்துக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே எதிர்மறைப் பிரச்சாரம் செய்து வந்த சிங்கார வேலன் என்பவருக்கும், ஒரு பத்திரிகையாளருக்கும் இடையே நடந்த உரையாடல் அல்லது வாதம்.///

  ///அந்த பத்திரிகையாளர் வேறு யாருமில்லை.. நான்தான்!/// (வினோ)

  மதிப்பிற்குரிய நண்பர் வினோ அவர்களே..

  உரையாடல் சிறப்பாக நடத்தியது நீங்கள் தான் என அறியாமல் இந்த
  sound clip link-ஐ ‘என் வழி’யிலேயே கொடுத்து உங்களையும், குமரன்
  அவர்களையும் கேட்கும்படி சொன்னது தவறு தான். உங்களை நேரில்
  சந்தித்தது இல்லை என்பதாலும், உங்கள் குரலை இதுவரை கேட்டதில்லை
  என்பதாலும் இந்த தவறு நடந்தது. Very sorry!

  அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 5. Arul

  அந்த ஆடியோ கேட்டஉடனேயே அது நீங்கள் தான்என்று தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி வினோ. அவனை நன்றாக மடக்கிநீர்கள். நான் நீங்கள் தான் பதிவு செய்து வெளியிட்டு இர்ருப்பீர்கள் என்று நினைத்தேன். அந்த நாயே வெளியிட்டது என்றால் அது எவ்வளவு பெரிய முட்டா குரங்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
  உங்கள் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.
  கண்டிப்பாக எந்த காரணம் கொண்டும் அவனுக்கு ஒரு பைசா தரக் கூடாது. அதற்கு ஆவன செய்யுங்கள்.
  கண்டிப்பாக அடுத்த படம் எந்திரன் வசூலை மிஞ்சும் வகையில் இருக்கும். என் விருப்பம் ராஜமௌலி இயக்கம் கலைபுலி தாணு தயாரிப்பு.

 6. மிஸ்டர் பாவலன்

  //திங்களன்று நாம் பேசியது அனைத்தையும் திருட்டுத்தனமாக பதிவு செய்து வைத்துக் கொண்ட சிங்கார வேலன், அடுத்த சிலமணி நேரங்களில் அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு, ‘ஒன் இந்தியா சங்கர் எனக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,’ என்று வாட்ஸ்ஆப்பில் தெரிவித்திருந்தார்./// (வினோ)

  திரு குமரன் அவர்களே.. நாம் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ
  ஒருவரை சந்தித்து பேசும் போது, ரகசியமாக பதிவு செய்து, பின் அதை
  வெளியிடுவது சட்டப்படி குற்றமா? இல்லை – சட்டத்தில் இது பற்றி
  சொல்லப்படவில்லையா?

  பல நியூஸ் மீடியாக்கள் – sting operation – என்ற முறையில் ரகசிய வீடியோ,
  ஆடியோ வெளியிடுவதுண்டு. அவையும் கூட பரிசீலிக்கப்பட்டு தான்
  அவற்றில் சில excerpts வெளியிடப் படுகின்றன.

  சிங்காவேலன் நண்பர் வினோ அவர்களிடம் மிகவும் கேவலமாக
  நடந்து கொண்டிருக்கிறார். வினோவின் பதிவை படித்தபின் தான் எனக்கு
  ஒரு உண்மை தெரிந்தது. உரையாடலை ரெகார்ட் செய்கிறோம் என்பதால்
  ஒரு எச்சரிக்கை உணர்வுடன் சிங்காரவேலன் பேசி இருக்கிறார்.. ஆனால்
  ரெகார்ட் செய்வது பற்றி வினோவிடம் எதுவும் சொல்ல வில்லை என்று.
  சிங்காரவேலனின் மிகவும் கீழ்த்தரமான செயல் இது!

  “வாய்மையே வெல்லும்’ என்பதால் வினோ வெற்றி பெற்றிருப்பது
  ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வை தந்திருக்கிறது.

  திணை விதைத்தவன் திணை அறுப்பான் !!
  வினை விதைத்தவன் வினை அறுப்பான் !!

  பொங்கல் வாழ்த்துக்கள்.. நன்றி, வணக்கம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. Sanjev

  டியர் வினோ,
  our Support always with you, Please continue your good work and a sincere fan of superstar. My personal opinion is Thalaivar should take some serious action soon.

 8. arulnithyaj

  வினோ அண்ணா! (உங்களை அண்ணா என்று அழைக்கலாம் தானே) அந்த ஆடியோவை கேட்ட பொழுதே அது நீங்கள் தான் என்று தெரிந்தது ஆனால் நீங்கள் அதை பற்றி ஒன்றும் சொல்லாததால் அமைதியாக இருந்து விட்டேன். மேலும் நீங்கள் அதில் சீமான் (இவர் எல்லாம் உங்களை தம்பின்கிர்ராறு.. ம்ம் என்னமோ போங்க) மற்றும் சொனக்ஷி சின்ஹா பத்தி எல்லாம் சொல்லி இருந்தீங்க அந்த விளக்கனை மீடியேடொர் மாமா பய ரெம்ப நிதானமா, பவ்யமா பேசும் போதே இத அவன் தான் வெளியிட்டு இருப்பான்னு தெரிஞ்சது சீமான பத்தி ஊரே அப்படி தான் பேசுது அவரு எல்லார் கிட்டேயும் விளக்கம் கேட்பார? அவர் வந்தததுக்கு பிறகு தான் தீர்வு வந்த்தாதுன்னு சொல்லுக்கிராறு! கலக்குறாரு 🙂 ராஜபக்ஷ (அரக்கன்) விழாவுக்கு போக வேண்டாம்னு ரஜினி சார் அமிதாப் சார்கிட்ட சொன்னதுனால தான் அவர் ஸ்ரீலங்கா போகல அதுக்கு என்னமோ இவர் பண்ண போரட்டதுனால தான் போகலன்னு காடிகிட்டறு இவர் மாதிரி ஒரு பச்ச சந்தற்பவாதிய யாரும் பார்த்தில்லை வினோ அண்ணா நாங்க இருக்கோம் உங்க பின்னாடி நன்றி அண்ணா உங்கள் சேவைக்கு

 9. Shankar

  நான் குழம்பித்தான் போனேன். ஏனெனில் துபாயில் தொடர்ந்து 3 நாட்கள் எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். 8 மால்களில், ஒவொன்றிலும் 3 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் தினந்தோறும் 12 காட்சிகள். இது தவிற தனி திரையரங்குகள். தோரயமாக நாளொன்றிற்கு 90 காட்சிகள். அனைத்தும் ஹவுஸ் புல். இது துபாயில் மட்டும்.

  இப்படியிருக்க லிங்காவிற்க்கு எதிராக நஷ்டம் என்ற விமர்சனம் ஆச்சர்யமாக இருந்தது. அதிக எதிர் பார்ப்பினால் படம் ஏமாற்றியது உண்மையே. ஆனால் முதல் வாரத்திலேயே வந்த இந்த எதிர்மறை பிரசாரம் நம்ப முடியாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி நஷ்டமாகவே இருந்தாலும் இவர்களின் அணுகுமுறை முற்றிலும் தவறானது. இதன் பின்னால் ஏதோ சதி இருப்பதாகவே என்னத்தோன்றுகிறது.

 10. MSK

  லிங்கா நல்ல படம். Vino, you rock in this audio. Not only Rajini,his fans also great…:)-

 11. Shankar

  நான் குழம்பித்தான் போனேன். ஏனெனில் துபாயில் தொடர்ந்து 3 நாட்கள் எல்லா திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள். 8 மால்களில், ஒவொன்றிலும் 3 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் தினந்தோறும் 12 காட்சிகள். இது தவிற தனி திரையரங்குகள். தோரயமாக நாளொன்றிற்கு 90 காட்சிகள். அனைத்தும் ஹவுஸ் புல். இது துபாயில் மட்டும்.

  இப்படியிருக்க லிங்காவிற்க்கு எதிராக நஷ்டம் என்ற விமர்சனம் ஆச்சர்யமாக இருந்தது. அதிக எதிர் பார்ப்பினால் படம் ஏமாற்றியது உண்மையே. ஆனால் முதல் வாரத்திலேயே வந்த இந்த எதிர்மறை பிரசாரம் நம்ப முடியாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி நஷ்டமாகவே இருந்தாலும் இவர்களின் அணுகுமுறை முற்றிலும் தவறானது. இதன் பின்னால் ஏதோ சதி இருப்பதாகவே என்னத்தோன்றுகிறது.

  இங்கு வினோ அவர்களின் கோபம் அதிகமாக தெரிந்தாலும், அது நியாயமானதே. சிங்காரவேலன் பல இடங்களில் பதிலளிக்க இயலாதவராக இருக்கிறார். பிரச்சனை செய்வதற்காகவே இந்த படத்தை வாங்கினாரோ?

 12. Murali

  Vino,
  There is a lot of damage already done for the movie and for superstar. Somewhere, not everything is fine in this episode. Your soft corner to Seeman is contradicting your support to Superstar. Seeman is a deadly poison in my opinion.

 13. Saravan

  Sir , hats off to you . Had a strong instinct that it was u on the other end of the clip. I really take a bow for ur courage and exposing this useless idiot.
  U have represented all of us and we are indebted to u. We will stand for u and support u forever.
  Hope all is well with seeman and you .
  Million thanks to u and continue ur great work.
  Our wishes and goodwill r always with u.,super sir
  Am out of words to praise u…
  Twitter itisprashanth’ u oruthar romba Kodachal kudukaru…mosquito tholla.

 14. கிரி

  வினோ இந்த சிங்காரவேலன் பெரிய டகால்ட்டி..

  1. இவர் உங்களை தொடர்பு கொண்ட நேரம் காலை நேரம், அப்போது தான் நீங்கள் எழுந்து இருக்கிறீர்கள். இந்த சமயத்தில் முன்னேற்பாடாக இருக்க மாட்டீர்கள். காலை நேரம் இது போல விவாதிக்க சரியான நேரமல்ல அதோடு வீட்டில் அனைவரும் கிளம்பிக் கொண்டு இருக்கும் நேரம். எனவே தான் இந்த நேரத்தை அவர் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும்.

  2. நீங்கள் ஏதாவது கூறினால் இதை வைத்து மிரட்டலாம் என்ற எண்ணத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

  3. தான் பதிவு செய்வதால், வார்த்தைகளை எச்சரிக்கையாக விட்டு இருக்கிறார். இவர் எப்படி தலைவரைப் பற்றி மிகக் கேவலமாக பேசினார் என்று சிவா அவர்களே கூறி இருக்கிறார். எனவே, இதை வைத்து மிரட்டலாம், தன்னைப் பற்றி வரும் செய்திகளை தடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கவனமாகப் பேசி உங்களிடம் வார்த்தைகளை வாங்க முயற்சித்து தான் நல்லவன் போல பேசி இருக்கிறார்.

  4. இவர் கூறுகிறார் தன்னை மீடியேட்டர் என்று கூறியது கொச்சைப் படுத்துவது போல இருக்கிறது என்று.. இதை விட மோசமாக எவரும் நினைக்க முடியுமா?

  இவர் லிங்கா படத்தை 7 ம் நாளில் இருந்து தினம் தினம் கொலை செய்தது தவறில்லை, முதல் நாள் 70% மக்கள் தான் வந்தார்கள் என்று கூறியது தவறில்லை, தலைவரை அசிங்கமாக பேசியது தவறில்லை, பலருக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்படுத்தியது தவறாகத் தோன்றவில்லை ஆனால், மீடியேட்டர் என்று கூறியது இவருக்கு தவறாக இருக்கிறது.

  இதே இவர் ஒரு படம் எடுத்து மூன்றாம் நாள் படம் சரியில்லை என்று இவரைப் போல யாராவது கிளம்பினால் பொறுத்துக் கொள்வாரா?

  அவர் இதை வெளியிட்டால் இவருக்கு லாபம் என்று நினைத்தது தான் இவர் செய்த தவறு. இந்த ஆடியோ இவரை டோட்டல் டேமேஜ் செய்து விட்டது. உங்களின் கேள்விகளுக்கு அனைவரிடையே பலத்த வரவேற்பு.

  இதே கொஞ்சம் தாமதமாக அழைத்து இருந்து இருந்தால், நீங்கள் இன்னும் வெளுத்து வாங்கி இருந்து இருக்கலாம். கேட்க இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது.

  இது போல பதிவு செய்தது மிகப் பெரிய தவறு. இது அவரையே டேமேஜ் செய்து விட்டது என்றாலும் இனி நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு பத்திரிகையாளரிடமே இது போல செய்கிறார் என்றால், இவர் எப்படிப்பட்ட ஆள் என்று புரிகிறது.

  உங்களின் கேள்விகளுக்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. .

  சிங்காரவேலனுக்கு பொங்கல் வைத்த வினோக்கு பொங்கல் வாழ்த்துகள் 🙂

 15. babu

  இப்போ தான் கேட்டேன் ! ரொம்ப correct நீங்க பேசினது !

 16. குமரன்

  வினோ அவர்களே

  பாராட்டுக்கள். மிக அருமையாக உரையாடலை நடத்தி இருக்கிறீர்கள். மிக அருமையான கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள்.

  ரஜினியின் வயது அவரது ரசிகர்களின் வயது குறித்தெல்லாம் பேசும் சிங்காரவேலன் வயது என்ன? ஏனெனில் இவர் தம்மைத் தாமே ரஜினி ரசிகன் என்று வேறு கூறிக் கொள்கிறாரே?

  சிறு குழந்தை முதல் வயதானவர் வரை ரசிகர் இருக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் என்பது உலகுக்கே தெரியுமே?

  பணத்துக்கு அலையும் சிங்காரவேலன் முகத்திரையைக் கிழித்ததற்கு வாழ்த்துக்கள்.

 17. suresh.KD

  ரிலாக்ஸ் வினோ, நாங்கள் எப்பொழுதும் உங்கள் பின்னால் இருக்கிறோம்.
  உங்கள் போராட்டம் உண்மைக்கான (தலைவருக்கான) போராட்டம். நிச்சயம்
  நாம் அவர்களது (குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் பொய்யர்களின்) தோல் உரிபோம். உங்களின் உண்மையான உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகிறேன். நன்றி.

 18. karthik

  hello Friends,
  I am an ardent fan of Rajani Sir from my childhood. Even my two sons are Rajani sir.
  We are in US. My first son watches Rajani Sir’s movies in youtube every weekend.
  This is the power of Thalaivar. I heard the audio clip in youtube. I wonder how this guy (mamavelan) got all the guts in the world to talk about Thalaivar and his fans. I dont care if this is sabotage plan executed by so and so actor and his cronies. But what worries me a lot is what Thalaivar is thinking about all this nonsense going around his film. I worry a lot about his peace of mind rather than the movie’s status. If some cheap folk can incur a huge dent to the popularity of a superstar’s movie, then just think of the state of the people in this state. Anybody can do anything to anybody. This is the current state of our society.
  There is no morality/humanness in people’s activities. I am saying from the bottom of my heart “whoever did this and whoever is behind this, let them have a rotten death”
  If God is there, He will really make this happen soon. Nenju valickudhaiya. Porucka mudiyalai.

 19. chenthil UK

  சீமான் படம் எடுத்தபோது அதெலாம் ஓடுன படம் மாதிரி ஒன்னும் ஞாபகம் இல்லை … யாருக்கும் நஷ்டத்தை ஈடு செய்ததாகவோ … நியாயவானாக இருந்ததாக எந்த ஒரு தகவல் கேள்வி பட்டதில்லை… ஆனால் என்னா ஞாயம் பேச வந்தாருன்னு சீமான் பேசுனத பார்த்து சிரிப்பு தான் வந்துச்சு… ஆனால் சிங்காரவேலன், சீமான் எல்லாம் எது பிஜேபி சதி மாற்றி தெரியுது … ஏனென்றால் சொத்து பிரச்சனை வேற இருகிரமாற்றி NDTV நியூஸ் எல்லாம் போட்டுச்சு….. எல்லாம் பெரிய அரசியல் இருபதாக சந்தேகம்

 20. Sankar

  Watching Linga again.Thalaivar being sent out of that village.Tears in my eyes.Unmai oru naal vellum Singaravelan b……. This guy will rot in hell for criticizing such a movie.

 21. Nanda

  Excellent job Vino/Sanker. I watched that video in youtube. It was excellent question.. I saw he struggle a lot to answer the quest. Atleast we know whats going on behind the scene.

  Wish you all a very happy pongal!

 22. Deen_uk

  அந்த ஆடியோ file கேட்கும்போதே நினைத்தேன்,,அந்த பத்திரிகையாளர் நீங்களாக தான் இருக்கும் என்று.! வாழ்த்துக்கள் மற்றும் ன்றிகள் வினோ..குறைந்த பட்சம் நீங்களாவது இந்த அநியாயத்திற்கு எதிராக ஒரு குரல் கொடுத்தீர்கள்..என்னாச்சு வினோ அண்ணா? இப்போது அந்த குள்ளநரி கூட்டத்தின் சத்தத்தையே காணோம்? எனக்கு சிவா மேலயும் சந்தேகம் உள்ளது,அவரது நோக்கமும் காசு பறிப்பது போல உள்ளது வினோ அண்ணா.

 23. மிஸ்டர் பாவலன்

  ///எனக்கு சிவா மேலயும் சந்தேகம் உள்ளது,////

  பலருக்கும் அவர் மேல் சந்தேகம் உள்ளது.

  ராக்லைன் வெங்கடேஷ் அவர்கள் ப்ரெஸ் மீட்டில் சிவா பல்டி அடித்து விட்டார்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 24. sidhique

  வினோ அவர்களே

  பாராட்டுக்கள். மிக அருமையாக உரையாடலை நடத்தி இருக்கிறீர்கள். மிக அருமையான கேள்விகளை முன்வைத்திருக்கிறீர்கள்.

  ரஜினியின் வயது அவரது ரசிகர்களின் வயது குறித்தெல்லாம் பேசும் சிங்காரவேலன் வயது என்ன? ஏனெனில் இவர் தம்மைத் தாமே ரஜினி ரசிகன் என்று வேறு கூறிக் கொள்கிறாரே?

  சிறு குழந்தை முதல் வயதானவர் வரை ரசிகர் இருக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் என்பது உலகுக்கே தெரியுமே?

  பணத்துக்கு அலையும் சிங்காரவேலன் முகத்திரையைக் கிழித்ததற்கு வாழ்த்துக்கள்.

 25. Thanioruvan

  சிங்காரவேலன் – இவர் 1995 ஆம் ஆண்டு, நாகபட்டினம் இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து , இரண்டாம் ஆண்டே இவருடைய மோசமான நடவடிக்கையால் ,கல்லூரியில் இருந்து நீக்கபட்டார்.அதன் பின் அஞ்சலை அம்மாள் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார் .இவர் எப்போதுமே பேச்சால் வசியம் செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர் .. சொல்வதெல்லாம் உண்மை போல தோன்றும்..சிந்தித்து பார்த்தால் அனைத்திற்கும் கிரிமினல் எண்ணங்கள் இருக்கும் . சூழ்ச்சி செய்வதில் நண்பர் எதிரி என்று பார்க்க மாட்டார். தான் நினைத்த புகழை அடைய எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர்.அரசியல் வாதிகளே அசந்து போகும் அளவிற்கு பேசக்கூடியவர்.நேரம் வந்தால் , இந்த சீமானையே ஏறி மிதித்து செல்லும் எண்ணம் கொண்டவர்.நிமிடத்திற்கு ஒரு பேச்சு ஒரு சிந்தனை என்று தன்னை தானே குழப்பி ,மற்றவர்களையும் குழப்பத்தில் தள்ளும் ஆற்றல் படைத்தவர். இவருடைய பேச்சை நம்பி பின்னால் செல்பவர்கள், வெகு விரைவிலே இவருடைய உண்மையான குணம் தெரிந்து விலகி செல்வர்.

 26. Thanioruvan

  சிங்காரவேலன் தனது பேட்டியில் , கலைஞர் தேர்தலின் போது , இதுதான் எனக்கு கடைசி தேர்தல் என்று அனுதாபம் தேடுவார் என்று பகிரங்கமாக விளம்பி உள்ளார்.. தி மு க தொண்டன் எங்கே போனான் …இது அபத்தம் இல்லியா ?!!!…பின் நாட்களில் இவரே தி மு க வில் சேர்ந்து எம் எல் எ தேர்தலில் நிற்க கூடும் .. கவனத்தில் கொள்க …பட்டுகோட்டை மக்களே தயாராயி இருங்கள் …

 27. Thanioruvan

  தனி மனித சந்தேகங்கள் ..
  சிங்காரவேலன் – இவர் 8 கோடி ரூபாய் கொடுத்து படம் வாங்கியுள்ளதாக சொல்லுகிறார் .இருக்கட்டும். எப்படி வந்தது இந்த 8 கோடி ரூபாய்.?. சம்பாதித்ததா ?. நண்பர்கள் கொடுத்தாதா?. தியேட்டர் உரிமையாளர்களிடம் முன்பணம் பெற்றதா ?.. எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.. தயாரிப்பாளரின் கூற்று படி 75 லட்சம் ரூபாயோ , சிங்காரவேலன் கூற்று படி 1.25 கோடியே 25 லட்சம் …எப்படி ஒரு நிறுவனம் கால் பங்கு பணத்தை கூட முன்பணமாக பெறாமல் சிங்கரவேலனுக்கு படத்தை விற்றது ?… வேந்தர் மூவிஸ் கே வெளிச்சம்… இவர் வேந்தர் மூவிஸின் பினாமியோ ?…வேந்தர் மூவீஸ் இரட்டை லாபம் அடைய போட்ட திட்டமா?…. தஞ்சை திருச்சி 55 தியேட்டர் அதிபர்கள் எவ்வளவு முன்பணம் சிங்கரவேலனுக்கு கொடுத்தார்கள் ?.. அந்த பணம் எங்கே போயிற்று ?… படம் நஷ்டம் என்றால்.. அது சிங்கரவேலனுக்கா , இல்லை தியேட்டர் அதிபர்களுக்கா?… இவர் வசூலித்த பணத்தை வெளியிட முடியுமா ?…இவர் பெரும் நஷ்ட ஈடை , படம் பார்த்த எனக்கும் திருப்பி கொடுப்பாரா ?…ஒரு பொருளை வாங்கிய முதலீட்டாலரே , 4, 5 ஆம் நாளே பொருள் சரியில்லை என்றால் , பயனீட்டாளர் எப்படி வாங்கி பயன் பெற தோன்றும் ?….தான் நஷ்டம் அடைந்தாலும் ,தரம் குறைந்த பொருளை மக்கள் பயன் படுத்த வேண்டாம் என்ற சிங்கரவேலனின் நல்ல எண்ணமா?…சீமான் இதுவரையிலும் தமிழையும் தமிழ் மக்களயும் வாழ வைத்தவரா?…சினிமாவை நம்பி இருக்கும் மக்களுக்கு வாழ்வு கொடுத்தவரா ?.. இவர் ஏன் வந்தார்?… தமிழர் கன்னடர் பிரச்சனை ஏன் இதில் வர வேண்டும் ?…இன்றைய கால கட்டத்தில் தமிழில் படம் எடுக்கும் ஒருவன் சென்னையில் தான் அலுவலகம் வைத்து இருக்க வேண்டுமா?…. அண்மையில் 25000 ஊழியர்களை மென்பொருள் நிறுவனம் வெளியேற்றியதே … இந்த தமிழ் உணர்வாளர்கள் எங்கே போனார்கள் ?…எல்லா மென்பொருள் நிறுவனங்களுக்கும் சென்னையில் அலுவலகம் உள்ளதா ?…அரசியல் லாபங்களுக்காக , என்னை போன்ற பொது மக்களை பகடைக்காயாய் உபயோகிப்பது எவ்வாறு நியாயம்..?…எது எப்படி ஆயினும் இன்னொரு சிங்காரவேலன் நியாயமான காரணங்களுக்காக வரலாம்.. ஆனால்.. இந்த சிங்காரவேலன் மிகவும் அபாயகரமானவர் இந்த சமூகத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *