BREAKING NEWS
Search

நவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு!

நவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு!

lingaa-1

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா பட இசை வெளியீடு வரும் 16-ம் தேதி நடக்கவிருக்கிறது.

முன்னதாக இந்த நிகழ்ச்சி வரும் 9-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

லிங்கா ஆடியோ கடந்த தீபாவளி தினத்தன்றே வெளியாகும் என தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் அன்றைக்கு வெளியாகவில்லை.

சமீபத்தில் படத்தின் டீசர் மட்டும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இசை வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் ராக்லைன் வெங்கடேஷ். நவம்பர் 9-ம் தேதி சத்யம் அரங்கில் இசை வெளியீடு நடக்கும் என அறிவித்திருந்தார்.

ஆனால் இசையமைப்பாளர்  படத்தின் பாடல்களை மாஸ்டரிங் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், லிங்கா குழு இன்னும் வெளிநாட்டிலிருந்து திரும்பாததாலும்,  இசை வெளியீட்டை மேலும் ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டனர்.

இப்போது நவம்பர் 16-ம் தேதியை புதிய ஆடியோ ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளனர். அதே சத்யம் அரங்கில் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

-என்வழி




One thought on “நவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *