BREAKING NEWS
Search

‘எதைச் செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு தெரியும்.. எல்லாவற்றையும் அவர் முடிவுக்கே விட்டுவிட்டோம்!’ – லதா ரஜினி

‘எதைச் செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு தெரியும்.. எல்லாவற்றையும் அவர் முடிவுக்கே விட்டுவிட்டோம்!’ – லதா ரஜினி

vikramasimha-movie-curtain-raiser-trailer-launch-photo-stills-37_9cf209

சென்னை: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது ரஜினிக்கு தெரியும். எல்லாவற்றையும் அவர் முடிவுக்கே விட்டிருக்கிறோம், என்றார் லதா ரஜினி.

கோச்சடையான் படம், ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி:

ஆறு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது கோச்சடையான். இதை கஷ்டமான செயலாக நான் நினைக்கவில்லை. இப்படம் மூலம் ஒரு வரலாறை நிகழ்த்தி உள்ளோம். இந்திய சினிமாவில் இதற்கு முன் இதுபோல் பார்த்திருக் மாட்டார்கள்.

ஹாலிவுட் படமான அவதார் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த அளவு செலவிட்டு நம்மால் படம் எடுக்க முடியாது. ஆனாலும் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். இதில் நேரம், செலவு ரஜினியை எப்படி காட்டுவது என்பதில் எல்லாம் பெரிய சவால்கள் இருந்தன.

இந்த படத்தை எடுப்பது சவுந்தர்யாவுக்கு ஒரு சுமையாகவே இருந்தது. ஆனால் தன் அப்பா மேல் நம்பிக்கை வைத்து எடுத்தார். 100 ஆண்டு இந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல்கல் படமாக இருக்கும்.

அமிதாப்பச்சன், ஹாலிவுட் படங்களை அவதார் படத்துக்கு முன்பு பின்பு என்பது போல், இந்திய படங்களை கோச்சடையான் படத்துக்கு முன்பு பின்பு என வகைபடுத்தலாம் என்றார். பெருமையாக உள்ளது.

vikramasimha-movie-curtain-raiser-trailer-launch-photo-stills-envazhi copy

ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது நிறைய பேர் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். அதுவே அவரை குணமாக்கியது. கடவுள் அருளால் இப்போது நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார். எப்போதுமே அவர் தன்னை பெரிய ஆளாக நினைத்தது இல்லை. தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ஒரு மாணவன் போல பதட்டமும் பரபரப்புமாகவே இருப்பார்.

ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தினரோடு செலவிடும் முடிவை அவரிடத்திலேயே விட்டுள்ளோம். எதை செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் விருப்பம் போல் முடிவு எடுக்கலாம்.

ரஜினி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். உள் மனது என்ன சொல்கிறதோ அதை செய்வார். ரசிகர்களுடன் உட்கார்ந்து நான் படங்கள் பார்த்துள்ளேன். அவர் பார்த்தது இல்லை. எங்கு போனாலும் அவரது நடையை வைத்து மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-என்வழி

 

 
7 thoughts on “‘எதைச் செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு தெரியும்.. எல்லாவற்றையும் அவர் முடிவுக்கே விட்டுவிட்டோம்!’ – லதா ரஜினி

 1. மிஸ்டர் பாவலன்

  //ரசிகர்களுடன் உட்கார்ந்து நான் படங்கள் பார்த்துள்ளேன்.
  அவர் பார்த்தது இல்லை.// (லதா ரஜினி)

  ரஜினி அவ்வாறு பார்க்கவில்லை என்றாலும் ரசிகர்கள்
  அவர்கள் மீது உள்ள அன்பை நன்கு அறிவார்.

  கமல் படங்களுக்கு இது போல் வரவேற்பு தியேட்டர்களில்
  இல்லை என்பதை நான் நன்கு அறிந்தாலும் அதற்காக
  வருத்தப்படவில்லை. “பரமசிவன் கழுத்தில் இருந்து”
  என ஒரு கருத்தான பாட்டு கண்ணதாசன் எழுதி இருந்தார்.
  அதில் ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
  எல்லாம் சௌக்கியமே” என்று நேரிலேயே (படத்தில்)
  பாடுவார். அதனால் – கமல் இடத்தில் கமலும், ரஜினி
  இடத்தில் ரஜினியும் இருந்து, தொடர்ந்து சாதனைகள்
  படைப்பது யாவர்க்கும் நலமே. நன்றி – வணக்கம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. மிஸ்டர் பாவலன்

  ///Mr பாவலன் ஒரு கண்ணியமான கமல் பேன்.///

  நன்றி திரு ராஜேஷ் அவர்களே! லிங்கா படத்திற்கு
  செய்தி கிடைத்தவுடன் படம் வெற்றி அடைய
  வாழ்த்துக்கள் எழுதி விட்டேன்.. நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. veera

  காலத்தால் அழிக்க முடியாத பொற்காலம் காத்திருக்கிறது தமிழகத்திற்கு!

  ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும்….
  அது வரை பொறு மனமே…

 4. SIVA

  தலைவர் ரஜினி எது செய்தாலும் குழந்தைகளும் அவரை
  நேசிக்கும் படி செய்கிறார். குழந்தைகளை மகிழ்விக்கும் ஒரே ஸ்டார் நம் சூப்பர்ஸ்டார் . தலைவா நீங்கள் நன்றாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *