BREAKING NEWS
Search

தீபாவளியன்று சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீடு?

தீபாவளிக்கு லிங்கா இசை வெளியீடு?

rajini-ksr

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தின் இசையை வரும் தீபாவளியன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வரும் படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

முதலி இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிடுவதன் மூலம், அவரை கவுரவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் திட்டமிட்டார்.

இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட இயக்குநர் ரவிக்குமாரும், அதற்கேற்ப பணிகளைச் செய்து வருகிறார்.

இந்த நிலையில், படத்தின் இசையை தீபாவளியன்று வெளியிடலாம். ரசிகர்களை உற்சாகப்படுத்த அது உதவும் என இயக்குநர் கூறியதால், அன்றைய தினமே இசையை வெளியிடவிருக்கிறார்களாம். அடுத்த மாதத்துக்குள் பாடல்களின் மாஸ்டர் காப்பியைத் தருவதாக ஏஆர் ரஹ்மானும் உறுதியளித்துள்ளாராம்.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “தீபாவளியன்று சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீடு?

  1. srikanth1974

    இனிய இசையைக் கேட்க
    இங்கே காத்திருக்கும் செவிகளாய் நான்!

  2. anbudan ravi

    படையப்பாவை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆவலோடும் தாகத்தோடும் காத்திருக்கிறோம் தலைவா. சீக்கிரம் வாருங்கள் 🙂

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *