BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனைகளுக்கு ஒரு பெரிய சல்யூட்! – லியாண்டர் பயஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனைகளுக்கு ஒரு பெரிய சல்யூட்! – லியாண்டர் பயஸ்

292284-rajnikanth

ந்த பூமியில் எனக்கு மிகப் பிடித்த மனிதர் ரஜினிகாந்த். அவரது சாதனைகளுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவிக்கிறேன், என்று பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டென்னிஸில் பல்வேறு சாதனைகள் படைத்து வருபவர் லியாண்டர் பயஸ்.

தற்போது நடந்து வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வரும் லியாண்டர் பயஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. நல்ல கதை, வேடம் சரியான தயாரிப்பாளர், சரியான சூழல் அமைய வேண்டும். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இங்கு ஐந்தாண்டுகள் இருந்திருக்கிறேன்.

இந்த பூமியிலேயே நான் மிகவும் மதிக்கும் சாதனையாளர் ரஜினி சார். சினிமாவில் அவரது சாதனைகள், இந்தியாவுக்கு அவர் தந்த பங்களிப்பு, அவரது மனிதாபிமானம் போன்றவை மிகுந்த மரியாதைக்குரியவை.

அவரது எளிமை, தான் யார், எங்கிருந்து வந்தோம், இப்போது உள்ள இடம் என்ன என்பதை உணர்ந்த மாமனிதரான அவருக்கு எனது வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்,” என்றார்.

வீடியோ..


-என்வழி




3 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனைகளுக்கு ஒரு பெரிய சல்யூட்! – லியாண்டர் பயஸ்

  1. dhinesh kumar

    தலைவர் அடுத்த padam என்னனு சொல்லுங்க vino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *