BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட பாடல்கள் பட்டியல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட பாடல்கள் பட்டியல்!

lingaa-audio-1

ஜினி இருவேடங்களில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் லிங்கா படத்தின் பாடல்கள் விவரம் வெளியாகியுள்ளது.

படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடல் தவிர அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். மோனோ கேசோலீனா பாடலை மட்டும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். துவக்கப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

இதோ பாடல்கள் பட்டியல்…

1. ஓ நண்பா…

இதுதான் ரஜினியின் அறிமுகப் பாடல். பெரும்பாலும் இந்த மாதிரி பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடுவார். அந்த சென்டிமென்ட் இதிலும் தொடர்கிறது.

2. என் மன்னவா…

இது ரஜினி – சோனாக்ஷி சின்ஹா பாடும் பாடல். சீனிவாஸ், அதிதி படேல் குரல் கொடுத்துள்ளனர்.

3. இந்தியனே வா..

இந்தப் பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளார். அணை கட்ட மக்களை ஒன்று திரட்டும் ரஜினி பாட்டு இது.

4. மோனா கேசோலினா

இந்தப் பாடல் ரஜினி – அனுஷ்கா பாடும் டூயட். மனோ, நீதி மோகன், தன்வி ஷா பாடியுள்ளனர்.

lingaa-audio-2

5. உண்மை ஒரு நாள் வெல்லும்

இந்தப் பாடலை ஹரிச்சரண் பாடியுள்ளார்.

-என்வழி

 




5 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட பாடல்கள் பட்டியல்!

  1. KRISHNAN R

    அனைத்தையும் வைரமுத்து எழுதவில்லை..ஒரு பாடல் karky எழுதியுள்ளார்..

  2. kumaran

    இன்னொரு பாடல் இருக்க கூடாதா என்று ஏங்க வைக்கிற மாதிரி 5 பாடலும் இருக்கனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *