BREAKING NEWS
Search

அமைச்சரவையிலிருந்து மட்டுமல்ல, கூட்டணியிலிருந்தே திமுக வெளியேறும் – கருணாநிதி திடீர் எச்சரிக்கை

அமைச்சரவையிலிருந்து மட்டுமல்ல, கூட்டணியிலிருந்தே திமுக வெளியேறும் – கருணாநிதி திடீர் எச்சரிக்கை

karunanidhi-1சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல, கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டிவரும், என்று கருணாநிதி எச்சரித்துள்ளார்.

மாணவர்களின் தொடர் போராட்டங்களால் தனி ஈழப் போராட்டம் புதிய வேகம் பெற்றுள்ளது.   தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழ் ஈழம்  அமைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் என்று மாணவர்கள் கோரி வருகின்றனர்.

இந்த சூழலை எதிர்ப்பார்க்காத அரசியல் கட்சிகள், மாணவர் போராட்டங்களுக்கேற்ப தங்கள் அரசியல் கொள்கையை மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. மாணவர் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி இது.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதே அர்த்தமற்றதாகி விடும் என்று கருணாநிதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். கிட்டத்தட்ட எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு அறிவிப்பாகவே இது கருதப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு மீண்டும் 3 பக்க அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார் (இதையெல்லாம் எந்தப் போஸ்ட்மேன் கொண்டு போறார்னுதான் தெரியவில்லை!).

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கருணாநிதி கூறியதாவது:

நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி இருவருக்கும் தனித் தனியாக ஒரு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறேன். இதைத் தமிழிலே கூறவேண்டுமென்றால், ‘இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். நம்பகத் தன்மைவாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று திருத்தங்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: ஆரம்பத்தில் இருந்தே இந்த விசயத்தில் நீங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே?

பதில்: மத்திய அரசு சீரியசாக நான் குறிப்பிட்டு இருக்கும் இந்த திருத்தங்களோடு தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விவாதித்து நாங்களும் விவாதித்து முடிவு செய்வோம்.

கேள்வி: பிறமாநில பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?

பதில்: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்த முடிவுக்கு வர உள்ளோம்.

கேள்வி: நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக செயல்படுத்தப்படுமா?

பதில்: எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம். நீடிக்காது என்பது உறுதி.

கேள்வி: இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லையே?

பதில்: அதுதான் தமிழனின் தலை எழுத்து.

கேள்வி: தற்போதைய சூழ் நிலையில் மத்தியில் இருந்து யாராவது உங்களை தொடர்பு கொண்டார்களா?

பதில்: யாரும் என்னோடு பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

2009-ம் ஆண்டு தமிழருக்கு எதிராக காங்கிரஸ் அரசின் துணையோடு மிகக் கொடூரமாக போர் நடந்து வந்த சூழலில், கூட்டணியை முறித்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்து, போட்டியிட்டது திமுக. போருக்குப் பின்னரும் தமிழர் விரோதப் போக்கில் உறுதியாக உள்ளது காங்கிரஸ். அப்போதும் கூட காங்கிரஸ் கூட்டணியில் உறுதியாக நின்ற கருணாநிதி, பாராளுமன்றத் தேர்தலுக்கு 13 மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி மறுபரிசீலனை குறித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
4 thoughts on “அமைச்சரவையிலிருந்து மட்டுமல்ல, கூட்டணியிலிருந்தே திமுக வெளியேறும் – கருணாநிதி திடீர் எச்சரிக்கை

 1. Kumar

  கேள்வி: இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லையே?

  பதில்: அதுதான் தமிழனின் தலை எழுத்து.

  ஏன்யா அப்ப கடந்த 9 வருஷமா மத்தியில இருந்து நம்ம நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை என்பதை ஒப்பு கொண்டுள்ளார்.பகுத்தறிவு பேசி பேசி தமிழனை ஏமாற்றியதை பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளார்.

 2. குமரன்

  1. //இதையெல்லாம் எந்தப் போஸ்ட்மேன் கொண்டு போறார்னுதான் தெரியவில்லை!///

  ஐ.நா என்றால் மு.க. ஸ்டாலின் தலைமையில் மூன்று நான்கு திமுக தலைவர்கள் போவார்கள்.
  அவர்கள் பன்னாட்டு தபால்காரர்கள்!
  அதாவது International Postmen!

  2. ///அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விவாதித்து நாங்களும் விவாதித்து முடிவு செய்வோம்.///

  அவர்கள் என்பது சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை சோனியாவும், அவர் மகன் ராகுல் காந்தியும்.

  நாங்கள் என்பது கருணாநிதி, தயாளு, ராசாத்தி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, அமிர்தம், செல்வம், தயாநிதி ஆகிய திமுகவின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள்.

  3. ///இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்த முடிவுக்கு வர உள்ளோம்.///

  ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் மூன்றரை வருஷமாக ஊறிய கருணாநிதியின் இதயம் கனக்கிறது!

  4. ///எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம். நீடிக்காது என்பது உறுதி. ///

  நீடிக்குமா என்பது சந்தேகம், நீடிக்காது என்பது உறுதி என்றால் அர்த்தம் என்ன என்பது சொன்னவருக்கே புரியுமா என்பது சந்தேகம், புரியாது எனப்து உறுதி!

  5. ///கேள்வி: இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவுமே செய்யவில்லையே?
  பதில்: அதுதான் தமிழனின் தலை எழுத்து.///

  எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு!!!

  2009 இல் இவர் சொக்கத் தங்கம், தியாகத்திருவிளக்கு அன்னையின் காலடியில் கிடந்தாதால் அல்லவா, ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர்? அது தமிழனின் தலையெழுத்து என்பதை இப்போதுதான் ஒப்புக் கொள்ளுகிறாரா?

  6. /// பதில்: யாரும் என்னோடு பேசவில்லை. ///

  “காய்” விட்டுட்டாங்களா?

  கவுண்டமணி போல கருணாநிதி காமெடி ஆகிட்டாரே!

 3. srikanth1974

  முத்தமிழ்க் காவலரே’ இன்றுத் தாங்கள் மத்திய அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கையை இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது கொத்து கொத்தாகக் கொன்றோழிக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழர்களுக்காக அன்று இந்த எச்சரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்திருக்கவேண்டும்.அமைச்சரவையிலிருந்தும்,கூட்டணியிலிருந்தும்,
  வெளியேறி இருக்கவேண்டும்.அப்போது அதைச் செய்ய மனமில்லை உங்களுக்கு மனிதச் சங்கிலிபோராட்டம்,[half day ] உண்ணாவிரதபோராட்டம்,என்று முடிவுக்கு வந்தது உங்கள் தமிழ் பாசம்.
  தற்பொழுது மத்திய அரசுமீது உங்களுக்கு கோபம் வருகிறது,வேகம் வருகிறது.தமிழர்கள்மீது புது பாசம் வருகிறது.கூடவே விரைவில் நாடாளுமன்றத் தேர்தலும் வருகிறது.இனி காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்ந்தால் ? தேர்தலில் தோல்வி நிச்சயம் என்ற பயம் உங்களுக்கு வருகிறது.எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் கூட்டணி மாறப்போகிறீர்கள் அதற்கு அச்சாரமாகவே இன்றுத் தாங்கள் மத்திய அரசுக்கு விடுக்கும் எச்சரிக்கை முடிவு இதையெல்லாம் கேட்டுக்கனும்னா உங்கள் பாணியில் கூறுவதென்றால்?
  தமிழனின் தலையெழுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *