BREAKING NEWS
Search

மூன்றே நாளில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்த தலைவர் ரஜினியின் லிங்கா!

மூன்றே நாளில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்த தலைவர் ரஜினியின் லிங்கா!

100 cr

சென்னை: வெளியான மூன்றே நாட்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

தலைவர் ரஜினி இரு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் வெளியான படம் லிங்கா.

தமிழ், தெலுங்கில் உலகம் எங்கும் இந்தப் படம் வெளியானது. இந்தியில் இந்தப் படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த நேரடிப் படம் என்பதால் படத்துக்கு கூட்டம் அலைமோதியது. தமிழகத்தைப் போலவே, வெளிநாடுகளிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

அரங்குகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய சாதனையே நிகழ்ந்தது.

முதல் நாள் மட்டும் ரூ 37 கோடியைக் குவித்தது லிங்கா படம். இது ரெகுலர் ஷோக்கள் மூலம் வந்த வசூல். அதிகாலை 1 மணி, 4 மணி மற்றும் 8 மணிக்கு நடந்த சிறப்புக் காட்சி வசூல் இதில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் முதல் மூன்று நாட்களுக்கான வசூல் தொகை எவ்வளவு என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.

உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் இந்தப் படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துவிட்டது.

இந்திப் பதிப்பும் வெளியாகியிருந்தால், இந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடியும், ஆந்திரம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ 26 கோடியும், வெளிநாடுகளில் ரூ 21 கோடியும் வசூலாகியுள்ளது லிங்காவுக்கு.

இது ரஜினியின் முந்தைய படமான எந்திரனுக்கு நிகரான வசூலாகும். சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையத்தில் லிங்காவின் வசூல் சாதனை குறித்துதான் பலரும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.

-என்வழி

படம்: குரு ரஜினி

 
20 thoughts on “மூன்றே நாளில் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்த தலைவர் ரஜினியின் லிங்கா!

 1. srikanth1974

  எப்படியும் இந்தவார இறுதிக்குள் மொத்த வசூல் விவரங்களும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கிறேன்.

  படையப்பா’ உன் முந்தைய சாதனைய உடையப்பா

 2. Vazeer

  வினோ சார் சூப்பர் ஸ்டார் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கார். குவைத் பாக்ஸ்ஆபிசில் டாப் டென் வரிசையில் லிங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உங்கள் பார்வைக்கு குவைத்தின் சினிஸ்கேப் தளத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். மறவாமல் இதை என் வழி மற்றும் தட்ஸ்தமிழில் இந்த முக்கிய செய்தியை பதிவு செய்யவும். “குவைத்திலிருந்து அப்துல் வசீர்” என்று என் பெயரை தயவு செய்து குறிப்பிடவும். சுட்டி இதோ:

  http://webserver2.kncc.com/index.php

  நன்றி

 3. Vazeer

  வினோ சார் சூப்பர் ஸ்டார் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கார். குவைத் பாக்ஸ்ஆபிசில் டாப் டென் வரிசையில் லிங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உங்கள் பார்வைக்கு குவைத்தின் சினிஸ்கேப் தளத்தின் சுட்டியை இணைத்துள்ளேன். மறவாமல் இதை என் வழி மற்றும் தட்ஸ்தமிழில் இந்த முக்கிய செய்தியை பதிவு செய்யவும். “குவைத்திலிருந்து அப்துல் வசீர்” என்று என் பெயரை தயவு செய்து குறிப்பிடவும். சுட்டி இதோ:

  http://webserver2.kncc.com/index.php

  நன்றி!

 4. sakthi

  பண்டிகை நாட்களில் படம் வெளியே வருவது மற்ற நடிகர்களுக்கு
  அனால் படம் வெளியே வரும் நாளையே மொத்த பண்டிகை நாளாகா மாறுவது ரஜினி அவர்களுக்கு மட்டுமே சாத்தியம் .மேல சொன்ன சாதனை எல்லாம் நடக்கமா இருந்தாதான் அது ஆச்சர்யம் . இதெல்லாம் குழந்தைக்கும் தெரிந்த செய்திதான் அதுதான் ரஜினி மாஸ் . அவரின் சாதனையை அவரால் மட்டுமே முந்தி செல்ல முடியும் , டெண்டுல்கர் சாதனையை கோலி அல்லது ஷர்மா முறிக்கலாம் , ரஜினி அவர்களுக்கு அந்த போட்டியே இல்லை .

 5. குமரன்

  தினமலர் கூடத் தனது “விமரிசனங்களுக்கு” மத்தியில், 104 கோடி ரூபாய் வசூலை ஒப்புக் கொண்டுவிட்டது!

 6. Muniasamy

  இந்த படம் மட்டும் அல்ல 100 கோடி வசூல் செய்ததாக சொல்லிக்கொள்ளும் அனைத்து படத்தின் தயாரிப்பாளர்களும் படத்தின் வசுழை தினசரி நாளிதழில் சொன்னால் மட்டுமே நம்பமுடியும். அப்படி செய்யவேண்டிய அவசியமும் இல்லை. இந்த ரசிகர்கள் அமைதியாக இருந்தால் நல்லது.

  எந்த நடிகரின் படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் அந்த படத்தினை நல்ல ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 7. shankaR

  தலைவர் ஒரு தனி சாம்ராஜம். அவரோட யாரையும் ஒப்பிடமுடியாது. நம்ம தலைவர் சாதனைகள் எல்லாமே தனி, நம்ம தலைவர் எல்லாருக்கும் பொதுவானவர். அந்த இடத்லே இருக்கிற தலைவர சின்ன நடிகரோட நாம் சேர்க்ககூடாது. தலைவர் தான் இப்போவும் எப்பவும் சூப்பர் ஸ்டார் !!!!

 8. prakash

  super and linga deserve it. One of the best film for thailaivar especially lingaeswaran character, his acting gone leap ahead. For KSR, his best and class work in flashback. We rajini fans should be proud of this movie. Visai and his fans trying to pull down the film with negative reviews along with some media help..but it wont succeed because of solid content in Linga. Also dont understand why so much fuzz with climax..it is hardly 10 mins and doenst matter if it is crap, still ending scenes are funny, what else we want? jackie chan already done in Armour of God and we all clapped it. I really felt shame on those who try to spread negativity. When was the last time we saw film with .no violence, vulgar, drinking scenes and strong story content? Linga team and thalaivar deserve great applauds and awards for this clean patriotic family enterainer.

 9. Rajini Prakash

  வெரி குட் நியூஸ் ப்ளீஸ் இன்போர்ம் போலீஸ் டு ப்லோக்க்ஸ் அண்ட் ஸ்டாப் தி டோவ்ன்லோடிங் ஒப் லிங்கா மொவயே. ப்ளீஸ் இன்போர்ம் ஜ்ய்பேர் கிரிம் போலீஸ். திஸ் இச் மி ஹும்ப்ளே ரெஃஉஎஸ்த் அச் தலைவர் பேன்.

 10. Rajini Prakash

  Please inform cyber crime Police to stop and block in Thirutuu VCD website for Lingaa film. This is my humble request. I am a big fan of Rajini. I am expecting another goods news about Lingaa collection.

 11. saravanan

  ஓகே.. தட்ஸ் தமிழ படம் அவளு கோல்லேச்டின் இவளவு cஒல்லெcடிஒனு சொல்லிடு இப்ப பிலிம் பலாப் அக்க போதுன்னு சொல்லிட்டாங்க. நீங்க அடுத்து என்ன சொல்லபோறிங்க..அவரு சொத்து செத்துடர்னு கமெண்ட் வர. என்னோம்ம தமிழ் நாடு மக்கள்ட்ட்டு சீட் பண்ணி vangana மாறி ஹொவ் மச் டிபீகில்ட் ஹி பாசத்.. நல்ல வேலை அவரு பொலிடிக்ஸ்kku வரலை..

 12. anbudan ravi

  மிக்க மகிழ்ச்சி. தலைவர் படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து ரசிகர்களின் விருப்பம். போட்ட பணத்தை விட அவர்களுக்கு நல்ல லாபமும் வரவேண்டும். இல்லையென்றால் தலைவரை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.

  நண்பர்கள் படைசூழ முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றோம்…..ஆரம்பம் முதல் இடைவேளை வர ஒரே கலக்கல்தான்….அரங்கம் அதிர்ந்து கொண்டே இருந்தது. இடைவேளைக்கு பின்பு மயான அமைதி……மிகச்சிறந்த கதை, ஆனால் திரைக்கதையில் தலைவருக்கே உரிய ஒரு வேகம் இல்லை. ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு ஒவ்வொரு காராய் வந்து இறங்குவதை எவ்வளவு நேரம் காட்டுவது (நமக்கு தெரியும் எல்லாம் பழைய காலத்து கார்….ஒவ்வொன்றும் வேறு வேறு மாடல்….நாம் ரசிப்போம் ஆனால் பாமரர்களுக்கு?) இது போன்று சிறு சிறு குறைகளை நீக்கி படத்தை இன்னும் விருவிருப்பாக்கியிருந்தால் இந்தியாவிலேயே அதிகமான வசூலித்த ஒரே படம் என்ற பெயர் கிடைத்திருக்கும். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளை ஏற்க மனம் மறுக்கிறது. தலைவர் நேருக்கு நேர் நின்று எதிரிகளை துவம்சம் செய்யும்பொழுது ‘லிங்கா லிங்கா’ என்று பின்னணி இசை இருந்தால் எப்படி இருந்திருக்கும்…..ஹாட் air பலூனில் தாவி குதித்து அந்த குறுகிய இடத்தில் சண்டை…….எதற்காக இந்த ’90-களின் சிந்தனை திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே?

  ஆனால் எனது குடும்பத்தினர் மற்றும் சில நண்பர்களுக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. இந்த படம் வெற்றிபெறப்போவது ரஜினி என்கிற மந்திரத்திற்காக மட்டுமே.

  இது நம் தலைவனின் ஒரு மகா வெறியனின் ஆதங்கமே.

  அன்புடன் ரவி.

 13. arulnithyaj

  ஹாய் தலைவர் fans .இங்கே …வினோ என்னங்கஜி ஒரு உப்டடேஸ்-ம் இல்ல உங்க பக்கம் இருந்து ..:(

 14. Kumar

  100 கோடி வசூல் உண்மையாக இருந்தால், அதற்கு காரணம் அதிகப்படியான டிக்கெட் விலைதான். அதனாலேயே குறுகிய காலத்தில் இவ்வளவு வசூல். இப்போது படத்தின் நீளத்தை குறைக்கப்போவதாக தகவல். இதை முன்னமே செய்திருந்தால், படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். திருடனாக வரும் ரஜினி, ஒரு கட்டத்தில் தன்னை புகழ்ந்து பாடுபவரிடம் செய்யும் காமெடி ரொம்ப பழசு. அது படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தலைவர் தன் பங்கை சரியாகவே செய்திருக்கிறார். பெரிதாக வெற்றி பெற்றிருக்கவேண்டிய படத்தை ஆவரேஜ் படமாக்கி, சொதப்பி விட்டார் ரவிக்குமார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *