BREAKING NEWS
Search

300 அரங்குகளில் 25-ம் நாளாக ஓடும் லிங்கா… மெகா ஹிட் என அறிவிப்பு!

300 அரங்குகளில் 25-ம் நாளாக ஓடும் லிங்கா… மெகா ஹிட் என அறிவிப்பு!

FE_0501_MN_21_Cni6216

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா திரைப்படம் 300-க்கும் அதிகமான அரங்குகளில் 25 நாளாக ஓடுகிறது.

இந்தப் படத்துக்காக இன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தில் படம் மெகா ஹிட் என அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்து வெளியான படம் லிங்கா. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அவரது ரசிகர்களுக்குப் பரிசாக படத்தை வெளியிட்டனர்.

இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக கிட்டத்தட்ட 700 அரங்குகளிலும் உலகெங்கும் 3000-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் வெளியான லிங்கா படம், முதல் மூன்று நாட்களில் ரூ 104 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது.

ஆனால் நான்காவது நாளே படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிலர் புகார் கூறினர். படம் குறித்து அவதூறு பரப்பினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் எச்சரித்தது.

இப்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஓடிய நிலையில், மீண்டும் நஷ்டம் என்று கூறி சிலர் புகார் கூறி வருகின்றனர்.

FE_0501_MN_16_Cbe3510

இந்த நிலையில் படம் 25 நாளைத் தாண்டி ஓடுவதையொட்டி இன்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில் லிங்கா மெகா ஹிட் என அறிவித்துள்ளனர். இந்தப் படம் பெரும் வசூலை ஈட்டியுள்ளதாகவும், அந்த விவங்களை வரும் 8-ம் தேதி வெளியிடப் போவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

படம் இன்னும் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. சென்னை நகரில் 20 அரங்குகளிலும், புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் 50-க்கும் அதிகமான அரங்குகளிலும் ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.

FE_0501_MN_20_Tnj2097

கோவை மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 40-க்கும் அதிகமான அரங்குகளிலும், திருச்சி – தஞ்சைப் பகுதியில் கிட்டத்தட்ட 20 அரங்குகளிலும் 25 நாளைக் கடந்து ஓடுகிறது லிங்கா.

கேரளாவிலும் படம் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.

மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகளிலும் படம் 25 நாட்களைத் தாண்டி ஓடுகிறது.

-என்வழி
15 thoughts on “300 அரங்குகளில் 25-ம் நாளாக ஓடும் லிங்கா… மெகா ஹிட் என அறிவிப்பு!

 1. arulnithyaj

  உண்மை எப்பொழுதும் வெல்லும் என்பதற்கு தலைவரே சாட்சி … நன்றி வினோ 8ம் தேதிக்கு ஆவலுடன் காத்து இருக்கின்றோம்

 2. Murali

  Is there a way to control brokers and too many middle agents to avoid astronomical distribution price of Superstar’s movie? I think the distrubution price limits for future movie’s of thalaivar movies needs to be in his control or under his terms and conditions. Otherwise this industry will bring unnecessary strain on repute to our Rajini.

  Vino need your opinion on how the marketing aspects can be better handled by producers for superstar’s movies.

 3. SS Fan

  Lingaa is super duper hit! No doubt about it. I watched 3 times already and every time i watch , it feels fresh.

  So , i know , “Kuruvi and his fan’s and Kuruvi’s circle” is propagating bad about this movie.
  I am going to ask Mr. Kuruvi in his Q/A session in twitter about Lingaa movie and want to see his answer.

  The way , i am going to ask the question is below.

  “Ilaiya Thalapathi Sir, As we all know , you are super star’s big fan ( veriyan – as u have said this many times in the interviews/meetings ) , how do you like “Thalaivar’s Lingaa movie?

  முள்ள முள்ளால்தான் எடுக்க முடியும் !

 4. s venkatesan, nigeria

  இந்த படம் 2 வேறுபட்ட காலங்களில் வருவது மற்றும் அணை கட்டுவது போன்ற காட்சிகள் இருந்தும் ஆறு மாதங்களில் தலைவருக்காக முடித்து கொடுத்த KS. ரவிக்குமார் பாராட்ட பட வேண்டியவர். சிலருக்கு பிடிக்காத கிளைமாக்ஸ் மட்டும் கருத்தில் கொள்ள கூடாது. மேலும் அவர் ஒரு ரசிகனாகவே இருந்து தலைவர் படத்தை எடுப்பதால் இவர் ரசிகர்கள் விரும்புவதை கொடுக்க முடியும். இவர் மட்டுமே குறுகிய காலத்தில் ஒரு சமுக படம் கொடுக்க முடியும் என்பதால் மீண்டும் தலைவர் இவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும்.

 5. மிஸ்டர் பாவலன்

  ///திருச்சி – தஞ்சைப் பகுதியில் கிட்டத்தட்ட 20 அரங்குகளிலும் 25 நாளைக் கடந்து ஓடுகிறது லிங்கா.///

  இந்தப் பகுதியை சேர்ந்த ஒரு குருவி ஆதரவாளரான வினியோகஸ்தர் தான்
  முப்பது சதவிகிதம் கூட வசூல் இல்லை, பெரும் நஷ்டம் என புலம்பி
  பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டி இருக்கிறார்.
  உண்ணாவிரத்திற்கு அனுமதி கேட்டு ஹைகோர்ட்டிர்கும் சென்றுள்ளார்..
  அவர் பெயர் சிங்காரவேலன் என நினைவு..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 6. Radharavi

  லிங்கா படம் உண்மையான வெற்றி படம். இதில் சந்தேகம் ஏதுமில்லை. சில மீடியாகாரர்கள். சில பொறாமை பிடித்தவர்களின் கூட்டு சதி தான். லிங்கா படம் உலகம் பூராவும் வசூலை வாரி குவித்து வருகிறது. அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் Blockbuster தான்.

  Long Live my Demi-God Super Star Rajini

 7. saranya

  vendhar moviesum, rockline productionsum, erosum collection vivarathai sollatha varai ellarum padam nashtam nu thaan solvaanunga

 8. srikanth1974

  திட்டத் திட்ட திண்டுக்கல்
  வைய்ய வைய்ய வைரக்கல்

 9. siva

  சென்னையில் 4 வார வசூல் கத்தியை நெருங்கவில்லை. இதன் படி தமிழ்நாடு முழுவதும் அதே நிலவரம் என கொள்ளலாமா?. அல்லது ***** விளியிடும் வசூல் பொய்யா?. intharkku பதில் தரவும்
  ___________

  அதெல்லாம் ஒரு இணையதளம் என்று பொருட்படுத்த தேவையில்லை. சொல்வதெல்லாம் பொய். ஒரு முறைகூட சரியான வசூல் நிலவரத்தை வெளியிட்டதில்லை. காரணம் அது அவர்களுக்குத் தெரியாது.

  -என்வழி

 10. raju

  10 படையப்பா, 5 எந்திரன்னு சொல்லி, மண்ணுள்ளி பாம்பு மோசடி நடந்துவிட்டது- ‘லிங்கா’ விநியோகஸ்தர் oneindia news என்ன நடக்கிறது வினோ சார்.
  _________

  இப்போது என்வழியில் வெளியாகியுள்ள கட்டுரையைப் படிக்கவும்.

 11. mukesh

  தட்ஸ் தமிழில் வந்திருக்கும் செய்தி. இன்றைக்கு ஜூ வீ பேட்டியில் சிங்காரவேலன் சொல்லியிருப்பது தமிழ்நாட்டில் மொத்தம் 72 கோடி வசூல் என்கிறார். அப்படி பார்த்தால் 60 கோடிக்கு விற்கப்பட்டதாக வந்த செய்திபடி லாபம்தானே? எப்படி அய்யா பெரிய நஷ்டம் ஏற்படும்? மேலும் அதே பேட்டியில் இதே சிங்காரவேலன் சொல்கிறார் தவறான தகவல் தந்து வரிவிலக்கு பெற்றதால் தமிழக அரசுக்கு 20 கோடி வரி இழப்பு ஏற்பட்டது என்கிறார். 20 கோடி வரி (15%) என்றால் எவ்வளவு வசூல் என்பதை நீங்களே போட்டு பாருங்கள்.

  இந்த சிங்காரவேலன் இது வரை 4 கோடி மட்டும் கிடைத்ததாக சொல்கிறார். ஒரு பேச்சுக்கு இதை உண்மை என்றே வைத்து கொள்வோம்.

  படத்தை ஒரு விநியோகஸ்தரிடம் இருந்து 8 கோடிக்கு வாங்கியதாக சொல்கிறார். அந்த விநியோகதர் எவ்வளவு கொடுத்து வேந்தர் மூவிசிடமிருந்து வாங்கியிருப்பார். வேந்தர் மூவிஸ் ஈராசுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார். ஈராஸ் Rocklinukku எவ்வளவு கொடுத்திருப்பார்.

  ஒரு reverse working . இப்படி எல்லோரும் லாபம் பார்த்திருக்கிறார்கள் லிங்கா படம் மூலமாக.

  ஒரு பொய்யை மறைக்க எவ்வளவு பொய்கள். இப்படி பட்டவர்களுடைய வேஷம் ஒரு நாள் நிச்சயம் களையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *