BREAKING NEWS
Search

லக்கி சூப்பர் ஸ்டார் வெள்ளி நாணயங்கள்…. மரியாதை தேடி வர்றது தலைவருக்கு மட்டும்தான்!

மரியாதை தேடி வர்றது தலைவருக்கு மட்டும்தான்!

Rajini-coin-5
பாலி படம் வெளியாவதையொட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி உருவத்துடன் கூடிய வெள்ளி நாணயங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளது முத்தூட் நிறுவனம்.

ரஜினி என்ற பிராண்ட் இன்று உலகெங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுவும் கபாலி படம் இதுவரை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தொடங்கி விமானம் வரை கபாலி ரஜினி மயம்தான். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், ரஜினி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது முத்தூட் பின்கார்ப் நிறுவனம்.

இன்று மாலை சென்னை ஹயாத் ஹோட்டலில் நடந்த நாணய வெளியீட்டு விழாவில், கபாலி படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கலந்து கொண்டு, நாணயங்களை வெளியிட்டார்.

Rajini-Silver-3

படத்தின் இயக்குநர் ரஞ்சித், நடிகர் கலையரசன், முத்தூட் நிறுவன இயக்குநர் தாமஸ் ஜான் முத்தூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

லக்கி சூப்பர் ஸ்டார் சில்வர் காய்ன்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த நாணயங்கள் 5 கிராம் ரூ 300-க்கும், 10 கிராம் ரூ 750-க்கும், 20 கிராம் ரூ 1400-க்கும் விற்கப்படுகின்றன.

10 கிராமில் ரஜினி படம் பொறித்த வெளிப்பதக்கமும் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலை ரூ 750.

மேலும் படங்கள்:

-என்வழி




One thought on “லக்கி சூப்பர் ஸ்டார் வெள்ளி நாணயங்கள்…. மரியாதை தேடி வர்றது தலைவருக்கு மட்டும்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *