BREAKING NEWS
Search

பூமிக்கு இன்னும் 200 கோடி ஆண்டுகளுக்கு அழிவில்லையாம்…!

பூமிக்கு இன்னும் 200 கோடி ஆண்டுகளுக்கு அழிவில்லையாம்…!

pic-eds

டெல்லி: பூமி இதோ அழிகிறது.. அதோ அழிகிறது என்று உலாவரும் பல்வேறு தியரிகளுக்கு மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு புது ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்னும் இருநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் மனிதன் உள்பட எந்த உயிரினமும் இல்லாதொழிந்து போகும் என்று தெரிய வந்துள்ளது.

பூமியின் மிக மிக ஆழத்தில் உள்ள நீரில் நுண்ணுயிர்கள் மட்டுமே அப்போது இருக்குமாம்.

ஸ்காட்லாந்து பல்கலைக் கழகத்தின் வான் உயிரியல் துறை ஆராய்ச்சியாளர் ஜேக் ஓ மலே ஜேம்ஸ் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். தனது ஆராய்ச்சி முடிவை விரைவில் ஸ்காட்லாந்து தேசிய வானியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப் போகிறார்.

சுற்றுச்சூழல் மாறுதல்கள்…

இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து சுற்றுச்சூழல் மாற்றங்கள் பல பெரிய உயிரினங்களை முற்றாக இல்லாதொழித்திருக்கிறது. ராட்சத டயனோசர்கள் காணாமல் போனதும் இப்படித்தான். இதே போன்ற மாற்றங்களால் இன்னும் 2.8 பில்லியன் ஆண்டுகளுக்குள் மனிதன் உள்ளிட்ட சகல உயிரினங்களும் திடீரென்றோ… படிப்படியாகவே புவிப்பரப்பிலிருந்து இல்லாமல் போகும்.

சூரியன்தான்….

இந்த அழிவுக்கு முதல் காரணியாக இருக்கப் போவது சூரியன்தானாம். இந்த உலகில் எல்லாம் அழிந்தாலும் சூரியன் மட்டுமே நிலையாக இருக்கும் என்றும், ஆனால் அது உமிழும் வெப்பத்தின் அளவு படிப்படியாக உயர்ந்து கடல்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் பாலைவனமாக்கிவிடும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

சூரியன் உமிழும் வெப்பத்தின் அளவு அடுத்த சில மில்லியன் ஆண்டுகளில் மிக அதிக அளவு இருக்கும் என்றும், நீர்நிலைகள் ஆவியாகும்போது, பூமியிலிருந்து அதிக கார்பன் டை ஆக்ஸைடைப் பெற்று, அதை மழை நீரோடு மீண்டும் பூமிக்கே திரும்பும். இதனால் தாவரங்கள் படிப்படியாக அழியத் தொடங்கிவிடும்.

சரியாக ஒரு பில்லியன் ஆண்டுகளில் கடல்கள் முற்றாக ஆவியாகி, உண்ண உணவும், குடிக்க நீரும், சுவாசிக்க காற்றும் இல்லாத சூனிய நிலை தோன்றும். அப்போது மனிதனோ விலங்குகளோ இயற்கை வளங்களோ இல்லாத சூழலில் எல்லாமே அழிந்து போகும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பூமி மற்றும் மனித குலத்தின் அழிவென்பது ஒரு திடீர் அதிசய சக்தியால் நடக்காது என்றும், அதற்கு முழுக்க முழுக்க மனிதனின் அத்துமீறல்கள், இயற்கையை அழித்தது போன்றவையே காரணமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுவது குறிப்பிடத்தக்கது.

-என்வழி ஸ்பெஷல்




One thought on “பூமிக்கு இன்னும் 200 கோடி ஆண்டுகளுக்கு அழிவில்லையாம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *