BREAKING NEWS
Search

ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

Lingaa - envazhi special

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் இறுதிக் காட்சியை கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் படமாக்கவிருக்கிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபு, ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், ஜெகபதிபாபு, தேவ் கில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் 18-ந் தேதி இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி ‘லிங்கா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது படக்குழு. இப்படத்தை ராக்லைன் வெங்கேடஷ் தயாரிக்கிறார்.

-என்வழி செய்திகள்




3 thoughts on “ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

  1. Rajagopalan

    after long time updates.. what happened Mr Vino?
    Also chennai schedule (last phase of shooting) as per your last update cancelled?

  2. malai

    somebody is telling that there is a function in MADURAI for vijay to declare him as NEXT super star. Is it true……..
    It shouldn’t be . our thalaivar may accept . we won’t. pls comment on this.

  3. குமரன்

    இனித் தொடர்ந்து முன்பு போலவே வருடத்துக்கு ஒரு படமாவது தருவார் என்று எதிர்பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *